PDA

View Full Version : திரை மெட்டுக்கு எனது வரிகள், பா-3ஆதி
25-12-2008, 03:51 PM
கல்லூரி காலங்களில் எழுதியவை இவை..

பா - 1

படம் : உயிரே

பாடல் : என்னுயிரே என்னுயிரே

பல்லவி:
பெண்ணிலவே பெண்ணிலவே
உன் பேரழகில் ஏ.. ஏ
என் நினைவை உன்னிடமே தந்துவிட்டேன்..

ஜன்னல் மறந்து மூடாதே பெண்நிலவே - எழில் பூநிலவே
இளவாலிபத்தில் வரும் காதல் முல்லை - இதன்
வாசனையில் ஒரு கள்ளம் இல்லை - என்
வார்த்தைகளில் எந்த பொய்யுமில்லை வான் நிலவே..
நீ வா நிலவே
ஜன்னல் திறந்துவிடு ஜென்மம் நீளவிடு ஜீவன் வாழவிடு


அனுப்பல்லவி :

நேரமும் நாட்களும் காதல் உலகில் கிடையாதே
மென் பூவினில் வரும் தேனிலே காதல் சுவையாய் இருக்காதோ
நேசம் என்னும் வீனையில் காதல் சுரமாய் சுரக்காதோ

சரணம் : 1

நிலவே என்னை தீண்டிவிட்டாய்
கனவை நிறைத்து புதைத்துவிட்டாய்
நாளும் பொழுதும் உன் நினைவே
என் வானில் நீ இல்லையே...

தோழியே நெஞ்சினில் புதிதாய் இன்று ஓர் தயக்கம்
தோழியே பூவினில் புரியா வகையில் போர் நடக்கும்

தீவிழிகள் இரண்டும் கருகியதே - மென்
இதயத்தில் அமிலம் பொங்கியதே - ஒரு
எரிமலை எலும்பில் புலுங்கியதே - துளி
இரத்தத்தில் புயலலை எழும்பியதே


சாரணம் : 2

இளமயிலே இளமயிலே என் இளமை உன்னை தேடுதே
இனிமயிலே இனிமயிலே என் இனிமையில் உன்னை சூடுவேன்
என் இதயத்தில் அடுப்பினை மூட்டிவைத்தாய்
என் நாளங்கள் மெழுகென உருகவைத்தாய்
என் இளமையை நெருபென சிவக்க வைத்தாய்
என் உயிரினில் உயிரென உறைந்துவிட்டாய்..

ஜன்னல் மறந்து மூடாதே பெண்நிலவே - எழில் பூநிலவே
இளவாலிபத்தில் வரும் காதல் முல்லை - இதன்
வாசனையில் ஒரு கள்ளம் இல்லை - என்
வார்த்தைகளில் எந்த பொய்யுமில்லை நீ வா நிலவே

என் கூரையின் மேலே கூடு கொண்டாய்
பெண் சிரகத்தில் ஏற துணிவுதந்தாய்
வழியிலே உன்னையே காணுகிறேன் - உன்
கைதுணை தேடுகிறேன்..

மலர் தீண்டியதின் வடு ஆறவில்லை
மன் வேதனையின் வலி தீரவில்லை
என் நேசமதி என்றும் தேய்வதில்லை...

சரணம் : 3

இன்ப சோலையில் துயரமே பூக்கும் முல்லை
இங்கு சொர்க்கமொன்று யாவருமே கண்டதில்லை

இன்ப சோலையில் துயரமே பூக்கும் முல்லை
இங்கு சொர்க்கமொன்று யாரும் கண்டதில்லை
பொன் வான் நிலவே.. நீ வா நிலவே..
பொன் வான் நிலவே.. நீ வா நிலவே..

மதி
25-12-2008, 04:05 PM
அற்புதமான வரிகள் பாடல் மெட்டுக்கு அழகாய் பொருந்தி வருகிறது. நீங்கள் சிறந்ததொரு பாடலாசிரியர் ஆகலாம் ஆதி.
வாழ்த்துகள்.

ஆதி
26-12-2008, 02:40 PM
அற்புதமான வரிகள் பாடல் மெட்டுக்கு அழகாய் பொருந்தி வருகிறது. நீங்கள் சிறந்ததொரு பாடலாசிரியர் ஆகலாம் ஆதி.
வாழ்த்துகள்.
பின்னூட்டத்திற்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் மதி..

ரங்கராஜன்
26-12-2008, 02:45 PM
ஆதி பெரிய ஆள் தான் நீங்கள், ஆனா வாயை தான் திறக்க மாட்றீங்க........

