PDA

View Full Version : புஷ்ஷிற்கு காலணியால் தாக்குதல்அன்புரசிகன்
15-12-2008, 03:12 PM
இன்று ஈராக்கில் நிகழ்ந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் அமெரிக்க அதிபர் புஷ்ஷிற்கு கலணியால் ஒரு ஈராக்கிய பத்திரிக்கை நிருபர் தாக்கியுள்ளார். இது தொடர்பான ஒளித்தொகுப்பு இதோ........

http://www.youtube.com/watch?v=o15COlLrfcI

இது தொடர்பாக பிபிஸி (http://news.bbc.co.uk/2/hi/middle_east/7783325.stm) மற்றும் சிஎன்என் (http://edition.cnn.com/video/#/video/politics/2008/12/14/vo.bush.shoe.pool.cnn) இல் வெளியான செய்திகள்...

இன்றும் சொற்பகாலங்களில் புஷ் பதவி விலகவிருப்பதும் ஈராக்கின் அழிவிற்கு அவரே காரணம் என்று பரவலாக பேசப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

அய்யா
15-12-2008, 03:23 PM
புஷ் சாதாரணமாக இருக்க முயன்றாலும் அவர் முகத்தில் கடும் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிகிறது.

ஈராக்கிய செய்தியாளருக்கு பயிற்சி போதாது!

arun
15-12-2008, 04:57 PM
என்ன தான் இருந்தாலும் இது கொஞ்சம் அதிகம் தான்

சிவா.ஜி
15-12-2008, 05:10 PM
நிச்சயம் அதிகமில்லை அருண். புஷ்....ஒரு மனிதனே அல்ல...ஆயிரக்கனக்கான உயிர்களைக்குடித்த அரக்கன்.

ராஜா
15-12-2008, 05:12 PM
இது என்ன... இன்னும் இருக்கு..!

அன்புரசிகன்
15-12-2008, 05:22 PM
இது என்ன... இன்னும் இருக்கு..!

அப்போ இது என்ன வெறும் ட்ரெய்லரா???????????? :lachen001: :icon_36:

ராஜா
15-12-2008, 05:31 PM
அன்புரசிகன்
மன்றத்தின் சுடர்
பண்பட்டவர்
Join Date: 04 Feb 2007
Location: வீட்டில்
Posts: 6,900

ராஜா
மன்றத்தின் சுடர்
பண்பட்டவர்

Join Date: 04 Nov 2006
Location: மனசுக்கு பிடித்த மன்னார்குடி.
Age: 49
Posts: 6,795

மாம்ஸ்..

நீ முன்னாலே போ... நான் பின்னாலே வாரேன்..!

நிரன்
15-12-2008, 06:06 PM
புஷ் சாதாரணமாக இருக்க முயன்றாலும் அவர் முகத்தில் கடும் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிகிறது.

ஈராக்கிய செய்தியாளருக்கு பயிற்சி போதாது!

மன்றத்தில் எறியிற வித்துவான்களை மன்றம் சார்பில் அணுப்பி வைப்போமா? எறிவு ஆசிரியர் குழுவாக..:D:D:D:D

arun
15-12-2008, 06:25 PM
மன்றத்தில் எறியிற வித்துவான்களை மன்றம் சார்பில் அணுப்பி வைப்போமா? எறிவு ஆசிரியர் குழுவாக..:D:D:D:D

அய்யோ அய்யோ.... :D :D

ரங்கராஜன்
15-12-2008, 06:25 PM
காட்சியை பார்த்தேன், புஷ்ஷின் மீது ஷூவை தூக்கி அடித்தது தவறா?, இல்லை குறி தப்பியது தவறா? என்பது பற்றி நான் சொல்வதற்கில்லை. ஆனால் என்னை கவர்ந்தவர்கள் அந்த மெய்காப்பாளர்கள் தான், அடுத்த ஒரு நிமிஷத்தில் அவனை அப்படியே சூழ்ந்துக் கொண்டார்கள், z grade securities, எப்பவுமே சூப்பர்.

தமிழ்தாசன்
15-12-2008, 08:42 PM
உலக ஆட்சிக்கதிரையாளர்கள் நிச்சயம் சிந்திக்க வேண்டிய விடயம்.

எதுவும் எப்போதும் யாருக்கும் நடக்கலாம்.
எது? எங்கே? எப்போது? கொடுக்கப்பட்டதோ என்பதைப்பொறுத்து கூடியோ? குறைந்தோ? கிடைத்துத்தான் ஆகும். அளவு சமமாகும்.

கீதையின் வரிகள் நிச்சயம் உலக நிலையை உணர்த்துகிறது.

ஓவியன்
16-12-2008, 03:56 AM
புஷ் செய்தது தப்புத்தான் என்று கூறும் உலகம் அந்த தப்பினை புஷ் செய்யும் வேளையில் வாய் கட்டி மெளனித்துத்தானே இருந்தது...

இப்போது போல், அப்போது எதிர்ப்புக் குரலைக் காட்டாதது ஏன்...??

ஒருவன் தவறிழைக்கையில் அந்தத் தவறினைத் தட்டிக் கேளாமல் வாய், கை கட்டி நிற்கும் சுற்றமும் சேர்ந்தே தவறிழைக்கிறது...

நிலமை இவ்வாறிருக்க, பல நாட்களின் பின்னர் அந்த தவறினை இழைத்தவனை மட்டும் குற்றவாளியென்று கூறி, அந்த தவறினைத் தருணத்தில் தடுக்கத் தவறியவர்களெல்லாம் தப்பித்துக் கொள்வது மிகப் பெரிய தவறாகும்....

anna
16-12-2008, 07:41 AM
புஷ் செய்த ஈராக்கில் செய்த கொடுமைக்கு அவனுக்கு செருப்பு விட்டு இருக்க கூடாது. முட்டை அல்லது தக்காளியை விட்டு அடிச்சு இருக்கணும்.

சூரியன்
16-12-2008, 08:52 AM
இன்றைய நாளிதழிலும் இந்த செய்தி வந்துள்ளது.

ஆதி
16-12-2008, 09:12 AM
நம்மை போல அரேபியரும் ஒருவனை கீழ்மைப்படுத்த செருப்பாலேயே அடிப்பார்கள்.. புஷ்க்கும் அந்த கீழ்மையான மரியாதை கிடைத்திருக்கிறது.. புஷ் கொடியவர் என்று என்னால் ஏற்க முடியாது..

1970-வதுகளில் எண்ணை வளமுள்ள நாடுகளை கையகப்படுத்திவிட்டால் உலகத்தையே நம் முன் தாழவைத்து நமக்கு சேவகம் செய்ய வைக்கலாம் என்று மனப்பால் குடித்தது ரஷ்யா.. அதன் விளைவாக அப்கானை தாக்கியது, அந்த போரில்தான் அப்கானுக்கு அமெரிக்கா உதவி செய்தது, அதன் பிந்தான் இந்த பின்லேடன் வருகை..

அமெரிக்காவிடம் ஆயுதம் பெற்று தன்னாட்டை காத்துக்கொண்ட அப்கானியர்கள் தாலிபான்களாய் மாறி, மன்னரிடம் இருந்து ஆட்சியைப் பிடுங்கி தானே ஆளத்துவங்கினர்..

