PDA

View Full Version : புதிதாய் ஒரு பூமி



mbchandar
18-12-2008, 09:52 AM
வேண்டும். எனக்கு புதிதாய் ஒரு பூமி (http://balachandar.net/blog311-2008-12-17.html)!
இருப்பது போதாதா? போதும்
இருந்தாலும் புதிதாய் ஒரு பூமி வேண்டும்.
எதற்காக வேண்டும்? தமிழ் அமுதை
அங்கும் கொஞ்சி விளையாட
விளையாடினால் போதுமா? போதாது என்
மக்களை அங்கு கூட்டிச்செல்ல வேண்டும்!

வேண்டாம். எனக்கு புதிதாய் ஒரு பூமி!
சாதி, இன, மத வெறியர்கள்
இங்கிருப்பது போல் இருந்தால்!
மனிதாபிமானம் என்றால் என்ன?
என்று கேட்கும் மக்களிருந்தால்!

அக்னி
18-12-2008, 10:41 AM
நண்பரே...
இந்தக் கவிதையைக், கவிதைப் போட்டிக்காக எழுதியுள்ளீர்கள் என்பதனை,
உங்கள் வலைப்பதிவு மூலம் அறிந்துகொண்டேன்.

கவிதைப் போட்டிக்கான கவிதைகளைத்,
தனிமடல் மூலம் (இம்முறை) அமரன் அவர்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
அங்கே, கவிஞர்களின் பெயரைக் குறிப்பிடாமல், வாக்கெடுப்புக்கு வைப்பார்கள்.
மன்ற உறவுகளினால் தேர்ந்தெடுக்கப்படும் கவிதைகளும், கவிஞர்களும் மன்றத்திற் சிறப்பிக்கப்படுவார்கள்.

இந்தக் கவிதையை நீங்களே பிரசுரித்துவிட்டதால்,
விரும்பினால், இன்னுமொரு கவிதையைக், கவிதைப் போட்டிக்காக எழுதி அனுப்புங்கள்.
இதையே அனுப்ப விரும்பினால்,
நிர்வாகம் அனுமதிக்கும்பட்சத்தில், பொறுப்பாளர்கள் உதவியுடன் இங்கிருந்து நகர்த்திடுங்கள்.

*****
மனிதம் இருக்கும் என்றால்,
பிறக்கட்டும் புதிதாய் ஒரு பூமி...
இல்லையெனின்,
வேண்டாம் இந்தப் பூமி கூட...

இன்னமும் கொஞ்சம் கவிதையை மெருகுபடுத்தலாம்.
(மெருகூட்டிப் போட்டிக்கு அனுப்பினால் நன்று.)

இரண்டாவது பத்தியின் ‘வேண்டாம்கள்’
எதிர்பார்ப்புகளாக
கவிதையில் இன்னமும் வலியுறுத்தப்படலாம்.

பாராட்டுக்கள்...