ஆதி
26-12-2008, 03:00 PM
பா - 2

படம் : பார்த்தேன் ரசித்தேன்

பாடல் : எனக்கென ஏற்கெனவே

பல்லவி:
ஆண் :
ஒருமுறை என் நினைவை உரசிய நிலவே
உயிருக்குள் மென்மை வந்து பரவிடும் உணர்வே
செல்லூடும் தீ துளிகள்
நெஞ்சுக்குள் பூவெளிகள்
இப்படியேன் இப்படியேன் விதவிதமாய் நிகழ்கிறதே

பெண் :

இப்படியேன் இப்படியேன் விதவிதமாய் நிகழ்கிறதே
எதன் விளைவென்று தெரியாதடி..
ஒரு நொடி நோக்கி திரும்பிய பின்னே
என்னில் ஏதோ கொள்ளை
மறுபடி நோக்க ஏங்கி துடித்தேன்
வெட்கம் விலகவில்லை
வயது பெண்ணின் மனதை கவர்ந்தாய் நீயே நீயே..

ஆ:
அழகே! அழகே! உலகின் அழகுகள்
உன்னழகின் மிச்சமடி
உன்னழகின் வெளிச்சமடி
உன்னை போல இருப்பதனால் பூ
உந்தன் ஜாதியடி
கன்னங்குழியில் கலங்கம் இருக்க நீ
நிலவின் பேத்தியடி

பெ :
இளயவள் இதயம் கெண்டை மீனாய்
தரையில் குதிக்கின்றது - என்
இமைகளில் துடிக்கின்றது
உன் வரவுகள் எண்ணி
வரம் பெற காதலை
தவமொன்று புரிகின்றது..

ஆ:

வாடைப்பூவே எந்தன் நெஞ்சை
வாட்டியே வைக்காதே - உன்
வாசலை அடைக்காதே
உன் கனவுகள் எல்லாம் அழிந்திடா
வண்ணம் நிலவில் சேகரித்தேன்
உன் நிமிட புன்னகை சிதைந்திடா
வகையில் கண்களில் மூடிவைப்பேன்

பெ:
இதழ்களின் நுனியில் வார்த்தைகள் எல்லாம்
வரிசையில் நிற்கின்றது - அதை
மௌனமும் தடுக்கின்றது
மௌனம் என்ற ஒற்றை வார்த்தையில்
மனமும் திறக்கின்றது..

ஆதி
26-12-2008, 03:43 PM
ஆதி பெரிய ஆள் தான் நீங்கள், ஆனா வாயை தான் திறக்க மாட்றீங்க........

கம்மியா பேசினப்பயே ஓட்டு ஓட்டுனீங்க.. நிறைய பேசிருந்தா ஓடவிட்டிருப்பீங்க :)

மதி
26-12-2008, 03:57 PM
கம்மியா பேசினப்பயே ஓட்டு ஓட்டுனீங்க.. நிறைய பேசிருந்தா ஓடவிட்டிருப்பீங்க :)
:):):)

தீபா
26-12-2008, 04:36 PM
அருமையாக 'செட்' ஆகிறது.. நல்ல பாடலாசிரியருக்குண்டான திறமை உங்களிடம் அடங்கி இருக்கிறது...

வாழ்த்துக்கள் ஆதி. தொடருங்கள்... திரை உலகில் வீறு நடை போட்டு...

arun
26-12-2008, 05:02 PM
ஆகா அருமையா பொருந்துகிறதே சூப்பர் பாராட்டுக்கள்

மதுரை மைந்தன்
26-12-2008, 07:05 PM
அதே மெட்டில் பாடி பார்த்தேன். இப்போது எனக்கு பழைய பாடல் மறந்து விட்டது. அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.

ஆதி
27-12-2008, 05:33 AM
அருமையாக 'செட்' ஆகிறது.. நல்ல பாடலாசிரியருக்குண்டான திறமை உங்களிடம் அடங்கி இருக்கிறது...

வாழ்த்துக்கள் ஆதி. தொடருங்கள்... திரை உலகில் வீறு நடை போட்டு...

நன்றி தென்றல், உங்கள் வாழ்த்து மகிழ்ச்சியை தந்தாலும், தங்களுக்கே உள்ள தனிச்சிறப்பான குறும்பு பதில் கவிதைகள் இல்லாததால் சப்பென்று போய்விட்டது பின்னூட்டம்..:icon_rollout:

ஆதி
27-12-2008, 05:37 AM
ஆகா அருமையா பொருந்துகிறதே சூப்பர் பாராட்டுக்கள்

தங்களின் ஊக்கப் பின்னூட்டத்திற்கு நன்றி அருண்..


