PDA

View Full Version : விபத்தில்லா வாகனம்



மகுடம் மோகன்
26-12-2008, 01:28 PM
அன்பு மன்ற உறவுகளே,இப்போதிருக்கும் அவசர உலகத்தில் வாகனவிபத்துக்கள் நெடிக்குநெடி நடந்தவண்ணம் உள்ளன,இதைதவிக்கும் பொருட்டு உலகில் உள்ள வாகனஉற்ப்த்தியாளர்கள் முயன்றுவருகிறார்கள்,தற்ப்போது ஸ்வீடன் வாகனஉற்ப்பத்தி நிறுவனமான வால்வோ கம்பொனி விபத்தில்ல காரை கண்டுபிடித்துள்ளது,அடுத்தமாதம் வெள்ளோட்டம் உடஉள்ளதாக அந்தகம்பொனி தெரிவித்துள்ளது,மேலும் விபத்தில்லா கார் வரும் 2010 ஆம் ஆண்டு விற்ப்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

மேலும் அறிவதற்க்கு கீழே உள்ள சுட்டியை கிளிக்கவும்.
http://in.news.yahoo.com/139/20081223/393/ttc-volvo-to-unveil-world-s-first-accide.html
அன்புடன்,மகுடம்மோகன்

ஓவியன்
26-12-2008, 01:34 PM
நல்ல முயற்சி வெற்றி பெறட்டும்...

ஆனால் எந்தளவுக்கு சாத்தியப் படுமோ தெரியவில்லையே, என்னதான் விபத்துக்களைத் தவிர்க்கும் வாகனமாக இருந்தாலும், விபத்துக்களைத் தவிர்க்கும் விசேட வாகனங்கள் இல்லாத வீதியில் ஒன்றாகப் பயணிக்கையில் ஒரு விபத்து நடந்து ஒன்றுடனொன்று வாகனங்கள் மோதுகையில் என்ன நடக்குமோ தெரியவில்லையே....

அய்யா
30-12-2008, 04:47 AM
சாலை விதிகளை மதித்து செயல்பட்டால், இப்போதிருக்கும் வாகனங்களையே விபத்தின்றி இயக்கலாம். சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வே நம்மவர்களுக்கு இப்போதைய தேவை.

பகிர்ந்தமைக்கு நன்றியண்ணா!.

மஸாகி
01-09-2009, 06:19 AM
அழகிய தகவல் - மேலதிக விபரங்களுக்காக கொடுத்துள்ள சுட்டியை ஒருமுறை சரி பார்க்கவும்..

நட்புடன்-மஸாகி
01092009

தாமரை
01-09-2009, 06:27 AM
அது ஒரு விபத்தில் அழிந்து விட்டது மஸாகி!!!

மஞ்சுபாஷிணி
01-09-2009, 06:42 AM
கேட்கவே சந்தோஷமா இருக்கு... பிள்ளைகளை நிம்மதியாக வெளியில் போயிட்டு வான்னு அனுப்பலாம்.. விபத்தில்லா வாகனம் வாங்க ஜனங்க இப்பவே ரெஜிஸ்டர் செஞ்சு வெச்சிருவாங்க... தகவலுக்கு நன்றி மகுடம் மோகன்..

தாமரை
01-09-2009, 06:45 AM
http://www.indianexpress.com/news/volvo-to-unveil-worlds-first-accidentproo/401986/

இந்தச் சுட்டி வேலை செய்யும்...

நேசம்
01-09-2009, 08:36 AM
நல்லகோர் முயற்சி.ஆனால் ஒவியன் சொல்வது சரியாக படுகிறது.சாலை விதிகளை முறையாக பின்பற்றினால் விபத்தினை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம்

மஸாகி
02-09-2009, 08:44 AM
கேட்கவே சந்தோஷமா இருக்கு... பிள்ளைகளை நிம்மதியாக வெளியில் போயிட்டு வான்னு அனுப்பலாம்.. விபத்தில்லா வாகனம் வாங்க ஜனங்க இப்பவே ரெஜிஸ்டர் செஞ்சு வெச்சிருவாங்க... தகவலுக்கு நன்றி மகுடம் மோகன்..

இந்தக்காலத்துப் பிள்ளைகளப் பத்தி தெரியாம பேசுரிங்களே மஞ்சுபாசினி, நிப்பாட்டி வைத்திருக்கிற வாகனத்தில போய் இடிச்சிக்கிடுவாங்க.. (ஒரு பெண்ணோ, பையனோ - அப்டி கொஞ்சம் நடந்து வந்தால்..)

நட்புடன்-மஸாகி
02092009