PDA

View Full Version : மழை பெய்த ஈர சாலையில் அமைந்ததென் பயணம்.

சசிதரன்
21-12-2008, 02:19 PM
மழையிடம் கடன் வாங்கிய துளிகளை
மழை விட்ட பின்பும் தூறிக் கொண்டிருந்தன
சாலையோர மரங்கள்...

பிள்ளையின் கிறுக்கல் போல்
புரியாத ஓவியமாய்
வானமெங்கும் பரவி கிடந்தன மேகங்கள்...

இன்னதென்று சொல்ல முடியாத
வண்ணம் கொண்ட பூக்கள் மீது மயக்கம் கொண்டு
வனமெங்கும் சுற்றி திரிந்தன பட்டாம்பூச்சிகள்...

வண்ணங்கள் வழியே வானளக்க
முற்பட்ட ஓவியன் யாரென்று தெரியவில்லை
அழகாய் பூத்திருந்தது வானவில்...

கடந்து சென்ற வாகனத்தின் சன்னல் வழி
கையசைத்த குழந்தையின் சிரிப்பில் தெறித்து விழுந்தது
எங்களுக்கிடையேயான அந்நியம்...

வாகனத்தின் வேகத்தில் என் நெற்றிப் பட்டு
தெறித்த மழைத்துளியின் ஈரத்தில் உணர்ந்தேன்
எனக்கான இயற்கையின் முத்தத்தை...

நிரன்
21-12-2008, 02:37 PM
இயற்கையின் வரத்தை இயல்பன வா்த்தைகள் அருமையாக வடித்திருக்கிறது கவியை
மழையிடம் கடன் வாங்கி மரங்கள் துாவுகியது
இங்கே தமிழிடம் கடன் வாங்யுதது தமிழ் கவி

நன்றாக உள்ளது வரிகள் வாழ்த்துக்கள்:icon_b:

வசீகரன்
22-12-2008, 03:46 AM
அசத்தி விட்டீர்கள் சசி...
இது மன்றத்தில் உங்களின் முதல் கவிதையா...???
மிக பிரமாதம்..

வாகனத்தின் வேகத்தில் என் நெற்றிப் பட்டு
தெறித்த மழைத்துளியின் ஈரத்தில் உணர்ந்தேன்
எனக்கான இயற்கையின் முத்தத்தை...

ரசித்து எழுதி இருக்கிறீர்கள் கவிதையை... அற்புதமான வரிகள் நேர்த்தியான வடிவமைப்பு..
பாராட்டுக்கள் நண்பரே....!!!
நானும் சில நிமிடங்கள் மழையில் நனைந்த சுகானுபவம் அடைந்தேன்...!!!

தொடர்ந்து எழுதுங்கள்...

vijima
22-12-2008, 03:55 AM
அருமையான கவிதை. மழையில் நனைந்த சிலிர்ப்பு ஏற்ப்பட்டது.
நன்றி.

சிவா.ஜி
22-12-2008, 07:53 AM
அனுபவித்து எழுதிய வரிகள்.....வாசிக்க ஆனந்தமாய் இருக்கிறது. மழையின் சில்லிப்பு உடலெங்கும் பரவுவதைப்போல ஒரு சிலிர்ப்பு. மிக அருமை சசிதரன்.

மழையிடம் கடன் வாங்கிய துளிகளை
மழை விட்ட பின்பும் தூறிக் கொண்டிருந்தன
சாலையோர மரங்கள்...

(தூறி என்பதற்கு பதில் தூவி என்று இருந்தால் அழகு இன்னும் கூடுமோ எனத் தோன்றுகிறது)

இன்னும் எழுதுங்கள். வாழ்த்துகள்+ பாராட்டுக்கள்.

சசிதரன்
22-12-2008, 12:41 PM
இயற்கையின் வரத்தை இயல்பன வா்த்தைகள் அருமையாக வடித்திருக்கிறது கவியை
மழையிடம் கடன் வாங்கி மரங்கள் துாவுகியது
இங்கே தமிழிடம் கடன் வாங்யுதது தமிழ் கவி

நன்றாக உள்ளது வரிகள் வாழ்த்துக்கள்:icon_b:

மிக்க நன்றி நண்பரே...:)

சசிதரன்
22-12-2008, 12:43 PM
அசத்தி விட்டீர்கள் சசி...
இது மன்றத்தில் உங்களின் முதல் கவிதையா...???
மிக பிரமாதம்..

