PDA

View Full Version : சுமைதாங்கிகள்...



rambal
03-09-2003, 07:36 AM
சுமைதாங்கிகள்...


சரக்கு ஏற்றிச்
செல்லும்..
மக்களை ஏற்றிச்
செல்லும்..
விரைவாக செல்லும்..
மெதுவாயும் செல்லும்...
எல்லாவற்றையும்
சுமக்கின்றன
தண்டவாளங்கள்
குப்பை பொறுக்குபவனின்
கோணிப்பையாய்..

இதில்,
எந்த கணத்தில்
எந்த மனுஷனோ..
மனுஷியோ..
சில சமயம்
ராட்சசர்களும்..
விதிக்கப்பட்டது
சுமக்கமட்டுமே..

சாசுவதமாய் சுமக்கின்றன
கோணிப்பையும்
தண்டவாளங்களும்
அடுத்தவர் சுமைகளை..
குப்பைகளையும்தான்..

சேரன்கயல்
03-09-2003, 10:09 AM
பாராட்டுக்கள் ராம்...
தண்டவாளங்களின் மீதான உங்கள் கரிசணை புரிகிறது...

பாரதி
03-09-2003, 06:12 PM
எப்பிடி ராம் உங்களால் எல்லாவற்றைப் பற்றியும் அலசிப்பார்க்க முடிகிறது..?

poo
03-09-2003, 08:14 PM
உனக்கே உரித்தான நடை.. உயர வாழ்த்துக்கள்!!!

இளசு
04-09-2003, 12:00 AM
சுமைதாங்கிகளும் சுமக்கப்படும் காலம் வரும்.
சாசுவதம் என்று ஏதுமில்லை...
வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்..
காலச்சக்கரம் சுழல்வதில் மாற்றமில்லை..

கூரிய பதிவுக்கு பாராட்டுகள் ராம்!