Log in

View Full Version : மென்இணைவன் விளையாட்டு



நிரன்
13-12-2008, 09:47 PM
அன்பான மன்ற உறவுகளே!

இப்பொளுது 7வார்த்தை விளையாட்டு 5வார்த்தை விளையாட்டு
சமையல் விளையாட்டு மற்றும் இடம் பெயர் விளையாட்டு என்பன
மன்றத்தில் ஒரு அறிவை வளர்க்கும் நோயாக பரவி வருகிறது
இதற்கிடையில் கனணி சம்பந்தமான அறிவையும் வளா்க்கும்
நோக்கில் மென்இணைவன் எனும் விளையாட்டு தொடக்கப்பட்டுள்ளது

மென்இணைவன் என்றால் என்ன வென்று எல்லோரும் யோசிக்கலாம்
மென்- மென்பொருள்
இணை- இணையதளம்
வன்- வன்பொருள் சுருக்கமாக மென்இணைவன் என்று கூறப்பட்டுள்ளது.

விளையாடுவதற்கான விளக்கம்
மென்பொருள், இணையதளத்தின் பெயா், மற்றும் வன்பொருள்
ஆகியவற்றை வைத்து ஓரு சொல் கொடுக்க வேண்டும்
அதனுடன் சிறிய விளக்கமும் கொடுக்க வேண்டும்

உதாரணம்-

இணையதளமென்றால்
கூகிள் -- இது இணையதளத்தின் மிகவும் பெரியதொரு தேடுதளமாகும்
மென் பொருள் என்றால்

போட்டே சொப்-- இது அடோப் எனும் நிறுவனத்திற்கு
சொந்தாமானதொரு மென்பொருளாகும் இதில் நிழல்
படங்களை எடிட் செய்வது மிகவும் சுலபமாகும்.

அல்லது வன்பொருளின் பெயறைக் குறிப்பிடுவதென்றால்
மதா்போட் -- இது கனணியின் முக்கியதொரு பாகமாகும்.

இல்லையெனின் கனணிகள் மற்றும் மென்பொருள் கண்டுபிடித்தவரைக்
கூட குறிப்பிடலாம் எத்தனை சொல்லாகவும் இருக்கலாம்.

விதிமுறைகள்

இணையதளங்களின் பெயரை குறிப்பிடும் பொளுது அவை ஒரு
பெரியதொரு இனையமாகவே இருக்க வேண்டும். விளம்பரப்படுத்தும்
நோக்கில் அமையப்படக் கூடாது.

ஒரு சொல்லை குறிப்பிட்டிருந்தால் அதற்கு கண்டிப்பாக ஒரு சிறு
(இயன்றால் முழு)விளக்கம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். விளக்கமளிக்காத
சொல் வலிவற்றதாகவே கருதப்படும்.

மற்றயவை மன்ற விதிமுறைப்படி பதியுங்கள்...


மன்றம் இவ்விளையாட்டிற்கு அனுமதி தர வேண்டும்
இது கனணி சம்பந்தமாக எமக்கு தெரியாதவற்றை தெரிந்து கொள்ள
ஒரு வாய்ப்பாகும்.

மன்றம் அனுமதித்தால் முதல் பதிவை பதிப்பதற்கு அழைப்பு விடுக்க காத்திருக்கிறேன்

Narathar
14-12-2008, 12:13 AM
இது ஒரு நல்ல விடயமாகத்தான் படுகின்றது.....

ஆனாலும் மாற்று இணையத்தளங்கள் சம்பந்தப்படுவதால், அதுபற்றி நம்ம நிர்வாகிகள் என்ன சொல்கின்றார்கள் என்று பார்ப்போம்.........

நிரன்
14-12-2008, 07:29 AM
இது ஒரு நல்ல விடயமாகத்தான் படுகின்றது.....

ஆனாலும் மாற்று இணையத்தளங்கள் சம்பந்தப்படுவதால், அதுபற்றி நம்ம நிர்வாகிகள் என்ன சொல்கின்றார்கள் என்று பார்ப்போம்.........

ஆமாம் நார.....
அதற்காகத்தான் நான் நிர்வாகிகளிடம் அனுமதி கோரியுள்ளேன்.
மன்ற நிர்வாகி பார்வையிட்டு குறைகளை கூறினால் அடியேன்
ஆனந்தமடைவேன்.