PDA

View Full Version : வைரஸ் தொல்லை தாங்கலை............!!!!!!!!



shibly591
28-12-2008, 08:21 AM
அடேங்கப்பா....

வைரஸ் காட் "அவிரா" வையும் மீறீக்கொண்டு எனது கணணியில் வைரஸ் ஆட்சி பலமாக நீடிக்கிறது..

"அவிரா" வைரஸ் காடையே செயலிழக்க வைத்து விட்டது எனது ஆவண எதிரிகள் (அதானுங்க "வைரஸ்)...

நல்ல வைரஸ் அழிப்பான் மென்பொருள்கள் பற்றியும் அவைகளை இலவசமாக பதிவிறக்கஞ்செய்யும் இணைய முகவரிகள் பற்றியும் அலசினால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்..

எங்கே ஆரம்பியுங்களேன்.....

சசிதரன்
28-12-2008, 09:22 AM
NOD32 எனும் வைரஸ் அழிப்பான் மென்பொருள் உபயோகம் அளிப்பதாய் உள்ளது. முயற்சி செய்து பாருங்கள்.. இணைய முகவரியை விரைவில் தருகிறேன்...

சசிதரன்
28-12-2008, 09:28 AM
http://rapidshare.com/files/145896096/NOD32_Antivirus_System_2.70.32_final__All_Windows.Da-Legends.info.rar
இந்த முகவரியில் கிடைக்கும்... முயற்சி செய்து பாருங்கள்...:)

ரங்கராஜன்
28-12-2008, 11:27 AM
என்னுடைய பரிந்துரையும் அதுதான் சூப்பரா இருக்கு, நான் அதை தான் வைத்து இருக்குறேன்.

நிரன்
28-12-2008, 11:44 AM
AVG அன்டி வைர்ஸ் இலவசமாகக் கிடைக்கிறது அதைனை தரையிறக்கி
கணனியை ஸ்கான் செய்யுங்கள்

http://free.avg.com/



அல்லது kaspersky போன்றவற்றில் 1மாத கால இலவச பாவனை உண்டு
அதனை இறக்கி கணனியை ஸ்கான் செய்யுங்கள்

www.kaspersky.com

1மாத கால இலவசம் முடிந்த பின் என்ன செய்யலாம் என்று கோட்க
வேண்டாம்:aetsch013:
நீங்கள் கணனியை முழுமையாக ஸ்கான் செய்து விட்டு kaspersky யை
அளித்து விடுங்கள்
பின் இலவசமாக கிடைக்கும் AVG ஐ பாவியுங்கள்

இது மன்ற விதிகளுக்கமைய நான் தரும் ஒரு சிறுவிளக்கம் ...
சிலவற்றைக்கொடுக்க மன்றத்தில் கொடுக்கமுடியாது

இதனைப்பயன்படுத்திப்பாருங்கள் நிச்சயம் தீர்வுகிடைக்கும்

poornima
28-12-2008, 12:32 PM
வணிகநுண்ணுயிரி மற்றும் விரயநுண்ணுயிரி (Adware and Spamware) இவைகளுக்கு
AVG சாலச்சிறந்தது..

அலைபேசிகள் மூலம் பரவும் பல்லூடக பயன்பாட்டு நுண்ணுயிர்களுக்கு Kasper key
மிகமிக சிறந்தது..

நார்ட்டன் எல்லாவற்றையும் விட பாதுகாப்பான காவலன்..ஆனால் இயங்குதளத்தின்
வேகத்தையும் பயன்பாட்டு மென்பொருள்களின் பலத்தையும் அடக்கி வாசிப்பதால்
இவனை தள்ளிவைத்து விடுகிறார்கள்..

நண்பர்கள் சொன்ன Node32 மிகச்சிறந்தது..என்ன ஒரு விஷயம்..அதை நீங்க மேம்படுத்திக் கிட்டே இருக்கணும்..