அதே மெட்டில் பாடி பார்த்தேன். இப்போது எனக்கு பழைய பாடல் மறந்து விட்டது. அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்.

நன்றி ஐயா, உங்களின் உற்சாக பின்னூட்டம் மேலும் மேலும் இதுப்போன்ற முயற்சிகளை இன்னும் ஆர்வமாய் செய்ய தூண்டும்..

poornima
27-12-2008, 05:48 AM
அன்பு நண்பர் ஆதிக்கு,

உங்கள் இரண்டு பாடல்களையும் பார்த்தேன் - படித்தேன் - இரசித்தேன் . திரைப்பாடல்களோடு கொஞ்சம் சினேகம் அதிகம் உண்டு என்பதற்காகவே இந்தப் பாடல்களை கொஞ்சம் உன்னிப்பாகவே வாசித்தேன்.. சில விஷயங்கள் சொல்லத் தோன்றியது..

மெட்டுக்கு வரிகளில் முரட்டுத்தனமாக வார்த்தைகளை பொருத்துவது என்பதில்
எனக்கு உடன்பாடில்லை. நல்லவேளை உங்கள் பாடல்களில் அப்படி ஏதும் இல்லை.
ஆனால் தத்தகாரத்துக்காக மெனக்கெட்டு சில இடங்களில் வல்லினம் மிகும் ஒற்று மிகும் வார்த்தைகளை கொண்டு பாடல் கட்டியிருக்கிறீர்களோ என்று தோன்றியது..
கல்லூரி காலத்தில் என்பதால் அவற்றை மிக எளிதாய் கடந்து போவோம்..

இப்போது நன்கு பழக்கப்பட்டிருப்பீர்கள்.. இந்தப் பாடல்களை நீங்களே இப்போது
படித்துப் பார்க்கையில் உங்களுக்கு இந்த வரியை இந்த வார்த்தையை இப்படி
மாற்றியிருக்கலாமோ என்று தோன்றும். தோன்றினால் நீங்கள் இதைவிட இன்னமும்
பிரமாதமாய் எழுதக் கூடிய நிலைக்கு வந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்..

அடி எதுகையிலும் மோனையிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால்
நல்லது.. இலக்கணத்தில் இலக்கிய நயம் பாராட்டல் என்று ஒரு கருத்தமைவு இருக்கிறது.. சந்தநயம் தொடைநயம்.. முரண் எதுகை என்றெல்லாம் சில விஷயங்கள்
இருக்கின்றன.. இயல்பாக கட்டுகோர்க்கும் பாடல் எழுத முயற்சிப்பவர்க்கு இவை
நல்ல உதவி செய்யும்..

நீங்கள் இன்னும் பல பாடல்கள் எழுதுங்கள்.. நல்ல கற்பனை வளம் இருக்கிறது.நீங்கள் மிகச்சிறப்பாக இதை எழுத நேரிட சிகரங்கள் தொடக்கூட வாய்ப்பிருக்கிறது.. ஒரு சாதாரண நிகழ்ச்சியை வானமகள் நாணுகிறாள்- வேறு உடை பூணுகிறாள் என்று அழகியல் தந்தமைக்காகவே முதல் பாடலிலேயே கவனிக்கப் பெற்றவர் வைரமுத்து.. உங்களாலும் முடியும்...

பாராட்டுகள்..

சிவா.ஜி
27-12-2008, 06:16 AM
மெட்டுக்கு பாட்டு எழுதுவது பெரிய விஷயமில்லை...ஏதோ ஒரு வார்த்தையைப் போட்டு நிரப்பிவிடலாம். அப்படித்தான் சில திரைப்பட பாடலாசிரியர்கள் நல்ல மெட்டுக்களை கொலை செய்கிறார்கள். ஆனால் நீங்கள் அளித்திருப்பதோ....அடடா...ஆஹா ரகம்.

பூர்ணிமா அளவுக்கு எனக்கு இலக்கணத்தில் அத்தனை பரிச்சயமில்லை. அதனாலேயோ என்னவோ என்னால் நன்றாக ரசிக்கமுடிந்தது. இருந்தாலும் பூர்ணிமா சொல்லியிருப்பதை செயல்படுத்தினால் மேலும் அழகுறும்.

