PDA

View Full Version : காத்திருக்கிறேன் காதலே



நிரன்
18-12-2008, 06:30 PM
உன் மதம் எனக்கு வேண்டாம்
சம்மதம் மட்டுமே போதும்.

உன் சாதியும் தேவையில்லை
உன்னில் பாதி கொடு..

உண்ணப்பன் பணம் பெரிதல்ல
உன் குணம் இருக்கையில்.

சொத்துக்களும் தேவையில்லை
நீ எனக்கு சொந்தமானால்.

செத்துப்போகவும் தோன்றாது
உன்னுடன் சோ்ந்து வாழ்கையில்.

சேர நினைக்கிறேன்.
என்னை சோ்த்துக்கொள்வாயா!

உன்னுள் வரத்துடிக்கிறேன்
என்னை வாரிக்கொள்வாயா!

உலகையே மறக்க நினைக்கிறேன்
உன்னுடன் சோ்கையில்......

என்னை ஆமோதிப்பாயா - இல்லை
அவமதிப்பாயா என் காதலே.!
காத்திருக்கிறேன் உன் வார்த்தைக்காக..
என் வாழ்க்கையை உன்னிடத்தில் தொலைக்க...!

அக்னி
18-12-2008, 06:48 PM
காத்திருக்கிறேன் உன் வார்த்தைக்காக..
என் வாழ்க்கையை உன்னிடத்தில் தொலைக்க...!
:icon_b::icon_b::icon_b:

தொலைக்க நான் தயார்...

ஆமென்று சொன்னால்,
என் வாழ்க்கை உன்னிடத்திற்
தொலையும்...

இல்லையென்று சொன்னால்,
என் வாழ்க்கை என்னிடத்திற்
தொலையும்...

நயம் மிக்க கவிதை.
பாராட்டுக்கள் நிரஞ்சன் அவர்களே...

நிரன்
18-12-2008, 06:55 PM
:icon_b::icon_b::icon_b:

தொலைக்க நான் தயார்...

ஆமென்று சொன்னால்,
என் வாழ்க்கை உன்னிடத்திற்
தொலையும்...

இல்லையென்று சொன்னால்,
என் வாழ்க்கை என்னிடத்திற்
தொலையும்...

நயம் மிக்க கவிதை.
பாராட்டுக்கள் நிரஞ்சன் அவர்களே...

இல்லையென்று சொன்னால்,
என் வாழ்க்கை மண்ணிடத்தில்
தொலையும் ;)


நன்றி அக்னி.............
என்னுடைய கவியும் ...கவியில் காவியம் படைக்கும் உங்கள் பாராட்டை பெற்றதில் கவியுடன் கூடி நானும் மகிழ்வடைகிறேன்:nature-smiley-006:

அக்னி
18-12-2008, 06:57 PM
இல்லையென்று சொன்னால்,
என் வாழ்க்கை மண்ணிடத்தில்
தொலையும் ;)

ஆமென்று சொன்னால்,
பெண்ணிடத்திற் தொலையுமா... :rolleyes:

யாரங்கே...
இந்தப் பதிவைப், புறாவின் காலிற் கட்டி, உரிய இடத்திற்கு, அனுப்பி வையுங்கள்...

பாராட்டுக்கு மிக்க நன்றி...

நிரன்
18-12-2008, 07:41 PM
ஆமென்று சொன்னால்,
பெண்ணிடத்திற் தொலையுமா... :rolleyes:

யாரங்கே...
இந்தப் பதிவைப், புறாவின் காலிற் கட்டி, உரிய இடத்திற்கு, அனுப்பி வையுங்கள்...

பாராட்டுக்கு மிக்க நன்றி...

