PDA

View Full Version : மைக்ரோசாப்ட்இன் இலவச சேவை



sujan1234
22-12-2008, 04:15 PM
மைக்ரோசாப்ட் வழங்குகிறது 5 ஜிபி அளவுக்கு இலவச கோப்புப்பகிர்வான் சேவை.
இதுவரையில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா முதலிய குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் இந்த சேவை பீட்டாவாக வழங்கப்பட்டது. ஆனால் 1 ஜிபி அளவே வழங்கப்பட்டு வந்தது.

இப்போது ஆஸ்திரேலியா, பிரான்சு, ஸ்விஸ்ஸ்ர்லாந்து, கனடா மற்றும் இன்னபிற நாடுகளிலிருந்து இணையத்தைப் பயன்படுத்துவோருக்கும் இந்தச் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதில் ஆரெஸ்ஸெஸ் பயன்பாடும் உள்ளது. இந்தச் சேவைக்கு விண்டோஸ் லைவ் ஸ்கைடிரைவ் என்று பெயர்.

கோப்பு - மற்றும் போல்டர்களை - உங்களது இணையத்தளத்திலோ / வலைப்பூவிலோ நேரடியாக பொதிந்து (எம்பெட்) வழங்கலாம் என்பது இதன் சிறப்பம்சம்.

உங்கள் வலையைப் படிப்பவர்கள் அதில் இருந்தபடி நேரடியாக கோப்புகளை இறக்கிக்கொள்ளலாம். தனியாக வேறு தளத்துக்குச் செல்லவேண்டிய அவதி இல்லை.

ஏஓஎல் தளமும் இதே போன்று 5 ஜிபி அளவுக்கு இளவச கோப்புப்பகிர்வான் சேவையை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமரன்
22-12-2008, 04:18 PM
சுயன் அவர்களே!
மன்ற விதிகளை மீண்டும் ஒரு தடவை படியுங்கள். தொடர்ந்து பங்களியுங்கள். எண்ணியவை எல்லாம் ஈடேற வாழ்த்துகள்.

sujan1234
22-12-2008, 04:30 PM
மன்னிக்க வேண்டும்

ஆனால் என்னை தாங்கள் ஊக்கப்படுத்துவதற்காக வேனும் பண்பட்டவர் அனுமதி வழங்கலாம் தானே பதில் தாருங்கள்