PDA

View Full Version : தனிமை- தொடர் கதை (பாகம்-9)-இறுதி பாகம்மதுரை மைந்தன்
25-12-2008, 08:00 AM
நண்பர்களே

இத்தொடர்கதை நியூ யார்க் நகரத்தை பிண்ணனியாகக் கொண்டு எழுதப் பட்டது. இதை ஒரு திரைக் கதை வடிவத்தில் எழுதும் ஆசையில் தக்க இடங்களில் அதற்கேற்ற தமிழ் கினிமா பாடல்களை அளிக்கவுள்ளேன். உங்களுக்கு இத்தொடர் கதை நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். நண்பர் மூர்த்தி கேட்ட மாதிரி இது ஒரு காதல் கதை
________________________________________________________________________

பாகம்-1


ஒரு அந்தி மாலை நேரம் நியூ யார்க் நகரம் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றின் கதவை திறந்து கொண்டு இந்திய குடும்பம் ஒன்று நுழைந்தது. அவர்களை வரவேற்று ஒரு மேசையில் அமர்த்தினார் வெயிட்டர். அந்த குடும்பத்தின் வெகு சுட்டியான சிறுமி ஒவ்வோரு மேசைக்கும் சென்று ஹலோ அங்கிள் ஹலோ ஆண்டி என்று சொல்லி சிரித்தது. இறுதியிலிருந்த ஒரு மேசையில் தனியாக அமர்ந்திருந்த ஒருவரிடம் சென்று ஹலோ அங்கிள் என்று சொன்ன சிறுமி திடீரென்று வீல் என்று கத்திக் கொண்டு தனது பெற்றோரிடம் ஓடியது. சிறுமியின் தாய் அவள் ஏன் அப்படி கத்தினாள் என்றும் அங்கு அமர்ந்திரந்தவரிடம் மன்னிப்பு கேட்கவும் அருகில் சென்றவர் ஓ மை காட் என்று அருவருப்புடன் திரும்பினார்.

இவர்களின் இந்த செயலுக்கு காரணகர்த்தா அங்கு அமர்ந்திருந்த விக்ரம். ஒரு விபத்தில் சிக்கி கருகி சிதைந்து கோரமான முகத்துக்கு சொந்தமானவன். முகத்தை மறைக்க அணிந்திருந்த நீண்ட ஓவர் கோட்டின் காலர்களை தூக்கி விட்டு தொப்பியை இறக்கி அமர்ந்திருந்தான்.

சிறுமியின் அலறலயும் அதன் தாயின் அருவருப்பையும் பார்த்த ரெஸ்டாரண்ட் மானேஜர் விக்ரமை நெருங்கி " சார் உங்களுக்கு முன்னாலேயே சொல்லியிருக்கேன். நீங்க இங்கே வந்து கஸ்டமர்ஸை டிஸ்டர்ப் பண்ணாதீங்கனு. உங்களுக்கு சாப்பாடு வேணுமான ஒரு போன் பண்ணுங்க. வீட்டிற்கு அனுப்பி வைக்கிறேன்."

பரிதாப நிலைக்கு தள்ளப் பட்ட விக்ரம் " சாரி ரொம்ப நாளைக்கப்புறம் பழைய ஞாபகத்தில் வந்து விட்டேன்" என்று மானேஜரிடம் கூறிவிட்டு பாதி குடித்து வைத்திருந்த காப்பியை அப்படியே விட்டு விட்டு கவுண்டரில் பணத்தை செலுத்தி அங்கிருந்த அனைவரிடமம் மன்னிப்பு கேட்டு விட்டு வெளியேறினான்.

காரை எடுத்துக் கொண்டு தனது அபார்ட்மெண்ட்டுக்கு திரும்பிய விக்ரம் சோபாவில் சரிந்தான். சோகம் தாளாமல் முகத்தை கைகளில் புதைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவன் தலை நிமிர்த்த அவன் பார்வை எதிர் புறத்தில் டி.வி யின் மீதிருந்த பாமிலி போட்டோவில் விழுந்து நினைவுகள் பின்னோக்கி சென்றன.

நியூ யார்க்கிலிருந்து மூன்று மணி கார் பிரயாணத்தில் பால்டிமோர் நகரத்திலிருந்த நண்பர் ஒருவரின் வீட்டில் அவருடய குழந்தையின் முதல் ஆண்டு நிறைவு விழாவிற்கு வந்திருந்தனர் விக்ரம் மனைவி காவேரி அவர்களது ஒரே பையன் க்ருஷ். க்ருஷ் அவன் வயது நண்பர்களுடன் டி.வி யில் கார்டூன் பார்த்துக் கொண்டிருந்தனர். காவேரி சமையற் கட்டில் அங்கு வந்திருந்த மற்ற மகளிருடன் சமையலில் பங்கேற்று சிரித்து பேசிக் கொண்டிருந்தார். விக்ரம் நண்பர்களுடன் பால்கனியில் அமர்ந்து பாலிடிக்ஸ் கிரிக்கெட் சினிமா என்று அலசிக் கொண்டிருந்தான். நேரம் போனதே தெரியாமல் எல்லோரும் சந்தோஷமாக விருந்தோம்பல் பண்ணிய பிறகு மாலையில் நண்பரிடமும் அவரது மனைவியிடமும் விடை பெற்றுக் கொண்டு விக்ரம் குடும்பத்தினர் நியூ யார்க் திரும்பினர்.

நியூ யார்க் செல்லும் ஹைவேயில் காரை விக்ரம் திறம்பட ஓட்டி சென்றான். அருகே அமர்ந்திருந்த காவேரி ஐ பாடில் பாட்டுக்களைக் கேட்டுக் கொண்டும் பின்னால் அமர்ந்திருந்த க்ருஷ் காமிக் புத்தகம் படித்துக் கொண்டும் வந்தனர். அந்த நேரம் தான் விகரம் வாழ்க்கையில் பெரும் இடி விழுந்தது. பின்னால் வந்த ஒரு ராட்சத ட்ரக் விக்ரமின் காரில் இடிக்க கார் உயரே தூக்கி எறியப் பட்டு கீழே விழுந்து தீ பற்றிக் கொண்டது.

பல நாட்கள் கழித்து மருத்துவ மனை ஒன்றில் கண் விழித்த விக்ரமிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக செய்திகள் கிடைத்தன. காரில் அருகே அமர்ந்திருந்த காவேரி தீப்புண்களுக்கு இரையாகி விட்டாள் என்று கேட்டு அலறினான். க்ருஷ் பற்றி போலிசாரினால் ஒன்றும் கூற இயல வில்லை. கார் மேலே தூக்கி எறியப் பட்டதில் பின் சீட்டில பெல்ட் அணியாமல் அமர்ந்திருந்து க்ருஷ் பக்கத்து புதர்களில் விழுந்திருக்கலாம் என்று தேடியதாகவும் அவன் சடலம் கிடைக்க வில்லை என்றும் அவர்கள் கூறினார்கள். க்ருஷ் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்று கூறுவதற்கில்லை என்றும் சொன்னார்கள்.

விபத்தில் விக்ரமின் முகம் கருகி சிதைந்து போய் விட்டது. அவன் பிழைத்ததே பெரிது என்று மருத்துவர்கள் கூறினார்கள். இந்தியாவிலிருந்து வந்த காவேரியின் பெற்றோர் விக்ரமுடன் ஒரு பாட்டம் அழுது விட்டு காவேரின் உடலை அந்திமக் கிரியைக்காக இந்தியா எடுத்துச் சென்றனர். விகரமின் ஒரே அண்ணா நியூ யார்க வந்து விக்ரமை தன்னுடன் வந்து இருக்குமாறு அழைத்தார். ஆனால் விகரம் அவருடன் செல்ல மறுத்து விட்டான். அதற்கு காரணம் க்ருஷ் இன்னும் உயிருடன் எங்கேயோ அமெரிக்காவில் தான் இருக்கிறான் என்றாவது ஒரு நாள் அவனை சந்தித்து இணைந்து அவனுக்காக உயழர் வாழ்வது என்ற முடிவு தான்.

விக்ரம் ஒரு தேர்ந்த கணிணி பொறியாளனதால் அவனுடய கம்பெனி அவனை வீட்டிலிந்தே பணிகளைத் தொடர அனுமதித்தது. வருடங்கள் 10க்கு மேல் ஓடி விட்டன. க்ருஷ் ஞாபகமாவே வாழ்க்கையை தொடர்ந்தான் விக்ரம்.

பழைய நினைவுகளிலிருந்து மீண்ட விக்ரம் டி.வியை முடுக்க சன் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து இந்த பாடல் ஒளி பரப்பாகியது.

நியூ யார்க் நகரம் உறங்கும் வேளை
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே
நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ


தொடரும்.

ஐரேனிபுரம் பால்ராசய்யா
25-12-2008, 09:24 AM
ஆரம்பமே படு அசத்தலாக அமைந்துவிட்டது. கருகிப்போன விக்ரமின் முகம் கண்டு குழந்தை பயந்தது யதார்த்தம் ஆனால் அதற்காக விக்ரமை கடிந்து கொண்ட ஹோட்டல்காரரின் மனிதாபிமானமற்ற செயல் மனதை வருந்த வைத்தது. பாராட்டுக்கள்.

