PDA

View Full Version : முடிவிலி (Infinity) நாவல்.. அத்யாயம் 2rambal
03-09-2003, 06:43 AM
இந்த நாவலை எழுதத் தொடங்கி இருக்கும் இந்த கணத்தில்..

ஏதாவது ஒரு இன மக்கள் பிற இன மக்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம்...

காவல் நிலையத்தில் ஒரு பெண் கற்பழிப்பு செய்யப்பட்டிருக்கலாம்...

விமானம் விபத்துக்குள்ளாகி நூற்றியிருபது பேர் மரணம் முப்பது பேர் படுகாயம் என்ற
செய்தி ஓடிக் கொண்டிருக்கலாம்..

ஸ்திரேலிய பழங்குடியினர் அஸ்பெர்ஜின் என்று தவறுதலாக கருதப்பட்டு இந்தியன் ஒருவன் கொல்லப்பட்டிருக்கலாம்...

ஒட்டகத்திற்கு வைக்கப்படும் பசலீக் கீரையைத் தவிர உணவு வேறு ஏதும் இல்லை எனும் சூழலுக்கு தள்ளப்பட்டு
அரபு நாட்டுக்கு வேலைக்குப் போன யாராவது சிலர் அராபிய முதலாளிக்கு தெரியாமல் அதை வேக வைத்து
உண்டு கொண்டிருக்கலாம்...

ஏதேனும் ஒரு நாட்டை விட்டு சிலர் அகதிகளாக கண்ணீர் விட்டபடியே வெளியேறிக் கொண்டிருக்கலாம்..

இருபது டாலருக்கு கஜகஸ்தான் பெண் ஒருத்தி தன் உடலை விற்றுக் கொண்டிருக்கலாம்..

கல்யாண விருந்தில் மீதமான உணவை கவலையில்லாமல் குப்பைத் தொட்டியில் போடுவது போல்
திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தையை யாராவது குப்பைத் தொட்டியில் போட்டுக் கொண்டிருக்கலாம்..

இந்த வருட ர்.டி.எக்ஸ் தயாரிக்கப்பட்டு வெள்ளோட்டத்திற்கு ஏதாவது ஒரு தீவிரவாத இயக்கத்திடம் கொடுத்து
சோதனை பண்ணச் சொல்லலாம்..

அடிபட்டு விழுந்தவன் இறந்துவிட்டானா இல்லை அணு அணுவாய் இறந்து கொண்டிருக்கிறானா என்று சிலர்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கலாம்..

விசா மாற்றத்திற்கு கீவ் தீவிற்கு சிலர் கிளம்பிக் கொண்டிருக்கலாம்..

வறுமையைப் போக்குவோம் என்று குளிர்சாதன அறையில் இருந்து கொண்டு அரசியல் தலைவர் ஒருவர்
வாய் சவடால் விட்டுக் கொண்டிருக்கலாம்..

இனி ஸ்டிரைக் பண்ணுவது எப்படி என்று அரசு ஊழியர்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம்..

இன்னும் பிட் போடவில்லை என்று பரேட்டரை சிலர் திட்டிக் கொண்டிருக்கலாம்..

அபிமான நடிகைக்கு வயது பதினாறா அல்லது பதினேழா என்று அதிமுக்கிய பட்டிமன்ற விவாதத்தில் சிலர் ஈடுபட்டிருக்கலாம்...

தேசத்திற்கு தொண்டு புரிந்த நடிகர் அரசியலுக்கு வரவேண்டும் என்று சிலரும் இவரை விட இன்னொரு நடிகர் வந்தால்
நாடு உருப்பட்டுவிடும் என்று வேறு சிலரும் வாக்குவாதம் நடத்திக் கொண்டிருக்கலாம்..

கம்ப்யூட்டர் அட்மின் என்று வேலை கொடுத்த அரபு தேசத்து கம்பெனி, கண்டெய்னரில் மூட்டை ஏற்றச் சொல்லி
மிரட்டிக் கொண்டிருக்கலாம்..

பிறந்த குழந்தையை மருத்துவமனையில் இருந்து திருடிக் கொண்டு வந்து, எங்கு பிச்சை எடுப்பது என்று
திட்டவட்டமாக தெரியாத சூழ்நிலையில் குழம்பிப் போயிருக்கலாம்..

கோழிக்கறியில் ஒரு துண்டு குறைவாக விழுந்துவிட்டதற்காக தென்மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பகுதியில்
காது குத்து விழா மரண குத்து விழாவாக மாறிக்கொண்டிருக்கலாம்...

சற்றே பாசமும் இல்லாத நடிகை பற்றிய கிசு கிசுவிற்கு, கிளுகிளுப்பூட்டுவதற்கு பத்திரிக்கையின் சிரியர்
பிரயத்தணப்பட்டுக் கொண்டிருக்கலாம்..

டியூட்டி நர்சை இன்றாவது படுக்கையில் வீழ்த்தவேண்டும் என்று சீப் டாக்டர் முயற்சி செய்யலாம்..

எதிர்பார்த்த அளவிற்கு பெட்டி கொண்டு வரவில்லை என்று வெளிநாட்டில் இருந்து வந்த கணவனை மனைவி ஒருத்தி
விமான நிலையத்திலேயே திட்டிக் கொண்டிருக்கலாம்...

பள்ளிக்குப் போன மகள் கர்ப்பமாகி இருப்பதைக் கண்ட அவளுடைய அம்மா அழுது கொண்டிருக்கலாம்..

பெண்கள் பள்ளியில், பிராவிற்குள் ஒளித்து வைத்திருக்கும் பிட்டை எடுத்து எழுதுவதற்கான முயற்சியில் ஈடுபடலாம்..

சேரன்கயல்
03-09-2003, 09:47 AM
சமகாலத்தில் காணக்கிடைக்கும், செவிவழி கேட்க கிடைக்கும் விடயங்களை நிழற்படமாக்கியிருக்கிறது இரண்டாம் அத்தியாயம்...
வாழ்க்கையின் வறண்ட நிஜங்களை, இருண்ட நிழல்களை மூலைக்கொன்றாய் பரப்பியிருக்கிறீர்கள் ராம்...
எதிர்மறை எண்ணக் குவியல் என்று ஒதுக்கிவிடமுடியாத விடயங்கள்...

aren
06-09-2003, 04:27 PM
நீங்கள் எழுதியிருக்கும் அனைத்தும் சாத்தியமே, நடந்தும் கொண்டிருக்கலாம்.