PDA

View Full Version : பொம்மை........



Nanban
05-04-2003, 10:52 AM
நான் யாரென்று
யாருக்கும் தெரியாது.
யாரும் என்னை
கண்டு கொள்ளவும் முடியாது.

யாரும் என்னை
துன்புறுத்த முடியாது.
யாரும் என்னை
அழிக்கவும் முடியாது.

அன்பானவனே
என்னை என்னிலிருந்து
பிரித்து தந்தவனே!

நான் பிரிந்த நான் -
ஒரு வெறும் பழந்துணி பொம்மை.

அதன் மீது
விதியின் வலிய அம்புகள்
மழையெனப் பொழிகிறது.

நான் மட்டும்
உன் கட்டுக்குள் நிம்மதியாக.

rambal
05-04-2003, 10:55 AM
நல்ல கவிதை..
நல்ல தொடக்கம் நண்பன் அவர்களே..
தொடருங்கள்..

anushajasmin
05-04-2003, 11:10 AM
தன்னை பொம்மையாக நினைத்து சொன்ன கவிதையா...அல்லது பொம்மை பற்றி சொன்ன கவிதையா...? பாராட்டுகள்

இளசு
06-04-2003, 03:45 PM
மனம் பிரிந்த நிலையா,பிறழ்ந்த நிலையா.....
நிரம்ப யோசிக்க வைப்பதே நண்பனின் முத்திரை..
யோசித்தபடி "முழிப்பதே" இந்தக் கிறுக்கனின் வாடிக்கை...

Narathar
07-04-2003, 05:23 AM
நண்பா........... நல்ல கவிதை!!!

discreteplague
07-04-2003, 01:12 PM
கவிதை ஒரு புதிய மாற்றத்தை தருகிறது...நன்று

விஷ்ணு

gankrish
11-04-2003, 12:35 PM
நண்பா நீயும் பொம்மை நானும் பொம்மை.. நினைத்து பார்த்தால் எல்லாம் பொம்மை