வெகுவிரைவில் திரைப்பாடலாசிரியராகி எங்களையும் பெருமைப்படுத்துங்கள் ஆதி. வாழ்த்துகள்.

poornima
27-12-2008, 06:21 AM
மெட்டுக்கு பாட்டு எழுதுவது பெரிய விஷயமில்லை...ஏதோ ஒரு வார்த்தையைப் போட்டு நிரப்பிவிடலாம். அப்படித்தான் சில திரைப்பட பாடலாசிரியர்கள் நல்ல மெட்டுக்களை கொலை செய்கிறார்கள். .

ஆனால் அவை எல்லாம் காலம் தாண்டி நிற்பதில்லை என்பதையும் ஒத்துக் கொள்ளதானே வேண்டும்.. :-)

சிவா.ஜி
27-12-2008, 06:24 AM
ஆனால் அவை எல்லாம் காலம் தாண்டி நிற்பதில்லை என்பதையும் ஒத்துக் கொள்ளதானே வேண்டும்.. :-)

மிகச் சரியாக சொன்னீர்கள். அவையெல்லாம் ஈசல்கள்.

shibly591
27-12-2008, 07:03 AM
அருமையான அழகான காதல் வரிகள் (கல்லூரிக்காலம் என்றால் கேட்கவும் வேண்டுமா..????)

இன்னும் இனியும் தொடருங்கள்..

இதிலுள்ள மிகப்பெரிய விடயம் ஏ.ஆர் ரஹ்மானின் மெட்டுக்கு வரிகள் வலிமையாய் சேர்ப்பது கொஞ்சம் கடினம்..அதை நீங்கள் சிறப்பாக செய்திருக்கிறீர்கள்..

வாழ்த்துக்கள்

ஆதி
30-12-2008, 03:06 AM
நன்றி பூர்ணிமா.. வெறும் நிறைமாட்டுமல்லாமல் குறையையும் சுட்டவேண்டும் இதுப்போல் ஒரு பின்னூட்டத்தைத்தான் எதிர்ப்பார்த்தேன், உங்களிடம் இருந்து அது கிடைக்கப்பெற்றது மிக்க மகிழ்ச்சி..

எனக்கும் பல இடங்களில் திருத்தம் தோன்றியது, கல்லூரி காலத்தில் தீட்டியது என்று குறிப்பட்டதானால் அவற்றை திருத்தாமல் பதித்தேன்

இனி தொடை நயத்திலும் பாடல் நலத்திலும் அதிக கவனம் செலுத்துக்கிறேன்..

பாராடுக்கும் பாடம் கற்பித்த பின்னூட்டத்திற்கும் மீண்டும் நன்றிகள் பூர்ணிமா..

மற்றும் ஊக்க பின்னூட்டமிட்ட சிவா அண்ணாவுக்கும், ஷிப்லிக்கும் எனத் நெஞ்சார்ந்த நன்றிகள்..

தீபா
30-12-2008, 03:18 AM
நன்றி தென்றல், உங்கள் வாழ்த்து மகிழ்ச்சியை தந்தாலும், தங்களுக்கே உள்ள தனிச்சிறப்பான குறும்பு பதில் கவிதைகள் இல்லாததால் சப்பென்று போய்விட்டது பின்னூட்டம்..:icon_rollout:

ஆ...ஆ....

கொஞ்சம்(அல்ல) வேலை.. பின்னிப் பூச்சூடுகிறது தலைவா.

அதுமட்டுமல்லாமல் இந்த சினிமாவுக்குப் பாட்டெழுதுவது எல்லாம் நமக்கு ஒத்துவருகிறமாதிரி தெரியவில்லை.. (:D)

பிறகு சந்திப்போம்.....

அன்புடன்
தென்றல்

ஆதி
30-12-2008, 07:24 AM
பா - 3

படம் - சிட்டிஸன்

பாடல் மேற்கே உதித்த சூரியனே

பல்லவி :

மீசை முறுக்கி கிளம்பு நண்பா - நாம்
விண்ணை கிழித்து விதி சமைப்போம்
மின்னல் இடிகளின் எதிர்ப்பு வந்தால் - நம்
கண்ணின் நெருப்பால் கதை முடிப்போம்
உன் விரலை தேய்த்து தீ கொழுந்தை ஏற்று
ஒரு விடியல் நாம் கொள்ள
உன் உயிரை கரைத்து ஒரு யுத்தம் நடத்து
உன் பெயர் பிள்ளைகள் சொல்ல
உந்தன் நெஞ்சின் உந்தன் நெஞ்சின் ஊனங்கள் அகற்று
ஊறி வரும் எண்ணம் தன்னில் ஊக்கங்கள் வளர்த்து

மெழுகுவர்த்தி ஏற்று கொண்ட தீதான் தற்கொலை இல்லை
உருகி கொஞ்சம் தீர்ந்தால் வெளிச்சம் ஊறும் கொள்ளை

சரணம் : 1

இதயப்பையில் இதயப்பையில் அச்சம்
இருந்தால் ஏதும் மிச்சம்
துடைத்து எறி வெளியே
துணிந்து வா உளியே
இளமை மோகங்கள் இரவுக்குள் பாழே
இருளை கரைக்க இன்று இறுதி நாளே
பகல்களின் விழிகளில் ஒளி படரட்டும்
படுத்துள இருள்துகள் வெளி அகலட்டும்
இமைகளும் யுத்தத்தில் குத்துவாள் ஆகட்டும்..

