PDA

View Full Version : கிளிநொச்சி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள்.shibly591
02-01-2009, 08:49 AM
கிளிநொச்சி ரயில் நிலையம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது

கிளிநொச்சியைப் படையினர் கைப்பற்றியமை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை இன்னும் சில மணித்தியாலங்களில் அரசாங்கம் அறிவிக்கும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹலுகல்ல தெரிவித்துள்ளார். புலிகளின் நிர்வாகத் தலைநகராகக் கருதப்படும் கிளிநொச்சிப் பிரதேசத்தை இன்னும் சில மணித்தியாலங்களில் படையினர் கைப்பற்றிவிடுவார்கள் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

புலிகளின் பிடியிலிருந்து கிளிநொச்சியை அரசாங்கம் முற்றாக மீட்கும் என நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்படுகிறதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி :- வீரகேசரி இணையம் 1/2/2009 1:31:58 PM

அமரன்
02-01-2009, 08:57 AM
எதை நம்புவது... எதை விடுவது என்ற குழப்பநிலை. இதுவரை காலமும் ஆக்கிரமித்த இடங்களின் சிதைவுகளை நிழல்படுத்திய அரசாங்கம் கடந்த சில நாட்களாக அத்தைகைய புகைகளை தராதது நம்பகத்தன்மையை குறைக்கிறது.

shibly591
02-01-2009, 09:10 AM
எதை நம்புவது... எதை விடுவது என்ற குழப்பநிலை. இதுவரை காலமும் ஆக்கிரமித்த இடங்களின் சிதைவுகளை நிழல்படுத்திய அரசாங்கம் கடந்த சில நாட்களாக அத்தைகைய புகைகளை தராதது நம்பகத்தன்மையை குறைக்கிறது.

இல்லை அமரன்...

இது உத்தியோகபூர்வ தகவல்..சில நிழற்படங்கள் இதோ

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmHome.aspx

இலங்கை ஜனாதிபதி இந்த அறிவிப்பை தொலைக்காட்சி வழியே நேரடியாக இலங்கை நேரப்படி மாலை நான்கு மணிக்கு நிகழ்த்துவார. என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தற்போது கிளிநொச்சி முற்றாக படையினர் வசமாகியுள்ளது..இலங்கை தேசியக்கொடி கிளிநொச்சியில் பறப்பதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன..

அன்புரசிகன்
02-01-2009, 09:25 AM
இதுவரை புகைப்படம் எதுவும் வெளிவிடவில்லை. மாலை ஜனாதிபதி தான் இந்த செய்தியை உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

மைத்திரிபால சிறீசேன, கிளிநொச்சியில் சிங்கக்கொடி பறக்கிறதாக கூறியிருக்கிறார்.

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தில் இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை...

பாதுகாப்பு அமைச்சின் இணையத்தில் கரடிப்போக்குச்சந்தி தான் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பரந்தனுக்கு அருகாமையில் உள்ளது. கிளிநொச்சி வெகுவிரைவில் வீழும் என்று தான் தெரிவிக்கப்பட்டுள்ளது...


http://www.dailymirror.lk/DM_BLOG/ArticleImages/353_Hulugalla-MAIN300.gifMilitary Spokesman Brigadier Udaya Nanayakkara is pictured here making the announcement that troops are entering the LTTE’s administrative town Kilinochchi, at a special Press Conference in Colombo today. இது டெய்லிமிரர் இணைய செய்தி.

அன்புரசிகன்
02-01-2009, 09:29 AM
இது பாதுகாப்பு அமைச்சின் இணைய செய்தி..Army 57 Div links up with TF1; control established on A-9 from Omanthai- Paranthan

Sri Lanka Army 57 Division troops approaching Kilinochchi town from the South have linked up with troops of the Task Force 1 advancing from the North this afternoon (Jan 2).
According to the battlefield reports, now the Army has established control over the A-9 road (Jaffna- Kandy) from Omanthai to Paranthan.
Earlier this morning, troops of 571 Brigade lead by Lieutenant Colonel Harendra Ranasinghe spearheading from the South gained control over the Kilinochchi railway station.
Defence.lk sources on the front reveal that LTTE cadres have taken to their heels . Battle of Kilinochchi still in progress
More ... to be followed

shibly591
02-01-2009, 09:34 AM
டெய்லி மிர்ர் அறிவித்த தகவல் இது.

\\\\\\\
KILINOCHCHI FALLSSri Lankan forces captured the LTTE political capital of Kilinochchi, cabinet minister and ruling party spokesman Maithripala Sirisena said.

"The national flag is now flying at Kilinochchi," said Sirisena, hailing what he described as a "historic victory for the nation".Updated @ 02/01/2009 03:34 PM
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

Narathar
02-01-2009, 11:06 AM
கொழும்பு வான்படை அலுவலகம் முன்பாக தற்கொலைத்தாக்குதலொன்று
இடம்பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன...........

காயமடைந்த கிட்டத்தட்ட 30 கொழும்பு வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது!

நிரன்
02-01-2009, 11:16 AM
கிளிநொச்சி பற்றி GMT நேரம் 11.20 அளவில் தமிழ் நெட் இணையதளத்தில் வெளியான செய்தியிது.
SLA occupies Ki'linochchi town

The Sri Lankan military authorities Friday said their forces have occupied the strategic town of Ki'linochchi in Vanni, situated 320 km north of Colombo. The Sri Lanka Army (SLA) has entered a virtual ghost town as the whole civilian infrastructure as well as the centre of the Liberation Tigers of Tamileelam (LTTE) had shifted further northeast. It is the first time after a decade the Sri Lankan forces have been able to take control of the town after several months of fierce fighting that has claimed hundreds of combatants on both sides of the war.

Most of the buildings in the town were partly damaged or completely destroyed by continuous air strikes and artillery barrage by the Sri Lankan forces.

Meanwhile, source close to the LTTE told TamilNet that the Tigers, who had put up heavy resistance so far, had kept their casualties as low as possible in the defensive fighting.

12 years ago, the SLA captured the Ki'linochchi-Paranthan area after fighting for more than a month in 1996 after losing more than 600 soldiers. The LTTE recaptured part of the town in February 1998.

A few months later, in September 1998, the LTTE overran the Brigade Headquarters with 15 satellite camps guarded by a 15 km long defence line virtually destroying the whole establishment in a two-day long major operation code named 'Oayaatha Alaika'l-2' (Unceasing Waves-2). The SLA garrison in Paranthan was compromised and the Tigers destroyed a large ammunition dump within the Elephant Pass base at that time. LTTE recovered more than one thousand dead bodies of the SLA in Unceasing Waves-2 operation.

02 January 2009, 11:20 GMT


நாரதர் கூறியசெய்தியும் தற்பொழுது தமிழ் நெட் இணையதளத்தில்
வெளியாகியுள்ளது

Bomb blast in Colombo, 2 airmen killed, 30 wounded

Two Sri Lanka Air Force (SLAF) airmen were killed and 30 persons were wounded in a bomb explosion in Sri Lankan military top security area in Colombo 2, on Sir Sittampalam Gardiner road in Colombo opposite the Renaissance hotel at 5:15 p.m. Friday, while Colombo city was lighting firecrackers celebrating the occupation of Ki'inochchi town by the Sri Lanka Army.


நன்றி தமிழ்நெட் 02 January 2009, 12:06 GMT

கா.ரமேஷ்
02-01-2009, 11:27 AM
இது தொடர்பான செய்தி:
http://thatstamil.oneindia.in/news/2009/01/02/lanka-lankan-govt-says-kilinochi-surrounded.html
கிளிநொச்சி வீழ்ந்தால் கண்டிப்பாக விடுதலை புலிகளுக்கு பெரும் பின்னடைவாக இருக்ககூடும்.....

தூயவன்
02-01-2009, 11:40 AM
http://www.defence.lk/orbat/Default.asp

:( :( :( :(

ஓவியன்
02-01-2009, 01:51 PM
கிளிநொச்சி இராணுவ வசம் வந்தது உண்மை, நேற்றைய தினத்தில் பரந்தன் சந்தி இராணுவ வசமானதும் இன்று கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றியது ஒரு நாளில் நடைபெற்றிருக்கிறது...

இன்று கிளிநொச்சி நோக்கி இராணுவம் முன்னேறியிருக்கையில் அதனை எதிர்த்து விடுதலைப் புலிகளின் துப்பாக்கிகள் முழங்கியமைக்கான ஆதாரங்களேதையும் காணவில்லை....

இதுவரை மூர்க்கமாக எதிர்த்தவர்கள், இன்று எதிர்க்காது பின்வாங்கியமையின் உள் நோக்கம் என்ன...??

எல்லாவற்றுக்கும் காலம்தான் பதிலளிக்கும்....

அய்யா
03-01-2009, 03:55 AM
இத்தோல்வி புலிகளுக்கு கடும் பின்னடைவே! பொருளாதாரரீதியிலும் அவர்கள் பாதிக்கப்படக்கூடுமென, தினகரன் ( இலங்கை) ஏட்டின் பின்வரும் செய்தி தெரிவிக்கிறது.

