PDA

View Full Version : நண்பர்களே...சசிதரன்
25-12-2008, 02:22 PM
நேற்று பற்றிய நினைவில்லை...
நாளை பற்றிய பயமில்லை...
அந்த நொடிகளுக்காய் சிரித்திருந்தோம்..

நம்மிடையே எல்லாம் பொதுவாயிருந்தது...
உனதென்றும் எனதென்றும் எதுவும் இருந்ததில்லை.
உணவு முதல் கனவு வரை...
அண்ணன் முதல் அன்னை வரை...
எல்லாம் நமதாக இருந்தது.

நம் அனைவருக்குமான சாயங்கால சரித்திரங்கள்...
பெரும்பாலும் மொட்டை மாடியில் எழுதப்பட்டது.
நாம் விளையாடிய சீட்டுக்கட்டுக்கள்...
இப்பொழுது ஏதோவொரு மூலையில் இருக்ககூடும்.

மாலையில் ஆரம்பிக்கும் பேச்சு...
இரவு வரை நீளும்.
எதைப் பற்றி என்று தெரியாது...
ஆனாலும் பேசிக்கொண்டேயிருப்போம்.
அன்று காரணங்களே தேவைப்படவில்லை...

கிராமத்தில் கழித்த விடுமுறை நாட்கள்...

வரப்பின் ஓரமாய் அப்பா சிரித்திருக்க...
சேற்று வயல்களில் ஆடி களித்ததும்...
அம்மாவின் சமையலை வாசம் பிடித்து...
அவசரமாய் பம்ப்புசெட்டில் குளியல் முடித்ததும்...

பகல் முழுவதும் ஆடி களித்தபின்...
களத்துமேட்டினில் இரவு தொடங்கும்.
நிலவு ஒளியினில் ஒன்றாய் கூடி..
ஆடி.. பாடி... இரவை கழிப்போம்.
இடையிடையே இடைவேளையாய்
அம்மா கையால் சோற்றுருண்டை...

இன்றும் கூட...
நம் பழைய புகைப்படங்களை பார்க்கையில்...
அதில் உறைந்திருக்கும் சிரிப்பு....
சில நொடிகள் நம் உதடுகளில் உயிர்கொள்ளும்..
அடுத்த நொடிகளில்...
நினைவுகளாய் நம் உயிர்'கொல்லும்'.

உறைந்துவிட்ட புகைப்படம் போல் இல்லை வாழ்க்கை...
அசுர வேகத்தில் பாய்கிறது காலம்...
நம்மையும் அதனூடே இழுத்தபடி.
நேற்று என்பதை நினைவுகளாக்கி..
நாளை என்ற கனவுக்காய் வாழ்ந்து...
இன்றைய தூக்கத்தை தொலைத்து நிற்கிறோம்.

பார்ப்பதற்கு நேரமில்லை...
பேசவும் கூட காரணங்கள் தேவைப்படுகிறது.
எப்பொழுதாவது வரும் மின்னஞ்சலில்...
சில நொடிகள் நிலைகுத்தி நிற்கின்றன கண்கள்..

வளர்ந்துவிட்டோம்..
அதனால்தானோ என்னவோ...
நிறையவே இழந்துவிட்டோம்.

ரங்கராஜன்
25-12-2008, 02:31 PM
சூப்பர்.................. இந்த கவிதை அனைத்து வளர்ந்த ஆண்களுக்கும் பொருந்தும்.

நிரன்
25-12-2008, 02:47 PM
வளர்ந்துவிட்டோம்..
அதனால்தானோ என்னவோ...
நிறையவே இழந்துவிட்டோம்.

