PDA

View Full Version : ஓட்டலில் நடந்த கூத்துரங்கராஜன்
24-12-2008, 03:34 PM
ஒரு முறை நான் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றேன். பயங்கர பசி இரவு 8.00 மணி நான் மதியமும் சாப்பிடவில்லை என்பதால் பசி வயிற்றை கிள்ளியது. அவசர அவசரமாக இடம் பிடித்து உக்கார்ந்தேன். சர்வர் வந்தார்

"என்ன வேண்டும்"

"ஒரு சிக்கன் பிரியாணி குடுங்க, கொஞ்சம் சீக்கிரம்"

"வேற எதாவது சைடு-டிஷ் வேண்டுமா?"

நான் சைடு-டிஷ் ஆடர் செய்தால் நேரம் ஆகும் என்பதால்.

"வேண்டாம் பிரியாணி மட்டும் போதும்"

"சிக்கன் 65, சிக்கன் டிக்கா, மட்டன் ஃப்ரை, ....."

"வேண்டாம்பா பிரியாணி மட்டும் குடு"

"இல்ல சார் நம்ம கடையில சைடு-டிஷ் சூப்பரா இருக்கும் சார், சிக்கன் 65.........."

"வேண்டாம்பா"

என்றேன் அவன் அதை மதிக்காமல் திரும்பவும் சொல்ல ஆரம்பித்தான். எனக்கு எரிச்சலாகி

"சரி சிக்கன் 65 எடுத்துனு வா" என்றேன்.

பிரியாணி பத்து நிமிடத்தில் வந்தது, எனக்கு இருந்த பசியில் ஐந்து நிமிடத்தில் சாப்பிட்டு விட்டேன். ஆனால் சிக்கன் 65 வரவில்லை.

"என்னப்பா இன்னும் வரவில்லை, நான் சாப்பிட்டு முடித்து விட்டேன்"

"தொ தொ வந்துடுச்சி சார்"

பதினைந்து நிமிடம் ஆனது. எரிச்சலான நான்

"யோவ் என்னய்யா கோழி இனிமேல் தான் புடிக்கனுமா?, ஆடரை கேன்சல் பண்ணுயா" என்றேன் கோபமாக.

"ஆடர எல்லாம் கேன்சல் பண்ண முடியாது சார், தொ வந்துடுச்சு சார்" என்றான் முறைத்துக் கொண்டு.

அப்புறம் 5 நிமிடம் கழித்து தான் சிக்கன் 65 வந்தது. சூடாக இருந்தது ஒன்றை எடுத்து வாயில் வைத்தேன்.

"துப்புபு புபுபூபூபூ" என்று தட்டிலே துப்பினேன். ஒரு மாதிரி புளிப்பு டேஸ்டா இருந்தது.

"யோவ் என்னயா இது புளிக்குது"

"சார் சூடா சாப்பிட்டா அப்படி தான் சார் இருக்கும்" என்றான்.

கொஞ்ச நேரம் கழித்து ஆறவைத்து சாப்பிட்டேன். இன்னும் கொடுமையா இருந்தது. சர்வரை அழைத்து ஒரு பீஸ் எடுத்து இந்தா இதை சாப்பிடு என்றேன்.

"வானா சார், இருங்க சார் மாஸ்டரை கேக்குறேன்" என்று சென்றான்.

என் எதிரிலே தான் சமையல் அறை, போய் கேட்டான், இருவரும் சிரித்துக் கொண்டனர். நேராக என்னிடம் சிரித்து கொண்டு வந்தான். வந்தவன் நேராக என்னுடைய சிக்கன் 65 தட்டை எடுத்துக் கொண்டு நேராக சமையல் அறைக்குள் நடந்தான்.

"யோவ் என்னய்யா நேர வந்த, தட்ட எடுத்துனு நீ பாட்டுனு போற" என்றேன்.

"தொ ஒரு நிமிஷம் சார், வேற போட்டு தரச் சொல்றேன்" என்றான்

எனக்கு கோபம் அதிகமானது, ஓட்டலின் மேனேஜரை அழைத்தேன், வந்தவரிடம் விஷயத்தை சொன்னேன். அவர் போய் சர்வரிடம் கேட்டார், அவனும் அவர் காதில் எதோ சொன்னான். இருவரும் சிரித்தனர், எனக்கு இன்னும் கோபம் அதிகமானது.

