PDA

View Full Version : போதை..



rambal
03-09-2003, 07:35 AM
போதை..

புல்லின் ஸ்பர்சத்தில்
ஏற்படும்
உணர்ச்சியாய்..

பறவையின் இறகால்
வருடுவதில் ஏற்படும்
சிலிர்ப்பாய்..

அருவிக்கு அருகாமையில்
வந்து விழும்
சாரலாய்..

மழை நின்ற பின்
பரவும் சுகந்தமான
வாசனையாய்..

இருந்த போதும்..
சில்லறைச் சுகத்தில்
மனதை திளைக்கவைக்கும்
காதல் ஒரு போதை..

சேரன்கயல்
03-09-2003, 10:13 AM
இயற்கையின் மீதான் காதல் அதிகம் தெரிகிறது ராம்...
இயல்பாக வந்து விழுகின்றன வார்த்தைகள்...
வாழ்த்துக்கள்...

பாரதி
03-09-2003, 06:13 PM
உங்களுக்கு எழுதுவதும் ஒரு போதைதானே ராம்?

poo
03-09-2003, 08:13 PM
மீண்டும் காதல்.. மீண்டும் ராம்.. மீண்டும் பாராட்டுக்கள்!!!

இளசு
04-09-2003, 12:02 AM
வாழ்க்கையே போதை நாடகம்...
உமர்கய்யாம் தீட்டும் ஓவியம்
என்பார் கவியரசு..

ராமின் போதை
பின்விளைவு இல்லா இனிய போதை..
தெளியாமல் மூழ்கிக்கிடக்க
கொடுத்துவைத்திருக்க வேண்டும்..

பாராட்டுகள் ராம்..