PDA

View Full Version : உறவுகள் தொடர்கதை.. உணர்வுகள் சிறுகதை...

சசிதரன்
02-01-2009, 05:48 AM
நம் அறிமுக நாட்களில்....
மௌனங்களை பரிமாறிக் கொண்டோம்...
பின் கொஞ்சமாய் பார்வைகளும் புன்னகைகளும்...
பேச தொடங்கி... பின் நிறையப் பேசினோம்...
இதயம் வரை நீண்டது பரிமாற்றம்.

இந்நாட்களில் மீண்டும் துவங்கியிருக்கிறது...
மௌனங்களின் பரிமாற்றம்....
இம்முறை ஒவ்வொரு மௌனத்திற்கும்...
அர்த்தங்கள் கற்பிக்கிறது மனது...

கொஞ்சம் கொஞ்சமாய் பார்வைகள் தவிர்க்கப்படுகிறது...
பார்க்கும் பார்வைகளிலும் விடை தெரியா கேள்விகள்...
எந்த நிமிடமும் உதிர்ந்து விடும்...
ஒற்றை ரோஜாவின் கடைசி இதழாக...
நம்மிடையே மீதமிருக்கிறோம் நாம்...

நம்மை இணைத்திருந்த சிறகுகள்...
கனமாகிப் போனதாய் ஓர் எண்ணம்.
நேற்று வரை சுமந்த சிறகுகள்....
இன்று ஏனோ பூட்டப்பட்ட சங்கிலியாய்.

நம் சுயங்களின் சுமை தாங்காமல்...
நழுவி செல்கிறது முகமூடிகள்..
நம் உண்மை முகங்கள் பார்க்க பிடிக்காமல்..
பிரிவொன்றை எதிர்பார்த்து நாட்கள் கடத்துகிறோம்...

உனக்கும் இருக்ககூடும்...
சில காரணங்கள்..
உன்னிடமும் இருக்ககூடும்....
வலிகளை பட்டியலிடும் ஒரு கவிதை...
எனினும் அறிய விருப்பமின்றி விலகுகிறேன்...

ஒரே ஒரு வேண்டுகோள் மட்டுமே உண்டு...
பிரிவின் நினைவாய் புன்னகை தந்துவிடாதே...
பின் உன் எல்லா புன்னகைகளும்...
பொய்யெனவே நினைக்க தோன்றும்.

அமரன்
02-01-2009, 08:15 AM
ஆதியனின் (நன்றி இளசு அண்ணா) உடலில் உணர்வுகள் வரைந்த சித்திரமே ஆதிமொழி. மௌனத்தூரிகை வரைந்த புன்னகை, பார்வை என விரியும் சித்திரங்கள் பேசுவது சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப அர்த்தம் கொள்ளப்படும். சமயங்களில் வார்த்தைகளை விட இவைக்கு வலிமை மிகுந்துவிடும்.

கவிதையின் தொடக்கத்திலும் முடிவிலும் பேசும் சித்திரங்களை பொதித்து வைத்திருப்பதில் அழகுவலையை வீசுகிறது கவிதை. ஆங்காங்கே இதனை மேலெழுப்பியபடி நடுவில் இருக்கும் உணர்வு அலைகளில் கால் நனைத்து முழுமையாக மூழ்கி தத்தளித்து கரையேறியதும் இனந்தெரியாத மூச்சொன்று உள்ளிருந்து புறப்படுவது கவிதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

கொழு குழு குழந்தை அழகானாலும் ஆரோக்கியத்துக்கு சேதாரம் இல்லாமல் இருப்பது நல்லது.

பாராட்டுகள் சசிதரன்.

தமிழ்தாசன்
02-01-2009, 10:29 AM
பிரிவின் நினைவாய் புன்னகை தந்துவிடாதே...
பின் உன் எல்லா புன்னகைகளும்...
பொய்யெனவே நினைக்க தோன்றும்.
பாராட்டுகள் சசிதரன்.

சசிதரன்
03-01-2009, 03:49 AM
ஆதியனின் (நன்றி இளசு அண்ணா) உடலில் உணர்வுகள் வரைந்த சித்திரமே ஆதிமொழி. மௌனத்தூரிகை வரைந்த புன்னகை, பார்வை என விரியும் சித்திரங்கள் பேசுவது சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப அர்த்தம் கொள்ளப்படும். சமயங்களில் வார்த்தைகளை விட இவைக்கு வலிமை மிகுந்துவிடும்.

கவிதையின் தொடக்கத்திலும் முடிவிலும் பேசும் சித்திரங்களை பொதித்து வைத்திருப்பதில் அழகுவலையை வீசுகிறது கவிதை. ஆங்காங்கே இதனை மேலெழுப்பியபடி நடுவில் இருக்கும் உணர்வு அலைகளில் கால் நனைத்து முழுமையாக மூழ்கி தத்தளித்து கரையேறியதும் இனந்தெரியாத மூச்சொன்று உள்ளிருந்து புறப்படுவது கவிதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

கொழு குழு குழந்தை அழகானாலும் ஆரோக்கியத்துக்கு சேதாரம் இல்லாமல் இருப்பது நல்லது.

பாராட்டுகள் சசிதரன்.

உங்கள் கனிவான பாராட்டிற்கும்.. அன்பான அக்கறைக்கும் நன்றிகள் கோடி நண்பரே...:)

சசிதரன்
03-01-2009, 03:50 AM
பாராட்டுகள் சசிதரன்.

நன்றி நண்பர் தமிழ்தாசன் அவர்களே..:)

கா.ரமேஷ்
03-01-2009, 04:47 AM
புன்னகைகளும்...
பொய்யெனவே நினைக்க தோன்றும்....

நல்ல வரிகள் சசி....வாழ்த்துக்கள்...........

சசிதரன்
05-01-2009, 10:22 PM
நன்றி நண்பரே...:)