அமரன்
25-12-2008, 09:33 AM
அதென்னங்க முதல் ஹியரே டாப் ஹியராக இருக்கு. சூழலையே சுந்தரப்படுத்திய குழந்தையை காட்டி அதன் அச்சத்தை காட்டி தாயின் அருவருப்பை காட்சிப்படுத்திக் கடையில் விக்ரமின் மனக்கனத்தை வாசகன் மனதுக்கு இடம்ம்மாற்றி.... அற்புதமான நடை. சிறப்பான எழுத்தாளர் நீங்கள். தொடருங்கள். கூடவே வருகிறேன்.

ரங்கராஜன்
25-12-2008, 10:25 AM
காட்சிகள் கண்முன்னே ஓடுகிறது, சூப்பர் அடுத்த பகுதியை எதிர்நோக்கி............

மதி
25-12-2008, 10:39 AM
மைந்தரே முதல் பாகமே அசத்தல். விக்ரமின் மனநிலையை தெளிவாக பிரபலிக்கும்வண்ணம் இறுதியில் முத்தாய்ப்பாய் சினிமா பாடல்.

தொடருங்க

இளசு
25-12-2008, 11:00 AM
இசையும் கதையும் என இலங்கை ஆசியச்சேவையில் ஒரு நிகழ்ச்சி இருந்தது.
வாசகர்களின் கதையை நல்ல உணர்வு, பாவங்களுடன் வாசித்து
பொருத்தமான திரைப்பாடல்கள் பொதித்து வழங்கப்பட்ட அதில்
கற்பனையாய் நானும் நிறைய பங்கெடுத்தது அக்காலம்..

இங்கே மைந்தர் அதை நிஜமாக்கிக் காண்பிக்க, எனக்குள் பெருமிதம்..

க்ருஷ் இறக்கவில்லை என மனம் சொல்கிறது..
வேகமான தொடக்கம், இன்னும் சீறிப்பாய்ந்து செல்லட்டும்!

பாராட்டுகள் மைந்தரே!

நிரன்
25-12-2008, 11:30 AM
கதை அட்காசமாக செல்கிறது .......... அடுத்த பகுதியை விரைவில் தாருங்கள்

வாழ்த்துக்கள் தொடருங்கள்:icon_b:

மதுரை மைந்தன்
26-12-2008, 12:02 AM
ஆரம்பமே படு அசத்தலாக அமைந்துவிட்டது. கருகிப்போன விக்ரமின் முகம் கண்டு குழந்தை பயந்தது யதார்த்தம் ஆனால் அதற்காக விக்ரமை கடிந்து கொண்ட ஹோட்டல்காரரின் மனிதாபிமானமற்ற செயல் மனதை வருந்த வைத்தது. பாராட்டுக்கள்.

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்களே.

மதுரை மைந்தன்
26-12-2008, 12:03 AM
அதென்னங்க முதல் ஹியரே டாப் ஹியராக இருக்கு. சூழலையே சுந்தரப்படுத்திய குழந்தையை காட்டி அதன் அச்சத்தை காட்டி தாயின் அருவருப்பை காட்சிப்படுத்திக் கடையில் விக்ரமின் மனக்கனத்தை வாசகன் மனதுக்கு இடம்ம்மாற்றி.... அற்புதமான நடை. சிறப்பான எழுத்தாளர் நீங்கள். தொடருங்கள். கூடவே வருகிறேன்.

உங்கள் ஆதரவு எனக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது. மிக்க நன்றி.

மதுரை மைந்தன்
26-12-2008, 12:05 AM
காட்சிகள் கண்முன்னே ஓடுகிறது, சூப்பர் அடுத்த பகுதியை எதிர்நோக்கி............

நன்றி டாக்ஸ் .அடுத்த பகுதி விரைவில்.

மதுரை மைந்தன்
26-12-2008, 12:07 AM
மைந்தரே முதல் பாகமே அசத்தல். விக்ரமின் மனநிலையை தெளிவாக பிரபலிக்கும்வண்ணம் இறுதியில் முத்தாய்ப்பாய் சினிமா பாடல்.

தொடருங்க

மிக்க நன்றி நண்பர் மதி அவர்களே

மதுரை மைந்தன்
26-12-2008, 12:11 AM
இசையும் கதையும் என இலங்கை ஆசியச்சேவையில் ஒரு நிகழ்ச்சி இருந்தது.
வாசகர்களின் கதையை நல்ல உணர்வு, பாவங்களுடன் வாசித்து
பொருத்தமான திரைப்பாடல்கள் பொதித்து வழங்கப்பட்ட அதில்
கற்பனையாய் நானும் நிறைய பங்கெடுத்தது அக்காலம்..

இங்கே மைந்தர் அதை நிஜமாக்கிக் காண்பிக்க, எனக்குள் பெருமிதம்..

க்ருஷ் இறக்கவில்லை என மனம் சொல்கிறது..
வேகமான தொடக்கம், இன்னும் சீறிப்பாய்ந்து செல்லட்டும்!

பாராட்டுகள் மைந்தரே!

நீங்கள் சொன்ன இசையும் கதையும் நிகழ்ச்சியை இலங்கை வானொலியில் நானும் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். இந்த கதை அதனனை பின் பற்றி எழுதப் பட்டது. மிக்க நன்றி இளசு அவர்களே.

மதுரை மைந்தன்
26-12-2008, 12:12 AM
கதை அட்காசமாக செல்கிறது .......... அடுத்த பகுதியை விரைவில் தாருங்கள்

வாழ்த்துக்கள் தொடருங்கள்:icon_b:

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர் நிரஞசன் அவர்களே

மதுரை மைந்தன்
26-12-2008, 12:15 AM
பாகம்-2

விகரம் பணி செய்த கம்பெனி அவனை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதித்திருந்தாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்காமல் நியூ யார்க்கின் மன்ஹாட்டன பகுதியல் வசித்து வந்த அவன் பக்கத்து பாதாள ரயில் நிலையத்திற்கு சென்று ரயிலில் ஏறி பென் ஸ்டேஷன் வரை போய் வருவான். பென்சில்வேனியா ஸ்டேஷன் என்பது சுருங்கி பென் ஸ்டேஷன் ஆகி விட்டது. நியூ யார்க் நகரத்தின் ஒரு மிகப் பெரிய ரயில் நிலையம் அது.

ரயிலில் பயணம் செய்யும் போது செய்தி தாளைக் கொண்டு முகத்தை மறைத்துக் கொள்வான். அவ்வப்போது தலையை நீட்டி மற்ற பயணிகளை நோட்டம் விடுவான். என்றாவது க்ருஷ் தன் கண்ணில் தட்டுப் படமாட்டானா என்ற நப்பாசையில். ரயில் பென் ஸ்டேஷனை அடைந்தவுடன் அங்கிருக்கும் நீண்ட பயணிகள் காத்திருக்கும் ஹாலில் ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டு முன் போல் செய்தி தாளை படிப்பது போல வந்து போகும் பயணிகளை கண்காணிப்பான். அன்றும் அப்படி செய்து கொண்டிருந்தவன் ஒரு தெரிந்த முகம் அகப்படவே அவரருகில் சென்று உற்றுப் பார்த்து விட்டு " நீங்க ரவி இல்ல" என்றான். ரவி என்ற அவர் முகத்தை திருப்பிக் கொண்டு " நீங்க யாரு? உங்களுக்கு எப்படி என் பெயர் தெரியும்? ஐ ஆம் சாரி. என்னால் உங்க மகத்தை பார்க்க முடியவில்லை" என்றார். " நான் தான் விகரம். உன்னோட மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஒன்றாக படித்தேன்". ரவிக்கு உடனே ஞாபகம் வந்து " ஓ விக்ரமா? உங்க முகத்துக்கு என்னாச்சு?" என்றான் ரவி. மேலும் " என்னை மன்னிச்சுக்க விக்ரம். என்னால அதிக நேரம் பேசிக்கிட்டு இருக்க முடியாது. நான் செல்ல வேண்டிய நியூ ஜெர்ஸி ரயில் எந்த நிமிஷமும் வரலாம். இது தான் என் கார்டு. இதில் என் மொபைல் நம்பர் இருக்கு நாம் விரைவில் சந்திப்போம்" என்று சொல்லி அவரது நியூ ஜெர்ஸி ரயில் வரவே விடை பெற்று விரைந்தார்.

ரவியை சந்திக்கும் வரை தனிமையான வாழ்வில் பிடிப்பு இல்லாமல் இயந்திரமாக வாழ்ந்து வந்த விகரம் அவரை சந்தித்தபின் புத்துணர்ச்சி பெற்று நடையில் ஒரு துள்ளலுடன் மன்ஹாட்டன் திருமப ரயிலில் ஏறினான். வழக்கம் போல செய்தி தாளைக் கொண்டு முகத்தை மறைத்து மற்ற பயணிகளை நோட்டம் விட தலையை வெளியே நீட்டிய விகரமுக்கு மற்றுமோர் இன்ப அதிர்ச்சி கிடைத்தது. விக்ரம் அமர்ந்திருந்த சீட்டின் எதிர் புறத்தில் இரண்டு இந்திய பெண்கள் அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒரு பெண் யமுனா விக்ரமின் கடந்த கால வாழ்க்கையில் சம்பந்தப்பட்டவர்.

