PDA

View Full Version : நிமிர்ந்து நில்!



நாகரா
02-01-2009, 09:34 AM
காரியங்கள் தாண்டிக்
காரணங்கள் தாண்டி
ஆதி மூலத்தில் ஊன்றி
காரண காரிய உலகில்
தயவாய் இரு!

உள்ளே சுழிந்து
மேலே எழு!
பின்
வெளியே வழிந்து
கீழே விழு!

அன்பெனும்
அருட்பணத்தை
யாவர்க்கும் அளி!

இகக் கரையில்
பர மலையாய்
நில்!

நின் தவச் சிகர ஜோதியை
யாவருங் காண
நில்!

சிவ இருப்பும்
சக்தி இயக்கமும்
நின்னிரு கால்களாய்
சற்குரு ஞானம்
நின்னொரு தலையாய்
புண்ணிய பூமியில்
நின் தடம் பதி!

மாமாயை மாய்ந்திடும்
மகாயோகம் தேர்!

மாயா நிலை தரும்
மெய்ஞ்ஞானம் கல்!

மாயா நிலைக்கே
நிரூபணமாய்
மயான பூமியில்
நிமிர்ந்து நில்!

இளசு
07-01-2009, 09:18 PM
அனுமதி இலவசம்
போகமட்டும் பயம் -
மரணம்!

-- மன்றத்தில் நம் பப்பி எழுதிய குறும்பா இது!

மரணத்தை நிர்மல மனதுடன் எதிர்கொள்ள என்ன வழி?
நம் நாகரா இக்கவிதையில் சொல்லும் வழி!

பாராட்டுகள் நாகரா அவர்களே!

நாகரா
08-01-2009, 12:35 AM
குறும்பா மேற்கோளோடு உம்
குறுகிய பின்னூட்டம்
என் கவிதையை நிமிர வைக்கிறது!
நன்றி இளசு.