PDA

View Full Version : மதிபாலா மறையவில்லை!



தமிழ்தாசன்
14-12-2008, 08:34 PM
http://upload.wikimedia.org/wikipedia/ta/d/de/Balasingham_anton.jpg


14-12-2006

அன்டன் பாலசிங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர்


பாலசிங்கம் (அன்டன் பாலசிங்கம் மார்ச் 4, 1938 - டிசம்பர் 14, 2006) விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக அறியப்பட்டவர். இவர் இங்கிலாந்து குடியுரிமைடைக் கொண்ட இலங்கைத் தமிழராவார். இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் ஆரம்பம் முதல் பெப்ரவரி 22-23 இல் ஜெனிவாவில் நடைபெற்ற , ஜெனிவா முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வரை விடுதலைப் புலிகளின் குழுவுக்கு தலைமை தாங்கி வந்தார். இங்கிலாந்தின் இலண்டன் சௌத் பேன்ங்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவருக்கு வேறு பல கல்வி நிலையங்களும் கௌரவ பட்டங்களை அளித்துள்ளன.

வணக்கம் என்.காந்தி.

அவரின் நினைவுகள் சுமந்து எழுதப்பட்ட வரிகள்.
இசை - சார்ள்ஸ் பொஸ்கோ
குரல் - ஜக்சன் பொஸ்கோ.





மதிபாலா மறையவில்லை - மனங்களிலே!
மலர்ந்தீரே! மலர்ந்தீரே! மார்கழிப் பூவே! (மதிபாலா மறையவில்லை)

கதிகாலம் அழைத்ததென்பீரோ?
விதியாலம் செய்ததென்பீரோ? மதிஞானியே!
எழுத்து வரிக் காதலனே! - எழுத்துலகில்
மலர்ந்தீரே! மலர்ந்தீரே! மார்கழிப் பூவே! (மதிபாலா மறையவில்லை)

பேச்சினிலும் பேனா வீச்சினிலும் - உமது
மூச்சினிலும்தத்துவமே! தமிழீழமே!
கண்ணாடி அணிந்தே - நம்முன்னாடி நிற்கின்றீர்
குறுந்தாடி முகவழகே!மலர்ந்தீரே!
மலர்ந்தீரே! மார்கழிப் பூவே! (மதிபாலா மறையவில்லை)

வரிப்புலிதான் வீழ்வதில்லை
வரலாறாய் எழுகின்றார்.
தேசத்தின் குரலே! தேசப் புகழே! - நம்
உயிரெல்லாம் முளைக்கின்றீர்!
பிறப்பாகி பிறப்பாகி
புதுப் பிறப்பாகி உயிர்கின்றீர்!
மலர்ந்தீரே! மலர்ந்தீரே! மார்கழிப் பூவே!

(மதிபாலா மறையவில்லை)

இளசு
24-12-2008, 08:50 PM
நன்றி தமிழ்தாசன்..

இது உங்கள் படைப்பில்லையெனில், பொறுப்பாளருக்குச் சொல்லுங்கள்.
படித்ததில் பிடித்தது பகுதிக்கு மாற்றி உதவுவார்கள்..

தமிழ்தாசன்
25-12-2008, 10:29 AM
மிக்க மகிழ்ச்சி அன்பரே!
எனது படைப்புகளில் ஒன்றுதான்.

இளசு
25-12-2008, 10:33 AM
உங்கள் படைப்பு என அறியத் தந்தமைக்கு நன்றி..

என் சந்தேகம் எண்ணி வெட்கினேன்..

மிகவும் பாராட்டுகிறேன்.. தமிழ்தாசன்!

இசைக்கோர்ப்பு எனும் அங்கீகாரம் பெற்றுவிட்ட
இவ்வஞ்சலிக் கவிதைக்கு என் வந்தனமும்!

தமிழ்தாசன்
25-12-2008, 11:11 AM
மிக்க மகிழ்ச்சி அன்பர் இளசு அவர்களே!
உங்கள் ஆழமான அன்புப் பாராட்டுதலுக்கு நேசம் நிறை மகிழ்ச்சி.

நிரன்
25-12-2008, 12:19 PM
நன்றாக உள்ளது அண்ணா!

எனக்கு ஒரு ஆசை...!!!!
இதனை ஒலி வடிவிலும் ஒரு முறை கேட்க முடியுமா?

உங்களால் முடிந்தால் தாருங்கள் கேட்டு மகிழ:)

நன்றி

தமிழ்தாசன்
26-12-2008, 10:46 AM
நன்றாக உள்ளது அண்ணா!

எனக்கு ஒரு ஆசை...!!!!
இதனை ஒலி வடிவிலும் ஒரு முறை கேட்க முடியுமா?

உங்களால் முடிந்தால் தாருங்கள் கேட்டு மகிழ:)

நன்றி

குறை விளங்காதீர்கள் நிரஞசன் அவர்களே!
உடன் தரக்கூடிய வழியில் ஒலிவடிவம் இல்லை.
பின்னர்... தருகிறேன்.

நிரன்
26-12-2008, 11:43 AM
மிக்க மகிழ்ச்சி உங்களால் முடிந்த போது தாருங்கள்