PDA

View Full Version : எம் ஈழத்து சொந்தங்களுக்காக உலக அரங்கில் குரல் கொடுப்போம்!!!புதியவன்
25-12-2008, 05:29 PM
இலங்கையில் அரசாங்கத்தினாலும், அரசபடைகளாலும் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அழிப்பினையும், இன ஒடுக்குமுறையையும் உலகத்தலைவர்களினதும், மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட அமைப்புக்களினதும் கவனத்திற்கு எடுத்துச்செல்ல உலகத் தமிழர்களாகிய நாம் இந்த மின்னஞ்சலினை அனுப்பி வைப்பதன் ஊடாக இன்னல்களினாலும், அவலங்களினாலும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு எம்மாலான இவ்வுதவியினை செய்ய முன்வருவோமாக..http://www.tamilrefugees.com/
இவ்வண்ணம், புதியவன் , தமிழ்தாய் இணையம் (www.thamizthai.blogspot.com), ஈழம் வெப்சைட் (http://www.eelamwebsite.com)

இம்மடலை அனுப்புவதற்கு உங்களுடைய பெயரினையும், மின்னஞ்சல் முகவரியினையும், நீங்கள் வாழும் நாட்டினையும் குறித்த வெற்றிடங்களில் இட்டு அனுப்புக. நன்றி. http://www.tamilrefugees.com/

புதியவன்
26-12-2008, 07:54 PM
http://www.tamilrefugees.com/

pls send email

இலக்கியன்
26-12-2008, 08:14 PM
உங்கள் இந்த முயற்சி வெற்றியடைந்து ஈழத்தில் அமைதி கிட்டும் என்கின்ற நம்பிக்கையில் நானும் அனுப்புகின்றேன்

ஓவியன்
27-12-2008, 12:47 AM
நல்லதே நடக்கட்டுமென்ற உங்கள் முயற்சிக்கு என் ஆதரவுகளும் ராகுலன்..!!

தூயவன்
28-12-2008, 10:25 AM
நானும் அனுப்புகின்றேன் ....

இலக்கியன்
10-01-2009, 05:39 PM
கடிதத்தின் தமிழ் மொழியாக்கம்

உலகத்தலைவர்களுக்கு இடம் பெயர்ந்துள்ள தமிழர்களிடம் இருந்து ஒரு காத்திரமான வேண்டுகோள்

இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து பல வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களாகிய நாம் அரசு எம்மை ஒழித்துக்கட்ட எடுத்த நடவடிக்கையில் இருந்து தப்பித்துக்கொள்ளவே எமது அருமையான நாட்டைவிட்டு வெளியேற நேரிட்டது. சட்டத்துக்கு அப்பாற்பட்ட வகையில் கைது செய்யப்படுவதற்கும், தடுத்துவைக்கப்படுவதற்கும், சித்திரைவதை செய்யப்படுவதற்கும், கொலை செய்யப்படுவதற்கும், அல்லது காணாமல் போக செய்யப்படுவதற்கும் அஞ்சியே இவ்வாறு செய்ய நேர்ந்தது. இலங்கையில் தற்போது நடைபெறும் கொடூர சம்பவங்களை அதி உத்தமர்களாகிய தாங்கள் ஒரு வேளை அறிந்திருக்கக்கூடும். அந்நாட்டில் தற்போது வசித்துவரும் எமது உறவினர்களை அந்நாட்டைவிட்டு வேறுநாடுகளுக்குப் புலம் பெயரச் செய்ய அல்லது அவர்களை அடக்கி ஆட்சி செய்யும் நோக்கத்துடன் தொடர்ந்து அதிகாரத்துக்கு வந்த அரசாங்கங்கள் அவர்களை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகின்றன. தற்போது அங்கு நடைபெறுவது இன ஒழிப்புக்கு ஒத்த முயற்சிகளாகும். அங்கு உள்ள நிலவரத்தை தாங்கள் விளங்கிக் கொள்ளும் முகமாக இவை தொடர்பான முக்கிய பல விபரங்களை தங்களுக்கு எடுத்துக்காட்ட நாம் விரும்புகிறோம். அதன் மூலம் எமது சமூகத்தினர் அங்கு இன்று எதிர்நோக்கும் அவல நிலையில் இருந்து அவர்களைக் காப்பாற்ற அதி உத்தமராகிய நீங்கள் தலையிட வேண்டுமென வேண்டி நிற்கின்றோம்.


போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்த 1505 ம் ஆண்டில் இலங்கையில் மூன்று இராச்சியங்கள் இருந்தன என்பது வரலாறு காட்டும் ஒரு உண்மையாகும். அவையாவன, வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் இராச்சியம் ஒன்றும், தெற்கிலும் மேற்கிலும் கரையோரப்பகுதிகளில் இன்னொரு சிங்கள இராச்சியமும், மத்தியமலைப் பிரதேசத்தில் மேலுமொரு சிங்கள இராச்சியமுமாகும்


போர்த்துக்கேயரும் அவர்களின் பின்னர் வந்த ஒல்லாந்தரும் நிர்வாக வசதிக்காக கரையோரப் பிராந்தியங்களை ஒரு அலகாக நிர்வகித்து வந்தனர்


ஒல்லாந்தருக்குப் பின்னர் இலங்கையை ஆட்சி செய்த பிரித்தானியர் 1815ம் ஆண்டில் மத்திய இராச்சியத்தையும் கைப்பற்றினர். அவர்கள் அதனையும் சேர்த்து இந்நாட்டை ஒரே அலகாக ஆட்சி செய்தனர்.


சிலோன் என அப்பொழுது அழைக்கப்பட்ட இந்நாட்டிற்கு 1948 இல் சுதந்திரம் வழங்கிய பொழுது பிரித்தானியர் அதன் நிர்வாகத்தினை சிங்களப் பெரும்பான்மையினருக்கு ஒரே நாடாக ஆட்சி செய்வதற்கு வசதியாக, சிறுபான்மையினரும் பாகுபாடின்றி நடாத்தப்படுவதற்கு போதுமென கருதப்பட்ட ஏற்பாடுகளைக்கொண்ட ஒரு அரசியல் யாப்பினையும் வழங்கினர்.


சிறுபான்மையினராக இருந்த தமிழர்கள் நன் நம்பிக்கையில் இவ் ஒழுங்குகளை அச்சமயம் ஏற்றுக் கொண்டனர். எனினும் அதிக நாட்கள் செல்ல முன்னரே தாங்கள் சகலவிதத்திலும் பாகுபாடாக நடத்தப்படுகின்றோம் என்பதை உணர்ந்தனர்.


இவ்வகையான பாகுபாடான செயற்பாடுகள் இலங்கையின் தோட்டப் பகுதிகளில் பணிபுரிந்து வந்த சுமார் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்களின் வாக்குரிமைகளை பறித்ததுடன், 1956 ம் ஆண்டில் இருந்த ஆங்கில மொழிக்குப் பதிலாக சிங்கள மொழியை அரச கரும மொழியாக மாற்றியது போன்ற நிகழ்வுகள் பிறந்த நாட்டிலே தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்தப்படப் போகின்றார்கள் என்பதை உறுதிப்படுத்தின


தமிழ் அரச உத்தியோகத்தர்கள் தொடர்ந்து பதவிகளில் இருக்க வேண்டுமேயாயின் சிங்களம் கற்க வேண்டும் என்ற நிபந்தனை, சர்வகலாசாலையில் கற்பதற்கு திறமை அடிப்படையில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதனை மாற்றி இன விகிதாசார அடிப்படையில் மாணவர்களை சேர்த்துக் கொண்டமை முதலிய பல சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்தன. இவ்வகையான நிகழ்வுகள் தமிழ் இளைஞர்களை போராளிகளாக மாறத் தூண்டின.


