PDA

View Full Version : அன்பு செய்! அன்பு செய்!



நாகரா
31-12-2008, 11:07 AM
உண்டேயென் போர்க்கு அவர்விரும் பியபடி
உண்டாகி இல்லென் போர்க்கு அவ்வணம்
இல்லாகி ஒவ்வொரு வர்க்கும் ஒவ்வொரு
ஒன்றாகி உள்ளவன் இறைவனாம் முன்னிலை!

(முன்னிலை = முன்+நில்+ஐ = ஆதி முதலாய் நிற்கும் வையத் தலைமை.)

உண்டு இல்லை தாண்டி
நின் முன்னிலை
கண்டு கொண்டு
அன்பு செய்தல்
நின் கடன்!
அன்பில் என்புருகி
நின்னுருவம் ஒளிரும்!
அன்பில் நின் ஒளியுடம்பும் உருக
அன்பாய்
நீ ஒளிவாய்!
அன்பாய்
நீ ஒளிந்த பின்
நீயே
உண்டு இல்லை தாண்டி
நிற்கும் முன்னிலை!
இதுவன்றோ
வள்ளலின் சாகாக் கலை!
ஐயமின்றி
இதை நீ அறிவாய்!
அன்பொன்றே
இறவாப் பிறவா இறை!
அன்பொன்றே
சுடச்சுடச் சுவைக்கும் இரை!
அன்பொன்றே
கரைக்கும் மாயைத் திரை!
அன்பொன்றே
அளிக்கும் மாயா நிலை!
அன்பு செய்!
அன்பு செய்!
அன்பொன்றே
அழியா நின் மெய்!
அன்பின்றேல்
அழியும் பொய்யாய்
அழுகும் நின் மெய்!
அன்பு செய்!
அன்பு செய்!
உண்டு இல்லை தாண்டி
நின் முன்னிலை
கண்டு கொண்டு
அன்பு செய்தல்
நின் கடன்!

இளசு
01-01-2009, 08:43 PM
சக மரியாதை அடித்தளம்..
அதன் மேல் வேயப்படும் பிறருக்கான அன்புப் பந்தர்!

இதைவிட நிழலை எந்த மதமும் கொள்கையும் ஈந்துவிட முடியாது மனித குலத்துக்கு!

பாராட்டுகள் நம் ஆன்மீகச் செம்மல் நாகரா அவர்களுக்கு!

நலந்தானே நாகரா அவர்களே?

நாகரா
01-01-2009, 10:51 PM
உம் பின்னூட்டத்துக்கு நன்றி இளசு, யாம் நலமே! நீவிரும் என் இருதயக் குடிலில் நனி மிக நல்மே!