" ‘புலிகளின் கனவு ஈழத்தின் கோட்டை தகர்ந்தது...’
- இராணுவப் பேச்சாளர்
(விசு கருணாநிதி, ஸாதிக் ஷிஹான்)
புலிகளின் கனவு ஈழத்தின் கோட்டை யாக விளங்கிய கிளிநொச்சி படையினரி டம் வீழ்ந்தமை அவர்களுக்குப் படுதோல் வியாகுமென்று இராணுவப் பேச்சாளர் பிரி கேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

நீதிமன்றம், வங்கி, சமாதான செயலகம், அரசியல் தலைமையகம், நடவடிக்கைத் தலைமையகம் போன்ற அனைத்து நிர்வா கக் கட்டமைப்புகளையும் கிளிநொச்சியி லேயே புலிகள் வைத்திருந்தனர். இன்று அவர்களின் ஈழத் தலைநகர் சிதைக்கப்ப ட்டுள்ளதுடன் புலிகள் ஏ-9 வீதியின் கிழ க்குப் பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ளார் களென்றும் பிரிகேடியர் தெரிவித்தார்.

சட்டவிரோத வரிசேகரிப்புக்கும் தளமாக விளங்கிய கிளிநொச்சி கைப்பற்றப்பட்டு ள்ளதால் ஆனையிறவு, பளை பகுதிகளு க்கு புலிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகக் கூறிய பிரிகேடியர் நாணயக்கார, தொப்பி கலைக்குச் சமமான ஒரு பிரதேசத்தில் மாத் திரம் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்."


இனி புலிகள் நேரடிப்போரைத் தவிர்த்து, கெரில்லாப்போரில் முனைப்பு காட்டக்கூடும். இது பொதுமக்களின் இடரை இன்னும் அதிகரிக்கக்கூடும்.

எவ்வாறாயினும், தனி ஈழக்கனவு நனவாவது இன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னும் தள்ளிப்போய்விட்டது என்பது மட்டும் உறுதி.

ஓவியன்
03-01-2009, 04:31 AM
இத்தோல்வி புலிகளுக்கு கடும் பின்னடைவே!.
அய்யா,

வெறும் பிரதேசங்களைக் விட்டு விட்டு விலகுவதைக் கொண்டு, நீங்கள் இப்படிக் கூறுவதை என்னால் ஏற்க முடியாது....

இதற்கான விடையைக் காலம் தரும், அதுவரை நாம் நம்பிக்கை தளராது பொறுத்திருந்தே ஆகவேண்டும்..

அய்யா
03-01-2009, 04:59 AM
அய்யா,

வெறும் பிரதேசங்களைக் விட்டு விட்டு விலகுவதைக் கொண்டு, நீங்கள் இப்படிக் கூறுவதை என்னால் ஏற்க முடியாது....

இதற்கான விடையைக் காலம் தரும், அதுவரை நாம் நம்பிக்கை தளராது பொறுத்திருந்தே ஆகவேண்டும்..


உங்கள் பார்வைக்கோணமும் எனதும் வெவ்வேறானவை. கிளிநொச்சியைப் பறிகொடுத்து முல்லைத்தீவுக்குள் ஓடிப்பதுங்கியிருக்கும் புலிகளுக்கு இது நிச்சயம் பின்னடைவாகவே எனக்குப் படுகிறது. பல அரசியல் நோக்கர்களும் அவ்வாறே கருதுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் முக்கிய மையமாக இருந்த கிளிநொச்சி பிடிபடுவதற்குமுன் இணையத்தில் அவ்விடத்தின் முக்கியத்துவம் பற்றியும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் படித்திருந்த எனக்கு, அதை இப்போது வெறும் இடம் என்ற அளவில் மட்டும் எண்ணத்தோன்றவில்லை.

விரும்புகிறோமோ இல்லையோ, ஒரு உண்மையை அதன் இயல்பில் ஏற்கும் பக்குவம் நமக்கு வேண்டும். இன்றுள்ள நிலை இதுதான். எனினும் நாளை காற்று எப்படி வேண்டுமானாலும் மாறி அடிக்கக்கூடுமென்னும் தங்கள் கருத்தை மனமாற ஏற்கிறேன்.

அய்யா
03-01-2009, 05:06 AM
கிளிநொச்சி வீழ்ந்த செய்தியறிந்த மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடியதாகத் தெரிவிக்கும் செய்தி .... இங்கே! (http://www.thinakaran.lk/2009/01/03/_art.asp?fn=n0901037)

shibly591
03-01-2009, 05:25 AM
வணக்கம் அய்யா..........

கிளிநொச்சியை முதன்முதலில் 1996 ம் ஆண்டு படையினர் கைப்பற்றியிருந்தனர்..அதையே 1999ம் ஆண்டு மீண்டும் விடுதலைப்புலிகளிடம் பெரும் சமருக்குப்பிறகு பறிகொடுத்தனர்..இதையே மீண்டும் தற்போது கைப்பற்றியிருக்கின்றனர்..உண்மையில் இந்நகரம் புலிகளின் கேந்திர நிலையம் என்பது உண்மைதான்..இது கைப்பற்றப்பட்டது பாரிய பின்னடைவுதான்..இதைத்தான் 1996ம் ஆண்டும் ஊடகங்களும் அரசியல் ஆய்வாளர்களும் தெரிவித்தனர்..விரைவில் போர் முடிவுக்கு வரப்போகிறது என்று அப்போது அநேகர் கணித்திருந்தனர்..ஆனால் பிறகு நடந்ததோ வேறு விதமாகப்போய்விட்டது..அதைப்போல இம்முறையும் இன்னொரு சமர் நிகழுமா என்பது சொல்ல முடியாத விடயம்..ஆனாலும் என்னைக்கேட்டால் இந்தப்போர் விரைவில் முடியவேண்டும் (இன்றைக்கே அது நடந்தாலும் சந்தோசமே)...போரினால் உண்மையில் அதிகம் பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பது அப்பாவி மக்கள்தான் (நேரடியாக மற்றும் மறைமுகமாக)..இந்த வாழ்க்கையை எங்கள் சந்ததியும் நாளை வாழக்கூடாது..அவர்கள் சுபீட்சமாக வாழவேண்டும்...நாம்தான் விதைத்தோம்...அதையே அவர்களுமா அறுவடை செய்ய வேண்டும்...??

இலங்கையைப்பொறுத்த வரை தமிழ் முஸ்லிம் ஏன் சிங்கள நண்பர்கள் கூட பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது...நான் கூட பலமுறை மறைமுகமாக பாதிக்கப்பட்டிருக்கிறேன்..

இன்னொரு யுது;தம் மீண்டும் வேண்டாம்..இழந்த வரை போதும்..

இறைவன் வழிகாட்டவேண்டும்...நமக்காக நாம் பிரார்த்திப்போம்..

நன்றிகள் நண்பரே.

அய்யா
03-01-2009, 05:34 AM
நன்றி ஷிப்லி அண்ணா!

இலங்கையில் அமைதி திரும்பவேண்டும்; எம்மவர் இன்னல் தீரவேண்டும் என்பதில் இருவேறு கருத்தில்லை.

இறையருளால் எல்லாம் நன்மையாக நடக்கட்டும்!

ஓவியன்
03-01-2009, 06:26 AM
உங்கள் பார்வைக்கோணமும் எனதும் வெவ்வேறானவை. கிளிநொச்சியைப் பறிகொடுத்து முல்லைத்தீவுக்குள் ஓடிப்பதுங்கியிருக்கும் புலிகளுக்கு இது நிச்சயம் பின்னடைவாகவே எனக்குப் படுகிறது. பல அரசியல் நோக்கர்களும் அவ்வாறே கருதுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் முக்கிய மையமாக இருந்த கிளிநொச்சி பிடிபடுவதற்குமுன் இணையத்தில் அவ்விடத்தின் முக்கியத்துவம் பற்றியும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் படித்திருந்த எனக்கு, அதை இப்போது வெறும் இடம் என்ற அளவில் மட்டும் எண்ணத்தோன்றவில்லை.

விரும்புகிறோமோ இல்லையோ, ஒரு உண்மையை அதன் இயல்பில் ஏற்கும் பக்குவம் நமக்கு வேண்டும். இன்றுள்ள நிலை இதுதான். எனினும் நாளை காற்று எப்படி வேண்டுமானாலும் மாறி அடிக்கக்கூடுமென்னும் தங்கள் கருத்தை மனமாற ஏற்கிறேன்.

ஐயா அவர்களே, கிளிநொச்சியின் அமைவிடம் முக்கியம் பற்றி நீங்கள் இணையத்தில் படித்துத்தான் அறிந்திருக்கிறீர்கள், ஆனால் என் நிலை வேறு, நான் அங்கேயே பிறந்து, தவழ்ந்து, வளர்ந்தவன்...

அதனால் பரந்தன் பிரதேசம் இராணுவத்தின் வசமான போது, கிளிநொச்சியை விட்டுப் புலிகள் தம் பலமான படையணிகளைப் பின்னகர்த்தியது எவ்வளவு இராணுவ சாணக்கியமென்பதைத் தெளிவாக நானறிவேன்...

அதனை நீங்கள் படிக்கும் தினகரன் (குறிப்பு இலங்கை அரசின் எழுத்தில் எழுதாத அதிகாரபூர்வ ஏடுகளில் ஒன்றான இந்த தினகரன்) முதலான இணைய சஞ்சிகைகள் வெளிப்படுத்துமென்பதை நான் எதிர்பார்க்க மாட்டேன்...

எந்த ஒரு விடுதலை இயக்கத்தின் முதுகெலும்பாக இருப்பது அவை தக்க வைக்கும் பிராந்தியங்களாக இருக்க முடியாது, மாறாக எப்போதும், எங்கேயும் இராணுவப் பாச்சல் நடத்தத் தேவையான ஆள், ஆயுத பலமேயாகும்...