சரியாக கூறினீர்கள் நண்பரே சிறு பிள்ளைப்பருவமே
வாழ்வில் மகிழ்சியானது எதையும் சிந்திக்கா உள்ளம்.....
அப்பருவத்தில் எப்போது பெரியவா்களாவோம் என மனதில் எண்ணங்கள்
எண்ணுக்கணக்கற்றவையாக தோன்றும்...
ஆனால் இப்பபொளுதும் தினமும் நினைக்கிறேன் வாழ்க்கையை
கொஞ்சம் பின்நோக்கி நகர்த்த காலங்கள் நேரங்கள் பொன்னானவை
அதை நாம் சில வேளைகளில் மண்ணாக்கிவிட்டோம்.....
தங்கள் கவிதை என்னை சிறுபிள்ளைப் பருவத்துக்கு இழுத்துச் சென்றுவிட்டு
மீண்டும் ஒரு யுகம் கண்டேன் உங்கள் கவிதையால்....:)

நன்றி கலந்த பாராட்டுக்கள் கவிதை அருமையாக உள்ளது
தெடருங்கள் :icon_b:

சசிதரன்
26-12-2008, 12:34 PM
சூப்பர்.................. இந்த கவிதை அனைத்து வளர்ந்த ஆண்களுக்கும் பொருந்தும்.

மிக்க நன்றி நண்பர் மூர்த்தி அவர்களே...

சசிதரன்
26-12-2008, 12:37 PM
சரியாக கூறினீர்கள் நண்பரே சிறு பிள்ளைப்பருவமே
வாழ்வில் மகிழ்சியானது எதையும் சிந்திக்கா உள்ளம்.....
அப்பருவத்தில் எப்போது பெரியவா்களாவோம் என மனதில் எண்ணங்கள்
எண்ணுக்கணக்கற்றவையாக தோன்றும்...
ஆனால் இப்பபொளுதும் தினமும் நினைக்கிறேன் வாழ்க்கையை
கொஞ்சம் பின்நோக்கி நகர்த்த காலங்கள் நேரங்கள் பொன்னானவை
அதை நாம் சில வேளைகளில் மண்ணாக்கிவிட்டோம்.....
தங்கள் கவிதை என்னை சிறுபிள்ளைப் பருவத்துக்கு இழுத்துச் சென்றுவிட்டு
மீண்டும் ஒரு யுகம் கண்டேன் உங்கள் கவிதையால்....:)

நன்றி கலந்த பாராட்டுக்கள் கவிதை அருமையாக உள்ளது
தெடருங்கள் :icon_b:

உங்கள் பாராட்டிற்கும் ஊக்கத்திற்கும் நன்றிகள் பல நண்பரே... தொடர்ந்து விமர்சியுங்கள்...:)

தீபா
26-12-2008, 05:05 PM
HDFC என்று நினைக்கிறேன்... அது ஒரு இன்ஷூரன்ஸ் விளம்பரம். அதில் நான்கைந்து பெரியவர்கள் காஃபி ஷாப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.. சில இளைஞர்கள் அங்கே வந்து பார்ப்பார்கள்.. அப்போது, அந்த பெரியவர்கள் எல்லோரும் கலைந்து செல்லும் காட்சி,

என்னை பாதித்தது உண்மை.. அந்த பாதிப்பை உங்கள் கவிதையில் காண்கிறேன்.. இரண்டுக்கும் ஒர் நூலளவேனும் ஒற்றுமை உண்டு..

பாராட்டுக்கள் திரு.சசிதரன்..

arun
26-12-2008, 05:29 PM
சிறு வயது நினைவுகள் என்றுமே பசுமையானவை தான் அருமையான கவிதை பாராட்டுக்கள்

ஓவியன்
27-12-2008, 01:51 AM
ஓடி விளையாடிய
வீதிகள் மைதானங்கள்...

ஏறி விளையாடிய
மரங்கள், மலைகள்....

இன்னும் என்னென்னவோ எல்லாம்
அங்கேயே இருக்கின்றன...

ஆனால் நாம்தான்
அவற்றை விட்டு விட்டு
எங்கோ வந்துவிட்டோம்....

நல்ல கவிதை என் மனதையும்
பின்னோக்கிப் பயணிக்க வைத்தது,
பாராட்டுக்கள் சசி..!! :)

சசிதரன்
27-12-2008, 10:07 AM
HDFC என்று நினைக்கிறேன்... அது ஒரு இன்ஷூரன்ஸ் விளம்பரம். அதில் நான்கைந்து பெரியவர்கள் காஃபி ஷாப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.. சில இளைஞர்கள் அங்கே வந்து பார்ப்பார்கள்.. அப்போது, அந்த பெரியவர்கள் எல்லோரும் கலைந்து செல்லும் காட்சி,

என்னை பாதித்தது உண்மை.. அந்த பாதிப்பை உங்கள் கவிதையில் காண்கிறேன்.. இரண்டுக்கும் ஒர் நூலளவேனும் ஒற்றுமை உண்டு..

