PDA

View Full Version : துணை (குட்டிக்கதை)



ஐரேனிபுரம் பால்ராசய்யா
19-12-2008, 10:29 AM
கோவையில் தனது நண்பனின் அறையில் தங்கிக்கொள்ளலாம் என்று ஆர்வத்துடன் வேலை தேடி வந்த ஜேக்கப்பிற்கு அது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. கோவைக்கு வெளியே பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் எண்ணூறு ருபாய் வாடகையில் தண்ணீர் வசதி, கழிவறை வசதி, இல்லாத அறையில் தங்கியிருந்தான் அவனது நண்பன் வினோ.

மறுநாள் காலை தனது பெட்டி படுக்கையுடன் புறப்பட்டு லாட்ஜில் தங்கிக்கொண்டான். ஒரு வாரம் கழிந்து வினேவை பார்க்க வந்த்தான் ஜேக்கப்.

‘’பஸ்டேண்டு பக்கத்துல சகல வசதியோட ஒரு வீடு இருக்கு, வாடகைய நாம ரெண்டு பேரும் பகிர்ந்துக்கலாம் வர்றியா” தனது
நண்பனைப் பார்த்து கேட்டான் ஜேக்கப்.

“ நான் வரலை’’ என்று மறுத்தான் வினோ.

’’ மாசம் பத்தாயிரத்துக்கு மேல சம்பளம் வாங்கற ஒரு நல்ல வீடாப்பாத்து இருக்ககூடாதா? சற்று கோபமாகவே கேட்டான் ஜேக்கப்.

’’இருக்கலாம் தான், ஆனா இந்த வீட்டு ஓணரோட அப்பா ரொம்ப வயசானவர், அவர்கூட அவர் மகனோ, மருமகளோ, பேரக்குழந்தைகளோ சரிவர பேசுறதில்ல, அவரோட பேச்சுதுணைக்கு நான் ஒருத்தன் தான் இருக்கேன், நானும் விட்டுட்டு போயிட்டா பாவம் அவர் ரொம்ப கஷ்டப்ப்டுவார்’’

பெரியவருக்கு துணையாக இருக்கும் வினோவை பாராட்டிவிட்டு வந்த வழியே திரும்பி நடந்தான் ஜேக்கப்.

அக்னி
19-12-2008, 10:56 AM
அண்மையில்,
இணையக் குங்குமத்தில் உங்கள் சிறுகதையைப் படித்திருந்தேன்.
அதற்கும் சேர்த்து இங்கே பாராட்டுகின்றேன்.

பணம் இருந்தால், மனத்தைப் பார்ப்பதில்லை.
மனம் இருந்தால், பணத்தைப் பார்ப்பதில்லை.
இதுதான் உலகில் பரவலான நிலை.

முதல் நிலையைக் குட்டும்,
அருமையான குட்டிக் கதை.

பாராட்டுக்கள் ஐ.பா.ரா. அவர்களே...

மதுரை மைந்தன்
19-12-2008, 10:59 AM
முதுமை காலத்தில் ஒரு துணை எத்தனை அவசியம் என்பதை உங்க கதை காட்டுகிறது;. ஜேக்கப்பின் நண்பனின் செயல் போற்றத்தக்கது. ரத்தின சுருக்கமா இருந்தாலும் நல்ல கருத்து செறிந்த கதையை தந்ததற்கு பாராட்டுக்கள் ஐரேனிபுரம் பால்ராசய்யா நண்பரே.

Keelai Naadaan
19-12-2008, 11:44 AM
ரத்தின சுருக்கமாயும் ரத்தினமான கருத்துக்களுடனும் முத்தான கதை பதிக்கிறீர்கள்

ரங்கராஜன்
19-12-2008, 11:45 AM
வினோவைப் போல லட்சத்தில் ஒருத்தர் தான் இருப்பார், மனிதநேயம் என்ற ஒரு விஷயத்தை தான் எல்லா மனிதர்களும் எதிர்பார்ப்பார்கள், ஆனால் அதை தான் யாரும் சுலபமாக காட்டுவதில்லை. வாழ்த்துக்கள்.

அன்புரசிகன்
19-12-2008, 12:30 PM
நானும் இணையத்தில் படித்திருந்தேன்...

இப்படி இந்தக்காலத்தில் நடக்குமா???

சிவா.ஜி
20-12-2008, 08:37 AM
முதுமையில் துணையின் அவசியம் உணர்ந்த வினோவின் செயல் பாராட்டுக்குரியது. அதனை எழுத்தாக்கி எங்களுக்கும் அறிவித்த ஐ.பா.ராவின் எழுத்தும் பாராட்டுக்குரியது. பாராட்டுக்கள் ஐ.பா.ரா அவர்களே.

vijima
20-12-2008, 08:52 AM
முதுமை காலத்தில் ஒரு துணை எத்தனை அவசியம் என்பதைநினைத்து வினோவை போல் இருப்பவர்கள் மிகவும் குறைவு. அருமையான கதை.