விக்ரம் அமெரிக்கா வரும் முன் மும்பையில் சில காலம் பணியாற்றிய போது செம்பூரில் அவர்களது பக்கத்து வீட்டு பெண் தான் யமுனா. விக்ரம் குடும்பத்துடன் அங்கு குடியேறியவுடன் யமுனா அவர்களது வீட்டிற்கு அடிக்கடி வருவாள். வயதில் சிறுமியாக இருந்தாலும் அவள் விக்ரமுடன் தான் பேசிக் கொண்டிருப்பாள். அவர்களுக்குள் ஒரு சின்ன விளையாட்டும் இருந்தது. அதில் இருவரும் ஒரவரையொருவர் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். யார் முதலில் கண் இமைக்கிறார்களோ அவர் தோற்றவர். பெரும்பாலும் விகரமே தோற்றுப் போவான். அப்போது யமுனா கை கொட்டி சிரிப்பாள். சில நாட்கள் கழித்து யமுனா அவர்கள் வீட்டிற்கு வரவதை நிறுத்தி விட்டாள். விகரம் மனைவி காவேரியிடம் " என்னம்மா இந்த பொண்ணு யமுனா இப்போல்லாம் நம்ம வீட்டுக்கு வறதில்லை?". காவேரி சிரித்துக் கொண்டே " அந்த பொண்ணுக்கு உங்க மேல ஒரு கண்ணு. நிங்க கமல ஹாஸன' மாதிரி இருக்கீங்க னு சொலறளாம். அதக்கும் மேல அவளோட கனவில கூட நிங்க தான் வறீங்களாம். கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களைத்தான் பண்ணிப்பேன்னு அவ அம்மா கிட்ட சொல்லி இருக்கா. அவங்க பதறி போய் அவர் வயசென்ன உன் வயசென்ன அவருக்கு ஏற்கனவே கலயாணம் ஆகி உன் வயசில ஒரு பையன் கூட இருக்கான்.இந்த மாதிரி பைத்தியக் காரத்தனமான எண்ணத்தை விட்டுடுனு சொல்லி இனிமே அவங்க வயீட்டுக்கு நீ போக கூடாதுனு தடை போட்டட்டாங்க" எனறவுடன் விக்ரமுக்கு தூக்கி வாரி போட்டது. அதற்கப்புறம் அமெரிக்காவில் பணியாற்ற வாய்ப்பு கிட்டி உடன் செல்ல வேண்டியதாயிற்று.

ரவி யமுனா இவர்களை சந்தித்தது வெறுமையாக இருந்த விகரமின் வாழ்க்கையில் புது வசந்தத்தை கொண்டு வந்தது. அபார்ட்மெண்ட் அடைந்த விக்ரம் வழக்கம் போல் டி.வி ஐ முடுக்க சன் டி.வி யில் ஒளி பரப்பான இந்த பாடல் அவனது மூடை பிரதி பலித்தது.

உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக

தொடரும்

மதி
26-12-2008, 12:47 AM
வழக்கமான துள்ளலுடன் அதே நடையில்... முடிவில் முத்தாய்ப்பாய் ஒரு பாடல்.
இனி அவன் வாழ்வில் வசந்தம் வீசட்டும்.

தொடருங்கள் மைந்தரே

சிவா.ஜி
26-12-2008, 06:48 AM
முதலிரண்டு பாகங்களையும் மிக அருமையாய் கொடுத்திருக்கிறீர்கள். இன்னும் விக்ரமைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆவல் எழுகிறது. புறக்கணிக்கப்படும் விக்ரமைக் கட்டியணைத்து அனைவர் முன்னும் அவரை ஆனந்தப்பட வைக்கவேண்டுமென மனம் விழைகிறது.

தொடருங்கள் மதுரையாரே. வாழ்த்துகள்.

நிரன்
26-12-2008, 11:58 AM
ம்....................... 2வதையும் படித்துவிட்டு
அடுத்ததுக்காய் ஏங்கிக்கொண்டிருக்கின்றேன் விரைவில் தாருங்கள்
பொருமை இல்லை வெகுநாள் காத்திருக்க:rolleyes:

Keelai Naadaan
26-12-2008, 12:59 PM
மிக சுவாரஸ்யமாய் செல்கிறது.
இடையிடையே வரும் பாடல்கள் கதைக்கு மெருகேற்றுகிறது

திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வு.

மதுரை மைந்தன்
27-12-2008, 07:56 AM
இக்கதைக்கு பின்னூட்டம் போட்டு பாராட்டி என்னை ஊக்கு விக்கும் நண்பர்கள் மதி சிவா.ஜி நிரஞ்சன Keelai Naadaan மற்றும் ஏனைய நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

மதுரை மைந்தன்
27-12-2008, 07:59 AM
பாகம்-3

ரவி யமுனா இவர்களை சந்தித்த பின் உண்டான அளவு கடந்த ஆனந்தத்திலிருந்து யதார்த்த நிலைக்கு திரும்பிய விக்ரமின் மனம் பல வித சிந்தனைகளால் தவித்தது. பழைய கல்லூரி நண்பன் ரவியுடன் நட்பு தொடரலாம் ஆனால் யமுனா?. யமுனாவிற்கு அவன் மேல் மும்பையில் ஏற்பட்டது காதலா அளவு கடந்த அன்பா பிரியமா என்று தீர்மானிக்கமுடியவில்லை அவனால். தனிமையில் வாழ்க்கை ஒரு கேள்விக்குறியாக வாழ்ந்த அவனுக்கு யமனாவின் சந்திப்பு ஒரு பெரும் பிடிப்பை ஏற்படுத்தியது உண்மை. ஆனால் அவன் மனதில் பல கேள்விகள் எழுந்தன. 10 வருடங்களுக்கும் மேலான இடைவெளியில் யமுனாவிடம் அவன் மீது அதே அன்பு இருக்குமா?. சிறு வயதில் அவன் பால் ஏற்பட்ட மயக்கத்திலிருந்து அவள் மாறி இருக்கக் கூடும். இதையெல்லாம் விட கருகி சிதைந்த முகத்துடன் அவள் முன் சென்று நான் தான் விகரம் என்றால் அவள் என்ன நினைப்பாள்?. அவனை எள்ளி நகையாடும் உள் மனது 'உன் வயதென்ன அவள் வயதென்ன ஏன் அந்த இளம் பெண்ணின் வாழ்க்கையோடு விளையாட விரும்புகிறாய்?' என்று கடிந்தது. இருந்தும் அவளை பார்க்காமல் அவனால் இருக்க முடியாது என்று தோன்றியதால் வழக்கம் போல் பாதாள ரயிலில் பென் ஸ்டேஷன் சென்றான்.

முந்தைய தினம் அவளை சந்தித்த அதே நேரத்தில் அதே ரயிலில் ஏறிய விகரம் யமுனாவும் அவளது தோழியும் அமர்ந்திருந்த சீட்டின் அருகாமையில் சென்று அமர்ந்து கொண்டான். யமுனாவின் தோழி செல் போனில் பேசி விட்டு அதை மூடினாள். யமுனா அவளிடம் " யார் அது செல் போனில்?" என்று கேட்க தோழி " எல்லாம் என் பாய் பிரண்டு தான். அடிக்கடி போன் பண்ணா விட்டால் அவன் தலை வெடிச்சுடும். ஐந்து நிமிடத்திற்கு முன்னால் தான் போன் பண்ணியிருந்தான். இப்போ போன் பண்ணவுடனே அவனது முதல் கேள்வி நீ எப்படி இருக்கே?" என்று சொல்லி சிரித்தாள். யமுனாவும் அவளுடன் சேர்ந்து சிரித்தாள். " ஆமாம் உனக்கு யாரும் பாய் பிரண்டு கிடையாதா? உன் செல் போன் அமைதியா இருக்கே" என்றாள் அவள் யமுனாவிடம். " எனக்கு இந்த பாய் பிரண்ட்ஸ் எல்லாம் ஒத்து வராது. நான் சிறுமியா இருந்தப்போ மும்பைல எங்க வீட்டுக்கு பக்கத்தில விகரம்னு ஒரு அங்கிள் இருந்தாரு. பார்க்க கமல ஹாஸன் மாதிரி இருப்பாரு. என்னோட நிறைய விளையாடுவாரு. கலயாணம் கட்டிக்கிட்டா அவரைத்தான் கட்டிக்குவேன்னு நான் அடம் கூட பிடிச்சிருக்கேன். அவர் கூட அமெரிக்காவில தான் இருக்காரு. எனக்கு பாய் பிரண்டுனா அவர்தான்". இதைக் கேட்டுக் கொண்டிருந்த விக்ரமின் மனம் ஆனந்தத்தால் துள்ளிக் குதித்தது. யமுனாவும் அவளது தோழியும் டைம் சதுக்கத்தின் ஸ்டேஷனில் இறங்கி கூட்டத்தில் கலந்து மறைந்தனர்.