வாகனத்தின் வேகத்தில் என் நெற்றிப் பட்டு
தெறித்த மழைத்துளியின் ஈரத்தில் உணர்ந்தேன்
எனக்கான இயற்கையின் முத்தத்தை...

ரசித்து எழுதி இருக்கிறீர்கள் கவிதையை... அற்புதமான வரிகள் நேர்த்தியான வடிவமைப்பு..
பாராட்டுக்கள் நண்பரே....!!!
நானும் சில நிமிடங்கள் மழையில் நனைந்த சுகானுபவம் அடைந்தேன்...!!!

தொடர்ந்து எழுதுங்கள்...

மிக்க நன்றி நண்பரே... இது எனது முதல் கவிதை அல்ல.... இதற்கு முன் இரண்டு கவிதைகள் பதிந்துள்ளேன் நண்பரே... நேரமிருந்தால் படித்து கருத்து சொல்லவும்...:)

சசிதரன்
22-12-2008, 12:43 PM
அருமையான கவிதை. மழையில் நனைந்த சிலிர்ப்பு ஏற்ப்பட்டது.
நன்றி.

மிக்க நன்றி நண்பரே... தொடர்ந்து விமர்சியுங்கள்...:)

சசிதரன்
22-12-2008, 12:48 PM
அனுபவித்து எழுதிய வரிகள்.....வாசிக்க ஆனந்தமாய் இருக்கிறது. மழையின் சில்லிப்பு உடலெங்கும் பரவுவதைப்போல ஒரு சிலிர்ப்பு. மிக அருமை சசிதரன்.

மழையிடம் கடன் வாங்கிய துளிகளை
மழை விட்ட பின்பும் தூறிக் கொண்டிருந்தன
சாலையோர மரங்கள்...

(தூறி என்பதற்கு பதில் தூவி என்று இருந்தால் அழகு இன்னும் கூடுமோ எனத் தோன்றுகிறது)

இன்னும் எழுதுங்கள். வாழ்த்துகள்+ பாராட்டுக்கள்.

மிக்க நன்றி நண்பரே... தூவி என்பதும் சிறப்பாகவே இருக்கிறது... மரங்கள் தற்காலிக மேகங்களாக இருந்ததை குறிப்பிட்டே அவ்வாறு கூறினேன்... நீங்கள் சொன்ன பிறகே இந்த வார்த்தையும் அழகாய் தோன்றுகிறது... நன்றி நண்பரே...:)

ஆதவா
22-12-2008, 01:29 PM
மழையிடம் கடன் வாங்கிய துளிகளை
மழை விட்ட பின்பும் தூறிக் கொண்டிருந்தன
சாலையோர மரங்கள்...

பிள்ளையின் கிறுக்கல் போல்
புரியாத ஓவியமாய்
வானமெங்கும் பரவி கிடந்தன மேகங்கள்...

இன்னதென்று சொல்ல முடியாத
வண்ணம் கொண்ட பூக்கள் மீது மயக்கம் கொண்டு
வனமெங்கும் சுற்றி திரிந்தன பட்டாம்பூச்சிகள்...

வண்ணங்கள் வழியே வானளக்க
முற்பட்ட ஓவியன் யாரென்று தெரியவில்லை
அழகாய் பூத்திருந்தது வானவில்...

கடந்து சென்ற வாகனத்தின் சன்னல் வழி
கையசைத்த குழந்தையின் சிரிப்பில் தெறித்து விழுந்தது
எங்களுக்கிடையேயான அந்நியம்...

வாகனத்தின் வேகத்தில் என் நெற்றிப் பட்டு
தெறித்த மழைத்துளியின் ஈரத்தில் உணர்ந்தேன்
எனக்கான இயற்கையின் முத்தத்தை...

அபாரம் சசி..... வெகு அற்புதமான ஒரு படைப்பை கண்முன்னே நிறுத்தியிருக்கிறீர்கள்... மன்றத்தில் உங்களுக்கென தனி இடம் காத்திருக்கிறது,.

கவிதை செல்லும் பாதை, மெல்ல ரசிப்புத்தன்மையோடு, அப்பட்டமான கவிதைத்தனமாகச் செல்லுகிறது. ஒரு நொடி கணங்களை எவ்வளவு தூரம் வரைக்கும் அழகு படுத்தமுடியும்?.. பிரம்மாதம் சசிதரன்,.