"என்னங்க இது கேள்வி கேட்டா எல்லோரும் சிரிக்கரிங்க" என்றேன்.

"சாரி சார், சர்வர் சிக்கன் 65 குடுக்கறதுக்கு பதிலா வேற ஒன்ன கொடுத்துட்டான் சார்" என்றார் சிரித்துக் கொண்டே.

"என்னது வேற ஒன்னா" என்று அதிர்ந்தேன்.

"ஆமா சார், உங்களுக்கு இப்போ சிக்கன் 65 தரச் சொல்றேன்" என்றேன்.

"ஒன்னும் வேணா, சரி வேற ஒன்னுனா என்ன" என்றேன்.

திரும்பவும் சிரித்தவன் "அதெல்லாம் ஒன்னும் இல்ல சார், பாய் சாருக்கு பில்லு போடு" என்று வாயில் கைவைத்த படி சிரித்துக் கொண்டே சென்றுவிட்டான்.

கடைசி வரை அது என்ன ஐடம் என்று யாருமே சொல்லல.:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:.

அதற்க்கு அப்புறம் அந்த ஓட்டல் சைடு போனால் பத்தடி தள்ளிதான் போவேன்.

அமரன்
24-12-2008, 03:39 PM
ஆச்சா... அது என்னன்னு ஆளாளுக்கு தலையைப் பிச்சுக்கப் போறாங்க பாருங்க. இதோ சிவா வந்தூட்டாரே.. இப்பப் புரியுது சிவா

சிவா.ஜி
24-12-2008, 03:41 PM
[COLOR="red"]அதற்க்கு அப்புறம் அந்த ஓட்டல் சைடு போனால் பத்தாடி தள்ளிதான் போவேன்.

பாவம் தக்ஸ் ரொம்ப நொந்துபோயிட்டீங்க போலருக்கு....சைட் டிஷ் குடுத்த அதிர்ச்சியில ஆடித்தான் போயிட்டீங்க போலருக்கு.....

(நல்ல வேளை சிக்கன் 65-ல் 65 பீஸ் குடுக்காம இருந்தாங்களே)

சிவா.ஜி
24-12-2008, 03:43 PM
ஆச்சா... அது என்னன்னு ஆளாளுக்கு தலையைப் பிச்சுக்கப் போறாங்க பாருங்க. இதோ சிவா வந்தூட்டாரே.. இப்பப் புரியுது சிவா

அமரன்.......உங்களை:sauer028::sauer028:

ரங்கராஜன்
24-12-2008, 03:46 PM
பாவம் தக்ஸ் ரொம்ப நொந்துபோயிட்டீங்க போலருக்கு....சைட் டிஷ் குடுத்த அதிர்ச்சியில ஆடித்தான் போயிட்டீங்க போலருக்கு.....

(நல்ல வேளை சிக்கன் 65-ல் 65 பீஸ் குடுக்காம இருந்தாங்களே)

ஆண்டவா............... யார்கிட்ட மாட்டகூடாதுன்னு நினைக்கிறனோ, அவரிடம் தான் கைகளவுமா மாட்டி :traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:::traurig001:...................... சிவா அண்ணா திருத்திவிட்டேன், ஆனால் நான் தான் திருந்த மாட்றேன்.

aren
24-12-2008, 04:08 PM
இதுக்குத்தான் வெஜிடேரியனாக இருக்கவேண்டும். இந்த பிரச்சனையெல்லாம் வராது

arun
24-12-2008, 04:21 PM
அவங்களுக்குள்ளேயே சிரிச்சிக்கிற அளவுக்கு என்ன டிஷ் கொடுத்தாங்க? :fragend005:

எந்த ஏரியா ஓட்டல் அன்பரே?

ரங்கராஜன்
24-12-2008, 04:23 PM
அவங்களுக்குள்ளேயே சிரிச்சிக்கிற அளவுக்கு என்ன டிஷ் கொடுத்தாங்க? :fragend005:

எந்த ஏரியா ஓட்டல் அன்பரே?

டி.நகர்

பாலகன்
24-12-2008, 04:29 PM
கலர் எல்லாம் சிக்கன் மாதிரி தானே இருந்தது தாக்ஸ் சார்.....