கிளிநொச்சியை இராணுவம் ஆயிரக்கணக்கான போராளிகளை வீழ்த்தி பிடித்திருந்தால், அது நீங்கள் கூறியது போல் நிச்சயமாகப் பின்னடைவாகவே இருக்கும் மாறாக புலிகள் தங்கள் வலுவை உடையாமல் தக்க வைத்துக் கொண்டிருக்கையில் அது ஒரு போதும் பின்னடைவாகவே இருக்க முடியாது...

ஏனென்றால் இதே கிளிநொச்சியை ஒரு இராணுவப் பாச்சல் மூலம் 1998 ஆம் ஆண்டு இராணுவத்திடமிருந்து கைப்பற்றிய வரலாறு விடுதலைப் புலிகளுக்கு உண்டு...

அய்யா
03-01-2009, 07:55 AM
ஐயா அவர்களே, கிளிநொச்சியின் அமைவிடம் முக்கியம் பற்றி நீங்கள் இணையத்தில் படித்துத்தான் அறிந்திருக்கிறீர்கள், ஆனால் என் நிலை வேறு, நான் அங்கேயே பிறந்து, தவழ்ந்து, வளர்ந்தவன்...

முழுமையாக ஏற்கிறேன்!


அதனால் பரந்தன் பிரதேசம் இராணுவத்தின் வசமான போது, கிளிநொச்சியை விட்டுப் புலிகள் தம் பலமான படையணிகளைப் பின்னகர்த்தியது எவ்வளவு இராணுவ சாணக்கியமென்பதைத் தெளிவாக நானறிவேன்...

அந்த சாணக்கியத்தனத்தை நாங்களும் அறிய ஆவலாக இருக்கிறோம்.


அதனை நீங்கள் படிக்கும் தினகரன் (குறிப்பு இலங்கை அரசின் எழுத்தில் எழுதாத அதிகாரபூர்வ ஏடுகளில் ஒன்றான இந்த தினகரன்) முதலான இணைய சஞ்சிகைகள் வெளிப்படுத்துமென்பதை நான் எதிர்பார்க்க மாட்டேன்...

இருக்கலாம். நான் தினகரனை மட்டும் மேற்கோள் காட்டியிருந்தாலும், ஏனைய சஞ்சிகைகளும் கிளிநொச்சி குறித்த தகவல்களை ஏறக்குறைய ஒரேமாதிரிதான் வெளியிட்டிருக்கின்றன. புலிகள் ஆதரவுத்தளங்களில் போய்ப் பார்த்தேன். அங்கு கனத்த மௌனம் நிலவுகிறது.


எந்த ஒரு விடுதலை இயக்கத்தின் முதுகெலும்பாக இருப்பது அவை தக்க வைக்கும் பிராந்தியங்களாக இருக்க முடியாது, மாறாக எப்போதும், எங்கேயும் இராணுவப் பாச்சல் நடத்தத் தேவையான ஆள், ஆயுத பலமேயாகும்...

கிளிநொச்சியை இராணுவம் ஆயிரக்கணக்கான போராளிகளை வீழ்த்தி பிடித்திருந்தால், அது நீங்கள் கூறியது போல் நிச்சயமாகப் பின்னடைவாகவே இருக்கும் மாறாக புலிகள் தங்கள் வலுவை உடையாமல் தக்க வைத்துக் கொண்டிருக்கையில் அது ஒரு போதும் பின்னடைவாகவே இருக்க முடியாது...

உயிர்ச்சேதம் இல்லாதிருப்பது நல்ல விடயமே! அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாதென்றுகூட பின்வாங்கியிருக்கக்கூடும் ! .என்றாலும் புலிகளின் செயல்பாட்டுக்கான களம் அல்லது இடம் அல்லது பிரதேசம் முன்பைவிட இப்போது சுருங்கிப்போய்விட்டதல்லவா? கிளிநொச்சியிலிருந்து மேற்கொண்ட நடவடிக்கைகளை இனி செயல்படுத்த இயலாதல்லவா? [கிளிநொச்சி எவ்வகையில் புலிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமென்று அவர்கள் தளங்களிலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.] அதை தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ இழந்திருக்கிறார்கள். இழக்கும்போது உயிர்ப்பலி இல்லை; சரி. அதை மீண்டும் பிடிக்க உயிர்ச்சேதம் இல்லாது முடியுமா? இது பின்னடைவுதானே?


ஏனென்றால் இதே கிளிநொச்சியை ஒரு இராணுவப் பாச்சல் மூலம் 1998 ஆம் ஆண்டு இராணுவத்திடமிருந்து கைப்பற்றிய வரலாறு விடுதலைப் புலிகளுக்கு உண்டு..

படையினர் கிளிநொச்சியை தக்கவைத்துக்கொள்ள மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும். ஏற்கிறேன்.

படையினர் கிளிநொச்சியைப் பிடித்ததுகூட வான்படையினரின் பக்கபலத்தினால்தான். தரைப்படை போரில்மட்டும் இது சாதிக்கப்படவில்லை.

இதுகூட புலிகள் சேதத்தைத் தவிர்க்க பின்வாங்கியிருப்பதன் காரணமாக இருக்கலாம். எவ்வாறாயினும் இது புலிகளுக்கு பின்னடைவே! இதனால் நான் புலிகளை குறைத்து மதிப்பிடுவதாக ஆகாது. இன்றைய நிலையில் புலிகள் பதுங்கியிருக்கிறார்கள். மீண்டும் பாயும்போதுதான் அதுவும் வெற்றிகரமாகப் பாயும்போதுதான் தெரியும்.அவர்கள் பதுங்கியிருக்கிறார்களா பம்மியிருக்கிறார்களா என்று.

படையினரின் கைகளில் கிளிநொச்சி வீழ்ந்ததையிட்டு, இலங்கைப் பங்குகள் 5 விழுக்காடு விலை உயர்ந்திருப்பதாகத் தகவல்!

அமரன்
03-01-2009, 09:08 AM
இராணுவ ஆய்வாளர்களை மிஞ்சும் விதத்தில் கருத்துகள் பகிரப்படும்போது எவ்வளவு மகிழச்சியாக உள்ளது. சிறீலங்கா இராணுவத்தின் படைநடவைக்கையின் தாக்குதல் முறைமைகளை உற்று நோக்கும் எவருக்கும் விடுதலைப்புலிகளின் ஆளுகை இடச்சுருக்கத்தின் அவசியம் நிச்சயம் புரிந்திருக்கும். அதேவேளை இராணுவத்தின் கையோங்க பலதரப்பட்ட காரணங்கள் உள்ளன. புலிகளின் முக்கிய தாக்குதல் வியூகங்களை அறிந்த கருணா இராணுவத்தின் பக்கம் இருப்பது; புலிகளின் சில தாக்குதல் தளபதிகளின் இழப்பு; பாகிஸ்தான் அள்ளிக் கொடுக்கும் ஆயுதம் போன்றன அவற்றுள் சில. எப்படி இருந்தாலும் கிளிநொச்சி இராணுவத்தின் வல்வளைப்புகுட்பட்டமை அரசியல் ரீதியாக புலிகளுக்கு பின்னடைவே.

இராணுவ ரீதியாக நோக்கின் இராணுவத்தினரை முன்நகரவிட்டு அவர்கள் ஓய்வெடுக்கும் தருணத்தில் எதிர்பாராத நேரத்தில் அலையென எழுந்து பேரிழப்புகளை இராணுவத்தினருக்குக் கொடுத்து இடங்களை மீட்பது புலிகளின் பாணி. கடந்தகாலங்கள் இதுக்கு சான்று. ராணுவமும் இதை அறியாததல்ல. அவர்கள் இப்போது ஆட்சேர்ப்பை முடுக்கி விட்டுள்ளார்கள். வளைத்த இடங்களை காப்பாற்ற என்று பலரும் சொன்னாலும் சண்டை ஓய்வை அவர்கள் விரும்பவில்லை என்ற ஒரு காரணமும் அதில் மறந்திருக்கிறது. படைநடவடிக்கை ஓய்வின் மூலம் புலிப்பாய்ச்சலுக்கு சந்தர்ப்பம் கொடுக்க அவர்கள் தயாரில்லை.

புலிகளும் இதை நன்குணர்ந்துள்ளனர். ஏ 9 பாதையின் பெரும்பங்கு இராணுவத்தின் வசமானாலும் பழைய கண்டி ரோட் என்கிற ஏ 9 பாதைப் பகுதி இன்னமும் புலிகளின் வசம். அதனூடான விநியோக மார்க்கங்களை முதன்மைப்படுத்தி ஊடறுப்புத் தக்குதலை நடத்தி கணிசமானளவு இராணுவத்தினரை ஆயுத தளபாடங்களுடன் தனிமைப்படுத்தி நாசகாரிக் காலத்தை உருவாக்கும் கால் நிலை கை கூடல்கள் இருந்தாலும் புலிகள் இதைத்தான் செய்வார்கள் என்பதை எவராலும் இதுவரை உறுதிப்படுத்த இயலவில்லை என்ற உண்மை எதையும் உறுதியாக சொல்லத் தடை விதிக்கிறது.

அன்புரசிகன்
03-01-2009, 02:17 PM
அய்யா...

