PDA

View Full Version : DVD Writer இல் கோளாறு...



அக்னி
19-12-2008, 01:07 PM
எனது DVD Writer இல்,
DVD அடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால்,
CD அடிக்க முடியவில்லை. Nero, Media Player இரண்டினாலும் முயற்சித்துத் தோற்றுவிட்டேன்.
வாசிப்பதில் எந்தவிதப் பிரச்சினையும் தரவில்லை.
ஏன்?
இதனை எவ்வாறு சரிசெய்யலாம்?

எனது மடிக்கணினி விபரங்கள்:
Acer Aspire 1640
Windows XP
PIONEER DVD-RW DVR-K16RA


மேலதிக விபரங்கள் தேவைப்படின், சொல்லுங்கள்.

தீர்வை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.

பாரதி
19-12-2008, 05:21 PM
அன்பு அக்னி,
ஒரு வேளை இது driver அல்லது firmware பிரச்சினையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. உங்களுடைய dvd-rw drive-ஐ தனியே கழற்ற இயலுமா..? இயலும் எனில் கழற்றி விட்டு கணினியை சில முறை இயக்கிப்பார்த்து விட்டு மறுபடியும் நிறுவுங்கள். கீழ்க்கண்ட சுட்டிகள் உங்களுக்கு உதவக்கூடும்.

http://www.msghelp.net/showthread.php?tid=66850
http://forum.digital-digest.com/showthread.php?s=&threadid=49635
http://support.microsoft.com/default.aspx?scid=kb;en-us;Q314060

பிரச்சினைக்கு தீர்வு கிட்டியதெனில் எவ்விதம் கிட்டியது என இங்கே தாருங்கள். நன்றி.

அக்னி
19-12-2008, 05:52 PM
முதலாவது சுட்டியிலுள்ள அதே பிரச்சினைதான் எனக்கும்.
அதே கணினியும் கூட.

இதுவரை மடிக்கணினியை கழற்றிப் பார்த்ததில்லை.
கழற்றாமல் ஏதேனும் தீர்வுகள் இருப்பின், சொல்லித் தாருங்கள்.

இயலாதபட்சத்தில் இந்த வழியை முயற்சிக்கின்றேன்.

firmware என்ன என்று தெரியாதே எனக்கு.

நன்றி பாரதி அண்ணா...

பாரதி
19-12-2008, 06:02 PM
ஒரு பொருளில் பதிக்கப்பட்டுள்ள (உதாரணமாக read only memory அல்லது flash memory) மென்பொருள் firmware எனப்படுகிறது. இதனை சில வேளைகளில் இணையத்தின் மூலமே நாம் மேம்படுத்திக்கொள்ள முடியும். இது குறித்த தகவல்களுக்கு :
http://en.wikipedia.org/wiki/Firmware

உங்கள் கணினி வலைத்தளத்திற்கு சென்று இந்தப்பிரச்சினைக்கு தீர்வு கூறப்பட்டிருக்கிறதா என பாருங்கள் அல்லது அங்குள்ள உதவிப்பகுதியில் உங்கள் பிரச்சினையை கூறுங்கள்.

praveen
21-12-2008, 09:17 AM
இது பார்ம்வேர் பிரச்சினை இல்லை என்றே எனக்கு தெரிகிறது.

சிடி படிப்பதற்கு ஒரு லென்ஸும், டீவிடி படிப்பதற்கு ஒரு லென்ஸும் உள்ளே ஒரே அமைப்பில் உள்ளது. இதில் டீவிடி படிப்பதற்கானது சரியாகவும் சிடி படிப்பதற்கானது பழுதுபட்டிருந்தால் இப்படி இருக்கும். அந்த லென்ஸ் தனது பவரை இழந்திருந்தால் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் அதன் மீது தூசு பட்டிருந்தால் நாமே சரி செய்ய பார்க்கலாம். சீடி டிரைவின் டிரேயை வெளியே இழுத்து (இது மடிக்கனினி டிரைவில் மட்டுமே சாத்தியப்படும்) அந்த லென்ஸை (தன்னீர்/வேறு ராசாயனப்பொருள் கொண்டு துடைத்து விடாதீர்கள்) பனியன் துனி மாதிரி மெதுவானவற்றால் துடைத்து பாருங்கள். வெறும் வாயால் கூட ஊதலாம் ஆனால் அதனுடன் எச்சில் சேர்ந்து பட்டால் பிரச்சினை தான்.