சரணம் : 2

எச்சில் துளி எச்சில் துளி எல்லாம் எரி அமிலமாகும்
எட்டு வச்சு தோழா எழுந்து முன்னே வாடா
செத்து போக செத்து போக அஞ்சி சிதையாய் தான் வாழ்ந்தோம்
சாவின் கறை போக சலவை நாம் செய்வோம்
வயிற்று குழியினை நிரப்பிட நிலையாய்..
வம்ச தலைகளே அடகுக்கு விலையா ??
வேர்களால் தீமைகள் விரல்களை சுற்றுவோம்
வேஷங்கள் போட்டிடும் உலகையே கட்டுவோம்
விழிகளின் கொதிப்பினில் அடிமை கொப்புளம் உடையட்டும்..

அமரன்
30-12-2008, 07:42 AM
கலக்குறிங்க ஆதி.. அப்படியே மன்றத்திரைவானத்திலும் வானவில் வரையுங்களேன்

நிரன்
30-12-2008, 08:56 AM
நன்றாக உள்ளது ஆதி அண்ணா!! :)

அமரன் கூறியதுபோல் மன்றத்திரைவானமும் எட்டிப்பாருங்கள்
இது இசைவடிவேறும்:)

வாழ்த்துக்கள் அண்ணா!!


(நானும் எவளவேத ரை பண்ணுறன் இப்படியெல்லாம் வருதில்லையே)

ஆர்.ஈஸ்வரன்
30-12-2008, 09:02 AM
சிறந்ததொரு பாடலாசிரியர் ஆகலாம். வாழ்த்துகள்.

சிவா.ஜி
30-12-2008, 10:06 AM
அந்த ஒரிஜினல் பாட்டில் உள்ள அதே வேகமும், ஆவேசமும், உணர்ச்சிகளும் இதிலும் உள்ளது ஆச்சர்யத்தை அளிக்கிறது. மிக அருமையான வார்த்தையாடல்கள்.

அசத்துறீங்க ஆதி. பாராட்டுக்கள்.

poornima
31-12-2008, 01:17 PM
சிட்டிஸன் படத்தில் நான் ரசித்த பாடல்களில் இது ஒன்று
(இன்னொன்று - பூக்காரா பாடல்)

அதிகம் கவனிக்கபெறாத இந்த பாடலுக்கு முயன்று நீங்கள்
மெட்டெழுதியிருக்கிறீர்கள் என்ற கோணத்தில் இந்தப் பாடலை
நான் அணுகினேன்.. ஏமாற்றம் தரவில்லை உங்கள் வரிகள்..

சில சினிமா பாடல்வரிகளை காணும்போது ' என்ன இப்படி எழுதியிருக்காங்களே
இதை இப்படி எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று எண்ணத் தோன்றும்
அப்படி ஒரு எண்ணம் கீழ்க்கண்ட உங்கள் வரிகளில் எனக்கு தோன்றியது

//இளமை மோகங்கள் இரவுக்குள் பாழே
இருளை கரைக்க இன்று இறுதி நாளே
//

//வயிற்று குழியினை நிரப்பிட நிலையாய்..
வம்ச தலைகளே அடகுக்கு விலையா ??
//

தமிழில் வாழ்த்தினால் தடுமாறிப் போவேனோ என்று
சற்று நிலைகுலைந்து போனேன் ஆதி..

ஹாட்ஸ் ஆஃப் யூ...

இளசு
01-01-2009, 08:26 PM
பாராட்டுகள் ஆதி..

கல்லூரிக்காலம்.. காதல் வரிகள் இயல்பாய் விளையும் கவிஞனுக்குள்..
அவற்றை மெட்டுக்குள் மடித்த நேர்த்தி - திறம்!

சமூகக் கனல் தெறிக்கும் மூன்றாம் பாடல் -
இளமை தாண்டியும் யோசிக்கும் - நல் மனவளம்!

தொடருங்கள்!