தன் நிலை கொள்ளாத விகரம் டைம் சதுக்கத்தை அடைந்து அதன் நடுவில் நின்று கொண்டு பாடி ஆடத் தொடங்கினான். அவன் பாடிய பாட்டு

செவ்வானம் சேலைகட்டி
சென்றது வீதியிலே
மனம் நின்றது பாதியிலே
என்னைக் கொன்றது பார்வையிலே

மின்சார மின்னல் வெட்டி
சென்றது வீதியிலே
கனல் மூண்டது கண்களிலே
உயிர் வேகுது நெஞ்சினிலே

யாரோ அவள் யாரோ சொல்வாரில்லை
நேரில் வந்து பேச நேரமில்லை
கண்ணில் வந்து போனாள் கையிலில்லை

யாரோ அவள் மங்கம்மாவின் வாளை
கையில் கொண்டு வந்தவளோ
யாரோ அவள் கண்ணகியின் பேத்தி
என்று மண்ணில் வந்தவளோ
சுப்ரமண்ய பாரதியின்
சோற்றைத் தின்று வந்தவளோ
சந்திரனும் சூரியனும்
கூடிப் பெற்ற பெண் இவளோ
யாரேனும் கேட்டுச் சொல்லுங்கள்

மொழி புரியாவிட்டாலும் விக்ரமின் ஆனந்த ஆட்டத்தைப் பார்க்க அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஷாப்பிங் பண்ண வந்தவர்கள் என்று ஒரு சிறு கூட்டம் கூடியது. வானிலிருந்து பூ மழையாய் வெண் பனி விழ விக்ரம் அணிந்திருந்த நீண்ட கம்பளி கோட்டையும் தொப்பியையும வெள்ளை முலாம் பூச அவனது முகத்தையும் வெள்ளை ஆக்கியதால் பார்வையாளர்களுக்கு அவனது கோர முகம் தெரியவில்லை. கூட்டத்தில் ஒருவன் எங்கிருந்தோ ஒரு கிடாரைக் கொண்டு வந்து விக்ரம் பாடடிற்கு ஏற்ப வாசித்தான். இன்னொரு சாமர்த்தியசாலி தனது தொப்பியைக் கொண்டு பார்வையாளர்களிடம் பணம் வசூலிக்க அவனுக்கு கணிசமாக பணம் கிடைத்தது. அதில் சில டாலர் நோட்டுக்களை விக்ரமின் கோட்டு பாக்கெட்டிலும் அவன் திணித்தான்.

கூட்டத்தை விலக்கிக் கொண்டு அங்கு வந்த நியூ யார்க் போலீசார் விக்ரமை கைது செய்து அவர்களது வண்டியில் ஏற்றினர். அவர்களது குற்றச் சாட்டு பொது இடத்தில் போக்கு வரத்துக்கு இடையூறு செய்தது தான்.

தொடரும்

vijima
27-12-2008, 08:42 AM
கதை அட்காசமாக உள்ளது. இடையிடையே வரும் பாடல்கள் கதைக்கு மேலும் மெருகூட்டியிருக்கிறது.
நன்றிகள்.

மதுரை மைந்தன்
27-12-2008, 08:54 AM
உங்களது பாராட்டுக்கள் எனக்கு உற்சாகத்தை தருகிறது. நன்றி vijima சகோதரி அவர்களே!

நிரன்
27-12-2008, 10:34 AM
கதை அட்டகாசமாக செல்கிறது ஆனால் தனி மனிதனுக்கு ஆடிப்பாடக் கூட
சுகந்திரம் இல்லையா!!!! பயணிகள் குவிந்ததால் அவன் சுகந்திரம் குற்றமாக
மாறி விட்டதோ...:confused:


நன்றாக கதை சென்றுகொண்டிருக்கிறது தொடருங்கள் நண்பரே

மதுரை மைந்தன்
29-12-2008, 11:19 AM
கதை அட்டகாசமாக செல்கிறது ஆனால் தனி மனிதனுக்கு ஆடிப்பாடக் கூட
சுகந்திரம் இல்லையா!!!! பயணிகள் குவிந்ததால் அவன் சுகந்திரம் குற்றமாக
மாறி விட்டதோ...:confused:


நன்றாக கதை சென்றுகொண்டிருக்கிறது தொடருங்கள் நண்பரே

தனி மனித சுதந்திரம் மற்றவர்களுக்கு இடையூறாக இல்லாத வரை அனுமதிக்கப் படுகிறது மேலை நாடுகளில் என்று அறிவேன். நன்றி நிரஞசன் நண்பரே.

மதுரை மைந்தன்
29-12-2008, 11:22 AM
பாகம்-4

நியூ யார்க் போலீஸ் வண்டி சிறுது தாரம் சென்று நின்றது. விகரமை போலீஸ் வண்டியில எற்றிய இனஸ்பெக்டர் " சாரி ஜென்டில்மன் போக்கு வரத்து நெரிசலைத் தவிர்க்கவே உங்களை வண்டியில் ஏற்றினேன். கூட்டத்தைக் கலைப்பதற்கு வேண்டி அவ்வாறு செய்தேன். உங்கள் நடனத்தை நானும் ரசித்தேன். ஆனால் இது போல் பொது இடங்களில் இனி மேல் ஆடாதீர்கள்" என்று அங்கிலத்தில் கூறி விக்ரமை இறக்கி விட்டார்.

பென் ஸ்டேஷனுக்கு சென்று ரயில் ஏறி அபார்ட்மெண்டுக்குளட விக்ரம் நுழைய அவனது செல் போன் மணி ஒலித்தது. அதில் பேசிய ரவி " விக்ரம் உன்னு ஒரு குட் நியூஸ். அன்று உன்னை எதிர் பாராத விதமாக சந்தித்து உனது கோர முகத்தைப் பார்த்து கலங்கி விட்டேன். முதலில் எனக்கு அது எப்படி ஆயிற்று என்று சொல்லு" என்றான். விக்ரம் அவனிடம் ஆக்ஸிடெண்ட் பற்றி விளக்கி மனைவி காவேரி இறந்து விட்டதையும் மகன் க்ருஷ் பற்றி தகவல் இல்லாததையும் கேட்டு வருத்தப்பட்ட ரவி " நான் உனக்கு சொல்ல வந்த குட் நியூஸ் இது தான். உன்னை சந்தித்தபின் நான் வேலை பார்க்கும் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள சங்கர் என்ற தமிழ் டாகடரை சந்திக்க நேரிட்டது. அவர் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் புது வித தொழில் நுட்பங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதை அறிந்தேன். உனது கருகிய சிதைந்த முகத்தைப் பற்றி கூறினேன். அவர் இதை சரி பண்ண முடியும் என்றும் அதற்காக பணம் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை ஏனெனில் உன்னை ஒரு ஆராய்ச்சி பொருளாக எடுத்துக் கொண்டு வெற்றியடைந்தால் அது அவருக்கு பெரும் புகழைத் தரும் என்றார். அவரிடம் நாம் நாளை செல்ல அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியுள்ளேன். நாம் பென் ஸ்டேஷனில் சந்திப்போம்" என்றான்.

மறு நாள் இருவரும் டாக்டர் சங்கரை சந்தித்தனர். விக்ரமை பரிசோதித்த டாக்டர் சங்கர் " உங்கள் முகத்தை சரி பண்ணிவடலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நான் ஆராய்ச்சி செய்யும் லேசர் ரீசர்பேசிங் என்ற தொழில் நுட்பத்தில் உங்கள் முகத்தில் உள்ள கருகிய தோலை லேசர் கதிரைக் கொண்டு எரித்து அதன் இடத்தில் புது தோலை வளர ஏற்பாடுகள் செய்வேன். இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றால் நீங்கள் மிகவும் இளமையாக காணப்படுவீர்கள். வயதாகும் போது நமது முகத்தின் தோல் சுருங்க ஆரம்பிக்கின்றன. ஆனால் உங்களுக்கு புது தோல் உருவாகுவதால் அது ஒரு குழந்தையின் சருமத்தை போன்று இருக்கும். உங்களுடய பழைய புகைப் படம் இருந்தால் கொடங்கள் உங்கள் முகத்தை சிரமைத்து பழைய ஜாடையைக் கொண்ட வர அது பயன் படும்" என்றார் அவர்.

15 நாடகளுக்கும் மேலாக விக்ரமின் முகத்தில் தோலை மாற்றி உடைந்திருந்த மூக்கை சரி பண்ணி கண்களின் இமைகளை சரியாகப் பொருத்தி கிழிந்திருந்த காதுகளை தைத்து வெற்றி பெற்றார் டாக்டர் சங்கர். கடைசியில் ஒரு நாள் விக்ரமின் முகத்திலிருந்த கட்டுக்ளை அகற்றிய டாக்டருக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. விக்ரம் பழைய அழகான மகத்தைப் பெற்றது மட்டுமின்றி மிக இளமையாக காணப்பட்டான். டாக்டர் சங்கருக்கும் ரவிக்கும் மீண்டும் மீண்டும் தன் நன்றிகளை சொன்னான் விக்ரம். சங்கர் அவனை டிஸ்சார்ஜ் பண்ணி முகத்தை பாதகாக் சில அறிவுரைகளையும் சொன்னார்.

புது வாழ்வு பெற்றதாக மகிழ்ச்சி அடைந்த விகரம் உடனெ யமனாவைக் காண வழக்கம் போல பாதாள ரயிலில் சென்று யமுனாவும் அவளது தோழியும் வழக்கமாக பயணம் செய்யும் ரயிலில் ஏறினான். அவன் நம்பிக்கை விண் போகவில்லை. அந்த ரயிலில் அமர்ந்திருந்த யமுனாவின் முன் சீட்டில் அமர்ந்த விகரம் அவளிம் "ஹாய்" என்றான். அவன் குரல் கேட்டு அவனைப் பார்த்த யமுனா அதிந்தாள். அவளுக்கு குழப்பம் ஏறபட்டது. தன்னிடம் ஹாய் சொன்னவன் பார்க்க விக்ரம் மாதிரி இருந்தாலும் மிக இளமையாக இருந்ததால் குழம்பினாள். சட்டென்று நினைவு வர " நீங்க விக்ரம் சாரோட பையன் க்ருஷ் தானே" என்றாள். இதை சற்றும் எதிர் பாராத விக்ரம் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தான். தான் தான் விக்ரம் க்ருஷ் இல்லை என்று சொன்னால் அவள் நம்ப மாட்டாள் என்று " ஆமாம் ஆமாம்" என்று சொல்லி விட்டான். யமுனா அவனிடம் "உங்க அப்பா அம்மா எப்படி இருக்காங்க" என்று கேட்டவுடன் விக்ரம் "நாம அடுத்த ஸ்டேஷனில் இறங்கி ஒரு ரெஸ்டாரெண்டில் காப்பி சாப்பிட்டுக் கொண்டே பேசலாமே" என்றதை ஏற்றுக் கொண்டு தோழியிடம் விடை பெற்றுக் கொண்டு அவனுடன் சென்றாள்.

