PDA

View Full Version : முடிந்து முடியாத கனவு



ஆதி
15-12-2008, 03:35 AM
ஒரு கனவு

மீண்டும் பள்ளிக்கு செல்கிறேன்

இம்முறை என்னைச் சுற்றி எத்தனையோ புதியவர்கள்..

அதே ஆசிரியர்கள்..

பழைய வகுப்பு..

நீயும்தான்..

என்னை கண்டதும்

"எப்படி டா இருக்க ?
என்னசெய்ற ?
பாத்து ரொம்ப நாளாச்சில்ல!"
கேள்விகளை அடுக்கியவாறு
என்னருகில் அமர்ந்தாய்..

"நல்லா இருக்கேன்..
வேலை செய்றேன்..
நீ எப்படி இருக்க ?"

"நல்லா இருக்கன்டா"

"வாழ்க்கை எப்படி போகுது ?"
மீண்டும் நான்..

"சூப்பரா போகுது டா"
இரண்டு பிள்ளைகள், ஒரு ஆண், ஒரு பெண்..
சொல்லுகையில் கொஞ்சம் வெட்கினாய்..

"உனக்கு கல்யாண ஆய்டுச்சா டா?"

உதட்டைப் பிதுக்கினேன்

பாக்குறாங்களா ?

இல்ல..

"இன்னும் பழசயே நெனச்சுக் கிட்டிருக்கியா ?"

"..........................................................................................................................................................................................
மிக நீண்ட மௌனத்தோடு
உன்னை வெறித்துப் பார்த்திருந்தேன்"

நீ மட்டுமில்ல டா
நானும் நிறையவே இழந்துட்டேன்
ஆனா, இப்ப நான் சந்தோஷமா இருக்கேன்
அவர் என்மேல பிரியமா இருக்கார்..

உன் மனதை படிக்க
உன் விழிகளை
இன்னும் ஊடுருவிப் பார்த்தேன்...

எப்போதும் சிந்தும் அந்த சிரிப்பை
எனக்கு கொடுத்தாய்..

"க்**ஸ்"
முடிந்தும் முடியவில்லை கனவும்
உன் மீதான காதலும்..

பி.கு :- கதை வடிவம் கொடுக்கலாம் என்று முயற்சித்தும் கவிதை வடிவமாகத்தான் எழுது முடிந்தது என்றாலும் சில இடங்களில் உரைநடைக் குறுக்கீடு இருப்பதால் இந்தப் பகுதியிலேயே பதிக்கிறேன்..

சிவா.ஜி
15-12-2008, 04:13 AM
நாயகனின் காதல் தோல்வியடைந்தாலும், அவனின் காதலி இன்றும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென்று விரும்பும் அவனின் நல்ல மனது காணும் நல்ல கனவு.

கனவுக்கு முடிவுண்டு...காதலுக்கு ஏது? கவிதை வடிவில் ஒரு கதை எனச் சொல்லலாம். முயற்சிக்கு வாழ்த்துகள் ஆதி.

ஆதவா
15-12-2008, 12:34 PM
உண்மையைச் சொன்னா... ரெண்டுங்கெட்டான் தனமாக இருக்கிறது...

ஒன்று.. நீங்க கதையையோ, அல்லது கவிதையையோ தனியே எழுதியிருக்கலாம்... அல்லது மனதில் இரண்டையும் குழப்பியடிக்கும் தந்திரத்தை வரித்துக் கொண்டு... செம்மைப்படுத்திக் கொடுக்கலாம்... இதை என்னால் கதையாகவோ, கவிதையாகவோ எடுத்துக் கொள்ளமுடியவில்லை..

அன்புடன்
ஆதவன்./

arun
15-12-2008, 07:21 PM
கதை கவிதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் நன்றாக இருக்கிறது

MURALINITHISH
29-12-2008, 09:40 AM
தன் உணர்வுகளை எப்படி சொன்னல் என்ன கவிதை என்றால் கசக்குமா கதை என்றால் இனிக்குமா இரண்டும் இணைந்து அழகாய் இருக்கிற்து கனவில் கூட காதலி சுகமாய் இருக்கு நினைக்கும் உங்கள் நல்ல மனது வாழ்க

அமரன்
10-01-2009, 10:25 AM
பள்ளியில் பருவங்கடந்த இருவர் எனுபோது "வருவியா வரமாட்டியா வரலைன்னா உங்கூட கா" பாடல் நினைவாடியது.

என் கனவு நீதானடி..
கனவுகள் எல்லாம் மகிழ்ச்சியானதாய், அழகனாதாய் இருக்கவேண்டும் என்பதுதான் எல்லார் எண்ணமும் எதிர்பார்ப்பும்.

பாராட்டுகள் ஆதி.

இளசு
01-03-2009, 09:20 PM
கவிஞர்கள் கதை எழுதினாலும் கவிதை போலத்தான் வரும்..

ஆதி - நீ கவிஞன்..
ஆதலால் இக்கதை கவிதை வடிவம் எடுத்ததில் வியப்பில்லை..

'' உன்னை இழந்தது எனக்கு இழப்புதான் '' என பெண் சூசகமாவாது
சொல்ல வேண்டும் என ஏங்கும் சோகைமனம் ஆணுக்கானது..

சொல் மீறி விழி தோண்டி பார்ப்பது - அந்தப் பலவீனத்தால்..

என்னோடு இணையாமல் போனாலும்
எங்கிருந்தாலும் வாழ்க எனப் பாடுவதும் அதே ஆண்மனம்தான்..

பலமும் பலவீனமும் சமமாய்க் கலந்து ஆடும் மனக்கூத்து இது..

samuthraselvam
02-03-2009, 06:47 AM
கதை வடிவமோ கவிதை வடிவமோ எதுவானாலும் சொல்ல வந்த காதல் வலியை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. கவிதையில் கூட உரையாடல் வருமே.. முடிந்தும் முடியாத கனவு புரிந்தும் புரியாதது போல் இல்லை. அழகான காதல் கவி (வலி) அல்லது கதை.