PDA

View Full Version : எனது ஹாட் டிஸ்க்கிலிருந்து சத்தம்



shibly591
28-12-2008, 02:11 PM
கொஞ்ச நாட்களாக எனது ஹாட் டிஸ்க்க வழியே சிறு சத்தம் ஒன்று வருகிறது (நற நற என்று பல்லை கடிக்கும்போது வருவது போன்ற சத்தம்)

இது எத்தகைய பிரச்சினையாக இருக்கலாம்?

இதனால் ஹாட் டிஸ்க் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக எனது அரை குறை கணணி பொறியிலாளன் சொல்கிறான் (நினைக்கும்போதே நடுங்குகிறது..அதிலிலுள்ள பெறுமதியான ஆவணங்களை பெக்-அப் செய்ய எக்ஸ்டனல் ஹாட் டிஸ்க் இங்கில்லை)

இது குறித்து தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்குங்களேன்..

நன்றிகள்

Narathar
28-12-2008, 02:17 PM
நற நற என்று பல்லை கடிக்கும்போது வருவது போன்ற சத்தம்

நல்ல ஒரு டென்டிஸ்ட்டிடம் காட்டிப்பார்க்கலாமே??? :D :D

நாராயணா!!!!

கோபித்துக்கொள்ளாதீர்கள், நம்ம அறிவு அம்புட்டுத்தான்.......:icon_b:

நம்ம கம்பியூட்டர் கண்ணாயிரங்கள் வந்து உங்கள் குறைதீர்ப்பார்கள்....
அதுவரை நற நற சத்ததை கேட்க பழகிக்கொள்ளுங்கள் :icon_b:

shibly591
28-12-2008, 02:29 PM
நல்ல ஒரு டென்டிஸ்ட்டிடம் காட்டிப்பார்க்கலாமே??? :D :D

நாராயணா!!!!

கோபித்துக்கொள்ளாதீர்கள், நம்ம அறிவு அம்புட்டுத்தான்.......:icon_b:

நம்ம கம்பியூட்டர் கண்ணாயிரங்கள் வந்து உங்கள் குறைதீர்ப்பார்கள்....
அதுவரை நற நற சத்ததை கேட்க பழகிக்கொள்ளுங்கள் :icon_b:

அடடடடடடடடடடடா................

எனக்கு இது தோணவே இல்லையே...உடனே ஒரு பல் வைத்தியரிடம் போன் போட்டு (போனை கீழே போட்டா...என்று கேட்க வேண்டாம்..) பிரச்சினையை சொன்னேன்..பாவம் அவரு சரியா படிக்கல போல...அவர் சொன்னாரு நீங்க (என்னைத்தான்) ஒரு சைக்கியாட்டியோ என்னவோ ஒருத்தர்...அவரை பார்க்க சொன்னாரு..

நாளை அவரிடம் கணணியை கொண்டு போகப்போகிறேன்...

நன்றி அண்ணா...

அன்புரசிகன்
28-12-2008, 03:01 PM
டிக் டிக் என்ற சத்தம் ஏற்படுகிறது என்றால் உங்கள் தட்டு சரியாக வாசிக்க ஒத்துழைக்கவில்லை என்று அர்த்தம். பல்லை கடிப்பது போன்ற சத்தம் தெரியவில்லை. பொதுவாக rpm குறைவான தட்டு என்றால் வாசிக நேரம் எடுக்கும். copy paste செய்யும் போதெல்லாம் நீண்ட நேரம் எடுக்கும். இது புதிதிலிருந்தே வரும்.

புதிதாக சத்தம் வருகிறது என்றால் உங்கள் தட்டின் ஆயுட்காலம் முடியவிருக்கிறது என்று அர்த்தம். (நானறிந்தவரை) எதற்கும் வேறு ஒரு இடத்தில் முக்கியமானவற்றை சேமித்துக்கொள்ளுங்கள்...

பாரதி
29-12-2008, 12:56 AM
அன்பு நண்பரே,
முன்பு என் கணினியில் இருந்த ஒரு வன் தட்டு எந்த சத்தமும் இல்லாமல்தான் இயங்கியது. திடீரென்று ஒரு நாள் ஒரு அசாதாரண சத்தம் கேட்டது. அத்துடன் அதனுடைய ஆயுள் நிறைவு பெற்றது.

உங்களது பிரச்சினையைக் குறித்த வரையில், அன்பு கூறியது போல் அது இன்னும் எத்தனை நாட்கள் அல்லது மாதங்கள் இன்னும் வேலை செய்யும் என்று குறிப்பிட்டு கூற இயலாது.

சிறந்த வழி என்னவென்றால் தாமதிக்காமல், உடனே உங்களுக்கு தேவையானவற்றை நீங்கள் நகல் எடுத்து வைத்துக்கொள்வதுதான்.

poornima
29-12-2008, 07:23 AM
கூடுமானவரை விரைவில் புதிய ஹார்ட் டிஸ்க் வாங்கி இதில் உள்ளவற்றை பேக்கப்
எடுத்துக் கொள்ளுங்கள்.. நண்பர்கள் குறிப்பிட்ட அத்தனையும் நிகழக்கூடிய சாத்தியம்
உள்ளது.. இந்த சத்தம் ஒரு நாள் கொஞ்சம் உச்சஸ்தாயிக்குப் போய் பின் அடங்கிவிடும். அதற்குள் எச்சரிக்கையாய் செயல்படுதல் நல்லது

shibly591
29-12-2008, 08:28 AM
எனது வினாவுக்கு விடையளித்த அன்புரசிகன் பாரதி மற்றும் பூர்ணிமாவுக்கு நன்றிகள்..(நாரதருக்கு விசேட நன்றிகள்)

விரைவில் புதிய ஹாட் டிஸ்க்கை வாங்க உத்தேசித்துள்ளேன்..ஆனாலும் அப்போது அந்த சத்தத்தின் அளவு குறைந்திருக்கிறது..எப்போதாவது ஒரு முறை அந்த சத்தம் கேட்டு பின் அமைதியாகிவிடுகிறது..

புதிய மென் பொருட்களை இன்ஸ்டோல் செய்யும்போது அந்த சத்தம் கேட்கும் பின் கணணி இணைப்பு அணைந்து மீள பூட் செய்யும்போது முறையாக பூட் ஆக தவறி பல முiறை ரீ-ஸ்டாட் பண்ணிய பிறகே பூட் ஆகிறது...

எதற்கும் கூடிய விரைவில் புதிய ஹாட் டிஸ்க் வாங்க முயல்கிறேன்..

மீண்டும் மீண்டும் நன்றிகள்..