ரெஸ்டாரெண்டில் எதிரும் புதிருமாக அமர்ந்து கொண்டு காப்பிக்கு ஆர்டர் கொடுத்த பின் விக்ரம் அக்ஸிடெண்டை பற்றியும் அதில் பெற்றோர் இருவரும் இறந்து விட்டதாக கூறினான் தான் க்ருஷ் என்பதை நிலை நிறுத்துவதற்காக. விக்ரம் இறந்த செய்தி கேட்டு இடிந்து போன யமுனா அவனையே உற்று பார்க்க அவன் கண்கள் அவளை ஈர்த்து. " உங்களுடய கண்கள் உங்க அப்பாவின் கண்கள் மாதிரியே இருக்கு. மும்பையில் உங்க வீட்டக்கு நான் வரும் போதெல்லாம் நானும் அவரும் கண்கொட்டாமல் பார்க்கும் விளையாட்டை விளையாடுவோம்." என்றாள் யமுனா. " என்ன செய்வது எனது பெற்றொரை இழந்து தனிமையில் வாடிக் கொண்டிருந்த எனக்கு உங்கள் சந்திப்பு ஆறுதலாக இருக்கிறது" என்று சொன்னான் விக்ரம். வேறு எதுவம் பேச தோணாமல் யமுனா தன்கிட்டே இருந்த ஐ பாடை ஆன் செய்ய அதில் இந்த பாடல் வந்தது.

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

தொடரும்

நிரன்
29-12-2008, 11:51 AM
என்ன 2வது கல்யாணத்திற்கு முயற்சியோ....:eek:

ஆனால் ஏன் விக்ரமை மறைக்க வேண்டும்..... விக்ரமைத்தானே
யமுனா விரும்பினால் இப்பொளுது மகன் என்றால்!!!
விக்ரமின் மகன் மீது காதல் வருமா யமுனாவிற்கு:confused::confused:

கதையை சீக்கிறமா தாங்க தாங்க முடியல்ல சஸ்பென்ஸ்:)
கொஞ்சம் கூடவே தந்தாலும் கவலைப்பட மாட்டோம்;)

மதுரை மைந்தன்
01-01-2009, 12:46 AM
என்ன 2வது கல்யாணத்திற்கு முயற்சியோ....:eek:

ஆனால் ஏன் விக்ரமை மறைக்க வேண்டும்..... விக்ரமைத்தானே
யமுனா விரும்பினால் இப்பொளுது மகன் என்றால்!!!
விக்ரமின் மகன் மீது காதல் வருமா யமுனாவிற்கு:confused::confused:

கதையை சீக்கிறமா தாங்க தாங்க முடியல்ல சஸ்பென்ஸ்:)
கொஞ்சம் கூடவே தந்தாலும் கவலைப்பட மாட்டோம்;)

உங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பர் நிரஞசன் அவர்களே. கதையை தொர்ந்து படியுங்கள். உங்களது கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும்.

மதுரை மைந்தன்
01-01-2009, 12:56 AM
பாகம்-5

யமுனாவை சந்தித்த பின் தனது அபார்ட்மெண்டக்கு திரும்பிய விகரம் மனதில் பெரும் போராட்டம் நிகழ்ந்தது. அவனது மனசாட்சி அவனை தான் க்ருஷ் என்று சொன்னதை ஏளனம் செய்தது. ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையுடன் விளையாடுகிறான் என்று குற்றம் சாற்றியது. மற்றோரு மனசாட்சி அவனுக்கு ஆதரவு செய்தது. அது சொன்னது " நீ ஒன்றும் பொய் சொல்லவில்லை. யமுனா நீங்கள் விக்ரம் சாரோட பையன் க்ருஷ் என்றதை மறுக்க வில்லை. அந்த நேரத்தில் என்ன சொல்வது என்று குழம்பி தன்னையறியாமல் செய்த காரியம்" என்று சப்பை கட்டியது. அவளிடம் நட்பை தான் நாடுகிறேன். வேறு எந்த எண்ணமும் இல்லை. தனிமையில் வாழ்க்கை பெரும் கேள்விக்குறியாக இருந்த சமயத்தில் ஒரு பற்று கோலாக வந்தவள் தான் யமுனா என்று நினைத்தான் விக்ரம். இருந்தாலும் பொய் சொன்னதாக மனசாட்சி குத்திக் காட்டவே மறு நாள் அவளை சந்திகக்கும் போது உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தீர்மானித்தான்.

மறு நாள் பழைய ரெஸ்டாரண்டில் சந்தித்தபோது " யமுனா நான் உன்னிடம் ஒரு உண்மையை சொல்ல வேண்டும்" என்று சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் தவித்தான் விக்ரம். அவனுக்கு உதவி செய்வதற்காகவே அங்கு வந்த மாதிரி டாக்டர் சங்கர் அங்கு வந்தார். விக்ரமை பார்த்த சங்கர் அவனிடம் வந்து " ஹலோ விக்ரம். எப்படி இருக்கீங்க? உங்க முகம் எப்படி இருக்கு? நான் சொன்ன பாதுகாப்பு முறைகளை கடைப் பிடிக்கிறீர்களா? முகத்தில் எரிச்சல் அரிப்பு வந்தால் உடன் எனக்கு போன் பண்ணுங்கள். என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை. ஆபரேஷன் இத்தனை சக்ஸஸாக நடந்து நீங்கள் மிகவும் இளமையான தோற்றத்தை அடைந்தது கடவுள் செயல் தான்." என்றார். அவர் சொன்னதைக் கேட்டு வியப்பும் அதிர்ச்சியும் அடைந்த யமுனா அவர் விடை பெற்று சென்றவுடன் " நீங்கள் விக்ரம் அங்கிளா? அன்று நான் உங்களை க்ருஷ் என்று சொன்னவுடன் அதை ஏன் மறுக்க வில்லை. நீங்கள் இப்படி செய்யலாமா?" என்று கேட்டாள்.

விக்ரம் சிறிது மௌனம் சாதித்த பின் கூறலானான். " யமுனா ஆக்ஸிடெண்டில் முகம் கருகி சிதைந்து கோரமான முகத்துடன் அனைவராலும் ஒதக்கப்பட்ட நிலையில் தனியாக க்ருஷ் உயிருடன் இருக்கிறான் அவனை ஒரு நாள் பார்த்து அவனுடன் சேர்ந்து வாழலாம் என்ற இருந்த எனக்கு நண்பன் ரவியின் சந்திப்பும் உனது வருகையும் புது வாழ்வு தந்தது. க்ருஷைப் பத்தி ஒரு தகவலும் இல்லாத நிலையில் நீயே எனது வாழ்வின் பற்று கோல். உன்னை நான் மனதார விரும்புகிறேன். மும்பையில் நாம் கண்களை உற்று பார்க்கும் விளையாட்டின் போது நமது பந்தம் பல ஜென்மங்களாக தொடர்வதைப் போல் உணர்ந்தேன். ஆனால் அப்போது எனக்கு மணமாகி காவேரி என்ற நல்ல மனைவி இருந்ததால் அதை நான் வெளிக்காட்டவில்லை. இப்பவும் நமது வயது வித்தியாசத்தால் நீ பாதிக்கப் படுவாயோ என்று அஞ்சுகிறேன்.நீ என்னை ஏற்றுக் கொள்வாயா?".

யமுனா தயக்கத்துடன் கூறினாள் " விக்ரம் நீங்கள் கூறும் உணர்வுகள் என்னுள்ளும் இருக்கின்றன. அறியா வயதில் மும்பையில் நான் உங்களைத் தான் மணம் புரிவேன் என்று அடம் கூட பிடித்திருக்கிறேன். அனால் இப்போது எனக்கு தயக்கமாக இருக்கிறது. அதற்கு காரணம் நாளை க்ரஷ் வந்து உங்களுடன் இணையும் போது என்னை அவனது அம்மாவாக ஏற்றுக் கொள்வானா?. நான் யோசித்து உங்களுக்கு பதில் கூறுகிறென்" என்று சொல்லி விடை பெற்று சென்றாள்.

நியூ யுனிவர்ஸிடியில் மாணவியாக பயிலும் யமுனா அதன் வளாகத்திலிருந்த தனது அறைக்கு சென்று ம்யூஸிக் சிஸ்டத்தை முடுக்க அதிலிருந்து அவளது மன நிலையை பிரதிபலிக்கும் பாட்டாக இப்பாடல் ஒலித்தது.

