PDA

View Full Version : கம்ப்யூட்டருக்கு புதியவரா நீங்கள்!நூர்
23-12-2008, 11:08 AM
கம்ப்யூட்டருக்கு புதியவரா நீங்கள்

நீங்கள் அடிக்-கடி கேட்கும் சில சொற்களுக்-கான விளக்கங்கள் இங்கே தரப்படுகின்றன. டெஸ்க் டாப் (Desktop): மானிட்டரின் திரையில் விண்-டோஸ் பைல்களும் பைல்களின் ஐகான்களும் காட்டப்படும் இடம்.

பிரீவேர் (Freeware): பெரும்பாலும் இன்டர்-நெட்டிலிருந்து டவுண்லோட் செய்திடும் வகையில் கிடைக்கும் இலவச சாப்ட்வேர் புரோகிராம்கள். இதனை நீங்கள் பயன்-படுத்-துவதோடு மற்றவர்களுக்கும் வழங்கலாம். யாரும் தடை செய்ய மாட்டார்கள்.


ஐகான் (Icon): ஒரு பைல் அல்லது அப்ளி கேசன் புரோகிராமினை அடையாளம் காட்டும் சிறிய படம்.


நோட்டிபிகேஷன் ஏரியா (Notification Area): ஸ்கிரீனின் கீழ்ப்புறமாக விண்-டோஸின் எந்த புரோகிராம்கள் பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று காட்டும் இடம்.


ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Operating System): கம்ப்யூட்டரில் ஹார்ட்வேர் சாதனங்களையும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்களையும் இயக்கிக் கண்ட்ரோல் செய்திடும் சிஸ்டம்.


குயிக் லாஞ்ச் (Quick Launch): டாஸ்க் பாரில் பொதுவாக இடது புறம் உள்ள ஏரியா. அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களின் ஐகான்களை இங்கு வைத்து சிங்கிள் கிளிக் மூலம் அவற்றை இயக்கலாம்.


டாஸ்க்பார் (Taskbar): விண்டோஸ் இயக்-கத்-தில் மானிட்டர் திரையின் கீழாகக் காணப்-படும் நீள பார். இதனை மறைத்தும் வைக்-க-லாம். அந்த இடத்தில் கர்சர் சென்றவுடன் தானாக எழுந்து வருமாறும் செட் செய்திட-லாம். இதில் தான் ஸ்டார் பட்டன், குயிக் லாஞ்ச் ஏரியா, பயன்படுத்தப்படும் பைல்-களுக்-கான டேப்கள், பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள், கடிகார நேரம் ஆகியவை காட்டப்-படுகின்-றன.


தம்ப் நெயில் (Thumbnail): பெரிய படத்தின் சிறிய தோற்றம். இதன் மூலம் பட பைலைத் திறக்காமலேயே அது என்ன படம் என அறிய முடியும்.


வால்பேப்பர் (Wall Paper): விண்டோஸ் டெஸ்க் டாப்பிற்கு பேக் கிரவுண்ட் படமாகப் பயன்படுத்தப்படும் இமேஜ். இதன் மூலம் கம்ப்யூட்டர் சொந்தக்காரர் எப்படிப்பட்ட ரசனை உள்ளவர் என அறியலாம். இதில் நிலையான படங்கள் மட்டுமின்றி அசையும் அனிமேஷன் படங்களும் உள்ளன.

ட்ராக் அண்ட் ட்ராப் (Drag and Drop): பைல் அல்லது புரோகிராமிற்கான ஐகானில் கர்சரை வைத்து அழுத்தியவாறே இழுத்து இன்னொரு போல்டர் அல்லது இடத்தில் விடும் செயல்பாட்டினை இவ்வாறு அழைக்கிறோம்.


லைன் இன் (Line In): கம்ப்யூட்டர் அல்லது சவுண்ட் கார்டில் வெளியில் இயங்கும் ஆடியோ சாதனத்தை இணைக்கும் வழி.