போரில் தோற்ற ரஷ்யா, தன்படைகளை பின்வாங்கி கொண்டு, வெளி ஏற இந்தியாவின் உதவியை நாட இந்தியா அவர்களுக்கு எல்லையை திறந்துவிட்டது, இந்த எல்லைத்திறப்பில்தான் ரஷ்யவீரர்களோடு, தீவரவாதிகளும் முதல்முதலில் இந்தியாவில் ஊடுருவினர், 1970களில் இந்தியாவில் முதல் குண்டுவெடிப்பையும் நிகழ்த்தினர்..

ரஷ்யாவை பின்லேடனால் சாய்த்த அமெரிக்க, அவர்கள் குடித்த மனப்பாலை, பணப்பாலால் இன்று நிறைவேற்றிக் கொண்டது..

புள்ளி வைத்தது ரஷ்யா, கோலம் போட்டது அமெரிக்கா, இந்தியா கூடத்தான் ஈராக் போரிலும், அப்கான் போரில் அமெரிக்காவுக்கு உதவியது..

சுட்டுவிரல் நீட்டுவது என்று எண்ணிவிட்டால் எல்லார் மீதும் நீட்ட வேண்டும் (எல்லார் மீதும் என்பதில் நாமும் அடக்கம்).

புஷ் சுதாரிச்சு சட்டுனு குனிஞ்சுட்டார், இதே நம்ம வயசான தலைவர்கள் யாராவது நின்றிருந்தா, குறி தப்பியிருக்காது, குனிய முயற்சித்திருந்தாலும் முடிந்திருக்காது.. :)

அன்புரசிகன்
16-12-2008, 09:39 AM
புள்ளி வைத்தது ரஷ்யா, கோலம் போட்டது அமெரிக்கா, இந்தியா கூடத்தான் ஈராக் போரிலும், அப்கான் போரில் அமெரிக்காவுக்கு உதவியது..

சுட்டுவிரல் நீட்டுவது என்று எண்ணிவிட்டால் எல்லார் மீதும் நீட்ட வேண்டும் (எல்லார் மீதும் என்பதில் நாமும் அடக்கம்) ஒருவரை மட்டும் குறை சொல்லி ஒன்றுமாக போவதில்லை..

புஷ் சுதாரிச்சு சட்டுனு குனிஞ்சுட்டார், இதே நம்ம வயசான தலைவர்கள் யாராவது நின்றிருந்தா, குறி தப்பியிருக்காது, குனிய முயற்சித்திருந்தாலும் முடிந்திருக்காது.. :)

ஆமோதிக்கிறேன். என்னதான் இருந்தாலும் புஷ் ஒரு நாட்டின் அதிபர். அந்த பதவிக்கான மரியாதையை கொடுத்தே ஆகவேண்டும்.

ஆதி
16-12-2008, 09:48 AM
ஆமோதிக்கிறேன். என்னதான் இருந்தாலும் புஷ் ஒரு நாட்டின் அதிபர். அந்த பதவிக்கான மரியாதையை கொடுத்தே ஆகவேண்டும்.

இது தான் என் நிலையும் கடைசிவரி கிண்டலுக்காக எழுதினேன் ஒழிய அடித்தது சரி என்கிற அர்த்தத்தில் அல்ல..

நம் தலைவர்களை பார்க்கும் போது எனக்கொரு விடயம்தான் ஞாபகம் அவரும்..

தசரதன், ஒரு நாள் கண்ணாடியைப் பார்க்கிறான், காதோரம் ஒரு முடி நரைத்திருக்கிறது, அடடா நமக்கு வயசாச்சு ஆட்சியை நம் மகனுக்கு கொடுத்திடும் தருணம் வந்திருச்சு என்று நினைக்கிறான்..

காதோர கண்ட ஒரு நரைக்கே, நாடளும் தகுதி போய்விட்டது, நாம் உடலாலும் தளர்ந்துவிட்டோம் னு தசரதன் நினைக்கிறான்..

நம்ம ஊர பாருங்க, தலை முழுக்க நரைத்து, உடல் ஒடுங்கி, குடுகுடு கிழவனான பிறகு பதவியாச போக மாட்டீங்கிது..

அன்புரசிகன்
16-12-2008, 09:54 AM

அது தான் நம்ம ஊரில் குவாலிஃபிகேஷனாச்சே........... எப்படி போகும்....

அரசியல் மட்டும் இதற்கு உதாரணமல்லவே....

மதுரை மைந்தன்
16-12-2008, 11:34 AM
அமெரிக்க அதிபர் புஷ் மீது காலணி எறியப்பட்டது ஒரு காட்டு மிராண்டித்தனமான செயல். ஈராக் மீது போர் தொடத்ததை தவறு என்று சொல்பவர்கள் அந்த கால கட்டத்தில் ஈராக் மீது போர் தொடுத்து சதாமை சாய்க்க வில்லை என்றால் இன்று திவிர வாதிகள் ஈராக் வழியாக உலகை மிக பயங்கரமாக தாக்கிக் கொண்டிருப்பார்கள். இந்த நிகழ்ச்சி எனது நினைவுக்கு அண்ணல் ராஜீவ் காந்தியை இலங்கையில் படை அணி வகுப்பை பார்வையிட்ட போது ரைபில்லைக் கொண்டு தாக்க வந்த காட்சி கொண்டு வருகிறது. இத்தகைய நிகழ்வுகள் வண்மையாக கண்டிக்கத் தக்கவை.

ஆதி
16-12-2008, 11:53 AM

என்ன மதுரை மைந்தன் ஐயா பொசுக்கு னு இப்படி சொல்லிபுட்டிக..

சதாம் ரொம்ப சுதாரிப்பானவர், எந்த தீவிரவாதிகளையும் அவர் அருகே அண்டவிடவில்லை.. அவருக்கு தெரியும் வளத்த கெடா மாரில் பாயும் என்று.. அவர் எத்தனையோ கொடுஞ்செயல்கள் செய்திருக்கலாம், ஆனால், அதில் நல்லனவும் உள, தன் மகன் பெண்களிடம் தரக்குறைவாய் நடக்கிறான் என்றறிந்து அவன் அடங்கவே மாட்டான் என்ற சூழலில் அவனை முடமாக்கினார்..

கார்கில் போர் நடந்த போது இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஒரே இஸ்லாமிய தலைவர் சதாம்தான்..

எண்ணை வளத்தை தன் கைப்படுத்த எண்ணிய அமெரிக்காவின் தந்திரத்தை அறிந்து, தன் நாட்டு பொருளாதார புழக்கத்தை யூரோவில் மாற்றினார்.. அமெரிக்க நிறுவணங்களை தன் நாட்டைவிட்டு விரட்ட மறைமுக சட்டங்களை நிறைவேற்றினார்..

யாவையும் துறந்துவிட்டேன் என்று சொல்வவர்களே தன்னை கடவுள் என்று சொல்லும் பொழுது, ஒரு சர்வாதிகாரி தன்னை கடவுளாக கருதினார் என்றால் அதில் வியப்பில்லை..

Narathar
16-12-2008, 12:03 PM
நான் இந்தக்காட்சியை நேற்று அதிகாலையிலேயே பார்த்துவிட்டேன்........ என்ன சொல்ல? அய்யா சொன்னதுபோல அந்தாளுக்கு பயிற்ச்சி போதாது!

