PDA

View Full Version : ஆடியோ பைலை சேர்ப்பது எப்படி?shibly591
30-12-2008, 10:45 AM
ஆடியோ பைலை சேர்ப்பது எப்படி?

நான் தமிழ் சினிவாவுக்காக எழுதிய பாடலின் முழுமை பெறாத வடிவம் ஒன்றை எனது இசையமைப்பாளரிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளேன்..

இதை ஆடியோ பைலாக மன்றத்தில் இணைத்துக்கொண்டால் மன்ற நண்பர்களிடம் அதை பகிர வசதியாக இருக்கும்.ஆனாலும் ஆடியோ பைல் ஒன்றை எப்படி இணைப்பது என்று புரியவில்லை.ஏதேனும் வழியிருப்பின் தெரிவிக்கவும்..

நன்றிகள்

அன்புரசிகன்
30-12-2008, 10:52 AM
எங்காவது அந்த கோப்பை ஏற்றி பின் அந்த நேரடிச்சுட்டியை
[ media]<Direct link>[/ media] என்றவாறு கொடுத்தால் அனைவரும் இங்கேயே கேட்கக்கூடியவாறு இருக்கும்.

நிரன்
30-12-2008, 10:54 AM
http://www.acidplanet.com

இத்தளத்தில் upload செய்து விட்டு சுட்டியைக் கொடுத்தால் நாம்
கேட்கக்கூடியதாக இருக்கும்

shibly591
30-12-2008, 11:45 AM
http://www.acidplanet.com

இத்தளத்தில் upload செய்து விட்டு சுட்டியைக் கொடுத்தால் நாம்
கேட்கக்கூடியதாக இருக்கும்

பாடல் வெளியாவதற்கு முதல் அதை பரவலாக்கம் செய்வது உகந்ததாக தெரியவில்லை...நமது மன்ற சொந்தங்களுக்காக மட்டும் பாடலை வழங்க உத்தேசிக்கிறேன்..
அதற்கேற்ற ஒரு வழிமுறையை தர முடியுமா..??

(நன்றி நிரஞ்சன் மற்றும் அன்புரசிகன்)

அல்லது வேறு திரி ஒன்றை துவக்கி கேட்க விரும்பும் ஒவ்வொருவரின் மின்னஞ்சல் முகவரியை தந்தால் மின்னஞ்சல் செய்யும் அங்கீகாரத்தை மன்றம் வழங்குமா..??

கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்

நன்றிகள்

அமரன்
30-12-2008, 12:18 PM
அன்பு ஷிப்லி!
திரைவானம் தொட்ட உங்களுக்கு என் வாழ்த்துகள்.

திரைவானத்து நிரந்தர நட்சத்திரமாக நீங்கள் ஜொலிக்க என்னாசை.

அந்த ஆசையின் விளைவாக பாடலை இப்போது பகிரவேண்டாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

தமிழ்தாசன்
30-12-2008, 12:19 PM
காத்திருக்கிறோம் உங்கள் படைப்பை கேட்க!
எப்படியாவுது தாருங்கள்.(உங்கள் எண்ணப்படி மன்றப்படி)

வாழத்துக்கள்.
தொடர்ந்து பல பாடல்கள் பிரசவிக்கட்டும்.
உலகை வலம் வரட்டும்."மன்றத்திரைவானம்" (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18561)"
உங்கள் கண்ணில் படேல்லப்போல இருக்கே!

அன்புரசிகன்
30-12-2008, 02:32 PM
பாடல் வெளியாகும் முன்னர் பகிரநினைக்கும் உங்களுக்கு நன்றிகள். ஆனால் அது உங்கள் எதிர்காலத்திற்கு உகந்ததல்ல. வெளிவரும் போது அதை இங்கே பகிரலாமே............

அக்னி
30-12-2008, 02:53 PM
மன்றத்தைக் குடும்பமாக நினைக்கும் உங்கள் மனது,
எங்கள் மனதையும் மகிழ்ச்சியால் நிரப்புகின்றது.

ஆனாலும் சிப்லி,
இப்போதைக்கு இங்கு வேண்டாம்.
இதனால் சில வேளைகளில் வரக்கூடிய தாக்கங்களை விடவும்,
உங்கள் பாடல், பிரசவமாகும்போது, மன்றத்திலும் ஒலிப்பதுதான்,
முழுமையான, இனிமையைத் தரும் என்பதே என் மனதிலும்...

சிலவற்றுக்காகக் காத்திருப்பதும் சுகம்தானே...

