PDA

View Full Version : தனிமை எரிக்கும் கணங்கள் அல்லது காலத்தின் கையில் விலங்குகள்

shibly591
27-12-2008, 02:00 AM
இருள் சூழ்ந்ததொரு அடர்ந்த வனாந்தரத்தின்
அசையும் ஒரு இலையென
எவர் கண்ணிலும் எட்டுவதாயில்லை
என் கண்ணிலிருந்து உகுக்கும்
பலப்பல கண்ணீர்த்துளிகளும் கனவின் கலைதலும்...

தனிமைத்தீயில் யதேச்சையாய் சிக்குண்ட
என் விதிக்கப்பட்ட கணங்களிலிருந்து
சிக்கிச்சின்னாபின்னமாகி சாம்பலாகிப்போனது
சில நினைவுகளும் அது சார்ந்த நிதர்சனங்களும்...

மழைநாள் மண்வாசமாய்
உயிரின் வேர்ப்பரப்பிலிருந்து
நினைவுகள் நனைக்கும் ஞாபக எச்சங்களின்
எழில் கோலங்கள் மொத்தமும்
முற்றுப் "புள்ளி" என்றாகிப்போன பின்
எதற்கிந்த வேசம்...?எதற்கிந்த சுவாசம்...??

உடைந்து போன புல்லாங்குழல் வழியே
கசியும் ஒரு ஏகாந்த இசையென
காற்றின் சுவடுகள் பற்றி
எங்கெல்லாமோ மிதந்து கொண்டிருக்கிறேன்...

நீளும் திசை வழியே
என் பாதையற்ற பயணம்
கானல் முகங்களில் மோதுண்டு
செய்வறியா பேரதிர்ச்சியுடன்
காகிதக்கப்பலாய் தத்தளிக்கிறது..

சுய கழிவிரக்கம் குறித்தான என்
நிசப்தப்புலம்பல்கள்
ஒரு வசந்தத்தின் பாடலுக்காய்
அழுதபடி தவமிருக்கிறது..

நிர்மூலமான நிகழ்காலத்தின்
மிக மெல்லிய இடுக்குகளில் கசியும்
நம்பிக்கைச்சூரியனும்
மெல்ல மெல்ல ஒளியிழக்கிறது
காலத்தின் கைகள் சுமந்திருக்கும்
இறுகிப்போன விலங்குகளை பார்த்த பின்பு.....

சிவா.ஜி
27-12-2008, 05:51 AM
வலிமையான வரிகள்....வலியான வரிகள். வார்த்தைகளின் வீரியம் தாங்கி நிற்கின்றன கவிதையை.

உடைந்துபோன புல்லாங்குழலினின்று கசியும் இசை எப்படிப்பட்டதாக இருக்கும் என உணர வைக்கும் வரிகள். ஒவ்வொரு வரியும் உள்ளார்ந்த சோகம் சொல்லுகிறது.

மனம் கனக்க...பாராட்டுக்கள் ஷிப்லி.

poornima
27-12-2008, 05:58 AM
அழகான உவமைகளும் ஆழமான உள்ளார்த்தங்களும் உங்கள்
கவிதையின் பலம் ஷீப்லி..

யாருமாறியா கண்ணீருக்கும்,காலத்தின் கைகளில் விலங்காய் என்பதிலும் உள்ள பொருள்களை நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள்.. உடைந்த புல்லாங்குழல் வழியே வழியும் இசை எப்படியிருக்கும் என நான் கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்தேன்..
சீராக வரும் சுவாசத்தை சிந்தையாக சிறைப்பிடிக்கையில் தான் அதில் நல்ல இசையே கிடைக்கும்.. உடைந்து போனால் அதிலிருந்து கிடைக்கும் இசை ..?

பாராட்டுகள் ஷீப்லி..

shibly591
27-12-2008, 06:54 AM
வலிமையான வரிகள்....வலியான வரிகள். வார்த்தைகளின் வீரியம் தாங்கி நிற்கின்றன கவிதையை.

உடந்துபோன புல்லாங்குழலினின்று கசியும் இசை எப்படிப்பட்டதாக இருக்கும் என உணர வைக்கும் வரிகள். ஒவ்வொரு வரியும் உள்ளார்ந்த சோகம் சொல்லுகிறது.

மனம் கனக்க...பாராட்டுக்கள் ஷிப்லி.

மிக்க நன்றி சிவா அண்ணா...

வலிமையான வரிகள் என்ற உங்கள் பாராட்டுக்கு எனது வலிமையான நன்றிகள் உரித்தாகுக..

உங்கள் பின்னூட்டம் இன்னும் இன்னும் எழுத வேண்டும் என்று என்னை உசுப்புகிறது...

முயற்சிக்கிறேன்...

நன்றிகள் மீண்டும் மீண்டும்

shibly591
27-12-2008, 06:58 AM
அழகான உவமைகளும் ஆழமான உள்ளார்த்தங்களும் உங்கள்
கவிதையின் பலம் ஷீப்லி..