(பெண் குரல்)
உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அனுவென உடைந்து சிதறினாய்

(ஆண் குரல்)
ஏன் எனை மறுத்து போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்ததாய் சொன்ன இதயத்தை
திருப்பி வாங்க மாட்டேனே

அருகினில் உள்ள தூரமே
அலைகடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞசம் இரண்டு
போதாதா போதாதா நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை
வாராதா கூடாதா நீ சொல்லு

(பெண் குரல்)
இது நடந்திடக் கூடுமா
இரு துருவங்கள் சேருமா
உச்சரித்தே நீயும் விலக
தத்தளித்தே நானும் மருக
என்ன செய்வேனோ?
தொடரும்

நிரன்
01-01-2009, 05:57 PM
நன்றி மைந்தன் என் குழப்பத்திற்கான 60 வீதம் பதில் கிடைத்து விட்டது
காத்திருக்கிறேன் மீதி 40வீதம் குழப்பத்தையும் தெழிவுபடுத்த.

மதி
02-01-2009, 01:51 AM
நல்லா போகுது கதை... அடுத்து என்ன.. அடுத்து என்ன???
ஒவ்வொரு பாகத்தின் முடிவிலும் கதைக்கு பொருத்தமாய் பாடல் வைக்கும் பாணி மெச்சத்தக்கது

மதுரை மைந்தன்
05-01-2009, 11:18 AM
பாகம்-6

அந்த சந்திப்பிற்கு பிறகு விக்ரம் யமுனா இருவரது வாழ்க்கையும் பிஸி ஆகி விட்டது. விக்ரம் மீண்டும் அலுவலகத்திற்கு சென்று முன் போல் பணியாற்றத் தொடங்கினான். யமுனாவிற்கு நியூ யார்க் யுனிவர்ஸிடியில் வகுப்புகள் தொடங்கி படிப்பில் கவனம் செலுத்தினாள். ஆனால் இருவரும் வாரத்தின் கடைசி நாட்களான சனி ஞாயிற்றுக் கிழமைகளில் சந்தித்து திரைப்படங்கள் பார்ப்பது பீச் ஓரமாக நடந்து செல்வது என்று பொழுதைக் கழித்தனர். 'நாம் இருவரும் நண்பர்களாக பழகுவோம். அதற்குபின் ஒருவரையொருவர் விரும்பினால் மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசிப்போம் என்று திர்மானித்திருந்தனர் இருவரும். ஒரு ஞாயிற்றுக் கிழமை நியூ ஜெர்ஸியில் தமிழ் சங்கத்தின் கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் வாய்ப்பு வந்தது. யமுனா ஏற்கனவே ஒரு தமிழ் உணவகத்தில் பாடகியாக விடுப்பு நாட்களில் பாடியிருந்ததால் அதை அறிந்திருந்த கலை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அவளை பாட அழைத்தனர். விக்ரம் கூட ஒரு நல்ல பாடகன் என்று அறிந்திருந்த யமுனா அவனையும் அழைத்து மேடை ஏறி இருவரும் இந்த பாடலை பாடினர்.

நான் வரைந்த வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்த சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்களானதே
என் தலை நனைத்த மழைத்துளி அமுதமானதே
நான் இழுத்த விட்ட மூச்சிலே இசை கசிந்ததே

ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளிக் கம்பி என்று ஆகியதே
கந்தல் சக்கை உந்தன கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பம் என்று மாறியதே
பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் இறக்கைகளாக
நாக்கு உன் பெயரைக் கூற என் நாதம் சர்க்கரையாக
தலை கீழ் தடுமாற்றம் தந்தாயே என் காதலி

அந்த வார இறுதியில் யமுனா தேர்வுக்கு தயார் செய்ய வேண்டி இருந்ததால் விக்ரம் அவளை சந்திக்க முடியவில்லை. நியூ யார்க் நகரத்து பற நகர் பகுதியான ஜாக்ஸ்ன் ஹைட்சுக்கு அன்று விக்ரம் சென்றிருந்தான். அங்கு இந்திய பல் பொருள் அங்காடிகள் இருந்ததால் அவன் அங்கு சென்று தேவையான பொருட்களை வாங்குவதுண்டு. அவ்வாறு அன்று பொருடகளை வாங்கிக் கொண்டு தன் காருக்கு திரும்புகையில் எதிர் பிளாட்பாரத்தில் சில நீக்ரோ இளைஞர்கள் நடந்து செல்வதை அவன் பார்த்தான். அவன் கவனத்தை பெரிதும் ஈர்த்தது அவர்களில் ஒருவன் க்ருஷ் மாதிரியே இருந்ததுதான். சற்று உன்னிப்பாக கவனித்தவுடன் அது க்ருஷ் தான் என்று அவனுக்கு உறுதியாக 'கிருஷ் க்ருஷ் என்று கத்திக் கொண்டு குறுக்கே வந்த வாகனங்களை பொருட் படுத்தாமல் அவன் ஓட வாகனங்கள் ஒன்னை ஒன்று மோதிக் கொண்டு டராபிக் ஜாம் ஆகி விட்டது. ஆனால் அவன் அவர்களை அடைவதற்குள் அவர்கள் ஒரு திருப்பத்தில் சென்று மறைந்து விட்டனர். மூச்சிரைக்க பெருத்த ஏமாற்றத்துடன் நின்றிருந்த அவன் தோள்களில் ஒரு கை விழுந்தது.

தொடரும்....

நிரன்
10-01-2009, 06:09 PM
இருவரின் நட்பும் காதலாகுமா !!!!! இல்லையென்றால் க்ருஸ்சைக்
கண்டதும் இன்னும் இருக்கிறான் என்று நட்பாகவே மாறுமா !!!!
கதையினைப் படிக்க ஆவலாகவுள்ளேன் மைந்தன்.....

தோழில் விழுந்த கை பொலிசாக இருக்குமோ:rolleyes:
டிராபிக் யாம் பண்ணினதுக்கு பிடிக்க வந்திருப்பாங்களோ:D
ஏற்கனவே புகையிரத நிலைய மேடையில் படியதற்கு பிடிச்சவங்கள்
பொதுமக்களை இடையுாரு செய்ததென்று இப்பது அதுவே:rolleyes:

மீதியை விரைவில் தாருங்கள் கொஞ்சம் கூட தாங்க :D:D
இப்பத்தான் புரியுது ஏன் எல்லாரும் வந்து படிக்காமல் போறங்க என்று
நம்மள மாதிரி அலைய வேண்டாம் என்றுதான்.... கதை முடியத்தான்
எல்லாரும் முழுசாப் படிப்பாங்க போல இருக்கு:D
(நான் வந்து மாட்டிக்கிட்டன் திரும்ப மனமே இல்லீங்க:traurig001:)


புதுவருட வேலைகளில் கதையைக் கவனிக்க மறந்துவிட்டேன்
மீண்டும் ஆவலுடன் வந்துள்ளேன் மைந்தன் சிறிய எழுத்துப் பிழைகள் இருப்பது கண்ணில் தென்பட்டது... அதையும் கவனியுங்க

மதுரை மைந்தன்
11-01-2009, 07:38 AM
இருவரின் நட்பும் காதலாகுமா !!!!! இல்லையென்றால் க்ருஸ்சைக்
கண்டதும் இன்னும் இருக்கிறான் என்று நட்பாகவே மாறுமா !!!!
கதையினைப் படிக்க ஆவலாகவுள்ளேன் மைந்தன்.....

தோழில் விழுந்த கை பொலிசாக இருக்குமோ:rolleyes:
டிராபிக் யாம் பண்ணினதுக்கு பிடிக்க வந்திருப்பாங்களோ:D
ஏற்கனவே புகையிரத நிலைய மேடையில் படியதற்கு பிடிச்சவங்கள்
பொதுமக்களை இடையுாரு செய்ததென்று இப்பது அதுவே:rolleyes:

மீதியை விரைவில் தாருங்கள் கொஞ்சம் கூட தாங்க :D:D
இப்பத்தான் புரியுது ஏன் எல்லாரும் வந்து படிக்காமல் போறங்க என்று
நம்மள மாதிரி அலைய வேண்டாம் என்றுதான்.... கதை முடியத்தான்
எல்லாரும் முழுசாப் படிப்பாங்க போல இருக்கு:D
(நான் வந்து மாட்டிக்கிட்டன் திரும்ப மனமே இல்லீங்க:traurig001:)


புதுவருட வேலைகளில் கதையைக் கவனிக்க மறந்துவிட்டேன்
மீண்டும் ஆவலுடன் வந்துள்ளேன் மைந்தன் சிறிய எழுத்துப் பிழைகள் இருப்பது கண்ணில் தென்பட்டது... அதையும் கவனியுங்க

உங்களது பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பர் நிரன் அவர்களே. கதையை தொர்ந்து படியுங்கள். உங்களது கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும்.

மதுரை மைந்தன்
11-01-2009, 07:41 AM
பாகம்-7

தன் தோளில் கை போட்டவரை திரும்பி பார்த்தான் விக்ரம். அவர் ஒரு வயதான நீக்ரோ. " ஹலோ நீங்க க்ருஷ் என்று ஒரு பையன் பின்னால் ஓடினீர்களே ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா?" என்று ஆங்கிலத்தில் கேட்டார். விக்ரம் ஆங்கிலத்தில் அவருக்கு பதிலளித்தான். " க்ருஷ் என்னோட மகன். 10 வருடங்களுக்கும் மேலாக அவன் உயிருடன் இருக்கிறானா இறந்து விட்டானா என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். நாங்கள் பால்டிமோரிலிருந்து நியூ யார்க் திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு ஆக்ஸிடெண்டில் கார் எரிந்து எனது மனைவியை இழந்தேன். பலத்த தீக் காயங்களில் முகம் முழுவதும் கருகி உயிருக்கு போராடி பிழைத்தேன். காரின் பின் சீட்டில் இருந்த க்ருஷ் என்ன ஆனான் என்று போலீசாரினால் அறிய முடியவில்லை.இன்று அவனை உயிருடன் பார்த்தில் எனக்கு மறு வாழ்வு கிடைத்த மாதிரி இருக்கிறது."