நிரன்
30-12-2008, 03:37 PM
ஆமாம் நண்பர்கள் கூறுவது போன்று
உங்கள் பாட்டிற்காக நாங்கள் காத்திருக்கின்றோம்

மன்றம் வாயிலாக தற்சமயம் வெளித் தளங்களிற்கும் பரவும் வாய்ப்பு
உள்ளது.. அதனால் உங்கள் பாடல் வெளியான பின்னர் எங்களிற்கு பகிருங்கள் உங்கள் பாடல் நன்றாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

உங்கள் பாடல் கேட்க ஆவல்தான் நம் ஆவல் உங்களுக்கு ஆபத்தாக மாறி
விடக் கூடாது

வாழ்த்துக்கள் ஷில்பி எல்லாம் இனிதே நிறைவேறும்

தமிழ்தாசன்
31-12-2008, 03:53 PM
ஆமாம் நண்பர்கள் கூறுவது போன்று
உங்கள் பாட்டிற்காக நாங்கள் காத்திருக்கின்றோம்

மன்றம் வாயிலாக தற்சமயம் வெளித் தளங்களிற்கும் பரவும் வாய்ப்பு
உள்ளது.. அதனால் உங்கள் பாடல் வெளியான பின்னர் எங்களிற்கு பகிருங்கள் உங்கள் பாடல் நன்றாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

உங்கள் பாடல் கேட்க ஆவல்தான் நம் ஆவல் உங்களுக்கு ஆபத்தாக மாறி
விடக் கூடாது

வாழ்த்துக்கள் ஷில்பி எல்லாம் இனிதே நிறைவேறும்

உண்மைதான் எங்கள் ஆவலை சற்றுக் கட்டுப்படுத்துகிறோம்.
நீங்கள் இன்னும் உங்கள் படைப்புலகில் வலம்வரவேண்டும்.
எனவே அதில் கவனம் செலுத்துங்கள்.
நிச்சயம் வெல்வீர்கள்.
ஆறதலாகத் தாருங்கள் அவசரமில்லை.

க.கமலக்கண்ணன்
31-12-2008, 07:14 PM
அன்பு ஷிப்லி!

திரைவானம் தொட்ட உங்களுக்கு என் வாழ்த்துகள்.

நம் நண்பர்கள் அனைவரும் சொன்னது சரியே... சில விசயங்களுக்காக காத்திருப்பது சுகம்தான்

காதலிக்காக காதலன் காத்திருப்பது சுகம்

தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருப்பது சுகம்

வீடு கட்டி முடிக்கின்ற வரையில் காத்திருப்பது சுகம்

கணவனுக்காக மனைவி சாப்பிடாமல் காத்திருப்பது சுகம்

இப்படி பல சுகங்கள் அதில்

உங்களின் படத்தின் பாடல்களை வெளியிடும் வரை காத்திருப்பதும் சுகம்தான் ஷிப்லி !

reader
01-01-2009, 04:39 AM
நண்பரே தாங்கள் இதனை வெளியிட்டு இது வெளியே தெரிந்தால் தற்போது வில்லு பட காட்சி வெளியாகி அது சைபர் கிரைம் குற்றமாக பதிவு செய்யப்பட்டு ஒரு முண்ணனி கம்யூட்டர் கம்பெனியின் ஊழியர் ஒருவர் வெளியிட்டுள்ளார் என்று அறியப்பட்டு அவருக்கு எவ்வாறு கிடைத்தது என்று அந்த விசாரணை நடந்து வருகின்றது.. ஆகையால் தாங்கள் இது போன்ற வேலைகளில் தற்போது ஈடுபட வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.....

shibly591
01-01-2009, 05:31 AM
எனது வளர்ச்சி மீது அக்கறை கொண்டு எனக்காக பதிலளித்த

reader

கமலகண்ணன்

தமிழ்தாசன்

நிரஞ்சன்

அக்னி

அன்புரசிகன்

அமரன்

ஆகியோர்கட்கு நன்றிகள்..

பாடலை வெளியிட நேரம் கிடைக்கும் சரியான தருணத்தில் பகிர்ந்து கொள்கிறேன்..

தொடர்பிலிருப்போம்..

நன்றிகள்

reader
08-01-2009, 08:44 AM
எனது வளர்ச்சி மீது அக்கறை கொண்டு எனக்காக பதிலளித்த

reader

கமலகண்ணன்

தமிழ்தாசன்

நிரஞ்சன்

அக்னி

அன்புரசிகன்

அமரன்

ஆகியோர்கட்கு நன்றிகள்..

பாடலை வெளியிட நேரம் கிடைக்கும் சரியான தருணத்தில் பகிர்ந்து கொள்கிறேன்..

தொடர்பிலிருப்போம்..

நன்றிகள்
நண்பரே தாங்கள் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் எனில் அந்தப் படத்தின் பாடல் ரிலீஸ் தேதி அன்று ரிலீஸ் முடிந்தவுடன் தாங்கள் கொடுப்பீர்களானால் தங்களுக்கும் பிரச்சனை வராது நாங்களும் கேட்டு ரசிப்போம் நன்றிகள் உமக்கு உரித்தாகுக.