PDA

View Full Version : சிறுவர் பூங்கா...



rambal
03-09-2003, 06:34 AM
சிறுவர் பூங்கா...

அரசுக்கு சொந்தமான
காலி நிலமொன்று..
அதில் ஒரு வேப்பமரம்
இருந்தது...

காலை நேரம்
முதியவர்களின்
பல் துலக்க..

மதிய நேரம்
இதமாய் காற்றை
விரவி சுகந்தம் தர..

மாலை நேரம்..
என் போன்ற
சிறார் விளையாட..

எல்லா நேரமும் ஏதாவதொரு
காகமோ குயிலோ
அல்ல இன்ன பிற பறவையோ
சங்கீதம் மீட்டிக் கொண்டிருக்கும்...

சில பறவைகளுக்கு
வீடுமாய்..
சின்னஞ்சிறு புழுக்களுக்கு
பிரபஞ்சமாய்..
இந்த பூரிப்பில்
இருந்த வேப்பனுக்கு
வந்தது தொல்லை
அரசாங்க உத்தரவினால்..

சிறுவர் பூங்கா கட்ட
வெட்டப்பட்டுவிட்டது மரம்..
வேப்பமரத்தில்
விளையாடிக்கழித்த பொழுதுகளில்
ஏற்பட்ட சந்தோசம்
ஏனோ சிறுவர் பூங்காவில் இல்லை..

சேரன்கயல்
03-09-2003, 09:18 AM
இயற்கைக்கும் செயற்கைக்கும் உள்ள வித்தியாசத்தை...சிறுவனின் கண்களில் கண்டு சொன்னது அழகு...
காடுகள் அழித்து இன்று பூமியை காயவைத்திருக்கும் நம்மை என்ன சொல்லி திருத்திக்கொள்வது....சிந்திக்க வேண்டிய விடயம்...
நல்ல கவிதை ராம்...

பாரதி
03-09-2003, 05:15 PM
திணிக்கபடும் விசயங்களில் எப்போதும் நமக்கு சந்தோசம் உண்டாவதில்லை என்பது உண்மைதான்...

poo
03-09-2003, 07:12 PM
இயற்கைகளின் போக்கில் கிடைக்கும் இன்பங்கள் செயற்கையாக அதிகப்படுத்தப்படுவதாய் அழிக்கப்படுவதை அழகாக சொல்லியுள்ள ராம்.. பாராட்டுக்கள்!!

இளசு
03-09-2003, 11:05 PM
கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதையாய்
சில நிகழ்வுகள்...
சிதைந்த வேம்புவின் கதை அதில் ஒன்று.

அருமையான கருத்து சொல்லும் கவிதை.
பாராட்டுகள் ராம்.