என் கவலை இனி பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஷூவை கழட்டிவைத்துவிட்டு போகச்சொல்லுவாங்களோ........????

anna
16-12-2008, 04:36 PM
புஷ் சுதாரிச்சு சட்டுனு குனிஞ்சுட்டார், இதே நம்ம வயசான தலைவர்கள் யாராவது நின்றிருந்தா, குறி தப்பியிருக்காது, குனிய முயற்சித்திருந்தாலும் முடிந்திருக்காது.. :)

நூற்றில் ஒரு வாக்கியம் நீர் சொன்னது . இந்த சம்பவத்தை டி.வி. யில் பார்த்தேன்.புஷ் ஒரு கைதேர்ந்த கில்லாடி தான் என்னமா குனிஞ்சு வந்த சூ வுக்கு வழிவிட்டார்.நம்ம தலைவர்கள் யாராவது நின்று இருந்தால் இப்ப அவர் ஐ.சி.யு ல தான் இருப்பார்.

என்ன இருந்தாலும் புஷ் புஷ் தான்.அமெரிக்கா அமெரிக்கா தான். எறிந்தவனுக்கு போதுமான பயிற்சி இல்லை ஆனால் புஷ்க்கு இதில நல்ல பயிற்சி இருக்கும் போல தெரியுதே.

ஆனால் எறிந்த முடித்து பாதுகாவலர்கள் பிடித்த பின் புஷ் முதலில் சிரித்தார் . அப்புறம் அவர் முகத்தில் கோபத்தை பார்க்கணுமே அப்பப்பா ஒரு முட்டை உடைத்து ஊற்றினால் ஆம்லேட் ஆகிவிடும் அளவுக்கு கோபம்.எறிந்தவன் கண்டிப்பா கைமா தான் எலும்பை எண்ணி விடமாட்டார்கள்.

நிரன்
16-12-2008, 06:36 PM
என்ன மதுரை மைந்தன் ஐயா பொசுக்கு னு இப்படி சொல்லிபுட்டிக..

சதாம் ரொம்ப சுதாரிப்பானவர், எந்த தீவிரவாதிகளையும் அவர் அருகே அண்டவிடவில்லை.. அவருக்கு தெரியும் வளத்த கெடா மாரில் பாயும் என்று.. அவர் எத்தனையோ கொடுஞ்செயல்கள் செய்திருக்கலாம், ஆனால், அதில் நல்லனவும் உள, தன் மகன் பெண்களிடம் தரக்குறைவாய் நடக்கிறான் என்றறிந்து அவன் அடங்கவே மாட்டான் என்ற சூழலில் அவனை முடமாக்கினார்..

கார்கில் போர் நடந்த போது இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஒரே இஸ்லாமிய தலைவர் சதாம்தான்..

எண்ணை வளத்தை தன் கைப்படுத்த எண்ணிய அமெரிக்காவின் தந்திரத்தை அறிந்து, தன் நாட்டு பொருளாதார புழக்கத்தை யூரோவில் மாற்றினார்.. அமெரிக்க நிறுவணங்களை தன் நாட்டைவிட்டு விரட்ட மறைமுக சட்டங்களை நிறைவேற்றினார்..

யாவையும் துறந்துவிட்டேன் என்று சொல்வவர்களே தன்னை கடவுள் என்று சொல்லும் பொழுது, ஒரு சர்வாதிகாரி தன்னை கடவுளாக கருதினார் என்றால் அதில் வியப்பில்லை..
ஆதி அண்ணா கூறியது மிகவும் சரியான விடயம்.
தீவிரவாதம் என்ற ஒரு புறளியைக் கிளப்பி நாட்டில் அமெரிக்க
படையினரைக் குவித்து. ஈராக்கின் வழங்களை அபகரிக்க அமெரிக்க
அதிபர் தீட்டிய ஒரு திட்டமே இந்தத் தீவிரவாதம் எனும் கதை.
பிற நாட்டின் வளங்களை அபகரிக்க நினைப்பதும். அந் நாட்டின்
சராசரி நிலையை மாற்றி போர் சுழலை உருவாக்கியதும்
ஒரு நாட்டு அதிபரின் பாரட்டுக்குரிய செயலா மதுரை மைந்தன் அண்ணா? இது என்னுடைய கருத்து மட்டுமே தவறாக இருப்பின்
மன்னிக்கவும்.

ரங்கராஜன்
17-12-2008, 03:05 AM
நண்பர்களின் விவாதத்தை கவனித்தேன், என்னுடைய பங்குக்கு சில வார்த்தைகள். எப்பொழுதும் மூளையும், மனசும் ஒரு சேர வேலை செய்யாது. தற்காத்து கொள்ளுதல் மூளையின் வேலை, மன்னித்து விடுவது மனசின் வேலை. இது எல்லாருக்கு பொது, நாட்டின் தலைவரே ஆனால். புஷ் அப்பாவி மக்களை கொன்று குவித்தார் என்றால், அதையே தான் சதாமும் ரொம்ப நாட்களாக செய்தார். புஷ் தன் நாட்டுக்காக அதை செய்தார் என்றால், சதாமும் அதற்க்காக தான் செய்தார். சதாமின் தண்டனைகள் என்று ஒரு வீடியோ இருக்கிறது முடிந்தால் பாருங்கள். உடலே நடுங்கும், ஒரு மனிதனின் உடலில் வெடி குண்டை கட்டிவிட்டு அப்படியே வெடித்து சிதற வைப்பார்கள். அந்த மனிதனின் உடல் துண்டு துண்டாக சிதறும், அதேபோல அங்கிள் சதாம் என்று ஒரு டாக்குமேன்ரி இருக்கு அதையும் பாருங்கள், ஈராக்கின் நிலைமையை, சதாம் மக்களை எப்படி கேவலமாக நடத்தினார் என்று தெரியும். புஷ்-ஐ பற்றி தெரிந்து கொள்ள நிறைய டாக்குமேண்டரிஸ் இருக்கு. வயதான காலத்தில் இருவரும் மிகவும் அவமானங்கள் சந்திக்கிறார்கள், ஒருவர் போய் சேர்ந்து விட்டார், இன்னொறுவரை அனுப்பிவிடுவார்கள்

lolluvathiyar
17-12-2008, 01:11 PM
குரைந்தபட்சம் செருப்பாவது வீச முடிந்ததே. இருந்தாலும் செருப்பை வீசியதால் எந்த பயனும் (மாற்றமும்) ஏற்பட போவதில்லை என்பதை அந்த நிருபர் உனரவில்லை. என்ன அவமான வந்தாலும் அமெரிக்கர்கள் திருந்த மாட்டார்கள். என்னதான் கோபம் இருந்தாலும் நிதானம் வேண்டும். பாவம் அந்த நிருபரை இனி எத்தனை சித்தரவதை செய்ய போகிறார்களோ.

புஷ் ஒரு உலகின் மிகபெரிய ஜனநாயக நாட்டின் அதிபராக இருக்கலாம், அவர் எந்த நாட்டு அதிபர் எந்த மக்களின் அதிபர் என்பது முக்கியம். உன்மையான கொடுங்கோல் ஆட்சி நடக்கும் நாடுகளையும் பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடுகளை தட்டி கேட்காமல் அப்பாவி நாடுகள் மீது பொய் காரனம் சொல்லி போர் எடுத்து நாடுகளையும் மக்களை அழித்தவர்கள் அமரிக்கர்கள். உலக வளங்கலையும் உழைப்பையும் சுரன்டி ஏகபோக வாழ்கை வாழ்பவர்கள். ஈராக் போருக்கு பிறகு கூட அந்த மக்கள் அவரை தேர்ந்தெடுத்திருகிறார்கள்.
அந்த மக்களின் அதிபரை அவமதித்துக்கு நாம் வருந்தவோ கன்டனம் செய்யவோ வேன்டிய அவசியம் இல்லை.
அதற்காக இந்த செருப்பு வீசிய செயலை பாராட்டினாலும் பயன் இல்லை

.
[COLOR="DarkRed"]புஷ் செய்தது தப்புத்தான் என்று கூறும் உலகம் அந்த தப்பினை புஷ் செய்யும் வேளையில் வாய் கட்டி மெளனித்துத்தானே இருந்தது...

ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுக்கும் போது இந்தியா உட்பட உலகமே கூறியது, உலகமே தட்டி கேட்டது. உலகமே கன்டனம் செய்தது ஏன் அமெரிக்க மக்களிலும் சிலர் போருக்கு எதிர்ப்பு காட்டினார்கள்.
ஆனால் அதை எல்லாம் கேட்கும் நிலையில் அமெரிக்கா இல்லை. அமெரிக்காவை மிரட்டும் அளவுக்கு எந்த சக்தியும் உலகில் தற்போதைக்கு இல்லை. இதை ரஸ்யா உனிபோலார் உலகம் அதை நாம் மல்டிபோலார் உலகமாக மாற்ற வேன்டும் என்று சொல்லி அதில் கவனும் செலுத்தி வருகிறார்கள்.

1970-வதுகளில் எண்ணை வளமுள்ள நாடுகளை கையகப்படுத்திவிட்டால் உலகத்தையே நம் முன் தாழவைத்து நமக்கு சேவகம் செய்ய வைக்கலாம் என்று மனப்பால் குடித்தது ரஷ்யா.. அதன் விளைவாக அப்கானை தாக்கியது, அந்த போரில்தான் அப்கானுக்கு அமெரிக்கா உதவி செய்தது, அதன் பிந்தான் இந்த பின்லேடன் வருகை..

ஆப்கானிஸ்தானிலிருந்து ரஸ்யாவை துறத்த அமெரிக்கா பின்லேடனை உருவாக்கியது உன்மைதான். ஆனால் ரஸ்யா ஆப்கானிஸ்தானை தாக்கியதுக்கு நீங்கள் சொன்ன காரனம் தான் தவறு. என்னை வள நாடுகளை கையக படுத்த திட்டமிட்டது அமெரிக்காதான் ரஸ்யா அல்ல, கசாப்பியன் பகுதி நாடுகளை அமெரிக்கா அமுக்க திட்டமிட்டது அதற்காக பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் வழியாக செயல்படுத்த முடியும். அதனால் ஆப்கானிஸ்தானை அமெரிக்கா (பாக்கிஸ்தான் உதவியால் போர்வையால்) முதலில் தாக்கி பிடித்து விடுகூடாது என்பதால் ரஸ்யா முந்தி கொன்டு ஆப்கானிஸ்தானை பிடித்து விட்டது)

போரில் தோற்ற ரஷ்யா, தன்படைகளை பின்வாங்கி கொண்டு, வெளி ஏற இந்தியாவின் உதவியை நாட இந்தியா அவர்களுக்கு எல்லையை திறந்துவிட்டது, இந்த எல்லைத்திறப்பில்தான் ரஷ்யவீரர்களோடு, தீவரவாதிகளும் முதல்முதலில் இந்தியாவில் ஊடுருவினர், 1970களில் இந்தியாவில் முதல் குண்டுவெடிப்பையும் நிகழ்த்தினர்..

என்ன ஆதி சொல்கிறீர்கள் இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தானுக்கு இடையில் எந்த எல்லையும் இல்லை பாக்கிஸ் ஆக்ரமிப்பு காஸ்மீரை தான்டாமல் இந்திய எல்லைக்குள் நுழையவே முடியாது 1948 இலேயே காஸ்மீர் பகுதிய பாக்கிஸ்தான் பிடித்து விட்டது உங்களுக்கு தெரியும்தானே.
அந்த பகுதி காஸ்மீரை பிடித்ததே பாக்கிஸ்தான் பிடித்ததே நமக்கு ரஸ்ய எல்லைக்கு இடைவெளி ஏற்படுத்ததானே அமெரிக்க தூண்டுதலால் பிடித்தது.

இந்தியா கூடத்தான் ஈராக் போரிலும், அப்கான் போரில் அமெரிக்காவுக்கு உதவியது..

இல்லை இந்தியா அமெரிக்காவுக்கு ஈராக் போரில் எந்த உதவியும் செய்யவில்லை.

ஈராக் மீது போர் தொடுத்து சதாமை சாய்க்க வில்லை என்றால் இன்று திவிர வாதிகள் ஈராக் வழியாக உலகை மிக பயங்கரமாக தாக்கிக் கொண்டிருப்பார்கள்.

முற்றிலும் தவறு இஸ்லாமிய நாடுகளிலேயே தீவிரவாதத்தை ஆதரிக்காத ஒரே நாடு ஈராக், தீவிரவாததிகளுக்கு இடம் தராத ஒரே தலைவன் சதாம் உசைன். சன்னி முஸ்லீமாக இருந்தாலும் தீவிரவாதத்தை சதாம் என்றும் விரும்பியது இல்லை. அதனால் தான் தைரியமாக ஈராக்கை அமெரிக்கா தாக்கியது என்பதையும் நினைவு கூற்கிறேன்.

சதாமின் தண்டனைகள் என்று ஒரு வீடியோ இருக்கிறது முடிந்தால் பாருங்கள். உடலே நடுங்கும், ஒரு மனிதனின் உடலில் வெடி குண்டை கட்டிவிட்டு அப்படியே வெடித்து சிதற வைப்பார்கள்.

ஆமாம் நானும் பார்த்திருகிறேன். ஒரே நொடியில் கொன்று விடுவார்கள். ஆனால் அமெரிக்கார்கள் அதை விட கேவலமாக ஈராக் அப்பாவி மக்களை சித்தரவதை செய்த அபு கரிப் சிரை கதை உங்களுக்கு தெரியுமா?
பிரிட்டிஷ் ஆட்சியில் அந்தமான் சிறையில் ஆங்கிலேயர்கள் நமது சுதந்திர போராட்ட வீரர்களை எப்படி சித்தரவதை செய்தார்கள் என்று தெரியுமா ? அதற்க்கு சதாம் தந்த தன்டனை 1000 மடங்கு பரவாயில்லை. மரன தன்டனை என்று வந்து விட்டது அது எப்படி கொடுத்தால் தான் என்ன.

அமெரிக்க அதிபர் புஷ் மீது காலணி எறியப்பட்டது ஒரு காட்டு மிராண்டித்தனமான செயல்.

அமெரிக்கர்கள் அசுரர்கள் அவர்களுக்கு எந்த அவமானமும் தீமையும் நட ந்தால் அது உலக மக்களுக்கு நல்லதாக தான் முடியும்.

ஆதி
17-12-2008, 03:44 PM
நானும் அறிவேன் வாத்தியார் ஐயா, பாக் ஆக்ரமிப்பு கெஸ்மீர் வழியாகதான் ரஷ்யா தன் படைகளை இந்தியாவுக்கு அழைத்து வந்தது, இல்லை என்றால் தீவிரவாதிகளின் ஊடுருவல் எப்படி நிகழ்ந்திருக்கும் ? இது சம்மந்தப்பட்ட டாக்குமெண்ட்ரிகள் நெட்டில் நிறைய உண்டு தேடிப்பாருங்கள் புரியும்..