யாருமாறியா கண்ணீருக்கும்,காலத்தின் கைகளில் விலங்காய் என்பதிலும் உள்ள பொருள்களை நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள்.. உடைந்த புல்லாங்குழல் வழியே வழியும் இசை எப்படியிருக்கும் என நான் கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்தேன்..
சீராக வரும் சுவாசத்தை சிந்தையாக சிறைப்பிடிக்கையில் தான் அதில் நல்ல இசையே கிடைக்கும்.. உடைந்து போனால் அதிலிருந்து கிடைக்கும் இசை ..?

பாராட்டுகள் ஷீப்லி..

மிக்க நன்றிகள் பூர்ணிமா...

உடைந்த புல்லாங்குpல் இசை எப்படியிருக்கும் என்று எனக்குத்தெரியும்..தினமும் கொழும்பில் நான் ஏறும் அதிகாலை பஸ்ஸில் பிச்சை எடுக்க வரும் ஒரு ஏழையின் கைகளில் தவழ்ந்திருக்கும் அந்தப்புல்லாங்குழலை ஊதி ஊதி பிச்சை கேட்கும்போது அந்த இசையை கேட்டிருக்கிறேன்...அது அவன் வாழ்வைப்போலவே இருக்கிறது...

என்னால் முடிந்தது தினமும் ரூபாய் 5.00...

உங்கள் பாராட்டுக்களுக்கு என் பணிவான நன்றிகள்...

மதுரை மைந்தன்
27-12-2008, 08:04 AM
நான் எழுதும் தனிமை தொடர் கதையில் வரும் விக்ரம் எனற பாத்திரத்தின் நிலையை படம் பிடித்துக் காட்டுவது போல் உள்ளது உங்கள் கவிதை.

கொடிது கொடிது இளமையில் வறுமை
கொடிது கொடிது முதுமையில் தனிமை

வாழ்த்துக்கள்.

shibly591
27-12-2008, 08:17 AM
நான் எழுதும் தனிமை தொடர் கதையில் வரும் விக்ரம் எனற பாத்திரத்தின் நிலையை படம் பிடித்துக் காட்டுவது போல் உள்ளது உங்கள் கவிதை.

கொடிது கொடிது இளமையில் வறுமை
கொடிது கொடிது முதுமையில் தனிமை

வாழ்த்துக்கள்.

நன்றி மதுரை வேந்தன்..

தனிமையும் சுகம்தான்..அளவுக்கு மீறும் வரை...

நிரன்
27-12-2008, 09:54 AM
நெஞ்சைக்கனக்க வைக்கும் வரிகள் ........ வரிகளின் வலிகள் ....... என நன்றாக உள்ளது...

நீளும் திசை வழியே
என் பாதையற்ற பயணம்

செய்வதறியா மனதை இவ்வரிகளில் நான் உணர்ந்தேன்
நீளும் திசைமட்டுமா நீளும் வாழ்வில் கூட பயனற்ற பயணங்கள்
இக்கவி அதையும் நன்றாக புரிய வைக்கிறது

பாரட்டுக்கள் ஷில்பி:icon_b:

சசிதரன்
27-12-2008, 10:06 AM
தனிமைத்தீயில் யதேச்சையாய் சிக்குண்ட
என் விதிக்கப்பட்ட கணங்களிலிருந்து
சிக்கிச்சின்னாபின்னமாகி சாம்பலாகிப்போனது
சில நினைவுகளும் அது சார்ந்த நிதர்சனங்களும்...

உடைந்து போன புல்லாங்குழல் வழியே
கசியும் ஒரு ஏகாந்த இசையென
காற்றின் சுவடுகள் பற்றி
எங்கெல்லாமோ மிதந்து கொண்டிருக்கிறேன்...

நீளும் திசை வழியே
என் பாதையற்ற பயணம்
கானல் முகங்களில் மோதுண்டு
செய்வறியா பேரதிர்ச்சியுடன்
காகிதக்கப்பலாய் தத்தளிக்கிறது..

சுய கழிவிரக்கம் குறித்தான என்
நிசப்தப்புலம்பல்கள்
ஒரு வசந்தத்தின் பாடலுக்காய்
அழுதபடி தவமிருக்கிறது..

மிக மிக எதார்த்தமான வரிகளில் வலியினை உணர்த்தியிருக்கிறீர்கள் ஷிப்லி.. உங்கள் கவிதை மிகவும் அருமை... :)

shibly591
27-12-2008, 10:27 AM
பாரட்டுக்கள் ஷில்பி:icon_b:

நன்றி நிரஞ்சன்..

உங்கள் விமர்சனக்கண்ணோட்டம் அருமை

shibly591
27-12-2008, 10:28 AM
மிக மிக எதார்த்தமான வரிகளில் வலியினை உணர்த்தியிருக்கிறீர்கள் ஷிப்லி.. உங்கள் கவிதை மிகவும் அருமை... :)

நன்றிகள் நண்பரே.....