பின் தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் இவ்வகையில் தூண்டப்பட்டு செயற்படும் இளைஞர்களை ஈன இரக்கம் இன்றி அடக்க தமது காவற்துறையினரையும், பாதுகாப்புப் படையினரையும் பயன்படுத்தின. இந்நடவடிக்கைகளின் போது போராளிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய மனித உரிமைகள் மீறப்பட்டன


பின்னர் பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் போன்ற கொடூர சட்டங்கள் அமுலுக்கு வந்தன. அவற்றின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு அதிக நாட்களுக்கு விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டனர். குறித்த சட்டம் அரச காவற்துறையினருக்கு அளிக்கப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலங்களை நீதிமன்றங்கள் ஏற்க வசதி செய்யப்பட்டதினால் பலர் தாம் செய்யாத குற்றங்களுக்கு தண்டனை பெற காரணமாயிற்று.வேறு பலர் அப்பாவிகளாக இருந்த பொழுதும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நெடுநாட்கள் தடுத்து வைக்கவும் அது வசதி செய்தது.


இவ்வகையான செயற்பாடுகள் தமிழ் இளைஞர்கள் தமது உரிமைகளுக்காக போராட வேண்டும் என்ற உணர்வினை அதிகரிக்கச் செய்தன. அவர்களின் இவ் உணர்வுகளையும், செயற்பாடுகளையும் கட்டுப்படுத்த முடியாது போனதினால் நல் நோக்கம் கொண்ட சர்வதேச அரசுகளினால் ஏற்படுத்தப்பட்ட சமாதானப்பேச்சு வார்த்தைகள் பல உள் நாட்டிலும், பூட்டான், தாய்லாந்து, சுவிற்சிலாந்து போன்ற நாடுகளிலும் நடைபெற்றன. இம் முயற்சிகள் எவையும் சமாதானத்தை உதயமாக்கவில்லை. பேச்சுவார்த்தைகளின் போது இணங்கிக் கொண்ட விடயங்களை அரசு நடைமுறைப்படுத்தாமையே இந் நிலமைக்கு காரணமாயிற்று.


இறுதியாக 2002 ம் ஆண்டு நோர்வே அரசின் அனுசரணையுடன் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. இந் நிகழ்வு மகிந்த இராஜபக்ச அவர்கள் ஜனாதிபதியாகும் வரையில் அமைதி நிலவிய காலமொன்றை ஏற்படுத்தியது.


அவர் அதிகாரத்துக்கு வந்த பின்னர் ஜெனிவாவில் ஒரு பேச்சுவார்த்தை நடை பெற்றது. அம் முயற்சியும் சமாதானத்தை ஏற்படுத்தத் தவறியது. ஜெனிவாவில் இணங்கிக் கொண்டமைக்கு அமைய அரசு செயற்படத் தவறியமையே இதற்குக் காரணமாகும். ஆகவே வன்முறைகள் தொடர்ந்தன. அரசு சமாதான நடவடிக்கையை இரத்து செய்து விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டுவது என கங்கணம் கட்டிக்கொண்டு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது.


இளைஞர் போர்க்கோலம் கொண்டது என்பது தமிழர்கள் பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றார்கள் என்பதற்கு அறிகுறியே தவிர அதனோடு தொடர்பற்று தனித்து நிற்கும் ஒரு பிரச்சினையல்ல. தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வினை முன்வைக்காது மகிந்த இராஜபக்ச அவர்கள் விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்ட தீர்மானித்துள்ளார்.


போர் நிறுத்த ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டமையைத் தொடர்ந்து இலங்கையில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதற்கும், கடத்தப்படுவதற்கும், தடுத்து வைக்கப்படுவதற்கும், கொலை செய்யப்படுவதற்கும், காணாமல் போக செய்யப்படுவதற்கும் , வேறுவகையில் அவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதற்கும் வழிவகுத்தது. தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு நியாயப்படுத்த முடியாத வகையில் வான் தாக்குதல் நடாத்தி பெருமளவில் அவர்கள் இடம் பெயரச் செய்யப்பட்டுள்ளனர். பலர் கொல்லப்பட்டும், அல்லது அவயவங்கள் இழக்க செய்யப்பட்டும் உள்ளனர். உணவு, தண்ணீர் ,மருந்துவகைகள், வேறு அத்தியாவசியப் பொருட்கள் மறுக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.அநேக தமிழர்கள் வடக்கில் இருந்து போக்குவரத்து செய்யும் உரிமைகள் மறுக்கப்பட்டு சிறையில் இருப்பதுபோல் உள்ளனர். மகிந்த இராஜபக்ச அவர்கள் அதிகாரத்துக்கு வந்த பின்னர் 300,000 தமிழர்கள் இடம் பெயர்ந்தும் 20,000 தமிழர்கள் கொல்லப்பட்டுமுள்ளனர்.


