PDA

View Full Version : விஸ்டாவில் யாஹூ மெயிலில் தமிழில் எழுதுவது பற்றிய சந்தேகம்.



உதயா
21-12-2008, 05:46 PM
வணக்கம்..

நான் புதிதாக வாங்கியிருக்கும் laptop பில் யாஹூ மெயிலில் தமிழில் எழுதும் போது, தமிழ் எழுத்து வருகிறது ஆனால் சரியான எழுத்துக்கள் வருவதில்லை.

உதயா என்று எழுதினால்: ?தயா இப்படி வருகிறது.

தமிழ் மன்றம் என்று எழுதினால் : ?மிழ் ம????ற?் இப்படி வருகிறது.

ஈகலப்பை கொண்டு எழுதினாலும், NMHWriter கொண்டு எழுதினாலும் இதே பிரச்சனை தான். இந்த பிரச்சனை யாஹூ மெயிலில் மட்டுமே.

விளக்கம் கொடுங்கள் நண்பர்களே..

அமரன்
21-12-2008, 09:13 PM
நீங்களெ அதிஷ்டசாலி உதயா. எனக்கு கூகிளிலும் இதே பிரச்சினைதான். இ-கலப்பை, NMHWrite போன்றவற்றால் தமிழில் உள்ளீடு செய்யும்போது பிச்சுபோட்ட ஜிலேபி போலாகிவிடுகிறது தமிழ். அதுவே எழில்நிலா போன்ற மாற்றிகள் மூலம் வெட்டி ஒட்டல் பொறிமுறையில் உள்ளீடு செய்தால் சுந்தரத்தமிழ் சிரிக்கிறது. உங்களுக்கு அடுத்த பெஞ்சு எனக்கு.

உதயா
22-12-2008, 01:48 AM
நமக்கு பாடம் நடத்த வாத்தியார்கள் யாரும் வர மாட்டாங்களா?

அன்புரசிகன்
22-12-2008, 02:26 AM
தனியே யாஹூ அல்லது ஜிமெயிலில் மட்டும் தான் வருகிறதா? இல்லை எல்லா இடங்களிலும் வருகிறதா? தனிய வருகிறதென்றால் ஏதோ பிரச்சனை தான். ஆனால் பொதுவாக நீங்கள் complex script language fonts ஐ முழுமையாக நிறுவாதவிடத்து இவ்வாறான பிரச்சனை நிச்சயமாக வரும். அதாவது ஒரு எழுத்துடன் இன்னொரு எழுத்து சேராது. உ-ம் ந ீ இப்படி வரும். (நீ என்பது) ஒருங்குக்குறிக்கான எழுத்துருக்கள் நிறுவாதவிடத்து பெட்டிகளாக எழுத்துக்கள் தெரியும்.

அலுவலகத்தில் அனைத்தும் xp என்பதால் வீடு சென்று எவ்வாறு நிறுவவேண்டு்ம் என சொல்லலாம். எனக்கு அனைத்தும் அத்துப்படி இல்லை. பார்த்து தான் சொல்லுவேன். உங்கள் அதிர்ஷ்டத்திற்கு பிரவீன் வந்தால் அவர் நி்ச்சயம் உதவுவார்.

உதயா
23-12-2008, 11:59 AM
அன்புரசிகன்..

யாஹூ மெயில், ஜிமெயிலில் மட்டுமே. யாஹூ சாட் விண்டோ மற்றும் ஜீ சாட் விண்டோவில் தமிழில் எழுத எந்த பிரச்சனையும் இல்லை.

என் வீட்டில் இருப்பது விஸ்டா.

உதயா
13-01-2009, 03:19 PM
அலுவலகத்தில் அனைத்தும் xp என்பதால் வீடு சென்று எவ்வாறு நிறுவவேண்டு்ம் என சொல்லலாம். எனக்கு அனைத்தும் அத்துப்படி இல்லை. பார்த்து தான் சொல்லுவேன். உங்கள் அதிர்ஷ்டத்திற்கு பிரவீன் வந்தால் அவர் நி்ச்சயம் உதவுவார்.
எதாவது வழி இல்லையா என் பிரச்சனைக்கு?

எ.கா; எப்?டி எ?்ழுத்????னா??ம? ???யா ????ல்ல??

உதயா
17-01-2009, 06:30 PM
யாரும் இந்தப்பக்கம் திரும்பி பார்க்கவில்லையா?