நீங்கள் கூறுவது போன்று களநிலவரம் இருக்காது. இராணுவம் விடுவித்த பகுதியில் அனைத்திலும் இராணுவம் தான் உள்ளதென்று நினைக்காதீர்கள். முன்பக்கத்தால் பிடித்துக்கொண்டு போக மற்றப்பக்கத்தால் அவர்கள் வந்து இருப்பார்கள். இது தான் எதார்த்தம்... தற்போதய கணிப்பின் படி முல்லைத்தீவை அண்டிய பகுதியில் தான் புலிகள் உள்ளனர். ஆனால் கடந்த 2008ல் முழுமையாக விடுவிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் பாரிய உயிர் சேதம் அரச படையினருக்கு... எவ்வாறு????????? புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

யார் கண்டா.. பிரபாகரன் அனுராதபுரத்தில் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை...

aren
03-01-2009, 04:43 PM
புலிகள் ராணுவத்தினரை உள்ளே விட்டுவிட்டு பின்னர் அவர்களை சுற்றி வளைத்து அடிக்கக்கூடும். இன்னும் சிறிது நாட்களில் நிலமை என்னவென்று தெளிவாகத்தெரியும் என்றே நினைக்கிறேன்.

Mano.G.
04-01-2009, 04:53 AM
வேலுபிள்ளை பிரபகரன் உயிருடன் பிடிபட்டதாக கேல்வியுற்றேன் உண்மையா?

யாராவது சொல்லுங்களேன்

Narathar
04-01-2009, 04:57 AM
இல்லை மனோ அவர்களே..........
அப்படியெதுவும் நடைபெறவும் இல்லை
நடைபெறப்போவதும் இல்லை
கவலைவேண்டாம்

ஓவியன்
04-01-2009, 05:32 AM
ஐயா, அமரன் கூறியது போல, புலிகள் எதனை செய்யப் போகிறார்கள், ஏன் செய்தார்களென்பதை தெள்ளத் தெளிவாக மதிப்பீடு செய்வது முடியாத காரியம். இருந்தாலும் பரந்தன் கிளிநொச்சி பகுதிகளின் புவியியல் அமைவிடத்தைக் கொண்டு சில காரணிகளை விளங்கிக் கொள்ளலாம். அதாவது இதுவரை புலிகள் கிளிநொச்சியைச் சுற்றி ஒரு ‘ட’ வடிவிலான தடுப்பரண்களை அமைத்து நிலையெடுத்துக் கொண்டு இராணுவத்துடன் சமராடிக் கொண்டிருந்தனர். இந்த தடுப்பரண்கள் பொதுவாக கிளிநொச்சியின் கிழக்குப் பகுதியையும் தெற்குப் பகுதியையும் மூடி அமைக்கப் பட்டிருந்தன. கிழக்குப் பகுதியின் தொடக்கப் பகுதியாக இருந்த குஞ்சுப் பரந்தனில் புலிகளின் நிலைகளை இராணுவம் உடைத்ததுடன் கிளிநொச்சியைத் தக்க வைக்கும் முயற்சியைப் புலிகள் கைவிட முடிவெடுத்திருப்பர். ஏனென்றால் குஞ்சுப் பரந்தனில் உள் நுளைந்த படையினர் பரந்தனைக் கைப்பற்றியதும் இது வரை ‘ட’ வடிவிலிருந்த கிளிநொச்சி நோக்கிய இராணுவ முற்றுகை ‘ப’ வடிவில் மாறியது. பரந்தன் கிளிநொச்சிக்கு வடக்காக இருந்தமையே இதன் காரணம்....

தொடர்ந்து பரந்தனிலிருந்து இராணுவத்தினர் A9 வீதிக்குக் கிழக்குப் பக்கமாக இருந்து கொண்டு கிளிநொச்சி நோக்கி நகர ஆரம்பித்தனர். இங்கே கவனிக்க வேண்டியது A9 வீதிக்குக் கிழக்குப் புறமான வயல் வெளிகளை. ஏனென்றால் இந்தப் பகுதி பொதுவாக மரங்களற்ற வெட்ட வெளியான வயற்பகுதியாகும். இந்தப் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி இராணுவம் நகரத் தொடங்குகையில், ஒப்பீட்டளவில் குறைவான ஆட்பலத்தையும் ஆயுத பலத்தையும் கொண்ட புலிகள், காப்பரண்கள் ஏதுமற்ற இந்தப் பகுதியில் இராணுவத்துடன் நேருக்கு நேர் மனித சங்கிலி அணியாக மாறி போராட வேண்டிய நிலை இருந்தது. இராணுவத்தை இந்தப் பகுதியூடாக மறித்துச் சமராட வேண்டினால் அதனிலும் வேறு வழிகளில்லையென நம்புகிறேன். ஒருவகையில் இராணுவம் எதிர்பார்த்ததும் இதனையே, அப்படி ஒரு நிலை வந்திருந்தால் புலிகளின் கூர்முனைகளான சண்டையிடும் வலுவான சாள்ஸ் அன்ரனி, இம்ரான்பாண்டியன் மற்றும் ஜெயந்தன் படையணிகள் கடுமையான முடக்க நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். ஒரு வேளை இந்த தடுக்கும் நடவடிக்கையில் புலிகள் தோல்வியுற்றால் ஏற்கனவே மூன்று பக்கத்தால் இராணுவத்தால் சூழப்பட்ட கிளிநொச்சி நான்காவது முனையான கிழக்குப் பகுதியும் அடைக்கப்பட ஒரு பெட்டி முற்றுகைக்குள் சிக்கிக் கொண்டிருந்திருக்கும். இந்த விளைவுகளை எதிர் கொள்வது நீண்ட கால நோக்கில் தம் இயக்கத்திற்குப் பாதிப்பென்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்ட புலிகள் பரந்தனிலிருந்து கிளிநொச்சி நோக்கி முன்னேறிய இராணுவத்தை எதிர்க்காமலிருக்க முடிவெடுத்திருந்திருந்தனர். அதனால் தம் வலிய அணிகளைப் பின்னகர்த்தி கிளிநொச்சியை விட்டுக் கொடுத்தனர், இந்த வலிய அணிகள் முல்லைத் தீவு நோக்கி நகரும், புலிகளின் கடல் பகுதி முழுவதையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து புலிகளின் கடல் வழங்கல்களைத் தடுக்க முனையும் இராணுவ அணிகளைத் தடுப்பதற்குப் புலிகளுக்குத் தேவைப்படலாம்.

ஐயா, புலிகளை விட பல மடங்கு ஆட்பலத்துடனும், இந்தியா உட்பட கிட்டத்தட்ட ஏழு நாடுகளின் படைக்கல உதவியுடன் இலங்கை இராணுவம் புலிகளுடன் மோதிக் கொண்டிருக்கையில் யாருடைய உதவியுமின்றி தன்னந்தனியாக களத்திலும் புலத்திலும் உள்ள ஈழ மக்களின் ஆதரவுடன் மட்டும் இராணுவத்தை எதிர்கொள்ளும் புலிகள் தங்கள் ஆட்பலத்தைத் தக்க வைக்கும் நோக்கிலே நடாத்தும் பின்னகர்வுகளை பின்னடைவுகளாகக் கொள்ள முடியாது மாறாக தந்திரோபாய நகர்வுகளாகவே கொள்ள வேண்டும். ஏனென்றால் இத்துணை பலமான இராணுவ இயந்திரத்தை இதுவரையில் முடக்கி வைத்திருந்ததே புலிகளுக்கு வெற்றிதான், அந்த அனுபவம் புலிகளின் புதிய போராளிகளைப் புடம் போட்டிருக்கும். அது இனிவரும் போர்களில் நன்கு புலப்படும். விடுதலைப் போராளிகளுக்கு செயற்படும் நிலப்பரப்பிலும் செயற்பாடுகளை இயக்கும் ஆளணி, ஆயுத பலங்களும் அவர்களை ஆதரிக்கும் மக்களுமே முக்கியம். கிளிநொச்சியிலிருந்து புலிகளை ஆதரித்த மக்கள் இப்போது புலிகளுடன் சேர்ந்து முல்லைத் தீவிலிருந்து புலிகளை ஆதரிப்பார்கள் ஏனென்றால் கிளிநொச்சியை இராணுவம் மக்களுடன் சேர்த்துக் கைப்பற்றவில்லை மாறாக வெறிச்சோடிப் போன இடிபாடுகளைக் கொண்ட ஒரு நகராகவே கைப்பற்றியுள்ளது. இதனால் புலிகளின் இயங்கு நிலையிலும் பெரிதாக மாற்றம் இருக்கப் போவதில்லை.

இலங்கை அரசாங்கம் தன் அரசியல் லாபங்களுக்காக தன்னிழப்புக்களை மறைத்து வைத்துக் கொண்டு கிளிநொச்சியைக் கைப்பற்றியதை பெரு வெற்றியாகக் கொண்டாடும் நிலையில் நாம் அந்த வெற்றியின் உண்மைத் தன்மையை விளங்கிக் கொள்வது காலத்தின் கட்டாயமே...

நிரன்
04-01-2009, 11:22 AM
மிகவும் அருமையான கணிப்புகள்.. செய்தித்தளங்களை மிஞ்சும் விதத்தில்
ஒவ்வெருவரின் கருத்துகளும்.. கிளிநொச்சி தற்காலிகமாக பறிபோய் விடிடதென்றாலும்
அதனைச்சரி செய்யும் விதத்தில் பலரின் கருத்துக்கள் அருமையாகவே உள்ளது..

