PDA

View Full Version : பான்டு பற்றி விளக் முடியுமா?



mgandhi
28-12-2008, 04:14 PM
பான்டு பற்றி விளக் முடியுமா?

நாம் பயன் படுத்தும் பான்ட் எந்த வகை பான்ட் என்பதை எப்படி அரிவது. அதன் கீபோட் எந்த எந்த எழுத்துக்கு என்ன என்ன எழுத்துகள் வரும் என்பதை அரிந்தவர் விளக்கவும்

STMZH இந்த பன்டுக்கு உரிய கீபோடை பற்றி கூறவும்

பாரதி
01-01-2009, 05:12 AM
அன்பு மோகன்காந்தி அவர்களே,

எழுத்துருக்களின் வகையை அறிய வேண்டுமெனில் அந்த எழுத்துருக்களின் தொடர்ச்சி (*.ttf *.fot போன்று) மற்றும் எந்த வகை தட்டச்சு முறைமையை சேர்ந்தது (TAB, TAM, BAMINI, TAMILNET99 போன்றவை) என்பதை அறிய வேண்டும்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள எழுத்துரு வகையை "விருப்பப்படி" என்ற மென்பொருளைக் கொண்டு பயன்படுத்தலாம் என்று இணையத்தில் செய்தி இருக்கிறது.

மேற்கொண்டு விபரங்கள் அறிய தட்ட வேண்டிய சுட்டி:
http://auw.sarma.co.in/Supported.html

poornima
01-01-2009, 06:21 AM
பான்டு பற்றி விளக் முடியுமா?

நாம் பயன் படுத்தும் பான்ட் எந்த வகை பான்ட் என்பதை எப்படி அரிவது. அதன் கீபோட் எந்த எந்த எழுத்துக்கு என்ன என்ன எழுத்துகள் வரும் என்பதை அரிந்தவர் விளக்கவும்

STMZH இந்த பன்டுக்கு உரிய கீபோடை பற்றி கூறவும்



வெகு எளிது நண்பரே..

விண்டோஸ் பயன்பாட்டு அக்ஸெஸரீஸ் தொகுப்பில் Charmap என்றொரு சிறிய பயன்பாட்டு மென்பொருள் உள்ளது. இதைகீழ்க்கண்டவாறு இயக்கலாம்.

Start > Programs> Accessorirs > charmap அல்லது Start > programs >
charmap என்பதை தேர்ந்தெடுத்தி அதை வரவழையுங்கள்
அல்லது

Start > Run > அங்குள்ள இடத்தில் charmap எனத்தட்டச்சு செய்தாலும் வரும்

இங்கு வரும் பட்டியலில் அனைத்து எழுத்துருக்களும் வரும்.அங்கு நீங்கள்பதிந்த பட்டியலில் இருந்த உங்களுக்கு தேவையான எழுத்துருவை தேர்ந்தெடுத்தீர்கள் என்றால் அந்த எழுத்துக்கள் முழுதும் கட்டங்களில் வந்துவிடும்.

குறிப்பிட்ட எழுத்தில் வைத்து சுட்டியை அழுத்த கீழே அதற்கான விசைப்பலகை குறியீடு தெரியும். அதைக்கொண்டு கண்டறியலாம்