எந்த தடுப்பான் போட்டாலும் அதை மேம்படுத்திக்கிட்டே இருக்கணுங்கறதை மறந்துடாதீங்க.. நான் இத எழுத ஆரம்பிச்சப்ப ஒண்ணு வந்திருக்கலாம்.இதோ முடிக்கறப்ப இண்ணொண்ணு வந்திருக்கலாம்.. ஆரு கண்டது.. :-)

ஓவியன்
28-12-2008, 12:47 PM
ஷிபிலியின் தேவை, பலருக்கும் பயனுள்ளதாக அமைகிறதே...
எனக்கும் கூட....!! :)

பாரதி
28-12-2008, 12:50 PM
அன்பு நண்பரே,
கீழ்க்கண்ட மூன்று தளங்களில் இருந்து பதிவிறக்கிய மென்பொருட்கள் எனது கணினியை கடந்த இரண்டு வருடங்களாக பாதுகாத்து வருகின்றன. நீங்களும் அந்த இலவச மென்பொருட்களை இணையத்திலிருந்து பதிவிறக்கி நிறுவி, அடிக்கடி இயக்கி உங்கள் கணினி சரியான நிலையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

1. www.avast.com (http://www.avast.com)
2. www.lavasoft.com (http://www.lavasoft.com)
3. www.spybot.com (http://www.spybot.com)

Mano.G.
28-12-2008, 10:29 PM
http://rapidshare.com/files/145896096/NOD32_Antivirus_System_2.70.32_final__All_Windows.Da-Legends.info.rar
இந்த முகவரியில் கிடைக்கும்... முயற்சி செய்து பாருங்கள்...:)

தம்பி பாஸ்வொர்ட் கேட்குது ஐயா

சசிதரன்
29-12-2008, 03:52 AM
பாஸ்வோர்ட் கொடுக்க மறந்துட்டேன்..:D இதோ இதை முயற்சி செய்யுங்கள்...:)

Da-Legends.info

அன்புரசிகன்
29-12-2008, 04:52 AM
McAfee சிறந்ததாக நான் அறிந்தவரை. நோர்ட்டன் பூச்சியை கண்டறிந்துவிட்டு அதை தெரிவிக்க ஆரம்பிக்கும் போது கணினியே ஸ்தம்பித்துவிடும். ஆனால் மக்காஃபீ அப்படியல்ல... தவிர தற்காலத்தில் பரவும் அநேக பூச்சிகள் இணையத்தினூடு வந்து ஃப்ளாஷ் ட்ரைவ் ஆல் பரவுகிறது. அவற்றை மிக இகுவில் அழித்துவிடுகிறது மக்காஃபீ. ஆனால் அதை தினமும் அப்டேட் பண்ணிவைத்திருக்கணும். அவ்வளவே....

தனிமடலில் வந்தததை உபயோகப்படுத்தி பதில் சொல்லுங்கள் ஷிப்லி... இங்கே பகிர முடியாதமைக்கு வருந்துகிறேன்.

ஷிப்லிக்கு.... Maximum protection கொடுக்கவேண்டாம். அப்புறமா உங்கள ஒண்டுமே செய்யவிடாதுங்கோ......... அப்டேட் பண்ணியதும் பூச்சிபிடிக்க உங்கள் கணினியின் மூலைமுடுக்கெல்லாம் தேட விடுங்கள். :D

praveen
29-12-2008, 04:55 AM
நல்ல கார்பரேட் வைரஸ் மென்பொருள் என்னிடம் உள்ளது, ரிஜிஸ்டர்/கிராக் இதெல்லாம் செய்ய தேவையில்லாதது, விருப்பப்படுவோர் தனிமடலில் தொடர்பு கொண்டு பெற்று கொள்ளுங்கள். இலவசமான மென்பொருள் அல்ல என்பதால் பொதுவில் தர இயலாது. சுமார் 70 எம்பி அளவிலானது. (குறைந்தது 200 பதிவுகளாவது செய்தவருக்கு தான் இதனை நான் தருவேன், புதிதாக சேர்ந்தவருக்கு நான் தர மாட்டேன், அவர்கள் என்னிடம் தனிமடலில் கேட்டு ஏமாற வேண்டாம்).

சைமன்டெக் என்ட்பாய்ண்ட் புரடெக்ஸன் 11.

இதில் ஆண்டிவைரஸுடன் பயர்வால், ஸ்பைவேர்நீக்கி போன்ற கூடுதல் வசதிகளும் உண்டு.