PDA

View Full Version : இள நரைக்கு மருந்து இருக்கா !!!



suresh Kumar.B
21-12-2008, 11:29 PM
இள நரைக்கு மருந்து இருக்கா ?... பக்க விளைவு இல்லாத மருந்து இருந்தா யாரவது சொல்லுங்கலேன்...


காலெஜூ பசஙக பயன் பெறட்டும்:nature-smiley-009:

மதுரை மைந்தன்
22-12-2008, 01:29 AM
இள நரைக்கு மருதாணி இலையை அரைத்து அல்லது ரெடி பேஸ்ட' இருந்தால் அதை நரை உள்ள இடத்தில் தடவி குளித்தால் நரை நீங்கிவிடும். காலேஜ் பசங்களை மருதாணி வாங்க சொல்லுங்க. அவங்களுக்கு நரை போகாவிட்டாலும் அவர்களின் கர்ல் பிரண்ட்ஸ்கள் முகத்தில நகை வரும் அதை கொடுத்தால்.

minmini
22-12-2008, 04:02 AM
மருதாணியுடன் யோகட் சேர்த்து பேஸ்ட் செய்து பூசலாம்

தினமும் தேங்காய் எண்ணையுடன் லெமன் சாரு சேர்த்து முடியை 15 நிமிடம் வரை [குறைந்தது] நன்றாக மஸாஜ் செய்யவும்[முடியின் வேர் வரை] பின் குளிக்கலாம்
லெமன் சாரு குறைத்து பாவிக்கவும்

முக்கியமாக அதிக கவலை,ஒழுங்கற்ற உணவு பாவினை இள நரைக்கு காரணமாக அமைகிறது. இவற்றிலும் கொஞ்ஞம் கவனம் செலுத்தலாமே

suresh Kumar.B
22-12-2008, 06:30 PM
மதுரை மைந்தன் மற்றும் மின்மெனிக்கு எனது நன்றிகள் .

,ஒழுங்கற்ற உணவு முறை என்பது என்னை போல் இறவு நேரங்களில் பணீபுரியும் மக்களிடம் நிறையவே இருக்கும் என நினைக்கிறென் -- உஷார் நண்பர்களெ..

பாரதி
01-03-2009, 01:31 PM
முடி நரைப்பதற்கு என்ன காரணம் என்று முடியைப்பிய்த்துக்கொண்டு யோசிப்பவர்களுக்கு ஒரு செய்தி.

உடலில் உள்ள என்சைம்களில், கேட்டலசே என்ற என்சைம் குறைவதால் ஏற்படும் தொடர்ச்சியான வேதிமாற்றங்களால் முடி நரைக்கிறதாம். இந்த என்சைமின் அளவு குறைவதால், முடியில் இயற்கையாக உண்டாகும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு என்ற வேதிப்பொருள் மாற்றமடையாமல் முடியில் சேர்வது அதிகமாகிறதாம். இதன் தொடர்ச்சியாக ஹைட்ரஜன் பெராக்ஸைடின் சேர்க்கையைத் தடுக்கும் மற்ற என்சைம்களும் குறைய ஆரம்பித்து விடுகிறதாம். இந்தத்தொடர்ச்சியான வேதிவினையைத் தடுப்பதன் மூலம் முடி நரைத்தலைத் தடுக்கும் வழி முறைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

நன்றி : வெப்எம்டி இணையதளம்.

அது வரை....?

இருக்கவே இருக்கிறது கோத்ரெஜ் ஹேர்டை.

வெற்றி
02-03-2009, 02:56 PM
ஹிஹிஹிஹி ....................:) :) (நற...நற)

அமரன்
02-03-2009, 03:53 PM
இள நரைக்கு மருந்து இருக்கா ?... பக்க விளைவு இல்லாத மருந்து இருந்தா யாரவது சொல்லுங்கலேன்...


காலெஜூ பசஙக பயன் பெறட்டும்:nature-smiley-009:

அப்போ.. காலேஜ் பசங்க மட்டுந்தான் இளயவங்களா..

நிவாரணி தந்த பாரதி அண்ணாவுக்கு நன்றி.

samuthraselvam
03-03-2009, 09:40 AM
உணவு முறையும் கவலைகளும் வீணான சிந்தனைகளும் மட்டும் இள நரிக்கு காரணம் அல்ல.. இன்றைய காலகட்டத்தில் தலைக்கு அதிக வேதிப் பொருட்கள் சேர்ந்த சாம்பூ பயன்படுத்துதல் முக்கிய காரணம். எங்கள் கிராமத்தில் தலைக்கு சீகைக்காய், அரப்பு, கடலை மாவு, பயத்தம் மாவு இவைகளையே அதிகம் பயன்படுத்துவார்கள். இதெல்லாம் முன்பு.
ஆனால் இப்போது அதிக வேதிப் பொருட்கள் சேர்ந்த சாம்பூ தான் பயன்படுத்துகிறார்கள்.