வருணிப்புகள், உருவகங்கள், உவமைகள் அவை சொல்லவந்தவற்றை அழகுபடுத்திச் சொல்லி, ஒவ்வொரு தளத்திலும் அதனதன் உயர்வையே உயர்த்தி நிற்கிறது. கருவின் எளிமையை எழுத்தாளுமை தாங்கிச் செல்கிறது. சாலையோர மரங்களைக் குறிப்பிடும் பொழுது அவை மழையிடமிருந்து கடன் வாங்கப்பட்டது என்று சொல்லுகிறீர்கள். சிவா.ஜி அண்ணா சொல்லியதைப் போன்று தூவி எனும் சொற்பதம் சிறப்பாக அமையும்.. உங்களது ஏற்புரை மிகவும் கவர்ந்த வண்ணம் இருக்கிறது. மரங்கள் மழையிடமிருந்து கடன் பெறுகின்றனவா? அல்லது திணிக்கப்படுகின்றனவா? ஒரு குளியலுக்கு ஆயத்தமாக தன்னிடமிருந்த நாற்றம் வெளியேற்றித்தான் மழை பெறுகிறது மரம்..

சாலையோர மரங்கள் : ஒரு காட்சி விவரணை. போகிற போக்கில் இருக்கிற ஒரு சாலையோர மரம்... என் வீட்டு, உன் வீட்டு மரமல்ல.. கவிதை ஒரு திறந்த வெளிச் சாலையில் எழுகிறது.

மேகங்களை ஒப்பிடும்பொழுது பிள்ளையின் கிறுக்கல்களாகச் சொல்லுகிறீர்கள். ஒன்றை ஒப்பும் பொழுது ஒன்றைவிட மற்றொன்று தாழ்ந்து இருக்கவேண்டும் (நன்றி:மாமனார்) இங்கே இரு உயர்வுகளை ஒப்பிடும் பொழுது எது தாழ்வு, எது உயர்வு என்று கணிக்க முடியவில்லை. பிள்ளையின் ஓவியம் ஓரிடத்தில் தங்கியிருக்காது. மேகம் ஓரிடத்தில் இருந்ததாக புவியியல் கூறுவதில்லை.

பட்டாம்பூச்சிக்களின் மயக்கம் அப்படியொன்றும் புதுமையானதல்ல. சொல் வைத்து கட்டப்பட்ட வரிகள் நன்றெனச் சொல்லலாம்.

வானவில்லை அளவுகோலாக்கும் வரிகள் 'அட' போடவைக்கின்றன. ஓவியன் அளப்பதில்லை என்றாலும் வர்ணக் கோலெடுத்து வரையும் தன்மை ஓவியனிடத்து நிரம்பவே இருக்கின்றது. இந்த இடத்தை வருணிக்கும்பொழுது அதன் எளிமையைத் தின்றுவிடாத சொற்களும், நயமும், வரியமைப்பும் கவர்கின்றன.

அடுத்து வரிகள் இருவரைச் சுட்டி, அவர்களின் பிணைப்பை வெட்கப்படுத்துகிறது குழந்தையின் சிரிப்பு. கவிதை வாகனத்தின் வழி பயணப்படுகிறது. கடந்து சென்ற வாகனங்கள் கவிதைக்கு உறுப்புக்களாக மாறுகின்றது. அந்த மழைத் தெறிப்பு, இயற்கையின் முத்தமாகக் கடந்து செல்வதில் வியப்பில்லை..

இயற்கையின் ஆளுமை நம்மை எத்தனை தூரம் கட்டி வைத்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது கவிதை.. உடன் சென்றவர் மனைவியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கிடையேயான அந்நியோன்யமும் அதில் சற்றேனும் பிளவு உண்டு என்று மறைமுகமாகச் சொல்லிச் செல்லும் கட்டாயமும் ஏற்படுகிறது. இயற்கையின் முத்தம் உணர்வதில் என்ன காரணம் இருக்கமுடியும்?

ஆறுதல்..