யு.எஸ்.பி. (USB): வெளியிலிருந்து கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை அதனுடன் இணைக்கும் ஒரு தரப்படுத்தப்பட்ட வழி. இதன் மூலம் மெமரி டிரைவ், ஹார்ட் டிஸ்க், கேமரா, மொபைல், பிரிண்டர், கீ போர்டு எனக் கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டிய எந்த சாதனத்தையும் இணைக்கலாம்.


7.A. கரப்ட் ஆன ஸிப் பைல்களைச் சரி செய்திட

பைல்களைச் சுருக்கி அனுப்ப நாம் பல்வேறு வகையான ஸிப் புரோகி-ராம்-களை கையாள்கிறோம். ஆனால் இவை எல்லாமே ஏதாவது ஒரு வகை-யில் சில நேரங்களில் கரப்ட் ஆகி-விடுகின்றன. நாம் நம்பி எடுத்துச் செல்லும் ஸிப் பைல்-கள் சரியாகத் திறக்கப்-படாவிட்டால் நமக்கு எரிச்சல் ஏற்படுகிறது. ஸிப் பைல்கள் கரப்ட் ஆவதற்குப் பல கார-ணங்-கள் உள்ளன. பைல்-களை படிப்பதில் எர்ரர்கள் ஏற்படலாம்; சி.டி.யில் ஸ்கிராட்ச் இருப்பதால் பைல் படிக்கப்படாமல் இருக்க-லாம்; அல்லது சிஸ்டம் கிராஷ் ஆகி இருந்தாலும் இது போல ஏற்படலாம்.

இப்படிப்பட்ட வேளைகளில் தான் சிக்கல்-களைத் தீர்ப்பதற்கென்று Object Fix Zip என்னும் புரோகிராம் வந்துள்ளது. இந்த இலவச புரோகிராம் ஸிப் பைல்களில் ஏற்படும் பிரச்னைகளில் 90%வரை சரி செய்து தருகிறது. ஸிப் ஆர்கிவ் எனப்படும் சுருக்கப்பட்ட பைல்கள் இருக்-கும் விஷயத்தில் சி.ஆர்.சி. எர்ரர்கள் இருந்தாலும் சரி செய்கிறது.

கரப்ட் ஆன ஸிப் பைல்களை சரி செய்திடு-�-க-யில் அவற்றிற்கு புதிய ஆர்கிவ் ஒன்றை உருவாக்-கிக் கொள்கிறது. இதனைப் பயன்படுத்துவதும் எளிது. நீங்கள் எந்த ஸிப் ஆர்கிவ் பைலைச் சரி செய்திட வேண்டுமோ அதனை இதன் ஆர்கிவ்வில் இணைத்துவிட வேண்டியதுதான். அதன் பின் அந்த பைலை டேட்டா சரியாக உள்ளதா என்று சோதிக்க தேர்ந்தெடுக்கலாம்; தவறுகளைச் சரி செய்து புதிய ஆர்கிவ் கொண்டு சென்று அங்கிருந்து பைல்களை விரிக்கலாம்.


விரிக்கப்படும் புதிய பைல்கள் குறிப்பிடும் ஹார்ட் டிரைவ் பார்ட்டிஷனில் பதியப்படும். இலவசமாகக் கிடைக்கும் இந்த பைலின் அளவு 1178 கே பி தான். கிடைக்கும் இணைய தள முகவரி : http://www.objectrescue.com/products/objectfixzip/

நன்றி.
டிசம்பர் 22,2008
computermalar ,தினமலர்.

ராஜா
23-12-2008, 11:32 AM
நல்ல தகவல்கள் பாய்..!

என்னைப்போன்ற கத்துக்குட்டி கம்ப்யூட்டர்காரர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்..!!

நன்றி மஜீத் / தினமலர் கம்ப்யூட்டர் மலர்.