இப்பிரச்சினைக்குள் சிக்கி இருக்கும் நம் உறவுகளின் நிலைதான் மிகவும்
வேதனையளிக்கிறது.. காலந்தான் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்

இன்று காலையில் புலிகளின் குரல் செய்தியைக்கேட்டேன்.. அதில் வன்னிப்
போர்க்களத்தில் புலிகள் வீசிய எறிகனைத்தாக்குதலால் அதிகாரிகள் உட்பட
12ஆயிரம் படையினர்கள் படுகாயமடைந்து விட்டதாக இலங்கைத்
தரைப்படைத் தளபத் சரத்பொன்சேகர கூறியிருக்கிறார்..இது கொழும்பு
ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவிக்கையில்.. வன்னிப்போர்க்
களத்தில் இருந்து ஏறிகனைகள் மற்றும் ஆட்ளெறிகள் மழையாகப்
பொழிந்த தொடர்ச்சியான தாக்குதலில் அதிகாரிகள் உட்பட்ட 12ஆயிரம்
பேர் படுகாயமடைந்துள்ளனர் இலங்கை தரைப்படைத் தளபதி கூறியுள்ளார்..

அப்படியெனின் கிளிநொச்சியை இழந்ததையடுத்து புலிகளின் ஒரு முன்னெடுப்பாக
இத் தாக்குதல் அமையுமா??????

தற்பொளுது புலிகளிடம் ஆயுதங்கள் போதியளவு உள்ளதென்பதையும்
ஆயுதங்கள் பாரிமாற்றத்தில் எது வித தடையுமில்லாமல் நடை
பெருகின்றதென்பதையும் இத் தாக்குதல் தெளிவாக விளக்குகிறது.

என் கணிப்பின் படி கண்டிப்பாக இத்தாக்குதல் இலங்கை ராணுவத்திற்கு
ஒரு படிப்பினை உணர்த்தியிருக்குமென நம்புகிறேன்.!

shibly591
04-01-2009, 11:48 AM
இதைப்படியுங்கள்...................


நன்றி: http://arivili.blogspot.com/


ஆளே இல்லாமல் கைவிட்டுச் செல்லப்பட்ட கிளிநொச்சியைக் கைப்பற்றி விட்டதாகக்
கொக்கரிக்கிறதா இலங்கை இராணுவம்! சில நியாயமான சந்தேகங்கள்!*
கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக தமிழ்ப் போராளிகளின் அரசியல் தலைநகராக விளங்கிய
கிளிநொச்சியைக் கைப்பற்றி விட்டதாக நேற்று (03-01-2009) இலங்கை இராணுவம்
அறிவித்துள்ளது. அங்கு சிங்கள ராணுவத்தினர் கொடியேற்றும் காட்சிகளும் தொலைக்
காட்சிகளில் ஒளிபரப்பப் பட்டன.


பத்தாண்டுகளாக ஒரு நகரைத் தலைநகராகக் கொண்டு தங்கள் அரசியல் நடவடிக்கைகளை
மேற்கொண்ட போராளிகள் சமாதான முயற்சிகளுக்காக வந்த சர்வதேச தலைவர்கள்,
செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் பத்திரிக்கையாளர்கள் போன்ற அனைவரையும் சந்தித்தது
இந்தக் கிளி நொச்சி நகரில்தானே.


போராளிகளின் அனைத்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப் பட்டு இருந்தது
இந்தக் கிளிநொச்சி நகரில்தானே.


அப்படிப்பட்ட அதி முக்கிய நகரான கிளிநொச்சியின் எல்லாப் பகுதிகளையும் தங்கள்
கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக அறிவித்துள்ள ராணுவத்தினர் இதுவரை அது
சம்பந்தமாக வெளியிட்டு உள்ள புகைப்படங்கள் , வீடியோக் காட்சிகள் மற்றும்
செய்திகளில்


போராளிகள் யாரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கவில்லை,


போராளிகள் யாரும் இறந்ததாகத் தெரிவிக்கவில்லை,


போராளிகளிடம் இருந்து ஆயதங்கள் எதுவும் கைப்பற்றப் பட்டதாகத் தெரிவிக்கவில்லை,


போராளிகளின் முக்கிய ஆவணங்களோ அல்லது தகவல் தொடர்பு சாதனங்களோ
கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கவில்லை,


ஒரு நகரைக் கைப்பற்றிய ராணுவத்தினர் இதுவரை போராளிகளின் ஆயுதங்களையோ,
ஆவணங்களையோ, தகவல் தொடர்பு சாதனங்களையோ கைப்பற்றவில்லை என்றால் அதன் அர்த்தம்
என்ன?


போராளிகள் உயிருக்குப் பயந்து காட்டிற்குள் ஓடி விட்டதாகக் கூறுகின்றனர் சிங்கள
ராணுவத்தினர், உயிருக்குப் பயந்து ஒடுபவர்களால் எப்படித் தங்களின் ஒட்டு மொத்த
உடமைகளையும் பத்திரமாக எடுத்துக் கொண்டு ஓட முடியும்.


போராளிகள் எந்த விதப் பதட்டமும் இன்றி திட்டமிட்டுத் தங்களின் ஒட்டு மொத்தக்
கட்டமைப்புகளையும் வேறு இடங்களுக்கு நகர்த்தி விட்டு மிக சாவகாசமாக
கிளிநொச்சியை விட்டு பத்திரமாக வெளியேறிய பின்னர்,


ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகருக்குள் நுழைந்து அதைக் கைப்பற்றி விட்டதாகக்
கொக்கரிக்கிறதா? சிங்கள இராணுவம்.


இதுவரைத் தங்களது தாக்குதல்களில் சிக்கி சிங்கள வீரர்கள் பலியானதாக தமிழ்ப்
போராளிகள் அறிவிக்கும் போதெல்லாம் இறந்த வீரர்களின் உடல்களையும்
அவர்களிடமிருந்து கைப்பற்றப் பட்ட ஆயுதங்களையும் படம் பிடித்து அவற்றைப்
பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியிடுகிறார்கள் அல்லவா?


அதைப் போல சிங்கள ராணுவத்தினர் செய்யாதது ஏன்?


இதுவரைத் தமிழ்ப் போராளிகளின் தாக்குதல்களில் சிக்கி சிங்கள வீரர்கள்
கிட்டத்தட்ட 12000பேர் பலியாகி உள்ளதாகவும், 14000பேர் படுகாயம் அடைந்து அதில்
8000பேர் நிரந்தர ஊனம் அடைந்துள்ளதாகவும் இலங்கையின் ராணுவ அதிகாரிகளே
சமீபத்தில் அறிவித்தனர் அல்லவா?


அப்படி அறிவித்த சிங்கள ராணுவ அதிகாரிகள் போரில் எத்தனை தமிழ்ப் போராளிகள்
பலியாயினர் என்பது பற்றி இதுவரை ஏன் வாயைத் திறக்கவில்லை?


தமிழ்ப் போராளிகள் பத்தாயிரமோ அல்லது இருபதாயிரமோ பேர் மட்டுமே உள்ளதாக சிங்கள
ராணுவ அதிகாரிகளே அடிக்கடி கூறி வருகின்றனர்.


பல்வேறு உலக நாடுகளிடம் இருந்து பெற்ற ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளுடன்
மிகப்பலம் உள்ளதாகவும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை உள்ளடக்கியதாகவும்
கூறிக் கொள்ளப்பட்ட சிங்கள இராணுவம் இத்தனை பெரிய இழப்புகளை சந்தித்தது ஏன்?


இப்போது தமிழ்ப் போராளிகளின் தலைநகரைக் கைப்பற்றியதாகக் கூறிக் கொள்ளும் சிங்கள
ராணுவத்தினர் அங்கிருந்து சொல்லிக் கொள்ளும்படியாக எதையும் கைப்பற்றாததற்குச்
சொல்லப் போகும் பதில் என்ன?


காயம் பட்டு உயிருக்குப் பயந்து காட்டிற்குள்ளே ஓடி ஒளிந்து கொண்ட தமிழ்ப்
போராளிகள் எல்லா உடமைகளையும் ஆயதங்களையும் கொண்டு சென்று விட்டனர் என்று
சொல்லப் போகின்றனரா? அல்லது


தமிழ்ப் போராளிகளிடம் ஆயதங்கள் எதுவுமே இல்லை இருந்தால் தானே அவற்றைக்
கைப்பற்றப் போகிறோம் என்று சொல்லப் போகின்றனரா?


இந்நிலையில் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதாக இலங்கை அதிபர் அறிவித்ததைப் பற்றி
கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்கா,


"தமிழ்ப் போராளிகளைப் போரில் வெல்வதென்பதும், போரின் மூலமாக முற்றிலும்
அழித்தொழிப்பது என்பதும் நடைமுறையில் முடியாது".


"அமைதிப் பேச்சுவார்த்தை மூலமாகத் தமிழ்ப் போராளிகளுடனான கருத்து
வேற்றுமைகளுக்குத் தீர்வு காண வேண்டும்"


"இலங்கையில் வாழும் தமிழர்களின் கோரிக்கைக்கு நியாயமான தீர்வைக் காண அரசு முயல
வேண்டும்". என்றும் தெரிவித்துள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


அமைதி வழியில் மட்டுமே முப்பதாண்டு கால இலங்கை இனப் பிரச்சினைக்கு முழுமையான
தீர்வு காண முடியும் என்ற அமெரிக்காவின் இந்தக் கருத்தை மற்ற உலக நாடுகளும்,
இலங்கை அரசும், தமிழ்ப் போராளிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.


அதற்காக அனைத்து உலக நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டு இலங்கை அரசை
நிர்பந்தப்படுத்த வேண்டும், அதன் மூலமாக அப்பாவி ஈழத் தமிழர்களின் முப்பதாண்டு
கால வாழ்வியல் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு உண்டானால் அதை விட தமிழர்களுக்கு
மகிழ்ச்சி வேறொன்றுமில்லை........

