PDA

View Full Version : சத்தம்...



rambal
03-09-2003, 06:38 AM
சத்தம்...

மனுஷ்யர்களின்
இரைச்சலான
பேச்சொலியில்..

வாகன இயந்திரங்களின்
புரிந்து கொள்ள முடியா
மொழியின் கதறலில்..

பறவைகள் பறந்து
போகையில் சொல்லிச் செல்லும்
இனம் புரியா பாஷையில்..

ஓயாத அலைகளின்
அவஸ்தையின்
வெளிப்பாட்டில்..

விரிந்து கிடக்கும் வானில்
ஊடுருவி விரவி,
பரவி இருக்கும் காற்றில்..

சகல இடங்களிலும்
நிரம்பியிருப்பது
காற்று மட்டுமல்ல..

அதன் ஊடாய் பயணித்துச் செல்லும்
சத்தத்தால் நிரம்பியிருக்கிறது
இந்த பிரபஞ்சம்..

சத்தம் இல்லா
பிரபஞ்சம்
வெறும் சவம்..

பாரதி
03-09-2003, 05:10 PM
உங்கள் கவிதைகளால் எங்களுக்கு இனி தினம் உற்சவம்..தான்.

poo
03-09-2003, 07:14 PM
சென்னை தந்த கவிதையா?!..

தமிழ் தந்த கவியே.. வாழ்த்துக்கள்!!!

இளசு
03-09-2003, 10:56 PM
சப்தமும் சுகமே பல வேளைகளில்
நிசப்தமும் தேவையே சில வேளைகளில்..

சப்த பேதமில்லா பிரபஞ்சத்தை அளக்கும்
கவிஞன் ராமுக்கு வாழ்த்தும் பாராட்டும்..

karavai paranee
04-09-2003, 03:16 PM
சப்பதமில்லா பூமி சவம்தான்
அன்று.......

இன்று சவமான பூமி இதமாக இருக்கின்தே
(யுத்தம் என்று சத்தம் வந்தபின்பு)

வாழ்த்துக்கள் நண்பா

Nanban
06-09-2003, 10:37 AM
ராம்பால் ஒரு sound party தான்.

திரும்ப வந்தமைக்கு நன்றிகள் - சப்தமாக....

இ.இசாக்
07-09-2003, 04:56 PM
ராம் பால் அவர்களின் கவிதை
கவிஞனுக்குறிய தனித்துவத்தை நிறுவுகிறது
ஆம் எல்லாவற்றுக்குமாக இயங்குபவன் கவிஞன் !
ராம் பால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்