அப்கானில் கம்யூனிஸ ஆட்சி வந்த தருணத்தில் அதை எதிர்த்து பெரும் புரட்சிகள் நடந்ததன, அதை கட்டுப்படுத்த தான் ரஷ்யா உள் நுழைந்தது, ஆனால் அன்றைய வல்லரசான ரஷ்யாவின் உள் நோக்கமே வேறு, அப்கான் மீது கைவைத்தால், அரேபிய நாடுகள் மூக்கை நீட்டும் அப்புறம் கவனித்து கொள்ளலாம் என்பதே அது..

ஆனால் அப்கானிய புரட்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுதம் கொடுத்து உதவவே ரஷ்யாவால் ஒன்று செய்ய இயலவில்லை, வேறு வழியின்றி வெளியேறியது, வெளியேறும் போதே, பாக் ஆக்ரமிப்பு கெஷ்மீர் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவினர்..

அப்கான் போரில் எப்படி தன் வான் எல்லையை இந்தியா திறந்துவிட்டதோ, அது போல் ஈராக்குக்கு எதிரான போரில் அமெரிக்க விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்பிதே இந்தியாதான், இதுக்கு மேல் என்ன உதவி செய்யனும்..

ஆதி
17-12-2008, 04:55 PM
ஒரு இணைய தளத்தில் BUSHGAME என்று ஒரு விளையாட்டு 15-12-2008 முதல் துவங்கி இருக்கிறார்கள்.. இதுவரை அவருக்கு 2884421 அடிகள் விழுந்திருக்கின்றன..

இன்னொரு பக்கம் அவரை அடித்த ஷூவை 47 கோடி கொடுத்து வாங்க ஒரு அரேபியர் தயாராக இருப்பதாக தட்ஸ்தமிழ்.காம் இல் ஒரு சேதி வெளியாகி உள்ளது, ஷூ எறிந்த அந்த நிறுபரை மாவீரகாக லிபியா நாட்டின் அதிபர் மகள் சொல்லி இருக்கிறாராம்..

புஷ் மீது விழுந்ததால் அந்த ஷூவின் மதிப்பு கூடிவிட்டதா ? அல்லது புஷ்ஷின் மதிப்பு குறைந்துவிட்டதா ? ஒன்னும் புரியல..

அன்புரசிகன்
17-12-2008, 05:03 PM
அமெரிக்காவிற்கு ஆயுத உதவி தான் வழங்கவில்லை தவிர அவர்களை எதிர்த்து இந்தியா எந்த வித அறிக்கையும் விட்டதாக எனக்கு ஞாபகமில்லை... அண்மையில் சிரியாவிற்கு எதிராக அமெரிக்கா கண்டணங்கள் அறிவிப்புக்கள் விடப்பட்ட போது சீனா மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தது... இந்தியா அல்ல.. இதை இன்று ஞாபகம் வைத்திருங்கள். அப்புறமா இன்னொரு திரியில் எங்காவது தேவைப்படும் வாத்தியாரே...........

தவிர தப்பே செய்திருந்தாலும் ஒரு நாட்டு அதிபரை அதாவது ஒரு நாட்டின் முதல் மகனை அவமதித்தது மகா தப்பு... அதை எந்த வகையிலும் சரிப்படுத்தி கூற முயலாதீர்கள் வாத்தியாரே... இல்லை நீங்கள் அதை மறுப்பீர்கள் என்று இந்த திரியில் கூறுங்கள்... அதாவது அந்த பத்திரிகையாளன் செய்தது சரி என்று கூறுங்கள்... அடுத்த கேள்வி ஒன்றை நான் கேட்க்கிறேன்...

மதுரை மைந்தன்
18-12-2008, 01:47 AM
நானும் அறிவேன் வாத்தியார் ஐயா, பாக் ஆக்ரமிப்பு கெஸ்மீர் வழியாகதான் ரஷ்யா தன் படைகளை இந்தியாவுக்கு அழைத்து வந்தது, இல்லை என்றால் தீவிரவாதிகளின் ஊடுருவல் எப்படி நிகழ்ந்திருக்கும் ? இது சம்மந்தப்பட்ட டாக்குமெண்ட்ரிகள் நெட்டில் நிறைய உண்டு தேடிப்பாருங்கள் புரியும்..

அப்கானில் கம்யூனிஸ ஆட்சி வந்த தருணத்தில் அதை எதிர்த்து பெரும் புரட்சிகள் நடந்ததன, அதை கட்டுப்படுத்த தான் ரஷ்யா உள் நுழைந்தது, ஆனால் அன்றைய வல்லரசான ரஷ்யாவின் உள் நோக்கமே வேறு, அப்கான் மீது கைவைத்தால், அரேபிய நாடுகள் மூக்கை நீட்டும் அப்புறம் கவனித்து கொள்ளலாம் என்பதே அது..

ஆனால் அப்கானிய புரட்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுதம் கொடுத்து உதவவே ரஷ்யாவால் ஒன்று செய்ய இயலவில்லை, வேறு வழியின்றி வெளியேறியது, வெளியேறும் போதே, பாக் ஆக்ரமிப்பு கெஷ்மீர் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவினர்..

அப்கான் போரில் எப்படி தன் வான் எல்லையை இந்தியா திறந்துவிட்டதோ, அது போல் ஈராக்குக்கு எதிரான போரில் அமெரிக்க விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்பிதே இந்தியாதான், இதுக்கு மேல் என்ன உதவி செய்யனும்..

நீங்கள் சொல்வது முற்றிலும் சரியாக இருந்தாலும் தற்போதைய தீவிர வாதங்களுக்கு எப்படி ரஷ்யா தான் பொறுப்பு என்கிறீர்களோ அதே மாதிரி காலத்தில் சற்று பின் சென்றால் இன்று இந்தியாவின் துயரங்களுக்கு மூல காரணம் ஈரான் நாடு தான் என்று சொல்லுவேன். அங்கிருந்து வந்த மொகலாய ஆதிக்க வாதிகளால் தான் இஸ்லாம் இந்தியாவில் பரவியது. உண்மையில் பார்க்க போனால் பெரும்பான்மையான இந்திய இஸ்லாமியர்களின் மூதாதையர்கள் இந்துக்களே. இன்றைய காஷ்மிர் பிரச்னைக்கு மூல காரணம் ஈரான் நாடு என்று நான் சொல்வேன்

ஆப்கானிஸ்தானில் தாலிபான் உருவாகியதில் பாகிஸ'தானின் பெரும் பங்கை யும் அதன் மூலமாக அல் கொய்தா ஆப்கானிஸ்தானில் நுழைந்ததையும் பார்த்தால் பாகிஸ்தான் தான தற்போதைய நிலமைக்கு பொறுப்பாளி என்று சொல்லலாம்.

lolluvathiyar
18-12-2008, 07:57 AM
ஆனால் அப்கானிய புரட்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுதம் கொடுத்து உதவவே ரஷ்யாவால் ஒன்று செய்ய இயலவில்லை, வேறு வழியின்றி வெளியேறியது, வெளியேறும் போதே, பாக் ஆக்ரமிப்பு கெஷ்மீர் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவினர்..

பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவது ரஸ்ய ஆப்கான் போருக்கு பல வருடம் முன்பிருந்தே நடந்து வரும் சம்பவம்.
ரஸ்யா அங்கிருந்த நோக்கமே அமெரிக்காவின் ஆதிக்கம் ஆப்கான் மீது ஏற்பட கூடாது என்பதற்காக. அதாவது ஆம்கானிலிருந்து கராச்சி துரைமுகத்துக்கு பெரிய சாலை பைப்லைன் போட்டு அதை பாக்கிஸ்தான் கட்டுபாட்டுக்கு கொண்டு செல்ல போட்ட திட்டத்தை முறியடிக்கவே ரஸ்ய படை ஆம்கானில் நுழைந்தது.

தீவிரவாதிகள் ரஸ்ய படையினருடன் வரவில்லை. இன்னும் சொல்லபோனால் ஆப்கானிலிருந்து ரஸ்யாவை துரத்த அமெரிக்காவும் பாக்கிஸ்தானும் முஜாயிதின் (ஹர்கத் அல் முஜாயிதின்) அமைப்புகளை உருவாக்கி அவர்களுக்கு பயற்ச்சியும் கொடுத்து ரஸ்யாவை துரத்தியது அனைவரும் அறிந்ததே. ரஸ்யாவை துரத்தியவுடன் இந்த முஜாயிதின்களுக்கு வேலை குரைந்து விட்டதால் காஸ்மீர் தீவிரவாதிகளுக்கு ஆயுத பயிற்சியும் ஆயுதமும் வழங்கி அதே அமைப்பு கொஞ்சம் மாற்றி ஹிஜ்புல் முஜாயிதின் என்ற பெயரில் இந்தியாவில் தீவிரவாதம் செய்தது. கார்கில் போரில் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களும் அன்று அமெரிக்கா வழங்கிய ஆயுதங்களைதான்.

ஈராக்குக்கு எதிரான போரில் அமெரிக்க விமானங்களுக்கு பெட்ரோல் நிரப்பிதே இந்தியாதான், இதுக்கு மேல் என்ன உதவி செய்யனும்..

ஆம் ஒருமுரைதான் அப்படி அனுமதித்தது. அதுவும் அந்த சூல்நிலை அனுமதித்தது இந்தியர்கள் விபிசிங் அரசு. அதுவும் நீங்கள் சொல்வது முதல் ஈராக் போரின் போதுதான். இரன்டாவது ஈராக் போரில் அல்ல.

அமெரிக்காவிற்கு ஆயுத உதவி தான் வழங்கவில்லை தவிர அவர்களை எதிர்த்து இந்தியா எந்த வித அறிக்கையும் விட்டதாக எனக்கு ஞாபகமில்லை...

அன்புரசிகரே சில காலம் இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்க படாத மைனாரிட்டி அரசாங்கம் அமைந்து விடுகிறது. பெரும்பான்மை இல்லாவிட்டாலும் தேர்தலுக்கு பிறகு கூட்டனி அமைத்து அரசு அமைத்து விடுகின்றனர். பெரும்பான்மை மக்கள் புறகனித்த சிறிய கட்சிகள் கூட இந்தியாவில் கூட்டனி அமைத்து ஆட்சி செய்ய முடியும். (ஏ.கா தேவகவுடா, ஐ கே குஜரால், சந்திரசேகர் )

அப்படி சில அரசாங்கம் செய்யும் உதவிகள் முற்றிம் மக்களுக்கு பிடிக்காமல் செய்த உதவிகளே. அந்த நேரத்து இந்திய அரசாங்கம் உதவியது என்று சொல்லலாமே தவிர இந்தியர்கள் என்று சொல்வது சரியாகாது. ஒட்டு மொத்த இந்தியர்கள் ஈராக் தாக்குதலை விரும்பவில்லை.

தவிர தப்பே செய்திருந்தாலும் ஒரு நாட்டு அதிபரை அதாவது ஒரு நாட்டின் முதல் மகனை அவமதித்தது மகா தப்பு... .

சரிதான், ஏற்றுகொள்கிறேன். ஆனால் அமெரிக்கர்களை மனித குலத்து விரோதிகள் என்று உலக மக்கள் மனதில் ஊறி இருக்கும் ஒரு விசயம். எங்களை பொருத்தவரை பாக்கிஸ்தான் கூட எதிரிகள்தான் ஆனால் அமெரிக்கர்களை விட தீய குணம் கொண்டவர்கள் இல்லை. பாக்கிஸ்தானியர்கள் மக்களுக்கு அன்பு பாசம் இரக்கம் எல்லாம் உள்ளவர்கள்.

அமெரிக்கார்கள் என்று சொல்வதை விட இன்னும் கொஞ்சம் டீப்பாக பார்த்தால் பிரிட்டிஷ் என்று சொல்லலாம் ஏனென்றால் இருவருக்குமே ஒரே ரத்தம்தான்.

ஆதி
18-12-2008, 09:29 AM
//ஆம் ஒருமுரைதான் அப்படி அனுமதித்தது. அதுவும் அந்த சூல்நிலை அனுமதித்தது இந்தியர்கள் விபிசிங் அரசு. அதுவும் நீங்கள் சொல்வது முதல் ஈராக் போரின் போதுதான். இரன்டாவது ஈராக் போரில் அல்ல.//

நான் முதல் ஈராக் போரைதாங்க சொல்றேன்..

ஐயா, விபிசிங் மேல அப்படி என்ன கோவம் உங்களுக்கு.. அமெரிக்கா ஈராக் மீதான தாகுதலை தொடங்கும் போது விபிசிங் பிரதமரே இல்ல..

2-12-1989 - 10-11-1990 விபிசிங் ஆண்டது..

ஈராக்-குவைத் சமர் துவங்கியது 2-8-1990, அமெரிக்கா தன் படைகளை அரபு நாடில் இறக்கியது 7-8-1990, ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றி குவைத்தைவிட்டு ஈராக் படைகளை வெளியேற சொன்னது 29-11-1990, ஈராக் வெளியேறாததால் தன் முதல் வான் தாக்குதலை அமெரிக்க துவங்கியது 16-01-1991, விபிசிங் பிரதமராகவே இல்லங்க அப்ப.. சந்திரசேகர் வந்துட்டார்.. 27-02-1991 குவைத்தை முழுமையாக மீட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது..

அன்புரசிகன்
18-12-2008, 09:47 AM
அன்புரசிகரே சில காலம் இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்க படாத மைனாரிட்டி அரசாங்கம் அமைந்து விடுகிறது. பெரும்பான்மை இல்லாவிட்டாலும் தேர்தலுக்கு பிறகு கூட்டனி அமைத்து அரசு அமைத்து விடுகின்றனர். பெரும்பான்மை மக்கள் புறகனித்த சிறிய கட்சிகள் கூட இந்தியாவில் கூட்டனி அமைத்து ஆட்சி செய்ய முடியும். (ஏ.கா தேவகவுடா, ஐ கே குஜரால், சந்திரசேகர் )

அப்படி சில அரசாங்கம் செய்யும் உதவிகள் முற்றிம் மக்களுக்கு பிடிக்காமல் செய்த உதவிகளே. அந்த நேரத்து இந்திய அரசாங்கம் உதவியது என்று சொல்லலாமே தவிர இந்தியர்கள் என்று சொல்வது சரியாகாது. ஒட்டு மொத்த இந்தியர்கள் ஈராக் தாக்குதலை விரும்பவில்லை.
.