" என்ன அவன் உங்களுடய மகனா? உங்களைப் பார்த்தால் மிகவும் இளமையாயிருக்கீறிர்களே" என்ற அவரிடம் ஆக்ஸிடெண்டைப் பற்றியும் அதில் தனது முகம் கருகி சிதைந்து போனதற்கப்புறம் தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கையில் நண்பர் ரவியை சந்தித்ததையும் டாக்டர் சங்கர் மூலமாக தனக்கு நடந்த பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நடந்து இளமையான தோற்றம் கிடைத்ததையும் கூறினான் விக்ரம்.

இதைக் கேட்ட அந்த பெரியவர் ஆங்கிலத்தில் சொன்னார் " ஓ அந்த காரில் நீங்களும் இருந்தீர்களா? நானும் எனது மனைவியும் நியூ யார்க்கிலிருந்து வாஷிங்டன் சென்று கொண்டிருந்தோம். உங்கள் கார் ஆக்ஸிடெண்டில் உயரே தூக்கி எறியப் பட்டு பின்னர் தீ பற்றிக் கொண்டிருந்த கோர காட்சியை நாங்கள் பார்த்தோம். எங்கள் காரை நிறுத்தி விட்டு அங்கு வந்து பார்த்ததில் காரின் முன் சீட்டில் நீங்களும் உங்களது மனைவியும் தீயில் எரிந்து காணப்பட்ட காட்சி எங்களை திடுக்குற வைத்தது. அதை விட பக்கத்து புதரில் கிடந்த சிறுவன் எங்களது கவனத்தை ஈர்த்து. தலையில் அடி பட்டு நிறைய ரத்தம் சிந்திய நிலையில் உயிரக்கு போராடிக் கொண்டிருந்தவனை உடனடியாக மருத்துவ மனைக்கு எடுத்து சென்றோம். அங்கு அவனுக்கு ஆபரேஷன் நடப்பதற்கு முன்னர் உடனடியாக ரத்தம் தேவைப்பட்டதால் நான் எனது ரத்தத்தை கொடுத்தேன். அவனும் உயிர் பிழைத்தான். எங்களுக்கு குழந்தைகள் இல்லாததால் எனது மனைவி அவனை எங்களுடய பையனாக வரித்துக் கொண்டாள். போலிசார் க்ருஷ்ஐ தேடி அங்கு வந்த போது அவள் அவன் எங்களுடய பையன் என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டாள். உங்கள் பையனும் கருப்பாக இருந்ததால் அவர்கள் சென்றனர். என்ன ஒற்றுமை? நீங்கள் அவனை க்ருஷ் என்று கூப்பிட்டீர;கள். நாங்கள் அவனை க;ரிஸ் என்று அழைக்கிறோம்" என்றவர் சிறிது மௌனத்திற்கு பின் " உங்களுக்கு வருத்தம் தரக் கூடிய சில உண்மைகளை நான் கூறியாக வேண்டும். க்ரிசுக்கு தலையில் பலத்த அடி பட்டதால் அவனுக்கு தனது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி சிறிதும் நினைவில்லை. அவனைக் குணப் படுத்திய டாக்டர் எங்களிடம் அவனிடம் அவனது கடந்த கால வாழ்க்ககையை நினைவு படுத்த முயலக்கூடாது. அது அவனுக்கு வலிப்பு நோயில கொண்டு விடும் என்றார். நாங்கள் அவனை மிகவும் செல்லமாக வளர்த்தோம். அவன் இப்போது நியூ யார்க் யுனிவர்ஸிடியில் படித்துக் கொண்டிருக்கிறான். ஆனால் தகாத நண்பர்களுடன் சேர்ந்து போதைப் பொருள்களுக்கு அடிமையாயிருக்கிறான். நீங்கள் அவனைப் பார்க்க வேண்டுமென்றால் இந்த கார்டில் உள்ள நம்பருக்கு போன் செய்து விட்டு வாருங்கள்" என்று கூறி தன்னுடய விசிட்டிங் கார்டை விக்ரமிடம் கொடுத்தார்.

க்ருஷ் உயிருடன் இருப்பதை அறிந்த மகிழ்ச்சி அதே நேரத்தில் அவனுக்கு கடந்த கால நினைவுகள் இல்லாததும் போதைப் பொருள்களுக்கு அடிமையானதும் கேட்டு அடைந்த துக்கம் ஆகிய பல வித உணரச்சிகளுடன் தன்னுடய அபார்ட்மெண்டக்கு திரும்பிய விக்ரம் வழக்கம் போல் டி;வி ஐ முடுக்க சன் டி;வியில் இந்த பாடல் ஒளிபரப்பாகியது.

நான் பெற்ற செல்வம்
நலமான செல்வம்
தேன் மொழி பேசும்
சிங்கார செல்வம்

அன்பே இல்லா மானிடரால்
அன்னையை இழந்தாய் இளம் வயதில்
பண்பே அறியா பாவியர்கள்
வாழுகின்ற பூமி இது
நீ அறிவாய் கண்ணே
நான் பெற்ற செல்வம்
தொடரும்...

நிரன்
17-01-2009, 09:39 AM
ஆகா போதைப்பொருளுக்கும் அடிமையாகிட்டானா!!!!
அடுத்து என்ன நடக்கப்போகுதோ யாருக்குத் தெரியும்!!!!!

மைந்தன் உங்களுக்கு மட்டுந்தான் தெரியும் விரைவில் தாருங்கள் அடுத்த பகுதியை.

மதுரை மைந்தன்
09-03-2009, 09:34 AM
பாகம்-8

யமுனா தேர்வுக்கு தயாரிப்பதில் ஈடு பட்டிருந்ததால் விக்ரம் அவளை சந்திக்க முடியவில்லை. மாலை நேரங்களில் நியூ யார்க் நகரத்தின் மத்திய பகுதியில் அமைந்திருந்த சென்ட்ரல் பார்க் பகுதியில் நடந்து செல்வது அவன் வழக்கமாக இருந்தது. பார்கில் விளையாடும் குழந்தைகள் வாக்கிங் செல்லும் வயதானவர்கள் மற்றும் காதலர்கள் தங்களை மறந்து சல்லாபித்தல் ஆகியவற்றை பார்த்துக் கொண்டே செல்வான். அன்றும் வழக்கம் போல் நடந்து பார்க்கின் அதிக ஆள் நடமாட்டமில்லாத பகுதியை ஏதோ நினைவுகளில் மூழ்கியவனாக அணுகினான்.

ஒரு திருப்பத்தில் அவன் சற்றும் எதிர் பாராத விதமாக க்ருஷ் தன்னை எதிர் கொண்டு நிற்பதை கண்டான். அவனைக் கண்ட ஆனந்த அதிர்ச்சியில் "க்ருஷ் எப்படி இருக்கே?" என்றான். அதற்கு க்ருஷ் " இன் விச் லான்குவேஜ் ஆர் யூ டாக்கிங்? டாக் இன் இங்கிலீஷ்" (நீ எந்த மொழியில் பேசுகிறாய்? ஆங்கிலத்தில் பேசு) என்றான். பின் தொடர்ந்து " ஐ பைன்ட் யூ இன் த கம்பெனி ஆப் யமுனா. ஷீ இஸ் மை கர்ல். கீப் ஆப் ஹர். (நான் எப்பவும் உன்னை யமுனாவுடன் பார்க்கிறேன். அவள் எனது பெண். அவளை விட்டு நீங்கி இரு).

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விக்ரம் "ஏய் கருஷ் நான் உன்னோட அப்பாடா. யமுனாவும் நானும் ஒருவரையொருவர் விரும்புகிறோம். அவள் உனது சித்தியாகப் போகிறாள்" என்றான்.

இதைக் கேட்ட க்ருஷ் " வாட் ஆர் யூ ப்ளாபரிங் மான். டோன்ட் யூ நோ இங்கிலீஷ்" ( என்ன உளர்றே. உனக்கு ஆங்கிலம் தெரியாதா?) என்றான்.

நடந்த விபத்தில் க்ருஷ் தனது பழைய நினைவுகளை இழந்திருக்கிறான் என்று அந்த நீக்ரோ பெரியவர் ஜான்சன் சொன்னது விக்ரமுக்கு நினைவுக்கு வர " க்ருஷ் ஐ அம் யுவர் டாடி. யமுனா அன்ட் மைசெல்ப் ஆர் லவிங் ஈச் அதர் அன்ட் ஷீ இஸ் கோயிங் டு பிகம் யுவர் ஸ்டெப் மதர்".

இதைக் கேட்ட க்ருஷ் பெரிதாக சிரித்து "யூ மை பாதர்? வாட் எ ஜோக். யூ லுக் யங்கர் தான் மீ. சோ யூ சம்ஹெள வான்ட் டு டாட்ஜ் மீ. ஐ வில் நாட் அலவ் யூ தாட்" ( நீ என்னோட அப்பாவா? என்னை விட இளமையா இருக்கே நீ. என்னை எப்படியாவது ஏமாற்றலாம்னு நினைக்கறே அது நடக்காது).