ஹி ஹி ........நன்றி அக்னி நல்ல யோசனைதான்.... ஆனால் புறா வெரி சிலோ சா்வீஸ்...
லேட்டெஸ்டா டீ.எச்.எல் பாவிப்பம் விதின் 3 டேய்ல டெலிவரி ஆகீடும்.. மன்ற இணைய தளத்தோட பெயரையும் கீழே போட்டு அனுப்பினால்.. அடுத்த முறை எனக்கு DHL காசு மிச்சமெல்ல.. இங்க மெம்பா் ஆகீட்டா எனக்கு DHL வேலை இருக்காது:D:D:D:D

அக்னி
18-12-2008, 08:00 PM
இங்க மெம்பா் ஆகீட்டா எனக்கு DHL வேலை இருக்காது:D:D:D:D
நீங்க DHL இலா வேலை பார்க்கின்றீர்கள்... :smilie_abcfra:

மன்றத்திற் சேர்ந்தால், உங்களது அந்த வேலை ஏன் இல்லாமற்போய்விடும்
என்பது மட்டும் எனக்குப் புரியவேயில்லை... :aetsch013:

நிரன்
18-12-2008, 10:09 PM
நீங்க DHL இலா வேலை பார்க்கின்றீர்கள்... :smilie_abcfra:

மன்றத்திற் சேர்ந்தால், உங்களது அந்த வேலை ஏன் இல்லாமற்போய்விடும்
என்பது மட்டும் எனக்குப் புரியவேயில்லை... :aetsch013:

DHL க்கு கொஞ்சம் விளக்கமளியுங்களன் அப்படீன்னா என்ன:smilie_abcfra:

(மனிசரை இப்படி கேள்வி கேட்டால் எங்க இருந்து பதிலெடுப்பது நீங்கள் எல்லாம் குப்புற படுத்து யோசிப்போர் சங்கத்தில இருகனும்
அதுக்கும் நீங்கதான் தலைவரா எதுக்கும் அதிலயும் ஒருக்கா பாக்கிறன்)

pathman
19-12-2008, 04:46 AM
நல்ல கவிதை நண்பரே.

நானும் காத்திருக்கிறேன்

சிவா.ஜி
19-12-2008, 06:29 AM
மதம் வேண்டாம் சம்மதம் போதும், பணம் வேண்டாம் குணம் போதும்....என இவையெல்லாம் எதுவுமே வேண்டாம் உன் காதலே போதும் எனக் காத்திருக்கும் உங்களுக்கு நல்ல செய்தி விரைவிலேயே வரும்.

நல்ல கவிதை முடிவு வரிகளும் முத்தாய்ப்பாய் இருக்கிறது. வாழ்த்துகள் நிரஞ்சன்.

நிரன்
19-12-2008, 10:30 AM
நன்றி பத்தன் அவா்களே.................!

மற்றும் சிவா.ஜி அண்ணா தங்கள் வாழ்த்திற்கு . மிக்க நன்றி :)

அக்னி
19-12-2008, 11:17 AM
நீங்கதானே இந்தப் பதிவைப் பதிந்தது..?

இங்க மெம்பா் ஆகீட்டா எனக்கு DHL வேலை இருக்காது:D:D:D:D
அப்புறம் என்னிடம்,

DHL க்கு கொஞ்சம் விளக்கமளியுங்களன் அப்படீன்னா என்ன:smilie_abcfra:

இப்படிக் கேட்டால்... :aetsch013:

சரி. இருந்தாலும் பரவாயில்லை. நின்றாலும் பரவாயில்லை.
சொல்கின்றேன்.

DHL அப்படீன்னா...
DHL
தானுங்கோ... ஆங்கில அகர வரிசையில் மூன்று எழுத்துக்கள் என்று நினைக்கின்றேன். :rolleyes:

நிரன்
19-12-2008, 11:54 AM
நீங்கதானே இந்தப் பதிவைப் பதிந்தது..?

அப்புறம் என்னிடம்,

இப்படிக் கேட்டால்... :aetsch013:

சரி. இருந்தாலும் பரவாயில்லை. நின்றாலும் பரவாயில்லை.
சொல்கின்றேன்.

