PDA

View Full Version : இணையதளத்தை அனுக தமிழ் முகவரி



sujan1234
22-12-2008, 04:19 PM
இதுவரை ஒரு இணையதளத்தை அனுக வேண்டுமெனில் நீங்கள் அந்த இணையதளத்தின் பெயரை ஆங்கிலத்தில் உள்ளீடு செய்து அந்த தளத்தின் பக்கங்களை பார்க்க (அ) உலவ இயலும். தமிழில் URL வைத்துக் கொள்ளும் வசதியிருப்பினும் இன்னும் முழுமையடையவில்லை.

உதாரணமாக தமிழ்மன்றம் என்பதை ஆங்கிலத்தில் http://www.tamilmantram.com
(அ)
tamilmantram.com
(அ)
http://tamilmantram
என்று தட்டச்சு செய்து உலவலாம்.

ஆனால் தமிழ் இணையமான மதமிழ்மன்றத்தை தமிழில் மதமிழ்மன்றம் என்றே தட்டச்சு செய்து உலவ இயன்றால் அது நமக்கு மகிழ்ச்சிதானே.?

தற்போது உள்ள இணையமுகவரியே போதுமே புதிதாக என்ன தமிழில் என்கிறீர்களா?
1. http://www.thmilmantram.com என்பதில் t க்கு பதில் d (அ) l க்கு பதில் z என்று தட்டச்சு செய்திருப்பின் மதமிழ்மன்றத்திற்குள் நுழையாமல் வேறெங்காவது திருப்பிவிடப்படுவீர்கள்.
(இந்த சேவையில் சொற்பிழைகளை உணர்ந்து சரியான முகவரிக்கு கொண்டுசெல்லப்படுவதற்கான சொற்பிழை திறனும் இணைக்கப் பட்டுவருகின்றது)

2. நாம் பேசும் தமிழில் எளிமையாக நாம் இணைய முகவரிகளை ஞாபகம் வைத்துக்கொள்ள இயலும். ஆங்கிலத்தில் Spelling ஐ ஞாபகம் வைத்துக் கொண்டால்தான் உள்நுழைய இயலும்.

3. Search Engine வாயிலாக ஒரு முகவரியினை கொடுத்தால் அந்த வார்த்தை (அ) முகவரி எந்தெந்த இணையப் பக்கங்களில் கூறப்பட்டுள்ளதோ அனைத்தும் உங்களுக்கு பட்டியலிடப்படும். சற்று குழம்ப வேண்டியிருக்கலாம்.

எனவே இந்த சேவையானது உங்களின் இணையதள அனுகும் முறையில் சற்று வித்தியாசத்தை கொணரும்.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7.0 வைத்திருப்போர் கீழ்கண்ட முகவரியினை சொடுக்கி தோன்றும் இணையபக்கத்தில் Add தமிழ் உதவி என்பதை சொடுக்கவும். தோன்றும் திரையில் Make this my Default search provider என்ற Optionஐ Select செய்துவிட்டு Add Provider என்ற பட்டனை அழுத்தவும்.
இனி உங்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7.0 ல் வலது மூலையில் உள்ள Search Engine ல் தமிழில்(யுனிகோடில்) விரும்பும் இணையதள முகவரியினை தட்டச்சு செய்து Enter செய்தால் நேரடியாக அந்தத்தளத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள்.

Internet Explorer 7.0 Users:
http://sarma.co.in/AppTamil/IE7.htm

Fire Fox 2.0 வைத்திருப்போர் கீழ்கண்ட முகவரியினை சொடுக்கி தோன்றும் இணையபக்கத்தில் Add தமிழ் உதவி என்பதை சொடுக்கவும். தோன்றும் திரையில் Start Using it right away என்ற Optionஐ Select செய்துவிட்டு Add என்ற பட்டனை அழுத்தவும்.
இனி உங்கள் Fire Fox 2.0 ல் வலது மூலையில் உள்ள Search Engine ல் தமிழில்(யுனிகோடில்) விரும்பும் இணையதள முகவரியினை தட்டச்சு செய்து Enter செய்தால் நேரடியாக அந்தத்தளத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள்.

FireFox 2.0 Users
http://sarma.co.in/AppTamil/firefox.htm


இந்த சேவையானது முகவரிகளை சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. எனவே நீங்கள் உங்கள் இணையதளத்தின் முகவரியினை தமிழில் அமைக்க/அழைக்க விரும்பினால் உங்களின் இணைய முகவரி மற்றும் நீங்கள் அழைக்க விரும்பும் தமிழ் பெயரை கீழ்கண்ட மின்முகவரிக்கு அணுப்பவும். ஒரு நாளுக்குள் உங்கள் முகவரி இச்சேவையில் இணக்கப்பெற்று விடும். (முழுவதும் இலவச சேவையே

sujan1234
22-12-2008, 04:21 PM
மின்அஞ்சல் முகவரி
addmeurl@gmail.com