விகடன்
04-01-2009, 12:10 PM
ஐயா, புலிகளை விட பல மடங்கு ஆட்பலத்துடனும், இந்தியா உட்பட கிட்டத்தட்ட ஏழு நாடுகளின் படைக்கல உதவியுடன் இலங்கை இராணுவம் புலிகளுடன் மோதிக் கொண்டிருக்கையில் யாருடைய உதவியுமின்றி தன்னந்தனியாக களத்திலும் புலத்திலும் உள்ள ஈழ மக்களின் ஆதரவுடன் மட்டும் இராணுவத்தை எதிர்கொள்ளும் புலிகள் தங்கள் ஆட்பலத்தைத் தக்க வைக்கும் நோக்கிலே நடாத்தும் பின்னகர்வுகளை பின்னடைவுகளாகக் கொள்ள முடியாது மாறாக தந்திரோபாய நகர்வுகளாகவே கொள்ள வேண்டும். ஏனென்றால் இத்துணை பலமான இராணுவ இயந்திரத்தை இதுவரையில் முடக்கி வைத்திருந்ததே புலிகளுக்கு வெற்றிதான்,

சரியாக சொன்னாய் ஓவியன்.

நிரன்
04-01-2009, 12:16 PM
மிகவும் அருமைககக்தொரு கருத்து!

காத்திருப்போம் புதிய அமெரிக்க அதிபர் ஏதாவது ஒரு முடிவினை
எடுக்க முனைகிறாற என்று ...


நன்றி ஷிப்லி..
கொழும்பு மருத்துவமனையில் விபத்துச் சிகிச்சை பிரிவில்.. பொது மக்கள்
யாருக்கும் சிகிச்சை அளிக்கப்படவில்லை. காரணம் எல்லாம் இலங்கை
ராணுவம் மட்டுமே உள்ளனராம். மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை நிலவி வருகிறது.
அதில் பலர் கடுமையன பாதிப்புக்குள்ளாக் இருக்கின்றனர் என்று
தற்பொழுது...பொது மருத்துவமனை வைத்தியர் ஒருவர் இணையம் மூலாமக
உரையாடிய போது கூறிய தகவல் இது... படைத் தரப்பில் மிகப் பெரிய
இழப்பு ஆனால் அரசு அதனை மூடி மறைக்கிறது..

இதில் முக்கியமான கருத்தென்னவென்றால் இவர்கள் எங்கிருந்து கொண்டு
வரப்பட்டுள்ளார்கள் என்று வைத்தியர்கள் யாருக்கும் கூறப்படவில்லை

ஓவியன்
04-01-2009, 01:02 PM
நன்றி விராடன், இன்று என்னுடன் அலைபேசியில் உரையாடிய நண்பரொருவர் தன்னுடன் சேர்ந்து பணி புரியும் பெரும்பான்மை இன நண்பர்களின் வெற்றி முழக்கத்துடன் இணைந்த பகிடி வதையினால் ரொம்பவே பாதிக்கப்பட்டதாக வருத்தப்பட்டார். அவருக்கும் நான் இதே பதிலினைத்தான் கொடுத்திருந்தேன், அத்துடன் ஒரு நாட்டு மக்கள் இன்னொரு நாட்டு பிரதேசத்தைக் கைப்பற்றினால் தான் மகிழ்ச்சி, அவர்களுக்கு கிளிநொச்சி சம்பவம் மகிழ்ச்சியென்றால் அதுவே நம் வெற்றிதான் என்று....

ஏனென்றால் வன்னிப் பகுதியை இன்னும் ஒரு நாடாகவும், விடுதலைப் புலிகளை இன்னுமொரு நாட்டின் இராணுவமாகவும் மறைமுகமாக ஏற்றுக் கொண்டவர்களாகிவிட்டார்களே என்பதற்காக.....

____________________________________________________________________________________________________________________

நியாயமான சந்தேகங்கள்தான் ஷிப்லி, பகிர்வுக்கு நன்றி ஷிப்லி.....

விகடன்
04-01-2009, 02:45 PM
என்னோடும் அதே வர்க்கத்தை சேர்ந்த மூவப் பணிபுரிகின்றனர் ஓவியன். ஆனால் நாட்டைப் பற்றிய பேச்சு கிடையாது.

சில தமிழர்களின் பொறுப்பற்ற, எதிர்கால சிந்தனை அற்ற பேச்சுக்களை கேட்கையில்த்தான் கோபம் பீறிட்டுக்கொண்டு வருகிறது. சில வேளைகளில், காதைப்பொத்தி ஒன்று போட்டால் என்ன என்று சிந்தித்ததும் உண்டு. எதோ இருக்கும் நாட்டின் சட்டத்தையும் தற்கால உலகப் பொருளாதாரத்தை நினைத்தும் எனது எதிர்காலத்தை நினைத்தும் முகத்தை பூமியை நோக்கி கவிழ்த்துவிடுவேன்...... அதுவும், ஒருகாலத்தில் வரலாற்று அவர்களுக்கு பாடத்தை புகட்டும் என்ற நம்பிக்கையில்....

நேசம்
04-01-2009, 02:49 PM
இது தற்காலிக பின்னைடவுவாக இருக்கும். அல்லது போர் தந்திரமாக இருக்கலாம்.ஏனெனில் சிங்களர்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள்.பெற முடியாது

நிரன்
04-01-2009, 03:34 PM
இது தற்காலிக பின்னைடவுவாக இருக்கும். அல்லது போர் தந்திரமாக இருக்கலாம்.ஏனெனில் சிங்களர்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள்.பெற முடியாது

எதிரியையும் குறைச்சலாக மதிப்பிடக் கூடாது நண்பரே!!


எல்லாம் நன்மையாகவே அமைய வேண்டுமென இறைவனைப் பிரார்த்திப்போம்.

ஆதவா
05-01-2009, 05:30 AM
ஓவியனின் கருத்துக்கள் பிரமிக்க வைக்கின்றன... பல சந்தேகங்கள் தீர்ந்தன..

அமைதி எங்கும் நிலவவேண்டும்...

நேசம்
05-01-2009, 05:52 AM
ஏனென்றால் வன்னிப் பகுதியை இன்னும் ஒரு நாடாகவும், விடுதலைப் புலிகளை இன்னுமொரு நாட்டின் இராணுவமாகவும் மறைமுகமாக ஏற்றுக் கொண்டவர்களாகிவிட்டார்களே என்பதற்காக.....

..

அசத்தல் ஒவியன்.கிளிநொச்சியை கைப்பற்றியது தங்களது வீரத்தின் வெளிப்பாடாக காட்டினால் அது அவர்களது எதிரிகளின் வீரத்தை ஒருவிதத்தில் ஒப்புக்கொள்வது போல்தான்.நிச்சயமாக மிகப்பெரிய இழப்பை சந்திக்க இருக்கிறார்கள்

அய்யா
05-01-2009, 06:29 AM
ஐயா,

இலங்கை அரசாங்கம் தன் அரசியல் லாபங்களுக்காக தன்னிழப்புக்களை மறைத்து வைத்துக் கொண்டு கிளிநொச்சியைக் கைப்பற்றியதை பெரு வெற்றியாகக் கொண்டாடும் நிலையில் நாம் அந்த வெற்றியின் உண்மைத் தன்மையை விளங்கிக் கொள்வது காலத்தின் கட்டாயமே...

தங்களின் விரிவான மற்றும் பொறுமையான நீண்ட விளக்கத்துக்கு நன்றியண்ணா!

பரந்தன் பிடிபட்டதற்குப் பின்னர் ஏ9 நெடுஞ்சாலையின் கிழக்குப்புறமாக படையினர் தாக்குவது எளிதாகிவிட்டது; கிளிநொச்சியைத் தக்கவைக்க, நேரடிச்சமர் தேவைப்படுமென்றும், அதன்பலனாக மக்களுக்கும் புலிகளுக்கும் பாரிய இழப்புகள் ஏற்படுமென்றும் அதனாலேயே புலிகள் கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமின்றி கிளிநொச்சியை விட்டுக்கொடுத்தனர் என்றும் விளங்கிக்கொண்டேன். நான் விளங்கிக்கொண்டமை சரிதானே?

அது சரியெனில் எனது பின்வரும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்க வேண்டுகிறேன்.

1. நேரடிச்சமரையும், இழப்புகளையும் தவிர்க்க பின்வாங்கிய புலிகளுக்கு, இனி வாழ்வா சாவா போராட்டத்தைத் ( அதாவது, செய் அல்லது செத்து மடி என்னும் தீர்வுப் போர் புரிவதைத்) தவிர வேறுவழியில்லை என்று வீரகேசரி சொல்கிறதே. அப்படியெனில் புலிகள் இனி நேரடிச் சமர் புரிவார்களா அல்லது வேறு எங்கும் பின்வாங்குவார்களா?

2. தங்களுக்கான அனைத்து வழங்கல்களுக்கும் இனி கடல்வழியையே புலிகள் நம்பியிருக்கவேண்டும் ; நிலவழியிலான வழங்கல்களை படையினர் கிளிநொச்சி வெற்றிமூலம் தடுத்துவிட்டனர் என்று சொல்லப்படுகிறதே. அது உண்மையா? எனில் அது பின்னடைவு இல்லையா?

3. பரந்தன் வீழ்ச்சி கிளிநொச்சியை (தாக்குவதை எளிதாக்கி தம்மிடமிருந்து ) பறிக்கும் என்று புலிகளுக்கு தெரியாதா? இந்நிலையில் அதைப் பறிகொடுத்ததும் பரந்தனை அரச படையினர் வென்றதும் புலிகளுக்கு பின்னடைவா இல்லையா?

