PDA

View Full Version : உனக்காக....



நிரன்
18-12-2008, 04:58 PM
இதயத்தை உன்னிடம்
பறிகொடுத்துவிட்டு -- இன்னும்
பலியாடகவே காத்திருக்கிறேன்
என்னையும் உனக்கு பலியிட..

Narathar
18-12-2008, 05:08 PM
இப்படித்தெரிந்தே
விழுகின்றீர்களே
படு குழியில்.........

இதுதான் காதலோ?
ஹா ஹா

நல்ல கவிதை! வாழ்த்துக்கள்

நிரன்
18-12-2008, 05:28 PM
நன்றி நாரா-------

காதலே அப்படித்தான நாரா... குழிக்குள்ள விழுந்தால் கயிறு போட்டாவது மேலே வந்திடலாம் ஆனால் இது குழியல்ல..... கல்லறை புதைக்கப்பட்டு விடுவோம்.
சரித்திரங்களே இதற்குச் சாட்சி.... ஹி ஹி

அக்னி
18-12-2008, 06:55 PM
வெட்டத் தயாராகக் காதற்கத்தி...
அதன் வீச்சத்திற் தெரியும்,
பலியா... வாழ்வா...
என்று...

பாராட்டுக்கள் நிரஞ்சன் அவர்களே...

நிரன்
18-12-2008, 07:16 PM
வெட்டத் தயாராகக் காதற்கத்தி...
அதன் வீச்சத்திற் தெரியும்,
பலியா... வாழ்வா...
என்று...

பாராட்டுக்கள் நிரஞ்சன் அவர்களே...

கத்தியில் என் கதியுண்டு
கத்தியும் அதில் கதியுண்டு
காத்திருக்க என்னில் கதியில்லை
கத்தி மட்டுமே கதியேறுகிறது.
(ஓவரா குளப்பீட்டனோ:D)

தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி அக்னி அவா்களே--:)

அக்னி
18-12-2008, 07:26 PM
ஆமா... ரொம்பவே...

கத்தியே கதியானால்,
கத்தினாலும் மாறாது கதி...

நிரன்
18-12-2008, 08:01 PM
ஆமா... ரொம்பவே...

கத்தியே கதியானால்,
கத்தினாலும் மாறாது கதி...

அதுதான எங்க வேலைங்கப்பு.....

கத்தியது கதி மாறினாலும்,
பெண்ணவள் மதி மாறுமா!

ஓவியன்
26-12-2008, 04:41 PM
பலியாடு காத்திருக்காது
தப்பி ஓடத்தான் பார்க்கும்.
நாம்தான் ஆட்டினைப்
பிடித்து வைத்துப்
பலி கொடுப்பது வழக்கம்...!! :rolleyes:

வித்தியாசமான சிந்தனைகளை
அழகாகக் கோர்த்த வரிகள் அசர வைத்தன
பாராட்டுக்கள் நிரஞ்சன்...!! :)

நிரன்
03-01-2009, 02:15 PM
நன்றி ஓவியன் ..... !

உங்கள் பாராட்டுக்களில் மனம் ஆகயத்தில்
பறப்பது போல் உணர்கிறேன் :)

இளசு
04-01-2009, 07:20 PM
இதயமே போனபின்னே..
இன்னும் இருப்பதும் போனாலென்ன?

முழுமையாய் இழந்து, (ஏற்கப்பட்டு) வெல்ல வாழ்த்துகள்!

பாராட்டுகள் நிரஞ்சன்!

நிரன்
04-01-2009, 07:52 PM
நன்றி இளசு அண்ணா!!!

உங்கள் பின்னுாட்டங்கள் எனக்கு மிகவும்
மகிழ்ச்சியைக் கொடுக்கிறது!:)

அமரன்
05-01-2009, 07:34 PM
இதயத்தை அவளிடம்
கொடுத்துவிட்ட பக்தன்
பலியாடாகவே..!

எப்படித் துளிர்க்கும்
இதயம் இல்லா ஆடு!

அவள் தேவதை.
அவன் ஆடு.
காதல் கத்தி.
(பூசாரி ஆருங்கோவ்..அவ அண்ணனா அப்பனா. உங்க அப்பனா அம்மாவா.)

நல்ல கற்பனை

பாராட்டுகள் நிரஞ்சன்!

நிரன்
05-01-2009, 07:53 PM
(பூசாரி ஆருங்கோவ்..அவ 2அண்ணனா அப்பனா. உங்க அப்பனா அம்மாவா.)



தங்கள் பின்னுாட்டத்திற்கும் பாராட்டுக்கும் நன்றி அண்ணா:)!!!




குடும்பமே பூசாரிதானுங்கோ அப்பா மாலை போடுவார்..
1 அண்ணண் மஞ்சள் தண்ணி ஊற்றுவார்..
மற்றவர் கத்தியோட நி்க்கிறாருங்கோவ்:rolleyes:


அம்மாதான் பாவம்!!! ஆட்டுக்கும் தன் குட்டிக்கும்
ஆறுதல்:confused::confused::D:D

அமரன்
05-01-2009, 07:55 PM
சப்புக் கொட்டி சுவைப்பது ஊர்க்காரர்களே!
பலே பலே..

நிரன்
05-01-2009, 08:13 PM
சப்புக் கொட்டி சுவைப்பது ஊர்க்காரர்களே!
பலே பலே..


கிம்ம்ம்ம்...........நான் படுற பாடு எனக்குத்தான தெரியும்:rolleyes: ஊர்காரருக்கு
அவளவு சந்தோசம்னா! பலருக்கு ஒளி கொடுக்கும் தீபமா இருக்கிறதில
தப்பில்லேங்கோவ்:aetsch013::D:D

கா.ரமேஷ்
06-01-2009, 05:41 AM
தெரிந்தே பலிகடா ஆவது காதலில் மட்டுமே சாத்தியம் போலும்.....

ஆதவா
20-01-2009, 07:05 AM
இதயத்தை உன்னிடம்
பறிகொடுத்துவிட்டு -- இன்னும்
பலியாடகவே காத்திருக்கிறேன்
என்னையும் உனக்கு பலியிட..

சபாஷ்,.. ஒரு நறுக்..

இந்தமாதிரிதான் கவிதையின் சுருக்' இருக்கவேண்டும்..

பின்னூட்டங்கள் அருமையாக இருக்கின்றன...

வாழ்த்துக்கள் அனைவ்ருக்கும்.