PDA

View Full Version : சுனாமி...



mathuran
26-12-2008, 05:47 AM
பாலகன் பிறந்த பரவசத்தில்
பிரசவித்த விடியலதை
கொடிய அஸ்தமனமாக்கிய
படுபாவி இயற்கையன்னையே...
பால்குடி மறவா பிஞ்சுகளை
பிய்த்தெடுத்த கொடுமைதனை
அரங்கேற்றிய இயற்கையே...
உன் சீற்றத்தை சிறுசுகளில்
காட்டிய கோரமென்ன...?

உன்னை அன்னையாக
அரவணைத்த உள்ளங்களை
ஆக்ரோஷ அலைகொண்டு
அழித்தொழித்த ஆவேசமென்ன?
வேஷம்போட்டு மோசம்பண்ணிய
பாவக்காறி நீயல்லவோ...?

உன்னையே நம்பிவாழ்ந்த
சொந்தங்களில் சொத்துக்களை
தும்புதும்பாய் துடைத்தெறிந்த
கோரம்தான் உனக்கெதற்கு..?

ஆழ்கடலில் முத்தெடுத்து
ஆனந்தமாய் வாழவைத்த
அன்பான அன்னை நீயே..!
அரையுயிர் போகும்முன்னே
குற்றுயிராய் குதறடித்த
குரோதக்காறியும் நீயல்லவோ?

பிரேதங்கள் பார்த்துத்தான்
மனங்குளிரும் என்றெண்ணி
பலபேரைக் கொன்றொழித்தாய்...
சாந்தமாய் இருந்துகொண்டே
தாண்டவமாடிய கோவமென்ன..?

நம்பிய உள்ளங்களை
நார்நாராய் கிழித்தெறிந்து
நாதியற்று அலையவிட்டாய்...
அலையாக வந்தெம்மை
அலைக்களித்து அநாதையாக்கினாய்...
அடங்கவில்லை உன்கோவம்!
அப்பாவி உயிர்கள்தான்
உனக்கான உணவென்று
தப்பாக எமையேன்
ஒப்பாரி போடவைத்தாய்...?

உன் கோர தாண்டவத்தின்
நான்காண்டு நிறைவாயிற்று...
அடிபட்ட உள்ளங்கள்
அலறித்துடிப்பதை
அலட்டிக்கொள்ளாமல்
வேடிக்கை பார்க்கின்றாய்...
அடங்கியே இருந்துவிடு,
ஆர்ப்பரித்து எழுந்துவந்து
கோபத்தை காட்டாதே...!

Narathar
26-12-2008, 05:56 AM
"படுபாவி இயற்கையன்னையே..."
வரி சற்று காட்டமாக இருந்தாலும்,
அந்த சோகத்தினை நேரில் பார்த்து..
அதன் சுவடுகளை இன்னும் உணர்ந்துகொண்டிருக்கும்
நமக்கு இப்படி எழுதினாலும் போதாது என்றி நினைக்கிறது!

எல்லாம் அவன் செயல்................



அடங்கியே இருந்துவிடு,
ஆர்ப்பரித்து எழுந்துவந்து
கோபத்தை காட்டாதே...!

இனி இப்படியொரு கோரம் வேண்டாமென பிராத்திப்போம்

நிரன்
26-12-2008, 11:33 AM
ஆழ்கடலில் முத்தெடுத்து
ஆனந்தமாய் வாழவைத்த
அன்பான அன்னை நீயே..!
அரையுயிர் போகும்முன்னே
குற்றுயிராய் குதறடித்த
குரோதக்காறியும் நீயல்லவோ?



நன்றாக உள்ளது எல்லா வரிகளும்!

மனிதர்கள் செய்யும் செயற்பாடுகளே வினையாக மனிதனையே
தாக்குகின்றது....அப்படித்தாக்கிய இந்நாளில் உங்கள் கவிதை அருமை

பாரட்டுக்கள் மதுரன் அவர்களே....