புலிகளுக்கு பின்னடைவென்றால் எனக்கு அது ஒன்றும் மகிழ்ச்சியில்லை. சர்வவல்லமைமிக்க சிங்களப்படையை எதிர்ப்பதென்பதும், அதை இதுகாறும் திறமையாக சமாளித்து வருவதென்பதும் எளியதொன்றல்ல என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன்.மேலும் பெரும் விடுதலைப் போரில் வெற்றிகளும் வீழ்ச்சிகளும் மாறி மாறி வருவதை தவிர்க்க முடியாதென்பதும் இப்போதைய நிலை எப்போது வேண்டுமானாலும் தலைகீழாக மாறலாமென்பதும் நானறிந்ததே. இதையும் மனதில் கொண்டு கோபமின்றி பதிலளிக்க வேண்டுகிறேன்.

நன்றி அண்ணா!

அன்புரசிகன்
05-01-2009, 07:36 AM
அது சரியெனில் எனது பின்வரும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்க வேண்டுகிறேன்.

1. நேரடிச்சமரையும், இழப்புகளையும் தவிர்க்க பின்வாங்கிய புலிகளுக்கு, இனி வாழ்வா சாவா போராட்டத்தைத் ( அதாவது, செய் அல்லது செத்து மடி என்னும் தீர்வுப் போர் புரிவதைத்) தவிர வேறுவழியில்லை என்று வீரகேசரி சொல்கிறதே. அப்படியெனில் புலிகள் இனி நேரடிச் சமர் புரிவார்களா அல்லது வேறு எங்கும் பின்வாங்குவார்களா?

நீங்கள் சொல்வது போல் செய்யல்லது செத்துமடி (Do or die) தாக்குதல் இதற்கு முன்பும் இதே கிளிநொச்சி பகுதியில் விடுதலைப்புலிகளால் நடாத்தப்பட்டது. அவ்வாறான தாக்குதல்களால் மக்களுக்கு பெரும் பாதிப்பு கிடைக்காது. காரணம் இவ்வகைத்தாக்குதல்கள் ஒரு சில மணித்தியாலங்களில் பாரிய பிரதேசங்களை கைப்பற்றுவர்.

உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ... 1999 ஆண்டு ஆனையிறவு முகமாலை உட்பட்ட பிரதேசங்களை 3 மணித்தியாலங்களில் புலிகள் கைசப்படுத்தினர். அத்துடன் நிற்காது சங்கத்தானை அரியாலைப்பகுதியும் கடற்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தது. தரையிறங்கி முன்னேறிய கடற்புலிகளுடன் தட்டாதெருச்சந்தி (யாழ் இந்துக்கல்லூரிக்கு அருகில்) பகுதியில் இராணுவம் நேரடிமோதலிட்டது காலம் கண்ட எதார்த்தம். பின்னர் புலிகள் பின்வாங்கிவிட்டனர்.

சத்ஜெய மூலம் படையெடுத்து கிளிநொச்சியில் தங்கியிருந்த படையினரை திரும்பி அனுப்பியதும் இவ்வகையான ஒரு தாக்குதல் தான்.


2. தங்களுக்கான அனைத்து வழங்கல்களுக்கும் இனி கடல்வழியையே புலிகள் நம்பியிருக்கவேண்டும் ; நிலவழியிலான வழங்கல்களை படையினர் கிளிநொச்சி வெற்றிமூலம் தடுத்துவிட்டனர் என்று சொல்லப்படுகிறதே. அது உண்மையா? எனில் அது பின்னடைவு இல்லையா?!

இவை இராஜதந்திர ரீதியில் பின்னடைவாக இருக்கும். இராணுவ ரீதியாக இல்லை. நீங்களே அந்த கிளிநொச்சி புகைப்படங்களை பாருங்கள். ஒரு பேரூந்து தரிப்பிடம் காட்டியிருக்கிறார்கள். ஒரு துப்பாக்கி சன்ன சேதம் உண்டா??? வீதிகள் அனைத்தும் புதிதாகவே உள்ளது. ஆகவே இராணுவ பின்னடைவு இல்லை. தரை வழங்கலை இதுவரை தடுக்கவில்லை. காரணம் சுண்டிக்குளம் வழியாக பச்சிலைப்பள்ளி பளை புலோப்பளை அல்லிப்பளை சேரன்பற்று முகமாலை போன்ற பகுதிகளை அவர்கள் சென்றடையலாம். மழைகாலத்தில் சகதியாக இருக்கும். அவ்வளவே... தவிர கடற்பயணம் எப்போதும் புலிகளுக்கு சாதகமாக இருப்பதென்பது காலம் உணர்த்திய உண்மை.

தவிர இராணுவம் கைப்பற்றியிருந்தாலும் அப்பகுதியில் பருப்பு விதைத்தது போல் இராணுவம் இருக்காது. மீண்டும் புலிகள் அப்பகுதியை ஆக்கிரமித்திருக்கலாம். 1996ம் ஆண்டு இவ்வகையான இரு நிலை தான் இருந்தது. உதாரணம் 1996 ஆவணிமாதத்தில் (யாழ் குடாநாடே இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த சமையம்) சுன்னாகத்தில் ஒரு பாரிய மண் மேடு உருவாக்கியிருந்தனர். காங்கேசன் துறை வீதியூடாக பார்த்தால் அடுத்த மண்மேடு தட்டாதெரு சந்தியில் தான். இடையில் இராணுவ காவலரண்கள் இல்லை. (பெரும்பாலான பிரதேசம்) பவள் கவசவாகனம் ஒன்றை திருப்புவதற்காக மண்மேடு தாண்டி வந்த வாகனத்தை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த புலிகள் துரத்தி துரத்தி தாக்கி நாச்சிமார் கோவிலடி வரை சென்று முற்றாக தாக்கியழித்திருந்தனர். இடையில் ஏறத்தாள 6- 7 ஊர்கள் உண்டு. (5 கிமீ இருக்கும்)

இவ்வகையான நிலையை வன்னியிலும் இருக்கலாம். இல்லாமலிருக்கலாம்.


3. பரந்தன் வீழ்ச்சி கிளிநொச்சியை (தாக்குவதை எளிதாக்கி தம்மிடமிருந்து ) பறிக்கும் என்று புலிகளுக்கு தெரியாதா? இந்நிலையில் அதைப் பறிகொடுத்ததும் பரந்தனை அரச படையினர் வென்றதும் புலிகளுக்கு பின்னடைவா இல்லையா?

புலிகளுக்கு பின்னடைவென்றால் எனக்கு அது ஒன்றும் மகிழ்ச்சியில்லை. சர்வவல்லமைமிக்க சிங்களப்படையை எதிர்ப்பதென்பதும், அதை இதுகாறும் திறமையாக சமாளித்து வருவதென்பதும் எளியதொன்றல்ல என்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன்.மேலும் பெரும் விடுதலைப் போரில் வெற்றிகளும் வீழ்ச்சிகளும் மாறி மாறி வருவதை தவிர்க்க முடியாதென்பதும் இப்போதைய நிலை எப்போது வேண்டுமானாலும் தலைகீழாக மாறலாமென்பதும் நானறிந்ததே. இதையும் மனதில் கொண்டு கோபமின்றி பதிலளிக்க வேண்டுகிறேன்.
நன்றி அண்ணா!

முதலில் கூறியது தான். விடுதலைப்புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கியிருப்பது திடீர் முடிவல்ல. காரணம் புகைப்படங்களில் உள்ள எந்த ஒரு கடையினது கதவுகள் முகட்டு ஓடுகள் உபகரணங்கள் எதுவும் அன்றி தான் உள்ளது. பரந்தன் வீழ்நதமையால் தான் கிளிநொச்சி வீழ்ந்தது என்று அல்ல. காரணம் இருபுறத்திலும் இராணுவம் உள்ளது. முறிகண்டி பகுதியும்) கிளிநொச்சியைக்கூட முழுமையாக இன்னமும் கைப்பற்றவில்லை. யாழ் கண்டிவீதி பெருஞ்சாலையை அண்டிய பகுதிகளை தான் கைப்பற்றியிருக்கிறார்கள்.

தவிர தற்சமயம் இராணுவத்தினர் கண்ட வெற்றிகளால் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதென்றால் அது இராஜதந்திர பின்னடைவே. பிரபாகரனின் போரியல் தந்திரோபாயங்களை யாராலும் மதிப்பிடமுடியாது என்பது எதார்த்தம். இவ்வாறு பறிகொடுத்த ஆனையிறவையே இலகுவில் கைப்பற்றியவர்கள் தான் புலிகள்.

பார்ப்போம். என்னவாகவுள்ளதென்று.

ஓவியனும் பதில் தருவார்....

