PDA

View Full Version : உலகின் மாபெரும் மோசடி



அறிஞர்
15-12-2008, 08:28 PM
இன்றைய இணையத் தளத்தில் முக்கிய செய்தி..

அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மாடோப் என்பவர், பங்கு சந்தை, வங்கி வர்த்தகம் மூலம் 50 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (கிட்டத்தட்ட 2 இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்கள்) மோசடி செய்துள்ளார்.

இது உலகிலேயே ஒரு தனிநபர் செய்த மாபெரும் மோசடி...

இதுப்பற்றிய செய்திகள் இன்னும் வரும் என எண்ணுகிறேன்.

தமிழ்தாசன்
15-12-2008, 08:45 PM
அட மனிதா?
இன்னும் என்னென்ன நடந்திருக்கோ?
ம்....
தகவலுக்கு வணக்கம். அறிஞர் அவர்களே!

Narathar
16-12-2008, 02:51 AM
அப்போ...........................
டொலரின் வீழ்ச்சி வேகம் இன்னும் அதிகமாகும் என்று சொல்லுங்க...........

aren
16-12-2008, 03:22 AM
அவருடைய கம்பெனியில் முதலீடு செய்தவர்களுக்கு லாபத்திற்கு அதிகமாக டிவிடெண்ட் கொடுத்திருக்கிறார் கடந்த 30 வருடங்களாக. அதனால் மக்கள் அதிகமாக அவருடைய கம்பெனியில் முதலீடு செய்தார்கள். ஆனால் நாளுக்கு நாள் அவரிடம் இருந்த பணத்தின் கையிருப்பு குறைந்துகொண்டே வந்தது.

இப்பொழுது இருக்கும் பணப்பிரச்சனையில் யாரும் புதிதாக பணம் முதலீடு செய்யவில்லை. கையில் இருந்த பணம் முழுவதும் போய்விட்டது. முதலீடு செய்தவர்களில் சிலர் பணம் திரும்ப வேண்டும் என்று கேட்டுள்ளனர். அந்தத்தொகை 7 பில்லியன் டாலர்கள். அவ்வளவு பணம் அவரால் உடனடியாக புரட்ட முடியவில்லை. ஆகையால் எல்லாம் இழந்துவிட்டேன் என்ற உண்மையை இப்பொழுது ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த மாதிரியான முதலீட்டை போன்ஸி ஸ்கீம் என்பார்கள்.

எப்படி இவருக்கு இவ்வளவு லாபம் வருகிறது என்று இதுநாள்வரை யாருமே எப்படி யோசிக்கவில்லை என்பது வியப்பாகவே இருக்கிறது.

அன்புரசிகன்
16-12-2008, 03:31 AM
நாரதரே... எப்படி??? அந்த ரீமிக்ஸ் இந்த மோசடிக்கதை மூலம் நிரூபணமாகுதெல்லோ.... இப்போ வாடுவது ஆசியாவிலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளே...

சூரியன்
16-12-2008, 08:59 AM
எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க.
பணம் போட்டவர்களின் நிலைமை தான் பாவம்.