பாராட்டுக்கள் திரு.சசிதரன்..

தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி தென்றல்...:)

சசிதரன்
27-12-2008, 10:08 AM
ஓடி விளையாடிய
வீதிகள் மைதானங்கள்...

ஏறி விளையாடிய
மரங்கள், மலைகள்....

இன்னும் என்னென்னவோ எல்லாம்
அங்கேயே இருக்கின்றன...

ஆனால் நாம்தான்
அவற்றை விட்டு விட்டு
எங்கோ வந்துவிட்டோம்....

நல்ல கவிதை என் மனதையும்
பின்னோக்கிப் பயணிக்க வைத்தது,
பாராட்டுக்கள் சசி..!! :)

உண்மைதான் நண்பர் ஓவியன் அவர்களே... தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள் பல...:)

shibly591
27-12-2008, 10:23 AM
வாரே வாவ்...

எனக்கு நிகழ்ந்ததைப்போலவே இருக்கிறது..

ஒரு படைப்பின் வெற்றி அந்தப்படைப்பை படிக்கும் வாசகர்களையும் அதனூடே பயணிக்க வைக்குமாயின் அதுதான் அந்தப்படைப்பின் பலமும் வெற்றியும்...

உங்கள் கவிதைக்கு அந்த வெற்றி கிடைத்திருக்கிறது..

அழகான இயல்பான வரிகளில் முப்பது வருடங்களை மீள்பார்வைக்கு தந்திருக்கும் உங்க்ள தேர்ந்த கவியாற்றலுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்

தொடருங்கள் இதுபோல இன்னுமின்னும்..

சசிதரன்
27-12-2008, 02:05 PM
அருமையான பின்னூட்டம் தந்து வாழ்த்தியதற்கு மிக்க நன்றி நண்பரே...:)

சிவா.ஜி
27-12-2008, 02:18 PM
இதைக் கவிதை எனச் சொல்வதா......என் மனதின் நினைவோட்டமெனச் சொல்வதா...? வலிந்து திணிக்காத வார்த்தைகள்...நெஞ்சை வருடிவிட்டுப் போகும் வாக்கியங்கள். எங்கள் பிள்ளைப்பிராயத்தை கண்ணுக்கு முன் கொண்டு நிறுத்திய கவிதை. அசத்தல் சசிதரன்.

என்னை வெகுவாக ஈர்த்த கவிதை. வாழ்த்துகள்+பாராட்டுகள்.

தீபா
27-12-2008, 02:27 PM
இதைக் கவொதை எனச் சொல்வதா......என் மனதின் நினைவோட்டமெனச் சொல்வதா...? வலிந்து திணிக்காத வார்த்தைகள்...நெஞ்சை வருடிவிட்டுப் போகும் வாக்கியங்கள். எங்கள் பிள்ளைப்பிராயத்தை கண்ணுக்கு முன் கொண்டு நிறுத்திய கவிதை. அசத்தல் சசிதரன்.

என்னை வெகுவாக ஈர்த்த கவிதை. வாழ்த்துகள்+பாராட்டுகள்.

ஆமாமாம்... இதைக் கவொதை என்று சொல்லமுடியாது :D:D:D

சிவா.ஜி
27-12-2008, 02:30 PM
ஆமாமாம்... இதைக் கவொதை என்று சொல்லமுடியாது :D:D:D

அம்மாடி அவசரத்தில் நிகழ்ந்த தவறு. டக்ஸ் இப்ப வந்து...என்னைக் காச்சப்போகிறார்.

ரங்கராஜன்
27-12-2008, 02:58 PM
அம்மாடி அவசரத்தில் நிகழ்ந்த தவறு. டக்ஸ் இப்ப வந்து...என்னைக் காச்சப்போகிறார்.

