PDA

View Full Version : இந்த வருடம் (2008) பெண்களுக்கு மிகவும் பிடித்த இ மெயில்.



shibly591
01-01-2009, 03:55 AM
ஒரு கணவன் தான் தினம் தினம் வேலைக்குப் போய் படுற கஷ்டங்களை தன் மனைவி
உணரனும்னு நினைச்சான். அவ வீட்ல சும்மா இருக்கறது இவனுக்கு ரொம்ப கோபத்தை உண்டு
பண்ணிச்சு.


உடனே அவன் கடவுள் இடம் வேண்ட ஆரம்பிச்சான்.
"அன்பான கடவுளே, நான் இந்த குடும்பத்துக்காக தினம் தினம் 8 மணி நேரம் வேலைக்கு
போய் ரொம்ப கஷ்டப் படுறேன். ஆனா என் பொண்டாட்டியோ வீட்ல சும்மா
உக்காந்துக்கிட்டு காலந்த்தள்ளிட்டு இருக்கா. அவ இந்த குடும்பத்துக்காக நான்
படுற கஷ்டத்த உணரனும். எனவே, என்னை அவளாவும் அவளை நானாவும் மாத்திடு. ஆமென்"


கடவுள் அவனது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டார்.


மறு நாள் காலை அவன் பெண்ணாய் எந்திரிச்சான்.
அவனுடைய மனைவிக்கு (தற்காலிக கணவனுக்கு) காலை உணவு ரெடி பண்ணான். குழந்தைங்கள
எழுப்பி விட்டான். அவங்க பாடசாலை சீருடையை எடுத்து அயர்ன் பண்ணி வச்சான்.
அவங்களுக்கு காலை சாப்பாடு ஊட்டி விட்டான். பகல் உணவுகளை பேக் செய்து
கொடுத்தான். அவங்களை பாடசாலைல கொண்டு போய் விட்டுட்டு வந்தான். வீட்டுக்கு
வந்து லாண்டரிக்கு போட துணிகளை எடுத்து சென்றான். போற வழியில ஒரு வங்கில பணம்
போட நின்னான். லாண்டரி முடிஞ்சு எடுத்துட்டு வார வழில மளிகை சாமான்கள்
வாங்கிட்டு வீட்டுக்கு வந்தான். பில்ஸ் எல்லாத்தையும் கட்டினான். செக்
புத்தகத்தை பலன்ஸ் பண்ணான். செல்லப் பூனையின் கூட்டை துப்பரவு செய்தான். நாயை
குளிப்பாட்டினான்.


மணி ஏற்கனவே 1 pm ஆயிட்டிருந்தது.
அவசர அவசரமாக கட்டிலை சரி பண்ணினான். வீட்டை க்ளீன் பண்ணினான். கிச்சனை sweep,
mop லாம் கூட பண்ணான். ஸ்கூல்கு ஓடிப் போய் பசங்களை கூட்டி வந்தான். வரும்
வழியில் அவங்க போட்ட சண்டையை சமாதானம் செஞ்சான். வீட்டுக்கு வந்து அவங்களுக்கு
பால், பிஸ்கட் குடுத்து அவங்க Home Work பண்ண உதவி செஞ்சான். அப்புறம் துணிகளை
அயர்ன் பண்ணிக்கிட்டே கொஞ்ச நேரம் TV பார்த்தான்.


ஒரு 4.30 மணி போல் உருளைக் கிழங்குகளை உரிக்கத் தொடங்கினான். அப்புறம்
காய்கறிகளை கழுவி இறைச்சியை வேக வைக்கத்தொடங்கினான், இரவு சாப்பாட்டிற்கு.


சாப்பிட்டு முடிஞ்சதுக்கப்புறம் கிச்சனை க்ளீன் பண்ணி, தட்டுகளை கழுவி, அயர்ன்
பண்ண உடுப்புகளை மடிச்சு, குழந்தைங்களை குளிப்பாட்டி தூங்க வைச்சு முடிக்கும்
பொது இரவு 9.30 ஆயிட்டிருந்திச்சு.


அதுக்கு மேல அவனால முடியல... அவன் நிம்மதியா தூங்குவோம்னு bedroom பக்கம் போனா
அங்க அவன் பொண்டாட்டி (தற்காலிக கணவன்) ரொமான்ஸ் பண்ண காத்திட்டிருந்தா. அவனும்
எந்த complaint உம் வராம அத நிறைவேற்றினான்.


மறு நாள் காலை விடிஞ்சதுதான் தாமதம்...
எழும்பி கடவுள் இடம் பிரார்த்திக்க ஆரம்பிச்சான்.
"கடவுளே, நான் அவளை ரொம்ப தப்பா இவளவு நாளும் நினைச்சிட்டு இருந்திருக்கேன்.
இதுக்கு மேல அவ மாதிரி என்னால இருக்க முடியாது. அவ எவளவு கஷ்டப் படுரானு இப்ப
விளங்குது. தயவு செய்து எங்களை முன்பிருந்தது போல மாத்திடு"


அதுக்கு கடவுள் சொன்னாராம்...
"மகனே.. நீ நியாயத்தை உணந்ததை இட்டு நான் ரொம்ப சந்தோஷப் படுறேன். உங்களை பழைய
நிலைமைக்கு நான் மாத்திடுவேன். ஆனா அதுக்கு நீ 9 மாசம் வெயிட் பண்ணனும். ஏன்னா
நீ இப்ப கர்ப்பமாயிருக்கே" னு...


இது எப்டி இருக்கு...