அன்புரசிகன்
18-01-2009, 02:28 AM
பார்த்தேன்... ஆனால் விஸ்டாவில் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் என்ற செய்தி தெரிந்ததும் விட்டுவிட்டேன். எதற்கும் regional and Language settings ல் சென்று ஏதாவது முடிகிறதா என்று பாருங்கள். எனக்கு எதுவும் நிறுவாது சரியாக வேலைசெய்கிறது...

உதயா
18-01-2009, 05:21 AM
திரு.அன்பு அவர்களே...

பிரச்சனை என்ன வென்றால், என் வீட்டில் உள்ள விஸ்டாவில், yahoo and gmail லில் எந்த ஈமெயிலும் compose செய்யமுடியவில்லை. மற்ற எல்லா இடங்களிலும் தமிழில் எழுத முடிகிறது.


regional and Language settings விஸ்டாவில் அப்படி ஒன்றும் தனி முறைபடுத்துதல் இல்லையே?

கொஞ்சம் விளக்கம் கொடுத்தால் உதவியாக இருக்கும். ( அதிகம் தொந்தரவு கொடுக்கிறேனோ? )

(ப்ரவீன் இந்தப்பக்கம் வரவில்லையா? இல்லை வந்தும் வராததுபோல் போய்விட்டாரா? :smilie_abcfra: )

அன்புரசிகன்
18-01-2009, 05:35 AM
உங்கள் கேள்வி எனக்கு புரிந்தது. உதவத்தான் முடியவில்லை. வருந்துகிறேன்....

உங்கள் துரதிஷ்டம். பிரவினும் இந்தப்பக்கம் வரல.... எதுக்கும் தனிமடல் ஒன்று போட்டுவிடுங்கள்.

அன்புரசிகன்
18-01-2009, 05:38 AM
http://unicomtech.blogspot.com/2007/07/how-to-configure-windows-vista-to-take.html
http://www.microsoft.com/globaldev/vista/vista_tools/vista_command_line_international_configuration.mspx
முயன்று பாருங்கள்.

உதயா
18-01-2009, 05:53 AM
நல்லது. நான் வீடு சென்று முயற்சித்து பதில் தருகிறேன்.

உதயா
18-01-2009, 04:14 PM
நாம் விவாதித்த எந்த முறையும் எனக்கு கைகூடவில்லை. ஆனால்...

பிரச்சனையை கண்டு பிடித்துவிட்டேன்...

yahoo mail classic கில் என்னால் தமிழில் எழுத முடிகிறது.

புதிய yahoo mail ( இப்போது மெயிலில் இருந்தே சாட் செய்யும் முறை இருக்கிறது தானே அங்கே ) எழுதும் போது மட்டும் மேலே சொன்ன முறையில்
எப்?டி எ?்ழுத்????னா??ம? ???யா ????ல்ல?? இப்படி வருகிறது. ஆனால் xp யில் இந்த பிரச்சனை இல்லை.

மிக்க நன்றி அனைவரின் அறிவுரைக்கு.

praveen
19-01-2009, 03:30 AM
என்னிடம் விஸ்டா தற்போது இல்லை, நான் 2000-யே அதிகம் நேசிப்பவன். எனவே எக்ஸ்பி கூடுதலாக வைத்திருக்கிறேனே அன்றி விஸ்டா இல்லை. எனவே சரியாக பதில் தர முடியவில்லை.

யாகூ மெசஞ்சரில் லதா பாண்ட் அல்லது வேறு ஒரு யுனிகோடு பாண்ட் தேர்ந்தெடுங்கள். அல்லது உங்கள் யாகூ மெம்சஞ்சர் நிரந்தர பாண்ட் என ஒரு யுனிகோடு(அனைவர் கம்ப்யூட்டரிலும் இருக்கும்படியானது) பாண்ட் (ஏரியல் எம்.எஸ் யுனிகோடு)வைத்து கொள்ளுங்கள். இது யாரெல்லாம் ஆபிஸ் தொகுப்பு வைத்திருக்கிறார்களோ அதில் இருக்க கூடும்.

எனினும் கீழே கண்ட பக்கம் சென்றால் அனைவர் பிரச்சினையும் தீரும்.

http://www.lipikaar.com/help/indic-support-and-browser-help

http://messenger.yahoo.com/plugins/view/2047/