ரொம்ப சிந்திக்க வச்சிட்டீங்களே :) (புளிப்புன்னு சொல்றீங்க ஒருவேளை தயிருவடையை சூடா வச்சிட்டானா?)

அன்புரசிகன்
24-12-2008, 04:37 PM
அது நாய் 65 ஆஹ்... சாப்பிடாததால அது என்ன சுவை என்று தெரியாதே.......

ஆச்சா... அது என்னன்னு ஆளாளுக்கு தலையைப் பிச்சுக்கப் போறாங்க பாருங்க. இதோ சிவா வந்தூட்டாரே.. இப்பப் புரியுது சிவா

சிவா அண்ணனுக்கு சம்பந்தமில்லாத விடையமாக உள்ளதே.............. :D

இதுக்குத்தான் வெஜிடேரியனாக இருக்கவேண்டும். இந்த பிரச்சனையெல்லாம் வராது

ஆமா........... சிக்கன் சுறா கறியை ஈரப்பலாக்கறி என்றும் ரத்த வறையை பீற்றூட் வறை என்றும் சாப்பிட்டவங்கள் இருக்காங்க......... :lachen001:

அன்புரசிகன்
24-12-2008, 04:38 PM
கலர் எல்லாம் சிக்கன் மாதிரி தானே இருந்தது தாக்ஸ் சார்.....

ரொம்ப சிந்திக்க வச்சிட்டீங்களே :) (புளிப்புன்னு சொல்றீங்க ஒருவேளை தயிருவடையை சூடா வச்சிட்டானா?)

இது ரொம்ப ஓவர். சென்னையில் இருக்கிற தக்சுக்கு தயிருவடை தெரியாதா????????????:eek:

பாலகன்
24-12-2008, 04:46 PM
இது ரொம்ப ஓவர். சென்னையில் இருக்கிற தக்சுக்கு தயிருவடை தெரியாதா????????????:eek:

அப்போ தட்டுல என்ன இருந்துச்சின்னும் தெரிஞ்சிருக்கனுமே..... :) அடம்புடிக்கிறாரே,

தக்ஸ் சீக்கிரமா சொல்லுங்க.... :)

ரங்கராஜன்
24-12-2008, 04:52 PM
அப்போ தட்டுல என்ன இருந்துச்சின்னும் தெரிஞ்சிருக்கனுமே..... :) அடம்புடிக்கிறாரே,

தக்ஸ் சீக்கிரமா சொல்லுங்க.... :)

ஏங்க எனக்கே சத்தியமா தெரியாதுங்க, நானே தெரியாமல் நொந்து இருக்குறேன், நீங்க வேற காமெடி பண்றீங்க:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::sauer028::sauer028::sauer028:

பாலகன்
24-12-2008, 05:01 PM
ஏங்க எனக்கே சத்தியமா தெரியாதுங்க, நானே தெரியாமல் நொந்து இருக்குறேன், நீங்க வேற காமெடி பண்றீங்க:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::traurig001::sauer028::sauer028::sauer028:

சரி சரி நம்பிட்டேன் தக்ஸ் சார்... இனி கேக்கமாட்டேன்....

ஐய்யோ அது என்னான்னு தெரியாம இன்னைக்கு தூக்கம் வராதே :fragend005:

அன்புரசிகன்
24-12-2008, 05:16 PM
சரி சரி நம்பிட்டேன் தக்ஸ் சார்... இனி கேக்கமாட்டேன்....

ஐய்யோ அது என்னான்னு தெரியாம இன்னைக்கு தூக்கம் வராதே :fragend005:
அது டாக்(ஸ்) சிக்டிஃபைஃவ் ஆக இருக்குமோ............?:lachen001:

பாலகன்
24-12-2008, 05:24 PM
அது டாக்(ஸ்) சிக்டிஃபைஃவ் ஆக இருக்குமோ............?:lachen001:

ஓ அது தான் சங்கதியா? :D

arun
24-12-2008, 07:08 PM
டி.நகர்

சரி சரி சிக்கன் தான் சாப்டோம்னு நினைச்சு மனச தேத்திக்குங்க

மன்மதன்
25-12-2008, 06:31 AM
ஒருவேளை அது...............புளிப்பு மிட்டாயாக இருக்குமோ..??:rolleyes::rolleyes:

அன்புரசிகன்
25-12-2008, 06:34 AM
ஒருவேளை அது...............புளிப்பு மிட்டாயாக இருக்குமோ..??:rolleyes::rolleyes:

புளிமிட்டாய் சூடாக தட்டில போட்டு ஃப்ரை பண்ணியா கொண்டருவாங்க????????? :lachen001:

அது டாக்கு அல்லது கற் தான்......... :icon_b:

பாலகன்
25-12-2008, 06:45 AM
புளிமிட்டாய் சூடாக தட்டில போட்டு ஃப்ரை பண்ணியா கொண்டருவாங்க????????? :lachen001:

அது டாக்கு அல்லது கற் தான்......... :icon_b:

என்னால ஒரு முடிவுக்கே வரமுடியல........ :)

அமரன்
25-12-2008, 09:20 AM
புளிமிட்டாய் சூடாக தட்டில போட்டு ஃப்ரை பண்ணியா கொண்டருவாங்க????????? :lachen001:

அது டாக்கு அல்லது கற் தான்......... :icon_b:
டக்ஸுக்கு டாக்கா???? உங்க அனுபவம் சூப்பர் அன்பு

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும். சாப்பாட்டுக்கு எதுக்கு சைடிஸ்.

இளசு
25-12-2008, 09:27 AM
தக்ஸ்..

ஒரு படத்தில் வடிவேலுவைப் பார்த்து ஊர்க்காரர், அவர் மனைவி, வடிவேலுவின் அப்பா எல்லாரும் -
'' நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே'' என்பதோடு நிறுத்திக்கொள்வார்கள்..

எதுக்கு என அறிய எவ்வளவு முயன்றும் வடிவேலுவால் முடியாது..

அதே மாதிரி நீங்களும்..

அப்ப நீங்களும் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவரு.. இல்லீங்களா?

நிரன்
25-12-2008, 09:29 AM
மூர்த்தி அண்ணா ஒரு நல்ல யோசனை இருக்கு..................

அந்த ஓட்டலில்ல போய் சர்வரா சேந்து அந்த ரகசியத்த எடுத்திடுங்க
எப்படி என்னோடி மூளையின் வேலை:D:D

ரங்கராஜன்
25-12-2008, 10:21 AM
தக்ஸ்..

ஒரு படத்தில் வடிவேலுவைப் பார்த்து ஊர்க்காரர், அவர் மனைவி, வடிவேலுவின் அப்பா எல்லாரும் -
'' நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்டே'' என்பதோடு நிறுத்திக்கொள்வார்கள்..

எதுக்கு என அறிய எவ்வளவு முயன்றும் வடிவேலுவால் முடியாது..

அதே மாதிரி நீங்களும்..

அப்ப நீங்களும் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவரு.. இல்லீங்களா?

அய்யோ இளசு அண்ணா, அந்த ஜோக்கை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன். ஏனென்றால் எனக்கு அந்த மாதிரி அனுபவம் அந்த படம் ரீலிஸ் ஆகும் முன்பே கிடைத்து விட்டது.

lolluvathiyar
26-12-2008, 09:26 AM
ரன்டு நாள் ஆச்சு இன்னும் அது என்னன்னு கன்டு பிடிக்க முடியலியா? ஐயோ அது என்னான்னு தெரிஞ்சுக்காம போக முடியலியே. ஒரு வேல அது .................................. புளிசாதமா இருக்கொமோ. (எனக்கு மூலை அவ்வளவுதான் வேலை செய்யுது)

Mano.G.
26-12-2008, 10:51 AM
அந்த சிக்கன் சிக்ஸ்டிபை சாப்பிட்டபிறகு ஏதும் ஆகலையே
அதுக்கு கடவுளுக்கும் அந்த ஹோட்டல் சமையக்காரனுக்கும்
நன்றி சொல்லனும்.

இருந்தாலும் எனக்கும் சந்தேகமா இருக்கு அது என்னவா இருக்கும்.

சோப்பு கட்டிய துண்டு துண்டு வெட்டி பொருச்சி குடுத்துட்டாரோ???????

பாவம் தம்பி , எங்கிட்ட அடிவாங்கரதும் இல்லாம கண்டவன் கிட்டலெல்லாம்
அடிவாங்கரயே!!!!!!!!!!!!!!!!!!!!

மனோ.ஜி