வாத்தியாரே... ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்... உள்நாட்டில் உள்ள குழறுபடிகளை வைத்து தப்பிக்காதீர்கள்... இந்தியா ஆதரித்ததா இல்லையா என்பது தான் பிரச்சனை. தவிர அது மைனாரிட்டியா மெஜோரிட்டியா என்பதல்ல... வெளிநாடுகளை பொறுத்தவரை இந்தியா தான். இங்கு மைனாரிட்டி இந்தியா என எந்த நாடுகளும் உத்தியோக பூர்வமாக அழைத்தது இல்லை...சரிதான், ஏற்றுகொள்கிறேன். ஆனால் அமெரிக்கர்களை மனித குலத்து விரோதிகள் என்று உலக மக்கள் மனதில் ஊறி இருக்கும் ஒரு விசயம். எங்களை பொருத்தவரை பாக்கிஸ்தான் கூட எதிரிகள்தான் ஆனால் அமெரிக்கர்களை விட தீய குணம் கொண்டவர்கள் இல்லை. பாக்கிஸ்தானியர்கள் மக்களுக்கு அன்பு பாசம் இரக்கம் எல்லாம் உள்ளவர்கள்.

அமெரிக்கார்கள் என்று சொல்வதை விட இன்னும் கொஞ்சம் டீப்பாக பார்த்தால் பிரிட்டிஷ் என்று சொல்லலாம் ஏனென்றால் இருவருக்குமே ஒரே ரத்தம்தான்.

ஈராக் போரை எதிர்த்து எத்தனை அமெரிக்கர்கள் எதிராக குரல் கொடுத்தார்கள். எத்தனை வெகுஜன போராட்டங்கள் அமெரிக்காவில் நடாத்தப்பட்டது. இப்படி பொதுவாக அமெரிக்கர்களை கூறிவிட்டீர்களே... அப்படியானால் இந்தியர்கள் ஈழத்தமிழரை 1988 காலப்பகுதியில் கொலைசெய்தார்கள் என்று சொல்லமுடியுமா.............

lolluvathiyar
19-12-2008, 12:04 PM
ஐயா, விபிசிங் மேல அப்படி என்ன கோவம் உங்களுக்கு.. அமெரிக்கா ஈராக் மீதான தாகுதலை தொடங்கும் போது விபிசிங் பிரதமரே இல்ல...

மன்னிக்கவும் தவறாக பதித்து விட்டேன். விபிசிங் என்பதை சந்திரசேகர் என்று இப்ப திருத்தி விட்டேன்

. இந்தியா ஆதரித்ததா இல்லையா என்பது தான் பிரச்சனை. தவிர அது மைனாரிட்டியா மெஜோரிட்டியா என்பதல்ல.

இரன்டாவது ஈராக் போரின் போது இந்தியா ஆதரிக்கவில்லை. எதிர்பு தான் செய்தது. முதல் ஈராக் போரில் கூட இந்தியா ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை விமானங்களுக்கு எறிபொருள் நிரப்பியது மக்களுக்கு மற்ற கட்சிகளுக்கு தெரியாமல் ரகசியமாக நடந்த விசயம், அதன் பிறகு அரசு கவிழ்ந்தது என்று அனைவருக்கும் தெரியும்.

.ஈராக் போரை எதிர்த்து எத்தனை அமெரிக்கர்கள் எதிராக குரல் கொடுத்தார்கள். .

போர் ஆரம்பிக்கும் முன்போ நடக்கும் போதோ குரல் கொடுக்க வில்லை. இதை நன்றாக கவனிக்கவும்.அங்கு தொடர்ந்து தன் படைவீரர்களை இருக்க வைத்து அதில் குறைந்த சிலர் இறந்த பிறகுதான் அமெரிக்கர்கள் போருக்கு எதிராக குரல் கொடுத்தார்கள்.

இப்படி பொதுவாக அமெரிக்கர்களை கூறிவிட்டீர்களே... அப்படியானால் இந்தியர்கள் ஈழத்தமிழரை 1988 காலப்பகுதியில் கொலைசெய்தார்கள் என்று சொல்லமுடியுமா.............

நான் பொதுவாக அமெரிக்கார்கள் அதனால் அவர்கள் தலைவர்களும் மோசம் அதே சமயம் இந்தியர்கள் நல்லவர்கள் ஆனால் தலைவர்கள் தவறான முடிவு எடுப்பார்கள் முன்பே சொல்லி இருக்கிறேன். பொதுவாக ஆசிய நாடுகளில் மக்கள் நினைப்பதுக்கு தலைவர்கள் செயல்படுவதுக்கு சம்ம ந்தமே இருக்காது. ஆனால் அமெரிக்கா மட்டும் விதிவிலக்கு அமெரிக்க மக்கள் ஈராகை கொள்ளை அடிக்க நினைத்தார்கள் ஆதரித்தார்கள் ஊக்கமளித்தார்கள் அதை புஷ் செய்தார்.

இலங்கை இ ந்திய பிரச்சனையை பற்றி அதிகமாக இங்கு விவாதித்தால் திரி திசை மாறி விடும் அதனால் கொஞ்சம் அடக்கி வாசிப்போம் அன்பு.

அன்புரசிகன்
19-12-2008, 12:27 PM
நான் ஒன்றும் திசையையும் மாற்றவில்லை... இலங்கை பிரச்சனையை இங்கு இழுக்கவும் இல்லை... தக்க நேரத்திற்கு உங்கள் விதிகளை மாற்றாதீர்கள்... உங்களுக்கு பிடித்தால் அது மைனாரிட்டி அரசு செய்தது. மற்ற அரசியல் கட்சிகளுக்கு தெரியாமல் செய்தது என்ற சப்பை கட்டு கட்டுகிறீர்களே... இது நியாயமான கதையா??? இவ்வாறு ஒரு அமெரிக்கனும் சொல்லலாம். எனக்கு தெரியாமல் செய்துவிட்டார்கள் என்று..............

இந்தியா செய்ததா இல்லையா என்பது தான் விடையம்... இந்தியா எதிர்த்ததாக எனக்கு தெரியவில்லை...........

நிரன்
19-12-2008, 03:00 PM
இன்று wordpress இல் ஏதோ ஒன்றை தேடும் பொளுது சிக்கியது. புஷ்ற்கு காலணியால் அடித்தது மன்றத்தில் கொளுந்து விட்டு எரிவது ஞாபகம் வந்தது அதனால் இதனை இங்கே படங்களுடன் தருகிறேன்

கொண்டாடுவோம்! இது வீரத்தின் திருநாள்.
ஒரு வெடிகுண்டுத் தாக்குதலை விடவும்
தற்கொலைப்படைத் தாக்குதலை விடவும்
வலிமையானது இந்தத்தாக்குதல்.
வீரம் செறிந்தது இந்த நடவடிக்கை.
மாவீரன் ஸய்தி !
முன்தாதர் அல் ஸய்தி - உண்மையிலேயே ஒரு மாவீரன்தான்.