ஹா ஹா ஹா, ஆசிரியர் மாணவனை கொட்டலாம். ஆனால் மாணவன் ஆசிரியரை கொட்டகூடாது.

சிவா.ஜி
27-12-2008, 03:01 PM
ஹா ஹா ஹா, ஆசிரியர் மாணவனை கொட்டலாம். ஆனால் மாணவன் ஆசிரியரை கொட்டகூடாது.

தவறு யார் செய்தாலும் தவறே.....முக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எனச் சொன்ன நக்கீரன் பரம்பரையில் வந்தவர்கள் நாம். தைரியமா கொட்டுங்க தக்ஸ்.

Narathar
27-12-2008, 03:12 PM
கிராமத்தில் கழித்த விடுமுறை நாட்கள்...

வரப்பின் ஓரமாய் அப்பா சிரித்திருக்க...
சேற்று வயல்களில் ஆடி களித்ததும்...
அம்மாவின் சமையலை வாசம் பிடித்து...
அவசரமாய் பம்ப்புசெட்டில் குளியல் முடித்ததும்...

பகல் முழுவதும் ஆடி களித்தபின்...
களத்துமேட்டினில் இரவு தொடங்கும்.
நிலவு ஒளியினில் ஒன்றாய் கூடி..
ஆடி.. பாடி... இரவை கழிப்போம்.
இடையிடையே இடைவேளையாய்
அம்மா கையால் சோற்றுருண்டை....

ஒரு அழகிய சிறுகதையை மீட்டுப்பார்த்ததுபோல்
இருக்கின்றதிந்த வரிகள்.......

ம்ஹூம்............ இனி அந்த் நாட்கள் வரப்போவதில்லை...
நம் குழந்தைகளுக்காவது கிடைக்கப்போவதும் இல்லை!!!

இன்றும் கூட...
நம் பழைய புகைப்படங்களை பார்க்கையில்...
அதில் உறைந்திருக்கும் சிரிப்பு....
சில நொடிகள் நம் உதடுகளில் உயிர்கொள்ளும்..
அடுத்த நொடிகளில்...
நினைவுகளாய் நம் உயிர்'கொல்லும்'..

உண்மைக்கு சொல்லில் உயிர்கொடுத்திருக்கின்றீர்கள்
அருமையாக இருக்கின்றதுவளர்ந்துவிட்டோம்..
அதனால்தானோ என்னவோ...
நிறையவே இழந்துவிட்டோம்.

:traurig001: :traurig001: :traurig001: :traurig001:

வாழ்த்துக்கள் உங்கள் கவிதைக்கு :icon_b:
நன்றிகள் என் பழைய ஞாபகங்களை மீட்டமைக்கு :)

சசிதரன்
29-12-2008, 03:55 AM
இதைக் கவிதை எனச் சொல்வதா......என் மனதின் நினைவோட்டமெனச் சொல்வதா...? வலிந்து திணிக்காத வார்த்தைகள்...நெஞ்சை வருடிவிட்டுப் போகும் வாக்கியங்கள். எங்கள் பிள்ளைப்பிராயத்தை கண்ணுக்கு முன் கொண்டு நிறுத்திய கவிதை. அசத்தல் சசிதரன்.

என்னை வெகுவாக ஈர்த்த கவிதை. வாழ்த்துகள்+பாராட்டுகள்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி சிவா அண்ணா... :)

சசிதரன்
29-12-2008, 03:56 AM
ஒரு அழகிய சிறுகதையை மீட்டுப்பார்த்ததுபோல்
இருக்கின்றதிந்த வரிகள்.......

ம்ஹூம்............ இனி அந்த் நாட்கள் வரப்போவதில்லை...
நம் குழந்தைகளுக்காவது கிடைக்கப்போவதும் இல்லை!!!உண்மைக்கு சொல்லில் உயிர்கொடுத்திருக்கின்றீர்கள்
அருமையாக இருக்கின்றது
:traurig001: :traurig001: :traurig001: :traurig001:

வாழ்த்துக்கள் உங்கள் கவிதைக்கு :icon_b:
நன்றிகள் என் பழைய ஞாபகங்களை மீட்டமைக்கு :)

தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நாரதரே...:)