இவ்வகையில் பாதிப்புற்ற மக்களுக்கு உதவியும் நிவாரணமும் அளித்து வந்த தொண்டு நிறுவனங்களுக்கும், அரச சார்பற்ற தாபனங்களுக்கும் அப்பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நிலமை இன்னும் மோசமாக உள்ளது. அப்படியிருந்தும் ஜ.நா அமைப்புக்கள் உதவிக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் மக்கள் இன்னல்களுக்குள்ளாகி சாக வேண்டும் எனபதை அரசு விரும்புகின்றது என்பதை தெளிவாக காட்டுகின்றது


உலக உணவுத் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதியின் கூற்றுப்படி வடக்கில் வாழும் தமிழர்களின் தற்போதைய நிலை சோமாலியர்களின் நிலையை ஒத்தது. மக்களின் இந் நிலை பற்றியும் யுத்த நிலை பற்றியும் தகவல்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் செய்தித் தணிக்கையால் வெளிவருவது இல்லை. அதன் விளைவாக அங்குள்ள நிலைமை எந்தளவுக்கு பாரதூரமானது என்பது பலருக்குத் தெரியாது.


இலங்கையில் சட்ட ஒழுங்குமுறை செயலற்று சீர்குலைந்து போய் உள்ளது என பலர் விபரிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.


ஜ.நாவின் மனித உரிமை ஆணைக்குழு அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிக்க ஆணைக்குழு ஒன்றை அனுப்ப எடுத்த முயற்சிகள் தடுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மனித உரிமைகள் தொடர்பான விசாரணைகள் சர்வதேச ஒழுங்கு முறைகளுக்கும், பிரமாணங்களுக்கும் அமைய நடைபெறுவதை உறுதிப்படுத்த என செயற்பட்டு வந்த சர்வதேச சுயாதீன நிபுணர்கள் குழு அதன் பணிகளை இடைநிறுத்தி உள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கு சர்வேதேச பிரமாணங்களிற்கு அமைய உரிமைகளைப்பேண வேண்டும் எனற மனநிலை இல்லையெனப் பிரகடனப்படுத்தியே தமது பணிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


சிறிலங்கா சிங்களவர்களின் நாடு எனவும், அங்கு வசிக்கும் ஏனைய இனத்தவர்களுக்கு அங்கு உரிமைகள் இல்லை எனவும் இராணுவத்தளபதி அண்மையில் கூறியது, அரசு யுத்தத்தை எந்நோக்கத்துக்காக முன்னெடுக்கின்றது என்பதை உறுதிப்படுத்துகின்றது. அத்துடன் இந்நாடு ஒரு இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்கின்றது என்பதற்கான அறிகுறிகளும் உள்ளன. உலகில் வேறு பகுதிகளில் இவ்வகையான கொடூர சம்பவங்கள் நிகழும்போது பாதிப்பு உள்ளோருக்கு உதவ சர்வதேச சமூகங்கள் நடவடிக்கை எடுத்த பல சந்தர்ப்பங்கள் உண்டு. எனவே அதி உத்தமர்களாகிய தங்களிடம் நாம் பணிவாக வேண்டிக்கொள்வது யாதெனில் இலங்கை விவகாரத்தில் தலையிட்டு ஒரு சுமுகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே. இலங்கை வாழ் தமிழர்களுக்கு வேறுவழியில்லை. ஆகவே இவ்விடயத்தில் தாங்கள் அளிக்கும் உதவிக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டவர்களாக இருப்போம்.


நன்றி.