செம்பருத்தி இலையை நன்றாக அரைத்து அத்துடன் மருதாணி இலையையும் அரைத்து அந்த கலவையை வடைபோல் தட்டி தேங்காய் எண்ணெயில் பொறித்து எடுத்து விட்டு அந்த எண்ணெயை நுடியின் வேர்க்கால்களுக்கு படும்படி நன்றாக தேய்த்தால் செம்பட்டை இளநரை ஆகிய பிரச்சனைகள் குறையும்.

நிரன்
03-03-2009, 11:06 AM
அப்போ.. காலேஜ் பசங்க மட்டுந்தான் இளயவங்களா..

நிவாரணி தந்த பாரதி அண்ணாவுக்கு நன்றி.

ஐ ஐ... அண்ணோவ் என்ன இந்தப் பட்டியலுக்க வர ஐடியா இருக்கா :D விடமாட்டம்லே...

அப்படியே முடி உதிர்வதை தடுக்கவும், இருப்பதைக் காக்கவும் ஏதவது உருப்படியான வழி இருந்தால் கூறுங்களேன் புண்ணியமாப் போகும்:D

அறிஞர்
03-03-2009, 10:00 PM
காபி, தேநீர் அருந்துவதால்.. நரை ஏற்படும் என கேள்விப்பட்டிருக்கிறேன்.



அப்படியே முடி உதிர்வதை தடுக்கவும், இருப்பதைக் காக்கவும் ஏதவது உருப்படியான வழி இருந்தால் கூறுங்களேன் புண்ணியமாப் போகும்:D
சீக்கிரம் கல்யாணம் பண்ணி.. பிள்ளை பெற்றுக் கொள்ளுங்கள்.. பின் கவலைப்பட தேவையில்லை.

நிரன்
04-03-2009, 06:45 PM
சீக்கிரம் கல்யாணம் பண்ணி.. பிள்ளை பெற்றுக் கொள்ளுங்கள்.. பின் கவலைப்பட தேவையில்லை.


நீங்க வேறயண்ணா!
இப்படியெல்லாம் பெரிய வார்த்தை சொல்லி பயப்படுத்துறீங்க.. அத விட மேல காலி ஆகிறதே பெட்டர்:D

அக்னி
07-03-2009, 12:37 PM
இளநரை நமக்கும் இருந்திச்சு. இப்ப குறஞ்சு போச்சு...
எப்படீன்னு கேக்கறீங்களா...
நரைச்சதில கனக்க கொட்டிப் போச்சுதுங்க...


அப்படியே முடி உதிர்வதை தடுக்கவும், இருப்பதைக் காக்கவும் ஏதவது உருப்படியான வழி இருந்தால் கூறுங்களேன் புண்ணியமாப் போகும்:D
சந்தோஷமான விடயம் கூறியதற்கு ரொம்ப நன்றி நிரன்...
எப்ப ட்ரீட் வைக்கப் போறீங்க...


இப்படியெல்லாம் பெரிய வார்த்தை சொல்லி பயப்படுத்துறீங்க.. அத விட மேல காலி ஆகிறதே பெட்டர்:D
நம்பிட்டேன்... நான் நம்பிட்டேன்...

மதி என்று ஒருவரும் மன்றத்தில இப்படித்தான் சொல்லிட்டுத் திரியறாரு...

ச்ச்சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்...

anna
26-08-2009, 12:05 PM
நரையாகி விட்ட முடியை ஒண்ணும் பண்ண முடியாது. மேலும் நரைக்காமல் இருக்க வேண்டுமானல் மேற் சொன்ன வைத்திய வகைகள் பயன்படும். நரை வந்து விட்டால் என்ன செய்வது? ஒண்ணும் செய்ய வேண்டாம் அதுபாட்டுக்கு இருந்து விட்டு போகிறது. நாம் என்ன சினிமாவிலா நடிக்கின்றோம்.கண்ட மையை தடவிய பின் என் நண்பன் ஒருவனுக்கு அலர்ஜியாகி முகமே வீங்கி விட்டது. அப்புறம் என்ன தடவுன மையை விட மருத்துவத்துக்கு செலவு அதிகமாகி விட்டது.

பால்ராஜ்
11-11-2009, 10:13 PM
கண்ணாடியைப் பார்க்காமல் இருந்தால் பிரச்சினையே இல்லை..