அருள்
01-01-2009, 03:24 AM
நல்ல கவிதை. பழைய நினைவுகளை மீட்டமைக்கு நன்றிகள்

சசிதரன்
01-01-2009, 06:23 AM
நல்ல கவிதை. பழைய நினைவுகளை மீட்டமைக்கு நன்றிகள்

மிக்க நன்றி நண்பரே...:)

Keelai Naadaan
01-01-2009, 06:45 AM
சிறுவயது கால கட்டத்தையும் தற்போது அந்த காலத்தை பற்றி மனம் அசைபோடுவதையும் அழகாய் வடித்துக்காட்டும் எளிதில் விளங்கும் கவி வரிகள்.:icon_b:
வாழ்த்துக்கள் சசிதரன்

சசிதரன்
01-01-2009, 04:05 PM
சிறுவயது கால கட்டத்தையும் தற்போது அந்த காலத்தை பற்றி மனம் அசைபோடுவதையும் அழகாய் வடித்துக்காட்டும் எளிதில் விளங்கும் கவி வரிகள்.:icon_b:
வாழ்த்துக்கள் சசிதரன்

மிக்க நன்றி நண்பரே...:)

தமிழ்தாசன்
01-01-2009, 06:08 PM
வளர்ந்துவிட்டோம்..
அதனால்தானோ என்னவோ...
நிறையவே இழந்துவிட்டோம்.

சிந்திக்க வைக்கும் வரிகள்.

அன்றை நினைவுகள் மீண்டும் மனதில்...

பாராட்டுக்கள்.

இளசு
01-01-2009, 08:21 PM
அனைவருக்கும் பொருந்தும் பொதுக்கரு..
வாசிக்கும் யாருமே தன்னைப் பொருத்தாமல் போக இயலாது..
இயல்பான வரிகள், காட்சிகள் ( சீட்டுக்கட்டு, பழைய புகைப்படம், தாளித்த வாசம் வந்ததும் அவசரக் குளியல்..) கவிதையின் பலம்..

பாராட்டுகள் சசிதரன்!

( அவசர யுகத்தில் கண்டும் காணாமல் நழுவும் '' வளர்ந்த'' நண்பர்களுக்காக
முன்னர் திஸ்கியில் லாவண்யா வடித்த கவிதை நினைவாடலில்..

நண்பகல் நண்பர்கள் என்பது தலைப்பு என நினைவு..)

சசிதரன்
02-01-2009, 04:42 AM

தங்கள் பாராட்டிற்கு நன்றிகள் கோடி நண்பரே...:)

நாகரா
02-01-2009, 07:56 AM
அசுர வேக அவசர யுக இயந்திர செயற்கையில்
அன்பெனும் நம் இருதய இயற்கையை நினைவுறுத்தும்
அசத்தல் கவிதை!
வாழ்த்துக்கள் சசிதரன்!

சசிதரன்
08-03-2009, 05:06 PM
மிக்க நன்றி நாகரா அவர்களே...:)

சுகந்தப்ரீதன்
09-03-2009, 09:01 AM
ஜீவனுள்ள வாழ்வைத்தேடி
ஜீவனை தொலைத்துவிட்டு
ஜீவிதமாய் திரியும்
ஜீவன்கள்தானே நாம்..?!

சசி... எல்லோருக்கும் போலவே எனக்குள்ளும் சில விடயங்களை நினைவூட்டி மனதை வருடிவிட்டு சென்றது உங்கள் கவிதை... அதற்கு என் நன்றியும் வாழ்த்தும் உங்களுக்கு...!!

சசிதரன்
11-03-2009, 03:03 PM
ஜீவனுள்ள வாழ்வைத்தேடி
ஜீவனை தொலைத்துவிட்டு
ஜீவிதமாய் திரியும்
ஜீவன்கள்தானே நாம்..?!

சசி... எல்லோருக்கும் போலவே எனக்குள்ளும் சில விடயங்களை நினைவூட்டி மனதை வருடிவிட்டு சென்றது உங்கள் கவிதை... அதற்கு என் நன்றியும் வாழ்த்தும் உங்களுக்கு...!!

நன்றி சுகந்தப்ப்ரீதன்...:)