PDA

View Full Version : சுவாரசியமான தகவல்கள்shibly591
01-01-2009, 07:24 AM
வணக்கம் நண்பர்களே...

இணையப்பக்களில் உலாவரும்போது ஆங்காங்கே படிக்கக்கிடைக்கும் சுவாரசியமான பயனுள்ள தகவல்களை இந்தத்திரியில் பதியலாம் என உத்தேசித்துள்ளேன்..

நீங்களும் இதுபோன்ற தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்..

இதோ சில சுவாரசிய தகவல்கள் (பிரியத்தோழி இணையத்தளம் மூலமாக)

1---நீங்கள் தும்மும்போது மற்றவர்கள் உனக்கு நூறு வயது ஆயுள் கிடைக்கவேண்டும் என ஆசீர்வதிப்பார்கள். ஏன் தெரியுமா? தும்மும்போது உங்கள் இதயமானது ஒரு மில்லி செக்கன் துடிப்பை நிறுத்திக்கொள்கிறது.


2---பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு தடவை கண்சிமிட்டுகிறார்கள். (அது சரி கண்ணடிப்பது.....)

3---குதிரையில் வீரன் செல்வது போன்ற சிலைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதற்கு பின்னே இருக்கும் சில தகவல்கள்:


அக்குதிரையின் இரண்டு முன்கால்களும் நிலத்தில் இருந்து எழுந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் இறந்திருக்கிறான் என அர்த்தம்.
அக்குதிரையின் ஒரு முன்கால் நிலத்திலிருந்து உயர்ந்து நின்றால், அவ்வீரன் போர்களத்தில் காயப்பட்டு பின்னர் இறந்து இருக்கிறான்.
அக்குதிரையின் இரண்டு முன்கால்களும் நிலத்தில் பதிந்து இருந்தால், அவ்வீரன் இயற்கை நோயால் இறந்து இருக்கிறான். (நல்லூர் சங்கிலியன் சிலை எப்படி இருக்கிறது?)

4---நீங்கள் இயபோன் அணிந்திருக்கும்போது காதுக்குள் வளரும் பற்றீரியாக்கள் 700 மடங்கு வேகத்தில் வளர்கிறது.

5---இது எண்களின் விளையாட்டு.
111, 111, 111 x 111, 111, 111 = 12, 345, 678, 987, 654, 321

poornima
01-01-2009, 07:31 AM
நிச்சயமாய் சுவாரஸ்யமான தகவல்கள் தான்.. நன்றி ஷீப்லி..

இதுகூட நீங்கள் அறிந்திரிப்பீர்கள்..

ஒன்பதால் எந்த எண்ணையும் பெருக்கி வரும் விடையின் கூட்டுத்தொகை ஒன்பதாகவே இருக்கும்.

5 x 9 = 45 => 4+5 = 9

567 x 9 = 5103 = 5+1+0+3 = 9

இப்படி எந்த இலக்கமானாலும் எத்தனை இலக்கமானாலும்..

shibly591
01-01-2009, 07:37 AM
மனித உடல் உறுப்புக்கள் பற்றி சில சுவாரசியமான தகவல்கள் (நான் என்ற வலைத்தளத்தில் படித்தது)

மனித உடல் ஒரு இயந்திரம் ஆனால் ஆச்சரியமான,வியப்பூட்டக்கூடிய இயந்திரம்.கீழே உள்ள தகவல்கள் இதனை உறுதிபடுத்தும்

1. I.Q அதிகம் உள்ளவர்களுக்கு கனவுகள் அதிகம் வரும்

2. மனித உடலின் மிகப் பெரிய செல் பெண்களின் கரு முட்டை.

3. மனித உடலின் மிகச் சிறிய செல் ஆண்களின் உயிரணு.

4. ஒரு ஸ்டெப் நடக்க 200 தசைகள் அசைந்து உதவுகின்றன.

5. சராசரி பெண்ணின் உயரம் சராசரி ஆணின் உயரத்தை விட 5 இன்ச் குறைவு.

6. வயிற்றில் உள்ள அமிலங்கள் ரேசர் பிளேடுகளை கரைக்கக் கூடிய ஆற்றல் உடையவை.

7. மனித மூளையின் செல்லானது பிரிட்டனிகா விகிபீடியாவிலுள்ள தகவல்களைப் போல் 5 மடங்கு அதிகம் சேமிக்கும் திறனுள்ளது.

8. வாயில் இருந்து உணவு வயிற்றை அடைய 7 நிமிடங்களை எடுத்து கொள்கிறது.

9. சராசரி மனிதனின் கனவு 2 முதல் 3 நிமிடங்கள் வரை மட்டுமே.

10. செம்பழுப்பு நிற முடி இருப்பவர்களுக்கு கருப்பு நிற முடி இருப்பவர்களை காட்டிலும் அடர்த்தியாக இருக்கும்.

11. பிறப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்பே குழந்தைக்கு பற்கள் வளர ஆரம்பித்து விடுகின்றன.

12. உடலின் மிகவும் வலிமையான பகுதி பற்களின் எனாமல்.

13. 30 நிமிடங்களில் உடலில் இருந்து வெளியேறும் வெப்பமானது அரை காலன் தண்ணீரை கொதிக்க வைக்க போதுமானது.

14. காலின் பெருவிரல்கள் இரண்டு எலும்புகளையும் மற்றவை 3 எலும்புகளையும் கொண்டுள்ளன

15. கட்டை விரலின் நீளமும் உங்கள் மூக்கின் நீளமும் ஒரே அளவாக இருக்கும்....

இளசு
01-01-2009, 09:06 PM
நல்ல தகவல்கள்.. தொடர்ந்து தாருங்கள்.
நன்றி ஷிப்லி..

கூடுதல் சுவை சேர்த்த பூர்ணிமாவுக்குப் பாராட்டு!