PDA

View Full Version : அழித்த கோப்புகளை மீண்டும் பெற...க.கமலக்கண்ணன்
15-12-2008, 04:09 AM
நாம் அழித்த கோப்புகளை ரீசர்க்கில் பின்னில் இருந்து எடுத்து விடுகிறோம். அங்கேயும் இல்லை என்றால்... Shift பிடித்து அழித்ததை திரும்ப பெற இலவசமாக ஒரு மென் பொருள். உபயோகித்துப்பார்த்தேன். மிகவும் அருமை...

அதன் சுட்டி http://www.undeleteunerase.com/download.html

நண்பர்கள் உபயோகித்து பார்த்து பின்பு சொல்லவும்...

அன்புரசிகன்
15-12-2008, 04:21 AM
Standalone கோப்பும் admin தரம் கேட்கிறது. வீடு சென்று தான் பார்க்க வேண்டும். flash drive லிருந்து அழித்தவற்றையும் மீள பெறமுடியுமா?

க.கமலக்கண்ணன்
15-12-2008, 04:29 AM
முடியும் என்று நினைக்கிறேன்... பரிசோதித்துவிட்டு சொல்கிறேன் அன்பு ரசிகன்


முடிகிறது நண்பா! மிக அருமையாக கொண்டு வருகிறது. முயற்சித்துவிட்டு சொல்லுங்கள்...

பாரதி
15-12-2008, 05:19 AM
நானும் அந்தக்கோப்பினை பதிவிறக்கிக்கொண்டிருக்கிறேன்.`நல்ல தகவலுக்கும் பதிவிறக்க சுட்டிக்கும் மிகவும் நன்றி கமலக்கண்ணன்.

க.கமலக்கண்ணன்
15-12-2008, 07:23 AM
நன்றி பாரதி உங்களுடைய கணனியில் எவ்வாறு செயல்படுகிறது என்று தெரியப்படுத்தவும்...

விகடன்
15-12-2008, 09:28 AM
அழகாக வேலை செய்கிறது
பகிர்விற்கு மிக்க நன்றி கமலக்கண்ணன்

க.கமலக்கண்ணன்
15-12-2008, 12:20 PM
நன்றி விராடன் நன்றி...

பா.ராஜேஷ்
18-03-2009, 05:47 AM
அழிந்தவற்றை பெற கீழ் கண்ட தளத்திற்கு சென்று பாருங்கள்.
www.recovermyfiles.com

புதியவன்
13-06-2009, 05:16 PM
எத்தனை முறை பைல்களைக் கையாளும் விதம் குறித்தும் அவற்றை அழிக்கும் முன் எச்சரிக்கையாகச் செயல்படுங்கள் என்று எழுதினாலும் பல வாசகர்கள் தாங்கள் தெரியாமல் ஒரு சில பைல்களை அழித்துவிட்டோம்; எப்படியாவது அவற்றைப் பெற உதவிடுங்கள் என்று கடிதங்கள் எழுதுகின்றனர்.

இந்த மலரில் அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு உதவிடும் புரோகிராம்கள் குறித்து பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.


சில வாரங்களுக்கு முன் ரெகுவா என்று ஒரு அழித்த பைல்களை மீட்டுத் தரும் புரோகிராம் பற்றி எழுதி இருந்தோம். இதோ இன்னொரு பயனுள்ள புரோகிராம்:


டிஸ்க் டிக்கர் (Disk Digger) கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், டிஜிட்டல் கேமரா மெமரி மற்றும் பிற மெமரி மீடியாக்களில் அழித்த பைல்களையும் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.

மீண்டும் பார்மட் செய்யப் பட்ட அல்லது சரியாக பார்மட் செய்யப்படாத டிஸ்க்குகளில் இருந்தும் பைல்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு. Disk Digger ஒரு இலவச புரோகிராம். விண்டோஸ் இயக்கத்தில் இயங்குகிறது. இதனை உருவாக்கியவர் டிமிட்ரி ப்ரையண்ட் என்பவர். இது ஓர் அளவில் சிறிய எக்ஸிகியூட்டபிள் புரோகிராம்.

ஒரு ஸிப் பைலுக்குள்ளாகக் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இதன் எக்ஸிகியூட்டபிள் பைலை இயக்கி எந்த டிரைவினை ஸ்கேன் செய்திட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.


அழிந்த பைல்களை மீட்டுத் தர இரு வழிகள் தரப்பட்டுள்ளன. ஆழமாக ("dig deep") டிரைவ்களில் மூழ்கி அழிக்கப்பட்ட பைல்களைத் தேடுதல். இந்த வகையில் முழு டிரைவும் ஸ்கேன் செய்யப்பட மாட்டாது. விண்டோஸ் இயக்கத் தில் நாம் அதிகம் புழங்காத பைல் வகைகளை விட்டுவிடும்.

அதிக ஆழமாகத் தேடும் வகையில் இந்த புரோகிராம் அழித்த பைல் குறித்த தகவல்களைப் பெறும். ஆனால் பைலின் பெயரைப் பெற்றுத் தராது. எந்த எந்த அழிக்கப்பட்ட பைல்களை மீண்டும் பெற முடியும் என்று அதன் பெயர்கள் அல்லது தானாக அமைந்த பெயர்கள், உருவாக்கப்பட்ட தேதி, எடிட் செய்யப்பட்ட தேதி, பைலின் அட்ரிபியூட்ஸ் என்று சொல்லப் படுகிற பைலின் தன்மை, அதன் அளவு ஆகியவை பட்டியலிடப் படும்.


இந்த பட்டியலைப் பார்த்து இன்னும் அந்த பைலில் டேட்டா பத்திரமாக உள்ளதா என அறிந்து கொள்ளலாம். பின் அந்த பைல் அல்லது பைல்களைத் தேர்ந்தெடுத்து Restore selected file(s)” என்ற கட்டளை கொடுக்கலாம். அதன் பின் எந்த டைரக்டரியில் இந்த பைல்களை வைத்திட வேண்டும் எனத் தேர்ந்தெடுத்து கட்டளை கொடுத்தால் பைல்கள் மீட்கப்பட்டு நமக்குக் கிடைக்கும்.

இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற http://dmitrybrant.com/diskdigger என்ற முகவரிக்குச் செல்லவும்.

நன்றி:தினமலர்,கம்ப்யூட்டர்மலர்.