செய்து பார்த்து பதில் போடுங்கள்.

அக்னி
20-01-2009, 10:35 PM
இவ்வளவு நாட்களாகப் பதிலளிக்காமைக்கு மன்னியுங்கள் நண்பர்களே...

பிரவீண் சொன்னபடி, நேற்று முயற்சித்தேன். பயனேதும் இல்லை.

பாரதி அண்ணா சொன்னபடி, செய்து பார்க்கவில்லை.
மடிக்கணினியை இதுவரை கழற்றிப் பார்த்ததில்லை.
அதனால் தயக்கமாக உள்ளது.

ஆனால், cd யை வாசிப்பதில் எந்தவிதப் பிரச்சினையுமில்லை.

நன்றி!

அன்புரசிகன்
21-01-2009, 02:31 AM
அதுசரி. அந்த மடிக்கணினி வாங்கி எத்தனை தசாப்தங்கள் ஆகிவிட்டன??? :D

அக்னி
21-01-2009, 12:17 PM
0.2 தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டது ரசிகரே...
அதற்கு மேல் தாக்குப் பிடிக்காதோ?

நிரன்
21-01-2009, 12:46 PM
0.2 தசாப்தம் தானே...:D வீட்டுக்குப் பக்கத்தில குப்பத் தொட்டி ஒன்றுக்குள்ள
போட்டுடுங்க நைட்ல யாருக்கும் தெரியாமப் போடுங்க இலத்திரணியல்
பொருட்கள் குப்பையில் இடக்கூடாது அக்னி உஷ்ஷ்ஷ்ஷஷரா இருங்க போடேக்க:D:D:D:D

அக்னி
21-01-2009, 01:09 PM
பார்ரா...


குப்பத் தொட்டி ஒன்றுக்குள்ள
போட்டுடுங்க
மன்னிச்சுக்கோங்க நிரன்...
உங்களுக்குத் தர, எனக்கு விருப்பமில்லீங்க...

ஏதாச்சும், காப்பாத்துவாங்கன்னு எதிர்ப்பார்ப்போட வந்தா,
வாரி விடுறதுக்குன்னே குரூப்பா அலையுறாங்களே...

பாரதி
22-01-2009, 04:18 PM
அன்பு அக்னி,
இந்தப்பிரச்சினை கணினி வாங்கியதில் இருந்தே இருக்கிறதா..? அல்லது நீங்கள் இயங்குதளம் அல்லது ஏதேனும் மென்பொருளை நிறுவிய பின்னர் வந்ததா..?

டிவிடி ரைட்டரின் டிரைவரை சரியாக நிறுவியுள்ளீர்களா..?

ஒரு முறை கணினியில் கண்ட்ரோல் பேனல் - சிஸ்டம் - ஹார்ட்வேர் - டிவைஸ் மேனேஜரில் இருக்கும் டிவிடி ரைட்டரை நீக்கி விட்டு, கணினியை நிறுத்தி மீள இயக்கிப்பாருங்கள்.

anna
22-01-2009, 04:57 PM
எனக்கு என்னமோ பாரதி சொல்வது தான் சரி எனத்தெரிகிறது. டிவைஸ் மேனேஜரில் போய் டி.வி.டி ரைட்டரை நீக்கி விட்டு ரீஇன்ஸ்டால் செய்யுங்கள்.