இரு பிணைப்புகளிடையே (தம்பதி?) ஏற்பட்ட சலனம், அது முடிந்த பின்னும் வடிந்து கொண்டிருந்தது (மழையும் மரங்களும்)
அச் சலனத்திற்குண்டான காரணம் (மேகம்) முடிவகளற்று நீண்டும் வடிவங்களற்று மாறியும் இருந்தது (மேக உருமாற்றம்)
பிரச்சனைகளுக்கு மத்தியில் பிணைப்புகளில் ஒன்று மற்றொன்றைத் தேடவைக்கிறது. (பட்டாம்பூச்சியும் பூக்களும்) அது தீர்வுக்காக இருக்குமோ என்ற ஆதங்கத்தில்.. பிரச்சனைகளை அளக்க தீர்மானிக்கிறது இரு பிணைப்புகளிடையே உண்டான தூரம் (வானவில்லும், அளப்பதும்) எல்லோமே அவ்வவ்விதமாகச் சென்றுகொண்டிருக்க, இயலாமை தெறித்து வெறித்தது (குழந்தையின் சிரிப்பு) ஆறுதல்கள் பிரச்சனையின் மூலத்திலிருந்து பிறக்கின்றன. அவை சொட்டுக்களாக....

சசி.. இரு முனைகளுக்கிடையே உண்டான தூரம்தான் ஒன்று உதிக்கக் காரணமாக இருக்கும்... உங்கள் கவிதை மறைந்து நின்று சொல்வது அதுதான்... இயல்பான உங்கள் கவிதையை சிதைத்திருந்தால் மன்னிப்பைத் தவிர வேறேதுவும் வேண்டுவதில்லை....

அன்புடன்
ஆதவன்.

தமிழ்தாசன்
22-12-2008, 04:14 PM
ஈரச்சாலையில் நீங்களும் நனைந்து
ஓரத்தில் நின்ற எங்களையும் நனைத்து - மழைச்
சாரலில் மனம் ஏறுகிறதே அந்த
ஈர முத்தத்தில்!

ஈரம் கண்டு - மனப்
பாரம் விட்டன வரிகள்.
இயற்கையும் கடன் வாங்குதல் கண்டு வியந்தேன்.

வானளந்த ஓவியன்.... அழகு ஓவியம்.

இயற்கைமுத்தம் அழகுச் சத்தம் அதன் இரகசியம் உங்கள் வரிகளின் உச்சம்.
தொடருங்கள். நனைவோம்.
காதல் இயற்கைத்தாவல் அடுத்து?

kulirthazhal
23-12-2008, 04:43 AM
சிந்தனையும் வரிவடிவமும் மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள்.

நிகழ்வுகளை உணர்வுகளாக தரும் கவிதைகளே என்றும் நிலைக்கும், உமது எண்ணங்கள் இந்த பூமிப்பந்தில் சிக்கிக்கொள்ளப்போவதில்லை, பறந்து பரவுங்கள், அங்கே உலவும் வரம்பில்லா சிந்தனைகளோடு வலைப்படுங்கள், உங்கள் கண்ணில் தெறித்ததெல்லாம் கவிதைகளாகும். நானும் ரசிக்க காத்திருக்கிறேன்.

சசிதரன்
23-12-2008, 08:40 AM
அபாரம் சசி..... வெகு அற்புதமான ஒரு படைப்பை கண்முன்னே நிறுத்தியிருக்கிறீர்கள்... மன்றத்தில் உங்களுக்கென தனி இடம் காத்திருக்கிறது,.

கவிதை செல்லும் பாதை, மெல்ல ரசிப்புத்தன்மையோடு, அப்பட்டமான கவிதைத்தனமாகச் செல்லுகிறது. ஒரு நொடி கணங்களை எவ்வளவு தூரம் வரைக்கும் அழகு படுத்தமுடியும்?.. பிரம்மாதம் சசிதரன்,.

வருணிப்புகள், உருவகங்கள், உவமைகள் அவை சொல்லவந்தவற்றை அழகுபடுத்திச் சொல்லி, ஒவ்வொரு தளத்திலும் அதனதன் உயர்வையே உயர்த்தி நிற்கிறது. கருவின் எளிமையை எழுத்தாளுமை தாங்கிச் செல்கிறது. சாலையோர மரங்களைக் குறிப்பிடும் பொழுது அவை மழையிடமிருந்து கடன் வாங்கப்பட்டது என்று சொல்லுகிறீர்கள். சிவா.ஜி அண்ணா சொல்லியதைப் போன்று தூவி எனும் சொற்பதம் சிறப்பாக அமையும்.. உங்களது ஏற்புரை மிகவும் கவர்ந்த வண்ணம் இருக்கிறது. மரங்கள் மழையிடமிருந்து கடன் பெறுகின்றனவா? அல்லது திணிக்கப்படுகின்றனவா? ஒரு குளியலுக்கு ஆயத்தமாக தன்னிடமிருந்த நாற்றம் வெளியேற்றித்தான் மழை பெறுகிறது மரம்..

