PDA

View Full Version : கணணித்திரை எழுத்துக்கள் மங்கலாக இருக்கிறது

shibly591
21-12-2008, 12:52 PM
எனது கணணித்திரை எழுத்துக்கள் மங்கலாக இருக்கிறது...நிறமும் சற்று வித்தியாசமாக இருக்கிறது..அண்மையில்தான் புதிய 128எம்.பி. ரெம் மாற்றினேன்..

என்ன காரணம் என்று தெரிந்தவர்கள் சொல'லுங்களேன்..

நன்றிகள்

அன்புரசிகன்
21-12-2008, 12:56 PM
கணினித்திரை பழுதடைந்திட பெரும் வாய்ப்பு உள்ளது.. மொனிட்டர் வாங்கி எவ்வளவு காலம் இருக்கும்??? (128 மெமறி போட்டதாக சொல்றீங்களே... இது கிட்டத்தட்ட 4-5 வருடம் முற்பட்டதாக இருக்கணுமே............ :D) நண்பர்களின் மொனிட்டர் ஒன்றை தற்காலிகமாக பொருத்தி பாருங்கள்... தீர்வு கிட்டும் என்று எண்ணுகிறேன்.

இதற்கும் ரம் ற்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. VGA பழுதடைந்திருந்தால் இடையிடை கறுப்பு நிறங்களிலும் செந்நிறங்களிலும் எழுத்துக்கள் அல்லது வின்டோக்கள் மாறிமாறி வரும்....

shibly591
21-12-2008, 01:00 PM
256 உம்.பி.ரெம் அல் 128 எம்.பி பழுதடைந்ததால் தற்காலிகமாக மற்றொரு 128 எம்.பி.ரெம்மை பாவிக்கிறேன்..

மொனிட்டர் வாங்கி 5 வருடங்கள் இருக்கும்..

முயற்சித்து பார்க்கிறேன்..

மற்றது 128 எம்.பி.ரெம் இணையத்தள வேகத்திற்கு போதுமானதா..???

நன்றி நண்பரே..

பாரதி
21-12-2008, 01:16 PM
அன்பு கூறியிருப்பதைப் போல உங்கள் பிரச்சினைக்கும் நினைவகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. கணினித்திரை பழுதடைந்திருக்க வாய்ப்பிருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. அதை உறுதி செய்ய வேறு ஒரு கணினித்திரையை தற்காலிகமாக உபயோகப்படுத்திப்பாருங்கள் ஷிப்லி.

அன்புரசிகன்
21-12-2008, 01:24 PM
மற்றது 128 எம்.பி.ரெம் இணையத்தள வேகத்திற்கு போதுமானதா..???

நன்றி நண்பரே..

இதிலும் கேவலமான வேகத்தில் நான் இணையம் பாவித்திருக்கிறேன்...

shibly591
21-12-2008, 01:30 PM
அன்பு கூறியிருப்பதைப் போல உங்கள் பிரச்சினைக்கும் நினைவகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. கணினித்திரை பழுதடைந்திருக்க வாய்ப்பிருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. அதை உறுதி செய்ய வேறு ஒரு கணினித்திரையை தற்காலிகமாக உபயோகப்படுத்திப்பாருங்கள் ஷிப்லி.

நன்றி பாரதி..

அப்படியே முயற்சிக்கிறேன்..

நிரன்
21-12-2008, 01:30 PM
மற்றது 128 எம்.பி.ரெம் இணையத்தள வேகத்திற்கு போதுமானதா..???

128 எம்.பி.ரெம் இணையதளத்தை மட்டும் நீங்கள் உபயோகிக்க தடங்கல்
இருக்காது ஆனால் வேறு ஏதாவது கணினியில் பயன்படுத்திக்கொண்டிருக்கும்
போது இணையதளத்தை பார்வையிடுகையில் இணையதளம் குறைந்த
வேகமாகவே காணப்படும். அதனால் 128 எம்.பி.ரெம் இல் ஏதாவது
ஒன்றை முடித்த பின் மற்றதை செய்தால் கணினி பெரிதும் லோட் ஆகாது.

shibly591
21-12-2008, 01:32 PM
இதிலும் கேவலமான வேகத்தில் நான் இணையம் பாவித்திருக்கிறேன்...

நான் எதற்கு இதை கேட்கிறேன் என்றால் 256 எம்.பி ரெம்மில் இணையம் பாவிப்பதை விட 128 எம்.பி ரெம்மில் இணையம் பாவிப்பது கடினமாக உள்ளது...

ரெம்மின் அளவு அதிகமாக இருந்தால் இணையப்பாவனை வேகமாக இருக்குமா..???

அன்புரசிகன்
22-12-2008, 02:34 AM
நான் எதற்கு இதை கேட்கிறேன் என்றால் 256 எம்.பி ரெம்மில் இணையம் பாவிப்பதை விட 128 எம்.பி ரெம்மில் இணையம் பாவிப்பது கடினமாக உள்ளது...

ரெம்மின் அளவு அதிகமாக இருந்தால் இணையப்பாவனை வேகமாக இருக்குமா..???

இணையத்தின் வேகத்திற்கும் உங்கள் ரம் இன் அளவிற்கும் சம்பந்தமே இல்லை... இணையப்பாவனைக்கும் ரம்மிற்கும் சம்பந்தம் இருக்கு... அதாவது உங்கள் கணினி அதற்கு ஈடுகொடுக்கவேண்டியிருக்கும்... பொதுவாக Microsoft இன் internet explorer ஆனது நினைவகத்தில் அதிக இடத்தினை பிடிக்கும். இவ்வாறான நேரத்தில் நெருப்பு நரியை உபயோகப்படுத்துங்கள். அது நல்லது.

நீங்கள் 2GB நினைவகம் வைத்திருந்து உங்கள் இணையவேகம் 512 or 256 kb/s ஆக இருந்தால் இணையம் இன்னும் மேய்ந்து கொண்டு தான் இருக்கும். அதுவும் இலங்கையில் dialup என்றால் சொல்லவேண்டியதில்லை...