அமெரிக்க வல்லரசின் இராணுவம்,
அதன் உளவுத்துறைகள்,
அதிபரின் சிறப்புப் பாதுகாப்புப் படைகள்..‏

இவர்களெல்லாம் மூடர்கள் என்றோ முன்யோசனை அற்றவர்கள் என்றோ நாம் சொல்லிவிட முடியாது. அமெரிக்க சிப்பாய்களின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்யும் பொருட்டு, சமீபத்தில் இராக்கில் குழந்தைகளுக்கான பொம்மைத் துப்பாக்கிகளின் விற்பனையைக் கூடத் தடை செய்திருக்கிறது அமெரிக்க இராணுவம்.
நான்கு ஆண்டுகளாக அமெரிக்க இராணுவம் இராக்கை சலித்து விட்டது. கொத்துக் குண்டுகள் முதல் அபு கிரைப் வரையிலான எல்லா வழிமுறைகள் மூலமும் இராக்கைக் குதறிவிட்டது. ஷியா, சன்னி, குர்து.. என எல்லா விதமான பிரிவினைகளையும் பயன்படுத்தி இராக் மக்களைத் துண்டாடி விட்டது. பொம்மை ஆட்சியை அமைத்து துரோக பரம்பரையையும் தோற்றுவித்து விட்டது..
‏‏இருப்பினும் “பலான தேதியில் பலான இடத்துக்கு அமெரிக்க அதிபர் வருகிறார்” என்று முன்கூட்டியே அறிவிக்கும் துணிவு அமெரிக்க அரசுக்கு இல்லை. ஊரடங்கிய பின்னிரவு நேரத்தில், வைப்பாட்டி வீட்டுக்கு விஜயம் செய்யும் நாட்டாமையைப் போல பாக்தாத் நகரில் புஷ்ஷை இறக்கியது அமெரிக்க உளவுத்துறை.
அவர் இராக் மக்களிடம் விடை பெறுவதற்கு வந்தாராம்!
2004 ஆம் ஆண்டு இராக்கில் புஷ்ஷின் படைகள் ஆரவாரமாக நுழைந்த அந்த நாளை உலகமே அறிந்திருந்தது. விடை பெறும் நாளோ, இராக் மக்களுக்கே இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.‏‏
இரகசியமான இந்த விடையாற்றி வைபவத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு பலமாக இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு கூழாங்கல், ஒரு அழுகிய முட்டை, ஒரு தக்காளி எதையும் அந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தின் அரங்கினுள் ஸய்தி எடுத்துச் சென்றிருக்க முடியாது. இப்படியொரு ஆயுதத்தை ஒரு மனிதன் அணிந்து வரமுடியும் என்று அமெரிக்க உளவுத்துறை எதிர்பார்த்திருக்கவும் முடியாது.

எப்பேர்ப்பட்ட கவித்துவம் பொருந்திய தாக்குதல்! புஷ் கொல்லப்படவில்லை. காயம்படவுமில்லை. செருப்படிக்குத் தப்பி ஒதுங்கி சமாளித்து அந்த மானக்கேடான சூழ்நிலையிலும் மீசையில் மண் ஒட்டியது தெரியாத மாதிரி, அப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அமெரிக்கப் பெருமிதம் அடி வாங்காத மாதிரி, கம்பீரமான அசட்டுச் சிரிப்பின் பல வகைகளை நமக்குக் காட்டுகிறார் புஷ்.

சொற்களே தேவைப்படாத படிமங்களாக நம் கண் முன் விரிந்த அந்தக் காட்சி 4 ஆண்டுகளாக இராக்கில் அமெரிக்கா வாங்கி வரும் செருப்படிகள், அதன் அவமானங்கள், அதன் சமாளிப்புகள்.. அனைத்துக்கும் பொழிப்புரை வழங்குகிறது.
நான்காண்டு செருப்படிகளை உள்ளடக்கிய ஒரு செருப்படி. நான்காண்டு விடுதலைப்போருக்குப் பொருத்தமான ஒரு விடையாற்றி. எப்பேர்ப்பட்ட கவித்துவமிக்க காட்சி!

சதாம் தூக்கிலேற்றப்பட்ட காட்சியுடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். அதுவரை தன்னை ஆதரித்திராத உலக மக்கள் பலரின் அனுதாபத்தையும் மரியாதையையும் அன்று சதாம் பெறமுடிந்தது. அநீதியான அந்தத் தண்டனைக்கு எதிராக அன்று உலகமே ஆர்த்தெழுந்தது.
ஆனால் அதிபர் புஷ்ஷுக்கு விழும் இந்தச் செருப்படி சொந்த நாட்டு மக்களின் அனுதாபத்தைக்கூட அவருக்குப் பெற்றுத்தரவில்லை. அமெரிக்காவின் அதிகாரத் துப்பாக்கியின் நிழலிலேயே அதன் அதிபர் அம்மணமாக நிற்பதைக் கண்டு அமெரிக்க மக்களே விலா நோகச் சிரிக்கிறார்கள்.
“இந்திய மக்கள் உங்களை நேசிக்கிறார்கள்” என்று சில மாதங்கள் முன் புஷ்ஷிடம் வாலைக்குழைத்தாரே மன்மோகன் சிங், அந்த புஷ்ஷுக்கு விழுந்த செருப்படியை அதே இந்திய மக்கள் ரசிக்கிறார்கள். செய்தி கேளவிப்பட்ட மறுகணமே பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடியிருக்கிறார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள். நாமும் கொண்டாடுவோம்.
இரட்டைக் கோபுரத் தாக்குதலை விடவும் கம்பீரமானது இந்த இரட்டைச் செருப்புத் தாக்குதல். சுதந்திரம் என்ற சொல்லை மனித குலத்துக்கு வழங்கிய மெசபடோமிய நாகரீகம், அந்தச் சுதந்திரத்தின் சின்னமாக மாவீரன் ஸெய்தியை உலக மக்களுக்கும், ஒரு ஜோடி செருப்புகளை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் வழங்கியிருக்கிறது.
ஒரு வகையில் இந்தக் காலணிகள் புனிதமானவை.

http://vinavu.files.wordpress.com/2008/12/pic_12361.jpg?w=468&h=351

http://vinavu.files.wordpress.com/2008/12/pic_12371.jpg?w=468&h=351

http://vinavu.files.wordpress.com/2008/12/pic_12381.jpg?w=468&h=351

http://vinavu.files.wordpress.com/2008/12/pic_12401.jpg?w=468&h=351

http://vinavu.files.wordpress.com/2008/12/hpim2156.jpg?w=468&h=355

http://vinavu.files.wordpress.com/2008/12/hpim2161.jpg?w=468&h=355

http://vinavu.files.wordpress.com/2008/12/hpim2164.jpg?w=468&h=355

http://vinavu.files.wordpress.com/2008/12/hpim2165.jpg?w=468&h=355

http://vinavu.files.wordpress.com/2008/12/hpim2166.jpg?w=468&h=355

ராஜா
19-12-2008, 04:46 PM
தசரதன், ஒரு நாள் கண்ணாடியைப் பார்க்கிறான், காதோரம் ஒரு முடி நரைத்திருக்கிறது, அடடா நமக்கு வயசாச்சு ஆட்சியை நம் மகனுக்கு கொடுத்திடும் தருணம் வந்திருச்சு என்று நினைக்கிறான்..

காதோர கண்ட ஒரு நரைக்கே, நாடளும் தகுதி போய்விட்டது, நாம் உடலாலும் தளர்ந்துவிட்டோம் னு தசரதன் நினைக்கிறான்..

நம்ம ஊர பாருங்க, தலை முழுக்க நரைத்து, உடல் ஒடுங்கி, குடுகுடு கிழவனான பிறகு பதவியாச போக மாட்டீங்கிது..

தயரதனுக்கு 60000 மனைவிமார்.. நல்லவேளை..

நம்மாளுக அவ்வளவு தூரம் போகலை..!