PDA

View Full Version : நீ…நான்…நிழல்…



ப்ரியன்
22-12-2008, 10:02 AM
நீ…நான்…நிழல்… (http://priyanonline.com/?p=295)


மெளனமாய் நாம்
கண்கலந்திருந்தபோது
நம்
நிழல்கள் பேசிக் கொண்ட
சங்கதி என்னவாக இருக்கும்?

*

நீ காதலிக்க
தொடங்கிய பின்
என் நிழலிலும்
வர்ணங்கள்!

*

ஒட்டி அமர்ந்தோம்
கட்டிக் கொண்டன
நிழல்கள்!

*

அடுத்த சந்திப்பிற்காக
காத்திருக்கிறோம்;
உனக்காக நானும்
நின் நிழலுக்காக
என் நிழலும்!

*

இவ்விடயத்தில்
உன்னைக்காட்டிலும்
உன் நிழல் மேல் ;
முத்தம் கேட்டால்
முகம் சுழிப்பதில்லை
என் நிழலிடம்!

*

- ப்ரியன்.

சிவா.ஜி
22-12-2008, 10:05 AM
மீண்டும் ப்ரியனின் காந்த வரிகளை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது, தேனோடு பலா சுவைத்த தித்திப்பை தந்துள்ளது.

காதல் ததும்பும் கவிவரிகளுக்கு, நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் ப்ரியன்.

நிரன்
22-12-2008, 10:09 AM
நன்றாக உள்ளது கவிதை ப்ரியன் உங்கள் கவிதை நான் இன்றுதான்
முதன் முதலில் படித்துள்ளேன்
படித்துள்ளேன் என்பதை விட மனதில் பதித்துள்ளேன் என்பதே மிகச்சரி
வரிகள் நன்றாக உள்ளது தொடர்ந்தும் தாருங்கள் காத்திருக்கிறோம்
உம் படைப்புக்காய் நிழல் போன்று பின்னே தொடர

வாழ்த்துக்கள் + பாராட்டுக்கள்

தமிழ்தாசன்
22-12-2008, 12:05 PM
உன் நிழல்கண்டு
விழாக்கொண்டன
என் நிழல்கள்.


நீ காதலிக்க
தொடங்கிய பின்
என் நிழலிலும்
வர்ணங்கள்![/
நெஞ்சில் நிழலாடும் வரிகள்.- ஆதாலால்
நெஞ்சமெங்கும் ஒளி வர்ணங்கள்.

பாரட்டுக்கள் பாடுங்கள் இன்னும் பருக மன்றம் காத்திருக்கிறோம்!

சசிதரன்
22-12-2008, 12:36 PM
காதல் சிந்தும் வரிகள் பிரியன் அவர்களே... அருமை...:)

gans5001
26-12-2008, 05:03 AM
நீ…நான்…நிழல்… (http://priyanonline.com/?p=295)
ஒட்டி அமர்ந்தோம்
கட்டிக் கொண்டன
நிழல்கள்!

*

இவ்விடயத்தில்
உன்னைக்காட்டிலும்
உன் நிழல் மேல் ;
முத்தம் கேட்டால்
முகம் சுழிப்பதில்லை
என் நிழலிடம்!

- ப்ரியன்.

நிழல்...
உருவத்தை பிரதிபலிக்காமல்
உள்ளத்து உணர்வுகளை பிரதிபலித்ததால்
நிகழ்ந்தது போலும்