Log in

View Full Version : தணிய போகுது தாகம்

Mano.G.
15-12-2008, 11:12 AM
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என அன்று பாடினான் மகாகவி சுப்ரமணிய பாரதி

அந்த சுதந்திரத்திற்கு போராடிய தியாகிகளுக்கும்
வீரர்களுக்கும் இவ்வேலையில் நன்றி,

உலகில் பரந்து கிடக்கும் மனித இனத்தில்
இந்தியன் அதுவும் தமிழன் என ஒரு இனத்தை
தனக்கு தெரிந்த வழியில் எந்த சுய லாபம் பார்க்காமல்
இந்த தமிழினத்தை தமிழ் மன்றம் என்ற வலைபின்னலில்
ஒன்று சேர்த்த இராசகுமரனை எப்படி பாராட்டுவது?
எப்படி நன்றி சொல்வது?

இந்த மன்றத்தில் இணைந்த உறவுகள் தங்கள் பதிப்புக்களோடு மட்டுமல்லாது
உணர்வு பூர்வ சொந்தங்களாகி , சில ஆண்டுகள்
முகமறியால் உறவாடிய , சீண்டிய, நக்கல் செய்த , கலாய்த்த ,
ஆதரிக்க வேண்டிய நேரத்தில் ஆதரித்த, தேற்ற வேண்டிய நேரத்தில்
தேற்றிய, பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டிய உறவுகளை
என்று காண்போம் என எண்ணி ஏங்கிய நேரத்தில்

வருகிரதே டிசம்பர் 20ம் நாள்

இன்னும் நான்கு நாட்கள் சனிக்கிழமை காலை 9.00மணிக்கு

இருப்பு கொள்ளவில்லை எப்போதுவரும் இந்த சனிக்கிழமை
எனது உறவுகளை காண.

"தணிய போகுது தாகம்"

தலை மணியாவின், இளவல் இளசுவின்,சகோதரர் கீழை நாடான்
அவர்களின் ஆதரவில்

மனோ.ஜி

தமிழ்தாசன்
15-12-2008, 11:57 AM
உங்கள் விடயப் பகிர்வுக்கு வணக்கம்.
இம் மன்றச் சேர்வுக்கு காரணமானவரைப் பாராட்டியே ஆகவேண்டும்
பாராட்டும். வாழ்த்தும்.

முகம்காணா விட்டாலும் தமிழகம் தந்த தமிழுணர்வுகள் மறக்கோம்.

அவரோடு இணைந்து பணியாற்றும் அனைவருக்கும் என் தலைசாய்த்து வணக்கம்.

இந்த மன்றத்தில் இணைந்த உறவுகள் தங்கள் பதிப்புக்களோடு மட்டுமல்லாது
உணர்வு பூர்வ சொந்தங்களாகி , சில ஆண்டுகள்
முகமறியால் உறவாடிய , சீண்டிய, நக்கல் செய்த , கலாய்த்த ,
ஆதரிக்க வேண்டிய நேரத்தில் ஆதரித்த, தேற்ற வேண்டிய நேரத்தில்
தேற்றிய, பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டிய உறவுகளை
என்று காண்போம் என எண்ணி ஏங்கிய நேரத்தில்

வருகிரதே டிசம்பர் 20ம் நாள்

இன்னும் நான்கு நாட்கள் சனிக்கிழமை காலை 9.00மணிக்கு

இருப்பு கொள்ளவில்லை எப்போதுவரும் இந்த சனிக்கிழமை
எனது உறவுகளை காண.

"தணிய போகுது தாகம்"

தலை மணியாவின், இளவல் இளசுவின்,சகோதரர் கீழை நாடான்
அவர்களின் ஆதரவில்
மனோ.ஜி

மகிழ்வாகட்டும் ஒன்று கூடல்.

மன்றத்தாகம் தீரட்டும்.

தமிழர் தாகம் தீர்வதெப்போ?
தமிழால் ஒன்றானோம்
தமிழ்வாழ்வது போல்
தமிழர் வாழும் எத்திசையிலும்
தமிழர் நாம் ஒன்றாவோம்.
தமிழர் தனியரசாழ ஒருகுரலாவோம்.

மன்றம் கூடும் விழாவுக்கு வாழ்த்துக்கள்.