DHL அப்படீன்னா...
DHL
தானுங்கோ... ஆங்கில அகர வரிசையில் மூன்று எழுத்துக்கள் என்று நினைக்கின்றேன். :rolleyes:

அந்த மஞ்சள் கலா் வான் ஒன்டு டஸ் புஸ் என்டு ஓடித்திரியும்
(திரியிலல்ல:D) அதுக்கு டீவீல விளம்பரம் எல்லாம் போடுவாங்க
அதுவா:D:D

எல்லாம் எஸ்கேப் ஆகிறதுக்குத்தான்

அக்னி
19-12-2008, 12:05 PM
மஞ்சள் விமானமும் பார்த்திருக்கின்றேன்.
எனக்குத் தெரியாதுங்க... நீங்களே முடிவு பண்ணிக்கோங்க... ;)

எல்லாம் எஸ்கேப் ஆகிறதுக்குத்தான்
ஏன் நிரஞ்சன் ஆகவே இருப்பதற்கு என்ன குறை.
நீங்க எதுக்கு ’எஸ்கேப்’ ஆகணும்?
ஒருவேளை ‘எஸ்கேப்’பும் ‘பில் கேட்ஸ்’ போல பெரிய ஆளோ... :rolleyes:

நீங்க ஆகிறது சரி.
எதுக்கு எல்லாரையும் ‘எஸ்கேப்’ ஆக்கணும்னு விரும்புறீங்க,
என்றுதான் எனக்குப் புரியல. :confused:

நிரன்
19-12-2008, 12:17 PM
மஞ்சள் விமானமும் பார்த்திருக்கின்றேன்.
எனக்குத் தெரியாதுங்க... நீங்களே முடிவு பண்ணிக்கோங்க...

ஏன் நிரஞ்சன் ஆகவே இருப்பதற்கு என்ன குறை.
நீங்க எதுக்கு ’எஸ்கேப்’ ஆகணும்?
ஒருவேளை ‘எஸ்கேப்’பும் ‘பில் கேட்ஸ்’ போல பெரிய ஆளோ...

நீங்க ஆகிறது சரி.
எதுக்கு எல்லாரையும் ‘எஸ்கேப்’ ஆக்கணும்னு விரும்புறீங்க
என்றுதான் எனக்குப் புரியல.

ஏனுங்க அவா் என்ன பில்கேட்.... ஹேட்டல்ல பில் பேட்றவரா..(இல்லாட்டி அடிக்கட் சாப்ட்வோ் விலை ஏத்திற படியா அந்த நாமமா:aetsch013:)

நான் இந்த விளாட்டுக்கு வறள்ள............:traurig001::traurig001::traurig001::traurig001:

(வயிற்றெரிச்சலோட நீங்கதான் வெற்றி என்டு சொல்லுறன்:icon_clap::icon_drunk:)

அட்சயன்
20-12-2008, 02:29 PM
நன்றாக உளளது

சசிதரன்
21-12-2008, 02:29 AM
நல்ல கவிதை நண்பரே... சீக்கிரமே பதில் கிடைக்க வாழ்த்துக்கள்...

vijima
21-12-2008, 03:36 AM
அருமையானகவிதை.

நிரன்
21-12-2008, 10:34 AM
தங்கள் பாரட்டுகளுக்கு நன்றி உறவுகளே

gans5001
26-12-2008, 05:08 AM
"உன்ணப்பன்"

நீ எனக்கு "செந்தமானால்"



எழுத்துப்பிழைகள் கவிதையின் பொருளையே மாற்றி விடக்கூடும். சிறிது கவனம் வையுங்கள்

நிரன்
26-12-2008, 10:59 AM
எழுத்துப்பிழைகள் கவிதையின் பொருளையே மாற்றி விடக்கூடும். சிறிது கவனம் வையுங்கள்

மன்னிக்க வேண்டும் நண்பரே வேகமாக பதிந்ததால் என்னால்
அப்பிழையை கண்டு பிடிக்க முடியவில்லை..
எவ்வளவுதான் நாம் மேலோட்டமாக பார்த்தாலும் சில வேளைகளில்
அப்பிழைகள் எமது கண்களில் தென்படுவதில்லை சுட்டிக்காட்டியமைக்கு
நன்றி இனி இப்பிழைகள் வராது மிகக் கவனம் எடுக்கிறேன்