View Full Version : pdf கோப்புகளை இணைப்பது எப்படி??
ஸ்ரீதர்
30-12-2008, 01:48 PM
அன்பு நண்பர்களே !
இரண்டு PDF கோப்புகளை ஒரே கோப்பாக இணைக்க விரும்புகிறேன். இதற்கு வழிமுறை அல்லது மென்பொருட்கள் இருந்தால் அதை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி. வணக்கம்
அன்புரசிகன்
30-12-2008, 02:29 PM
உங்கள் கணினியில் acrobat writer நிறுவியிருந்தால் அந்த வசதி கிட்டும்...
கீழ்கண்டவாறு இருக்கும். இடது புறத்தில் page என்று உள்ளதை கிளிக்செய்து வரும் பெட்டிகளில் right click செய்தீர்களானால் இணைத்தல் பிரித்தல் அழித்தல் என அனைத்தும் இருக்கும்.
http://img33.picoodle.com/img/img33/3/12/30/f_adbm_35b0f5f.jpg
ஸ்ரீதர்
31-12-2008, 03:54 AM
உங்கள் கணினியில் acrobat writer நிறுவியிருந்தால் அந்த வசதி கிட்டும்...
நன்றி அன்புரசிகன் ,
ஆனால் என்னிடம் acrobat writer இல்லை. அதுதானே பிரச்சனையே !! வேறு ஏதாவது இலவச மென்பொருள் இருந்தால் அது பற்றிய விவரங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
நன்றி.
அன்புரசிகன்
31-12-2008, 04:35 AM
அப்படியாயின் PDF tool எனும் மென்பொருளை நிறுவுங்கள். அதற்கு முன்னர் ஜாவா உங்கள் கணினிக்கு நிறுவப்பட்டிருத்தல் வேண்டும்.
ஜாவா சுட்டி (http://www.java.com/winoffline_installer) (15.5MB)
PDF Tool சுட்டி (http://sheelapps.com/index.php?p=PDFTools.HomePage&action=view&do=download&file=/share/PDFTools-Setup1.2.exe) (2.82 MB)
இங்கு தரப்பட்ட அனைத்து சுட்டிகளிடம் இருந்து கிடைப்பவை முற்றிலும் இலவசமான மென்பொருட்க்கள் தான்.
பின்னர் அங்கு உங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்யலாம். (Pdf சம்பந்தமாக வெட்டலாம். ஒட்டலாம். கட்டலாம். பூட்டலாம்.:D)
http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/PDFTool.jpg
பாவித்து பதில் போடுங்கள்.
ஸ்ரீதர்
31-12-2008, 05:32 AM
மிக்க நன்றி அன்பு ரசிகன். நீங்கள் கொடுத்த சுட்டியில் சென்று பரிசோதித்துப்பார்த்தேன். மிகவும் சரியாக பயனுள்ளதாக இருந்தது. மேலும் கூகிளாண்டவர் கொடுத்த இன்னொரு சுட்டி இதோ http://www.pdfill.com/pdf_tools_free.html
இந்த மென்பொருளும் இலவசமாகும்.
உங்கள் முயற்சிக்கு நன்றி.
sundarjee
22-01-2010, 05:04 PM
நன்றி நானும் பயனடைந்தேன் :aktion033:
இது சுந்தர்ஜி.....
mselva1234
30-01-2010, 04:50 AM
pdf995 மென்பொருளையும் பயன்படுத்தலாம்.
you can use pdf995 Software (Sorry i unable to type tamil)
ஸ்ரீதர்
23-02-2010, 10:29 AM
நண்பரே மன்றத்தில் தமிழில் பதியுங்களேன்.. முதலில் சிரமமாக இருக்கும். பின்பு நீங்களே வெளுத்துக்கட்டுவீர்கள்.