ஓவியன்
05-01-2009, 08:34 AM
பரந்தன் பிடிபட்டதற்குப் பின்னர் ஏ9 நெடுஞ்சாலையின் கிழக்குப்புறமாக படையினர் தாக்குவது எளிதாகிவிட்டது; கிளிநொச்சியைத் தக்கவைக்க, நேரடிச்சமர் தேவைப்படுமென்றும், அதன்பலனாக மக்களுக்கும் புலிகளுக்கும் பாரிய இழப்புகள் ஏற்படுமென்றும் அதனாலேயே புலிகள் கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமின்றி கிளிநொச்சியை விட்டுக்கொடுத்தனர் என்றும் விளங்கிக்கொண்டேன். நான் விளங்கிக்கொண்டமை சரிதானே?
ஒரு சிறிய திருத்தம், கிளிநொச்சியை விட்டுக் கொடுத்தமையால் மக்களது இழப்புக்கள் தவிர்க்கப்பட்டன என்று கூற முடியாது. ஏனென்றால் மக்கள் புலிகள் கிளிநொச்சியைச் சுற்றி அரணமைத்துப் போராடத் தொடங்கும் முன்னரே கிறிநொச்சி மற்றும் பரந்தன் பகுதிகளை விட்டு விட்டு முல்லைத்தீவை அண்டிய பகுதிகளுக்கும் கிளிநொச்சியின் கிழக்குப் பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்து விட்டனர். ஆனால் கிளிநொச்சியின் வீழ்ச்சிக்கு முன்னரும் சரி பின்னரும் சரி அவர்களது அவல வாழ்வில் பெரிதாக மாற்றங்களேதுமில்லை. ஏனென்றால் அவர்களது இழப்புக்கள் இராணுவத்தினரின் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுக்களாலும் விமானக் குண்டு வீச்சுக்களாலுமே ஏற்பட்டன. அது அன்று தொட்டு இன்று வரை தொடர்ந்த வண்ணமேயிருக்கிறது......


நேரடிச்சமரையும், இழப்புகளையும் தவிர்க்க பின்வாங்கிய புலிகளுக்கு, இனி வாழ்வா சாவா போராட்டத்தைத் ( அதாவது, செய் அல்லது செத்து மடி என்னும் தீர்வுப் போர் புரிவதைத்) தவிர வேறுவழியில்லை என்று வீரகேசரி சொல்கிறதே. அப்படியெனில் புலிகள் இனி நேரடிச் சமர் புரிவார்களா அல்லது வேறு எங்கும் பின்வாங்குவார்களா?
நேரடிச் சமரென்பதிலும் மரபுவழிச் சமரொன்றைத் தவிர்க்கும் பொருட்டே பின்னகர்ந்தனர் என்பதே சரியானது, ஏனென்றால் பொதுவாக மரபுவழிச் சமரில் ஆட்பலமும், ஆயுதபலமும் முக்கிய பங்காற்றும். ஆளணியில் இராணுவத்தினரிலும் குறைவாக இருக்கும் புலிகள் எல்லாப் பகுதிகளிலும் கண்மூடித்தனமாக நேரடி மரபுவழிச் சமரில் இறங்குவதில்லை. ஆனால் புலிகள் ‘கெரில்லா’ பாணி கலந்த மரபுவழிச் சமர்களில் கைதேர்ந்தவர்கள். அதாவது தாம் சமரிடும் இடத்தையும் நேரத்தையும் புலிகள்தான் தீர்மானிப்பார்கள் இராணுவத்தினரல்ல, அப்படித் தீர்மானித்து விட்டு தம் ஒட்டு மொத்த பலத்தையும் ஓரிடத்தில் குவித்து கெரில்லா பாணியில் பாய்ந்து மரபுவழிச் சமர் போல் போரிடுவது. 1996 ஆம் ஆண்டு ஓயாத அலைகள் ஒன்றின் மூலம் முல்லைத் தீவு இராணுவ முகாமைத் தகர்த்தழித்தமை இதற்கு நல்ல உதாரணமாக அமையும். இவ்வாறான சண்டையிடும் இடத்தை இராணுவம் தீர்மானிக்காது புலிகள் தீர்மானிக்கும் சமர்கள் பல நடக்க இருக்கிறதென்பதே பலரது ஆரூடமாக இருக்கிறது. ஆனால் இதே வேளை புலிகளின் கடல் வழங்கலைத் தடுக்கும் முகமாக முல்லைத்தீவு நோக்கி நகரும் படையினரை நிச்சயமாக புலிகள் மரபுவழியில் எதிர்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது அத்தகைய சமரொன்றைத் தடுக்க வேண்டுமெனின் புலிகள் ஒரு பாரிய சிக்கலுக்குள் இராணுவ இயந்திரத்தைத் தள்ளி முடக்கியாக வேண்டும். அதற்கு புலிகளின் இந்த வலிந்த சண்டைகள் உதவியாக இருக்குமென்பதே பலரதும் கணிப்பாகவுள்ளது...


தங்களுக்கான அனைத்து வழங்கல்களுக்கும் இனி கடல்வழியையே புலிகள் நம்பியிருக்கவேண்டும் ; நிலவழியிலான வழங்கல்களை படையினர் கிளிநொச்சி வெற்றிமூலம் தடுத்துவிட்டனர் என்று சொல்லப்படுகிறதே. அது உண்மையா? எனில் அது பின்னடைவு இல்லையா?
யாழ்ப்பாணத்தின் நுளைவுப் பகுதியான முகமாலை மற்றும் ஆனையிறவுப் பகுதியில் நிலை கொண்டிருக்கும் புலிகளின் படையணிகளுக்கான நேரடி வழங்கல் பாதைகள் பரந்தன் சந்தி இராணுவ வசமானதும் முடக்கப்பட்டு விட்டன என்பது உண்மைதான். ஆனால் இங்கே நாம் ஒரு தடவை கடந்த கால நிகழ்வுகளைப் புரட்டிப் பார்க்க வேண்டிய தேவையில் இருக்கிறோம், அதாவது 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் இராணுவத்தின் வசமாகும் முன்னர் யாழ்ப்பாணமும் கிளிநொச்சியும் புலிகள் வசமிருந்த கால கட்டத்தில் ஆனையிறவுப் பகுதியில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினருக்கு இப்போது புலிகளுக்கு இருக்கும் அதே நிலையே இருந்தது, அப்போது ஆனையிறவுக்கு கிழக்கே இருந்த கட்டைக்காடு, வெற்றிலைக்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த இராணுவ முகாம்களுடன் ஒழுங்கற்ற சேறு நிறைந்த கண்டல் வெளிப் பாதைகள் மூலம் வழங்கலை பெற்று ஆனையிறவில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் தம் நிலைகளைத் தக்க வைத்திருந்தனர். இப்போது புலிகளிருக்கும் நிலையும் அந்த நிலையை ஒத்ததே, அதாவது இப்போது ஆனையிறவுக்கு அருகே புலிகள் தளமைத்திருக்கையில் கட்டைக்காடு, வெற்றிலைக் கேணிப் பகுதிகள் இன்னமும் புலிகள் வசமே இருக்கிறது, அங்கிருந்து கொஞ்சம் சிரமமான முறையில் சதுப்பு நிலங்களூடாக புலிகள் தம் வழங்கல்களை முன்னெடுக்க முடியும்.பரந்தன் வீழ்ச்சி கிளிநொச்சியை (தாக்குவதை எளிதாக்கி தம்மிடமிருந்து ) பறிக்கும் என்று புலிகளுக்கு தெரியாதா? இந்நிலையில் அதைப் பறிகொடுத்ததும் பரந்தனை அரச படையினர் வென்றதும் புலிகளுக்கு பின்னடைவா இல்லையா?
நான் முன்னமே குறிப்பிட்டிருந்தேன் பரந்தனை இழந்ததுமே கிளிநொச்சியிலிருந்து பின்னகர புலிகள் தீர்மானித்திருப்பார்களென, குஞ்சுப்பரந்தன் நிலைகளை இழக்காதிருக்க புலிகள் கடும் சமராடியது உண்மை, அப்படியும் அந்தப் பகுதி கைவிட்டுப் போனதும் மீள அதனைக் கைப்பற்ற ஒரு வலிந்த தாக்குதலை மேற்கொண்டதும் உண்மை இரண்டிலும் வெற்றி வாய்ப்பில்லாது போக பரந்தனை கைவிட்டனர். இங்கே ஆளணி, ஆயுத சமனிலை பெரிய பங்கெடுத்திருந்திருந்தாலும் கைப்பற்றப்பட்ட பகுதிகளை வைத்து நோக்கினால் பின்னடைவுதான், ஆனால் இதற்காக இராணுவம் கொடுத்த இராணுவ வீரர்களில் உயிரிழப்பை நோக்கினால், அது கொஞ்சம் பெரிதாகவே இருக்கிறது. இந்த சண்டைகளில் விடுதலைப் புலிகளின் ஒரே ஒரு பீரங்கியே இடம்மாறி, இடம்மாறி நகர்ந்து கொண்டே தம்மைத் துவம்சம் செய்ததாக இராணுவத்தினரே ஒப்புக் கொண்டிருக்கின்றனர். என்னதானிருந்தாலும் ஒரு பின்னடைவிலிருந்து இன்னொரு பாரிய பின்னடைவை நோக்கிப் பயணிக்காது தூரநோக்கில் சிந்தித்தெடுத்த முடிவே கிளிநொச்சியைக் கைவிடும் முடிவென்பது என் தீர்க்கமான முடிவு....

அய்யா
05-01-2009, 08:51 AM
நன்றி ஓவியன் அண்ணா மற்றும் அன்பண்ணா!

உங்களிடமிருந்து நிறைய தகவல்கள் அறிய முடிந்தது.வல்லடியாக எண்ணாமல் கனிவுடன் பதிலளித்த தங்கள் பெருந்தன்மைக்கு தலை வணங்குகிறேன்.

விரைவில் இலங்கையில் அமைதி மலரட்டும்!

கா.ரமேஷ்
05-01-2009, 09:41 AM
நிறைய விசயங்களை அறிந்து கொள்ள முடிந்தது...
தொடருங்கள் தோழர்களே...!