" க்ருஷ் ப்ளீஸ் டரை டு அன்டர்ஸ்டான்ட் மீ. ஆப்டர் ஹாவிங் லாஸ்ட் மை பேஸ் இன் த ஆக்சிடென்ட் ஐ லிவிட் எ லைப் ஆப் மிசரபிள் சாலிட்டுயூட். மை பேஸ் வாஸ் ரெஸ்டோர்ட் பை எ பிளாஸ்டிக் சர்ஜன். ஐ பெல்ட் இட் இஸ் வொர்த் ஆப்டர் மீட்டிங் யமனா. வித்தவுட் ஹர் ஐ டோன்ட் ஹாவ் எ லைப்" என்றான் விக்ரம்.

திடீரென்று கோபமுற்றவனாக க்ருஷ் " ஐ கீப் டெல்லிங் யூ தாட் யமுனா இஸ் மை கர்ல். இப் யூ ஹாவ் அட்ராக்டெட் ஹர் வித் யுவர் பேஸ் தன் லெட் மீ கார்வ் இட் வித் திஸ் நைப்" (நான் திரும்ப திரும்ப யமுனா எனது கர்ல் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீ உனது இந்த முகத்தை வைத்து அவளை வசியப் படுத்தியிருந்தால் நான் அதை இந்த கத்தியைக் கொண்டு சிதைக்கிறேன்). அவனது கண்களில் போதைப் பொருளின் கிறக்கத்துடன் கையில் கத்தியுடன் விக்ரமை அணுகினான்.

எக்ஸாம் டைம் ஆனாலும் தனது பகுதி நேர வேலையான களப்பில் பாடுவதை தொடர்ந்த யமுனா இந்த பாட்டை பாட நடன மாதுக்கள் அதற்கேற்றவாறு நடனமாடினர்.

ஐ மிஸ் யூ மிஸ் யூ டா
எனை விட்டு போகாதே
என் இஷ்டம் நீயடா
ஏக்கத்தில் தள்ளாதே

என் தேகமோ ஓர் ஓவியம்
நீ இல்லையேல் வெறும் காகிதம்
என் நெஞ்சமோ ஓர் நூலகம்
உன் நினைவுகளே அதில் ஆவணம்
ஐ மிஸ் யூ மிஸ் யூ டா

பாட்டின் முடிவில் யமனாவின் மொபைலில் வந்த செய்தி அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அடுத்த பாகத்தில் முடிவடையும்...

பாரதி
08-04-2009, 05:15 AM
அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் நண்பரே.

மதுரை மைந்தன்
10-04-2009, 12:30 AM
அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன் நண்பரே.

இத் தொடரை நினைவு வைத்து அடுத்த பாகத்தைக் கேட்டு பின்னூட்டம் போட்ட நண்பர் பாரதிக்கு என் நன்றிகள்.

உங்கள்; விருப்பப் படி இறுதி பாகத்தை நான் அடுத்து பதிவு செய்ய உள்ளேன்.

மதுரை மைந்தன்
10-04-2009, 12:38 AM
பாகம்-9 (இறுதி பாகம்)

யமுனாவிற்கு மொபைல் போனில் ரவி பேசினான். " யமுனா இங்கே சென்ட்ரல் பார்க்கில் விக்ரமுக்கும் அவனது பையன் க்ருஷ்க்கும் இடையே நடந்த கைகலப்பில் கத்தி காயங்களுக்கு க்ருஷ் பலியாகி விட்டான். அவனைக் கொன்ற குற்றத்திற்காக விக்ரமை போலீஸ் கைது செய்துள்ளார்கள்". யமுனாவுக்கு அதிர்ச்சியில் என்ன செய்வதென்று தெரியவில்லை. இது எப்படி நடந்தது என்று விளங்காமல் போலிஸ் ஸ்டேஷன் சென்றாள் விக்ரமை பார்க்க.

போலீஸாரிடம் வாதாடி விக்ரமை பார்க்க அனுமதி பெற்று உள்ளே சென்றாள்.அங்கே பித்து பிடித்தார் போல் அமர்ந்திருந்தான் விக்ரம். யமனாவைப் பார்த்ததும் கட்டுப் படுத்த முடியாமல் கதறி கதறி அழதான். " எனக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும்? நான் என்ன பாவம் பண்ணினேன்?. காணாமல் போன பையன் திரும்ப கிடைத்தாலும் அவனுக்கு என்னை அடையாளம் தெரியாமல் விதி சதி செய்து விட்டது. எனது வாழ்வின் ஒரே பிடிப்பான உன்னைத் தான் அவனும் விரும்ப வேண்டுமா? என்னால் அவனை நிலைமையை புரிய வைக்க முடியாமல் போய் விட்டது. போதைப் பொருளுக்கு அடிமையாயிருந்த அவன் வன்முறையில் என்னைத் தாக்க நடந்த போராட்டத்தில் அவன் உயிர் இழக்க நேரிட்டது. இதில் நான் நிரபராதி. என் மகனையெ நான் கொல்வேனா?" என்று புலம்பினான். யமனா அவனுக்கு ஆறுதல் கூறி ரவியின் உதவியுடன் நல்ல வக்கீலை அமர்த்தி அவன் நிரபராதி என்று நிரூபிப்பதாக வாக்குறுதி அளித்தாள்.

இந்த வழக்கு நியூயார்க் நகரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படத்தியது. தந்தையும் மகனும் ஒரெ பெண்ணை காதலித்து அதில் தந்தையே மகனைக் கொன்றது மேலும் மகனை விட தந்தை இளமையாக காட்சியளிப்பது ஆகியவை ஆச்சரியமாக பேசப்பட்டது. நீதி மன்றத்தில் வழக்கு வந்த போது விக்ரம் தரப்பு வக்கீல் இந்த கொலை ஒரு விபத்து என்று வாதாடினார். ஆனால் அரசு தரப்பு வக்கீல் சம்பவம் நடந்த இடத்தில் சில சாடசியங்களும் போலீசாரும் க்ருஷ் பாடிக்கு அருகில் கையில் ரத்தம் சொட்டும் கத்தியுடன் விக்ரம் பிடி பட்டதால் இது ஒரு வன்மக் கொலை என்று வாதாடினர். பல நாட்கள் நடந்த விவாதங்களுக்கு பிறகு நீதிபதி விக்ரம் திட்டமிட்டு கொலை செய்யாவிட்டாலும் இது நடக்காமல் தவிர்த்திருக்கலாம் என்றார். சட்டப்படி விக்ரம் 5 ஆண்டுகள் தனி சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். தீர்ப்பு சொன்ன பின் விக்ரமை கொண்டு செல்கையில் யமுனா அவனை சந்தித்து கட்டிக் கொண்டு அழதாள். " விக்ரம் நீங்கள் சிறைச் சாலையில் தனிமையில் வாட வேண்டாம். நான் எப்பொழுதும் மனத்தளவில் உங்களுடன் இருப்பேன். 5 ஆண்டுகளுக்கு பின் நாம் இணைவோம்" என்று சொல்லி ஒரு காகிதத்தில் எழுதப் பட்ட இந்த பாடலைக் கொடுத்தாள்.

நான் இங்கு தான் இருக்கிறேன்
உன் அருகில் தான் இருக்கிறேன்

எத்தனை கஷ்டங்கள்
எத்தனை நிர்பந்தங்கள் இருந்தும்
நான் இங்கு தான் இருக்கிறேன்
உன் அருகில் தான் இருக்கிறேன்

உன்னால் மறைக்க முடியாத
ரகசியங்கள் நான்
உன்னால் மறக்க முடியாத
அனுபவங்கள் நான்
கேட்க முடிந்தால் கேட்டுப்பார்
உன் இதயத் துடிப்பின் வார்த்தைகளை
அவை சொல்லும்

நான் இங்கு தான் இருக்கிறேன்
உன் அருகில் தான் இருக்கிறேன்

உன் இதயத்தில் நான் உலவுவதைக் கண்டு
ஏன் அஞ்சுகிறாய்
நான் உன் இதயத்தின் குரல் தானே
நீ எங்கு என்னைத் தேடுகிறாய்
நான் இங்கு தான் இருக்கிறேன்
உன் அருகில் தான் இருக்கிறேன்

5 ஆண்டுகள் கழித்து விக்ரம் வெளி வந்தவுடன் அவர்களின் திருமணம் எளிய முறையில் நியூயார்கில் உள்ள சிவா-விஷ்ணு அலயத்தில் வைத்து நடைபெற்றது. அன்று லிட்டில் இந்தியாவிலுள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் சாப்பிட சென்றிருந்தனர். அச்சமயம் அங்கு ஒரு இந்தியக் குடும்பமும் சாப்பிட வந்திருந்தது. அக்குடும்பத்தின் சுட்டிப் பெண் அனைவரிடமம் சென்று கை குலுக்கியது. விகரம் அமர்ந்திருந்த இடத்தில் வந்து அவளிடம் கை குலக்க விக்ரம் குனிந்த போது அவள் அவனது கன்னத்தில் முத்தம் வைத்து சிரித்தது.

முற்றும்.

பாரதி
10-04-2009, 04:40 AM
வேண்டுகோளை ஏற்று கதையை நிறைவு செய்த மைந்தருக்கு நன்றி. பின்னூட்டம் பொறுமையாக இடுகிறேன்.

மதுரை மைந்தன்
19-04-2009, 03:57 AM
எங்கே போய்விட்டார்கள் இக்கதையை பாராட்டி பின்னூட்டங்கள் போட்டவர்கள்? நிரன் மதி பாரதி போன்றவர்கள் இக்கதையை பாராட்டியதற்கு நன்றி.