நிரன்
01-01-2009, 10:27 AM
மனைவியைப் புரிந்து கொள்ளாத கணவன்
பின் மனைவியைப் புரிந்த பின் உடனே மாற
முடியாத கணவன்:) பெண்கள் அன்றாடம் செய்யும்
வேலைகளை நன்றாகக் கூறுகிறது. கடைசியில்
கதை நகைச்சுவையுடனும் முடிந்து மனதிற்கும்
ஒரு நிறைவைத் தருகிறது

பகிர்வுக்கு நன்றி ஷி்ல்பி

shibly591
01-01-2009, 11:03 AM
மனைவியைப் புரிந்து கொள்ளாத கணவன்
பின் மனைவியைப் புரிந்த பின் உடனே மாற
முடியாத கணவன்:) பெண்கள் அன்றாடம் செய்யும்
வேலைகளை நன்றாகக் கூறுகிறது. கடைசியில்
கதை நகைச்சுவையுடனும் முடிந்து மனதிற்கும்
ஒரு நிறைவைத் தருகிறது

பகிர்வுக்கு நன்றி ஷி்ல்பி


நன்றிகள் நிரஞ்சன்...

தமிழ்தாசன்
01-01-2009, 03:20 PM
எதுவும் சும்மா சுகமானதல்ல!
அதிலும் அவரவர் பணி சுமையானதுமல்ல! சுகமானதுமல்ல!
சுமையே சுகம்! சுகமே சுமை!
என்பதை அழகாக சொல்கிறது கதையோட்டம்.
விடயம் நிறைவில் நகைச்சுவை என்றாலும்
அந்த பத்தாம் மாதம் போதும் பெண்மையின் மகிமையுணர!
உணர்ந்தாலே மனித வாழவும் அதன் அர்த்தமும்
ஆணுக்கும் பெண்ணுக்கும் முழுமை தரும்.

பகிர்வுக்கு

பாராட்டுக்கள்!
வாழ்த்துக்கள்!
ஷி்ல்பி அவர்களே!

தொடருங்கள்....

இளசு
01-01-2009, 08:14 PM
Value, Recognition-

சமூகத்தின் தராசில் பெரிய வங்கி , மென்பொருள் நிறுவனத் தலைவர்கள், பல திரை நடிகர்கள், சில அரசியல்வாதிகள்
எப்போதும் அதிகமாக நிறுக்கப்படுகிறார்கள்..

கோடிகளில் ஈட்டினாலும் சமூகம் அதை அங்கீகரிக்கிறது..

சாதாரண மத்யமர்கள் உழைத்துவிட்டு, டி.ஏ, ஏ.டி.ஏ, பதவி உயர்வு, மேலதிகாரியின் ஷொட்டு என ஒரு எதிர்பார்ப்புடன்..

இல்லத்தரசியின் 24/7/365 உழைப்புக்கு
என்ன விலை? என்ன நிறை? என்ன அங்கீகாரம்??

சமூகப் புரைகளில் ஆதியானது இது...

இவ்வளவும் செஞ்சுட்டு, கூடுதலாய் அலுவலகம், அல்லது தொழிற்சாலை/கடைகளில்
பணிசெய்யும் பெண்கள் நிலை...???!!

நல்ல சேதி சொன்ன மின்னஞ்சல்..
கடைசிப் 'பொடி'' - அருமை!

நன்றி ஷிப்லி!

shibly591
02-01-2009, 04:04 AM
வணக்கம் இளசு அண்ணா..

நீண்ட நாட்களின் பின் வருகை தந்து எனது திரிக்கு பின்னூட்டமிட்டமைக்கு நன்றிகள்..

அருமையான விளக்கங்களை தந்திருந்தீர்கள்...உண்மையில் எவருமே பெண்களின் மறைப்பொருளியல் பணிகளைப்பற்றி பாரிய அளவில் சிந்திப்பதில்லை..

அதை அழகாக உணர்த்தும் மின்னஞசல் என்னைப்போலவே தாங்களையும் கவர்ந்திருப்பது மகிழ்ச்சியே..

நன்றிகள்

தீபா
02-01-2009, 08:07 AM
சிந்திக்க, பின் சிரிக்க... அருமையான விசயம்... பகிர்தலுக்கு நன்றி திரு.சிப்லி.

arun
06-01-2009, 05:16 PM
நன்றாக இருந்தது பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள்

நேசம்
07-01-2009, 05:13 AM
பெண்களின் தரப்பை நகைச்ச்சுவையுடன் சொல்லி இருக்கிறிர்கள்.அருமை.வாழ்த்துகள்

அன்புரசிகன்
07-01-2009, 05:42 AM
உண்மைதானே.... ஆனால் இப்போது இப்படி எல்லாம் நடக்குறதா??? அனுபவஸ்தர்களின் கொமன்ட் ப்ளீஸ்??????????????????

jk12
07-01-2009, 06:43 AM
அருமை
நன்றி ஷி்ல்பி

கா.ரமேஷ்
07-01-2009, 08:36 AM
நல்ல பதிவு ஷிப்லி.

மன்மதன்
08-01-2009, 01:01 PM
கருத்துள்ள நகைச்சுவை..!!

பகிர்தலுக்கு நன்றி..

Keelai Naadaan
15-01-2009, 01:52 AM
உண்மையில் பெண்கள் செய்யும் வேலைகளோடு ஒப்பிட்டு பார்த்தால் ஆண்கள் செய்யும் வேலைகள் மிக மிக குறைவே.
அதிலும் பணிக்கு செல்கின்ற பெண்களோடு ஒப்பிட்டு பார்க்கவே முடியாது

பெண்மையை போற்றுவோம்.