சாலையோர மரங்கள் : ஒரு காட்சி விவரணை. போகிற போக்கில் இருக்கிற ஒரு சாலையோர மரம்... என் வீட்டு, உன் வீட்டு மரமல்ல.. கவிதை ஒரு திறந்த வெளிச் சாலையில் எழுகிறது.

மேகங்களை ஒப்பிடும்பொழுது பிள்ளையின் கிறுக்கல்களாகச் சொல்லுகிறீர்கள். ஒன்றை ஒப்பும் பொழுது ஒன்றைவிட மற்றொன்று தாழ்ந்து இருக்கவேண்டும் (நன்றி:மாமனார்) இங்கே இரு உயர்வுகளை ஒப்பிடும் பொழுது எது தாழ்வு, எது உயர்வு என்று கணிக்க முடியவில்லை. பிள்ளையின் ஓவியம் ஓரிடத்தில் தங்கியிருக்காது. மேகம் ஓரிடத்தில் இருந்ததாக புவியியல் கூறுவதில்லை.

பட்டாம்பூச்சிக்களின் மயக்கம் அப்படியொன்றும் புதுமையானதல்ல. சொல் வைத்து கட்டப்பட்ட வரிகள் நன்றெனச் சொல்லலாம்.

வானவில்லை அளவுகோலாக்கும் வரிகள் 'அட' போடவைக்கின்றன. ஓவியன் அளப்பதில்லை என்றாலும் வர்ணக் கோலெடுத்து வரையும் தன்மை ஓவியனிடத்து நிரம்பவே இருக்கின்றது. இந்த இடத்தை வருணிக்கும்பொழுது அதன் எளிமையைத் தின்றுவிடாத சொற்களும், நயமும், வரியமைப்பும் கவர்கின்றன.

அடுத்து வரிகள் இருவரைச் சுட்டி, அவர்களின் பிணைப்பை வெட்கப்படுத்துகிறது குழந்தையின் சிரிப்பு. கவிதை வாகனத்தின் வழி பயணப்படுகிறது. கடந்து சென்ற வாகனங்கள் கவிதைக்கு உறுப்புக்களாக மாறுகின்றது. அந்த மழைத் தெறிப்பு, இயற்கையின் முத்தமாகக் கடந்து செல்வதில் வியப்பில்லை..

இயற்கையின் ஆளுமை நம்மை எத்தனை தூரம் கட்டி வைத்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது கவிதை.. உடன் சென்றவர் மனைவியாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கிடையேயான அந்நியோன்யமும் அதில் சற்றேனும் பிளவு உண்டு என்று மறைமுகமாகச் சொல்லிச் செல்லும் கட்டாயமும் ஏற்படுகிறது. இயற்கையின் முத்தம் உணர்வதில் என்ன காரணம் இருக்கமுடியும்?

ஆறுதல்..

இரு பிணைப்புகளிடையே (தம்பதி?) ஏற்பட்ட சலனம், அது முடிந்த பின்னும் வடிந்து கொண்டிருந்தது (மழையும் மரங்களும்)
அச் சலனத்திற்குண்டான காரணம் (மேகம்) முடிவகளற்று நீண்டும் வடிவங்களற்று மாறியும் இருந்தது (மேக உருமாற்றம்)
பிரச்சனைகளுக்கு மத்தியில் பிணைப்புகளில் ஒன்று மற்றொன்றைத் தேடவைக்கிறது. (பட்டாம்பூச்சியும் பூக்களும்) அது தீர்வுக்காக இருக்குமோ என்ற ஆதங்கத்தில்.. பிரச்சனைகளை அளக்க தீர்மானிக்கிறது இரு பிணைப்புகளிடையே உண்டான தூரம் (வானவில்லும், அளப்பதும்) எல்லோமே அவ்வவ்விதமாகச் சென்றுகொண்டிருக்க, இயலாமை தெறித்து வெறித்தது (குழந்தையின் சிரிப்பு) ஆறுதல்கள் பிரச்சனையின் மூலத்திலிருந்து பிறக்கின்றன. அவை சொட்டுக்களாக....

