PDA

View Full Version : முடிவிலி (Infinity) நாவல்.. அத்யாயம் 1



rambal
03-09-2003, 06:42 AM
அர்ப்பணம்...

அன்புள்ள உனக்கு, (பெயர் என்று எதையும் குறிப்பிட்டு உன்னை உருவாக்க விரும்பவில்லை)

நீ வித்யாவாக, கௌரியாக, ஜனனியாக, சுஜாதாவாக, தபசும் நிஷாவாக, விக்டோரியாவாக, பூஜாவாக, சொர்ணலட்சுமியாக
வெவ்வேறு காலகட்டத்தில் என்னை வலம் வந்த நாட்கள் உனக்கு நியாபகம் இருக்கிறதா?

அநேகமாக எனது வாழ்க்கை முழுதும் உன்னைத்தான் தேடி ஓடிக் கொண்டிருக்கிறேனோ என்னவோ?
எங்கும் என்னை நிலையில்லாது ஓட வைத்து எங்கெங்கும் உன்னை தேட வைத்து எனக்கு கிட்டாமல்
என்னை சுற்றி இருக்கும் தனிமையை விரட்ட உன் துணை தேடி, உன்னை எவரெவரிடமோ கண்டு
அவர்களிடம் எல்லாம் உன் தனித் தன்மை இல்லாது போக அவர்களை எல்லாம் விட்டு விட்டு சதா
ஓடிக் கொண்டே இருக்கிறேன் ஒரு வேட்டை நாய் போலும்..

தலை துவட்டி விடும் அக்காவாக, சோறு ஊட்டி விடும் அம்மாவாக, என் முதுகில் ஏறி விளையாடும் தங்கையாக,
என் சுண்டு விரல் பிடித்து நடை பழகும் என் செல்ல மகளாக, கட்டியணைக்கும் மனைவியாக..
இப்படியாகத்தான் நீ வேண்டும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து..

எல்லா தேடலின் முடிவிலும் இவர்களிடம் நீ இல்லாது போக நான் தவித்து அழுத அழுகை உனக்கு புரியாது..

அந்த வகை கலவையான அன்பு கிடைக்காத தருணங்களில் விரிந்து கிடக்கும் கடலோடு சேர்ந்து விடலாமா என்று யோசித்ததுண்டு..
கடல்தான் உலகின் தித்தாய்.. முதல் உயிரி பிறப்பதற்கு வழிவகை செய்து கொடுத்தவள் தாயாகத்தான் இருக்க முடியும்...

தி சக்தியை தேடிக் கொண்டிருக்கும் எனது பயணத்தில் நான் எதிர்பார்க்கும் நீ, ஒரு வேளை என் எதிரில் வந்தால்தான் எனது
தேடுதல் முடியுமோ என்னவோ?

ரங்கநாதன் தெருவின், மனித நடமாட்டத்து சலசலப்பு நீ..
டோனா பவுலின் சமாதியை அறைந்து விட்டுப் போகும் அலையின் ர்ப்பரிப்பு நீ..
மதுரையில் அழகர் இறங்கும் அன்று பெய்யும் மழை நீ..
காவிரியில் உணவு உண்டு களிக்கும் சித்ரா பௌர்ணமி நீ..
பில்லர் ராக்கை உரசிச் செல்லும் பனி மூட்டத்தின் அமைதி நீ..

ஒவ்வொரு பெண்ணிலும் உன்னுடைய சாராம்சங்களின் பிரதியை கொஞ்சமேனும் காண்கின்றேன்..
முழுமையாக உன்னைக்காண ஏங்கித்தவித்து.. உன் முழு சாராம்சமும் அவர்களிடம் இல்லாது போக
விரக்தியடைந்து, அவர்களை (பெண்களை) உதாசீனப்படுத்திவிட்டு
அடுத்த பெண்ணிற்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்...

இப்படி அலைவதால், காதலின் கொடிய கரங்களில் சிக்கியவனாகவோ அல்லது காமத்தீ பற்றியெரிந்து கொண்டிருப்பவனாகவோ
நீ என்னைக் கருதக்கூடும்...

பெண்மை புனிதம். பலதரப்பட்ட மாசுக்களாலும், ரத்தக்கறையாலும் அழுக்காகி இருக்கும் இந்த உலகம் பெண்மையால் மட்டுமே
சுத்தப்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் ஏராளம்..

ஜார் மன்னர்களை வழி நடத்துதலுக்குரிய பெண்மை அங்கிருந்திருக்குமானால் ரஷ்யாவில் புரட்சி எற்பட்டிருக்காது..
லெனினுக்கும், ஸ்டாலினுக்கும் உண்மையான அன்பு செலுத்தக்கூடிய பெண்கள் கிடைத்திருந்தால் ரஷ்யா
சுத்தப்பட்டிருக்கும்..

ஹிட்லருக்கு மட்டும் முத்தத்தின் அருமையை எவளாவது உணரவைத்திருந்தாள் ஒரு உலகப்போர் நடந்திருக்காது..

கார்க்கி தனது புரட்சிகளை முடித்துவிட்டு தலை வைத்துப் படுக்க புரட்சித்தாயின் மடி தேடியே செத்துப் போனான்..

ர்தர் ரெம்போவுக்கு மட்டும் இளமைக்காலத்தில் அவனை சீராட்ட ஒரு நல்ல தாய் மட்டும் இருந்திருந்தால்
அவன் உலக காவியங்களை இயற்றியிருப்பான்.. மிகக் குறைந்த வயதில் செத்திருக்க மாட்டான்..

பெண்களால் மட்டும் புரட்சிகள் இந்த உலகில் அரங்கேறி இருந்தால், இந்த உலகம் இத்தனை ரத்தக்கறைகளை
சுமந்திருக்காது..

ணவ ண் வர்க்கம் நடத்திய புரட்சிகளில் கற்பழிக்கப்பட்ட பெண்கள், கொன்று குவிக்கப்பட்ட உயிர்கள் எத்தனை?

பெண்களால் புரட்சி நடந்தால் இத்தனை உயிர்கள் பலியாகியிருக்காது..

பெண் - தாய்மை.. சிருஷ்டி.. அன்பு.. மாசு மருவற்ற உள்ளம்.. அரவணைப்பு.. பாதுகாப்பு.. பிரபஞ்சம்..

இப்படியான சாரம்சங்களின் கூட்டுக்கலவை நீ..

தலினால்தான் இப்படிப்பட பெண்மையை ராதிக்கிறேன்.. இவைகள் கிடைக்காது போக
தனித்து விடப்பட்டு ஒரு பாதுகாப்பற்ற சூழலுக்குள் தள்ளப்பட்டதாக உணர்கிறேன்..

அந்த சமயங்களின் மூச்சுத் திணறி செத்துக் கொண்டிருப்பதைப் போன்று உணர்கிறேன்...

அப்படியான தருணத்தில் இந்த நாவல் ரம்பமாகிறது..

சேரன்கயல்
03-09-2003, 09:40 AM
"ஆ" இல்லாததால் ரம்பமாகிறது என்று பதிவாகியிருக்கிறது...
முதல் அத்தியாயம், நகல் எடுத்ததுபோன்ற உணர்வுகளை சிதறியிக்கிறது...
அடுத்த அத்தியாயத்திற்கு செல்கிறேன்...

poo
04-09-2003, 06:33 PM
பெண்மையை ஆராதிக்கும் பண்பு போற்றுதலக்குரியதே...

உதாரணங்கள் ரணங்கள்... யோசித்துப்பார்க்கையில் நிஜம்!!!