பாராட்டுக்கள்

பாரதி
20-12-2008, 11:05 AM
மிக நல்ல கருத்தை உள்ளடக்கிய கதை இராசய்யா. என் மனமார்ந்த பாராட்டு.

சூரியன்
20-12-2008, 11:33 AM
வித்தியாசமான கதையின் கரு.
மிகவும் உண்மையான விசயம்
இன்று உள்ள உலகத்தில் வினோவைப்போல் உள்ள மனிதர்களை பார்ப்பது அபூர்வமே.

ராஜா
20-12-2008, 12:06 PM
பொட்டில் அடித்தது போலிருந்தது முடிவு..!

உங்கள் கதையைப் பாராட்டுவதைவிட, இனி வாழ்வில் எதிர்ப்படும் மூத்த குடிமக்களிடம் ஆறுதலாக சில வார்த்தைகளாவது பேசவேண்டும் என்று உறுதி ஏற்பதையே உங்கள் கதைக்கு செய்யும் மரியாதையாக நினைக்கிறேன்.

சசிதரன்
22-12-2008, 12:57 PM
நல்ல கதை நண்பரே... சுருக்கமாக இருந்தாலும் நல்ல கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்...

minmini
22-12-2008, 02:52 PM
ஒரு வீட்டில் பெயர் சொல்வத்ற்காகவாவது மூத்த ஒருவர் இருக்க வேண்டும் என்பார்கள்
நாங்கள் வீட்டில் கூட்டு குடும்பமாக வாழ்கிறோம்
முதியவர்கள் தங்களுடன் அன்பாக ஓரிரு வார்த்தை பேசவேண்டும் என்று நிறைய நேரங்களில் எதிர்ப்பார்ப்பார்கள்
அது நான் அநுபவத்தில் கானும் உன்மை
உன்மையிலேயே வினோ போற்றக்கூடியவர்
இப்படியொரு ரத்தின சுருக்கத்துடன் அருமையான குட்டிக்கதைக்கு பாராட்டுக்கள் :icon_b::icon_b::icon_b:

ஐரேனிபுரம் பால்ராசய்யா
25-12-2008, 09:12 AM
இனிய தமிழ் மன்ற இதயங்களுக்கு,
எனது குட்டிக்கதையை பாராட்டிய அனைத்து இதயங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே மடலிடமுடியாமைக்கு வருந்துகிறேன். இந்த கதையை நிறைய மாற்றங்களுடன் இரண்டு பக்க அளவுக்கு ``தோட்டத்தில் ஒரு வீடு’’ எனும் சிறுகதையாக்கியிருக்கிறேன். வெகு விரைவில் மன்றத்தில் பதிந்து விடுவேன்.

நன்றி
ஐரேனிபுரம் பால்ராசய்யா

இளசு
25-12-2008, 09:36 AM
நெற்றிப்பொட்டில் ஆணி அடித்த குட்டிக்கதை!

பாராட்டுகள் பால்ராசய்யா!

விரிவான கதையைப் படிக்கக் காத்திருக்கிறேன்!

நிரன்
25-12-2008, 09:44 AM
மற்றவர்கள் சந்தோசத்திற்காக வாழும் ஒரு இளைஞன்.........
சிறுகதை மிகவும் நன்றாக உள்ளது -........

பாராட்டுக்கள் இது போன்ற படைப்புக்களுக்காக காத்திருக்கிறோம்
இன்னும் தாருங்கள்

அமரன்
10-01-2009, 10:31 AM
பேச்சுத்துணை. நல்ல கருத்து விதை. இப்படியான கூட்டல் படைப்புகளை பாராட்டி ஆக்காவாதிகளை ஊக்கப்படுத்த வேண்டும். மறுபக்கத்தைப் பார்க்கக் கூடாது என்று எத்தனை தடவை நினைத்தாலும் முடிவதில்லை.

பேச்சுத்துணையின் அருமை அறிந்ததால் வினோ மனசை புரிந்திருக்கலாம். இதுவே அவன் வீட்டில் "தொணதொணக்கும்" முதுமை என்றால் பிரிந்திருப்பானோ..

பாராட்டுகள் இராசையா அவர்களே!

ஓவியன்
24-01-2009, 03:32 AM
பணமிருந்தால் குணம் இராது,
குணமிருந்தால் பணம் இராது
இரண்டுமிணைந்த வினோவுக்கும்
உங்கள் குட்டிக் கதைக்கும்
என் மனதார்ந்த வாழ்த்துகள்..!!