சசி.. இரு முனைகளுக்கிடையே உண்டான தூரம்தான் ஒன்று உதிக்கக் காரணமாக இருக்கும்... உங்கள் கவிதை மறைந்து நின்று சொல்வது அதுதான்... இயல்பான உங்கள் கவிதையை சிதைத்திருந்தால் மன்னிப்பைத் தவிர வேறேதுவும் வேண்டுவதில்லை....

அன்புடன்
ஆதவன்.

மிக்க நன்றி நண்பர் ஆதவா அவர்களே... இத்தனை விரிவான, ஆழமான விமர்சனம் நான் சற்றும் எதிர்பாராதது. என் மகிழ்ச்சி அளவிட முடியாததாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. இத்தனை அழகான விளக்கம் தந்திருக்கிறீர்கள்... உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் சொன்னாலும் தகும்.

இரு முனைகளுக்கிடையே உண்டான தூரம்தான் ஒன்று உதிக்கக் காரணமாக இருக்கும்... உங்கள் கவிதை மறைந்து நின்று சொல்வது அதுதான்...

மிக அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள். உண்மையான வரிகள்... எத்தனை முறை சொன்னாலும் மீண்டும் மீண்டும் சொல்லவே தோன்றுகிறது... நன்றி...

தொடர்ந்து விமர்சியுங்கள்... :)

சசிதரன்
23-12-2008, 08:43 AM
சிந்தனையும் வரிவடிவமும் மிகச்சிறப்பு. வாழ்த்துக்கள்.

நிகழ்வுகளை உணர்வுகளாக தரும் கவிதைகளே என்றும் நிலைக்கும், உமது எண்ணங்கள் இந்த பூமிப்பந்தில் சிக்கிக்கொள்ளப்போவதில்லை, பறந்து பரவுங்கள், அங்கே உலவும் வரம்பில்லா சிந்தனைகளோடு வலைப்படுங்கள், உங்கள் கண்ணில் தெறித்ததெல்லாம் கவிதைகளாகும். நானும் ரசிக்க காத்திருக்கிறேன்.

நன்றிகள் குளிர்தழல்... உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.. :)

அமரன்
02-01-2009, 08:35 AM
சசி பின்ன ஆதவா பூ வைத்து விட்டார். நெருக்கடி நிறைந்த பயணத்தில் இத்தகைய கணங்கள்தான் அடுத்து வரும் மணிகளை அழகாகவும் அர்த்தமானதாகவும் ஆக்குகின்றன. பாராட்டுகள் இருவருக்கும்.

சசிதரன்
06-01-2009, 11:21 AM
சசி பின்ன ஆதவா பூ வைத்து விட்டார். நெருக்கடி நிறைந்த பயணத்தில் இத்தகைய கணங்கள்தான் அடுத்து வரும் மணிகளை அழகாகவும் அர்த்தமானதாகவும் ஆக்குகின்றன. பாராட்டுகள் இருவருக்கும்.

தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி நண்பரே...:)

பென்ஸ்
06-01-2009, 11:44 PM
இயற்க்கையையும் காதலையும் பாடதவன் எவன்...???

அவரில் ஒருவன் இயற்க்கை மேல் காதல் கொண்டு பாடும் போது.... இப்படி ஒரு கவிதை வரும்.

கவிதையை பிரித்து மெய்ந்த ஆதவாவிற்கு ஒரு செல்ல குட்(டு)

டு- கடைசி வரியில் செய்த விமர்சனத்திற்க்கு மன்னிப்பு கேட்பது...

நல்ல கவிதையே.... அதவா கவியை பற்றி பேசியதால் நான் நடையை பற்றி பேசலாம் என்று நினைத்தேன்...

புதுக்கவிதைக்கு இலக்கணம் தேவையில்லை என்றாலும், எதுகை பிடிக்க முயற்சித்தது பாராட்டதக்கது... ஆனால் "மழை" என்று மீண்டும் அதே வார்த்தைகழை வராமல் தவிர்த்திருந்திருக்கலாம்.

சின்ன சின்ன ஹைக்கூகளை கோர்த்து கவிதையாய் கொடுத்திருப்பது அழகாயிருந்தாலும்... சில பத்திகள் பெரிதும், சில சிறுதும்....

(அப்படா ... இவ்வளவு சூப்பர் கவிதையிலும் நாங்க குறை கண்டு பிடிச்சிடுவோமில்ல:D )