PDA

View Full Version : காய்களிகளும் பழங்களும் இனையத்தில்



நிரன்
13-12-2008, 07:10 PM
இன்றைய தலைமுறையினர் தாங்கள் சாப்பிடும் உணவு எப்படி இருக்க வேண்டும் என மிகவும் அக்கறைப் படுகின்றனர். குறிப்பாக அசைவ உணவு வகைகளை ஒதுக்கி காய்கறிகள் மற்றும் பழங்களைத் தேர்ந்தெடுத்து உண்ண ஆசைப்படுகின்றனர். அவற்றை வைத்தே உணவைத் தயாரித்து அளிக்க வேண்டும் எனத் திட்டமிடுகின்றனர். கேரட், பட்டாணி, வெள்ளரிக்காய், கத்தரிக்காய், மக்காச் சோளம் என அனைத்து காய்கறிகளையும் திட்டமிட்டு தேர்ந்தெடுக்க எண்ணுகின்றனர். எலுமிச்சம் பழம், ஆரஞ்சு, ஆப்பிள், நெல்லிக்கனி, மாம்பழம் என பழங்களையும் உணவில் கலந்து கலோரி கணக்கில் சாப்பிட விரும்புகின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காகவே ஓர் இணைய தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் பல பிரிவுகள் இருக்கின்றன. முதலாவதாக காய்கறிகள் மற்றும் பழங்களை வைத்து என்ன என்ன உணவு வகைகளைத் தயாரிக்கலாம்; எப்படி கலந்து தயாரிக்க வேண்டும் என ரெசிப்பி பட்டியலே உள்ளது. சாலட், சைட் டிஷ், பானங்கள், டெசர்ட் எனப் பலவகைகளில் ரெசிப்பி தரப்படுகிறது. அடுத்த பிரிவு தினந்தோறும் நீங்கள் என்ன சாப்பிட வேண்டும்; அதில் என்ன சத்து உள்ளது. சமமான சத்து உடம்பில் சேர்ந்திட சாப்பாட்டில் சேர்க்க வேண்டிய காய்கறிகள் மற்றும் பழங்கள் குறித்து பட்டியல் தருகிறது. அடுத்த பிரிவு தாய்மார்களுக்கு அவசியம் தேவையான ஒன்று. ஏனென்றால் அவர்கள் அவர்களின் விருப்பப்படி உணவு வகையைத் தயார் செய்து குழந்தைகளைச் சாப்பிடுமாறு கட்டாயப்படுத்துகின்றனர். குழந்தைகள் மறுக்கையில் அடிப்பது வரை செல்கின்றனர். ஏன் அந்த உணவு குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லை; அவர்களுக்குப் பிடிக்குமாறு உணவை எப்படித் தயாரிப்பது என்று எண்ணுவதில்லை.


எடுத்துக் காட்டாக கேரட்டை வேக வைத்து அத்துடன் பழங்களைக் கலந்து ஒரு தாய் கொடுக்கும் போது குழந்தையோ இரண்டையும் பச்சையாகவே தனித்தனியாக சாப்பிட விரும்பும். ஆனால் தாய், தான் செய்ததுதான் சரியென்று பிடிவாதம் பிடிக்கையில் சிறுவர்களுக்கு இறுதியில் கேரட்டும் பழமும் பிடிக்காமலேயே போய்விடும்.


அடுத்த பிரிவு செய்திப் பிரிவு. இங்கு உணவு முறை குறித்து சமுதாய அமைப்புகள் தரும் செய்திகள் தரப்படுகின்றன. இந்த தளம் தரும் இன்னொன்றையும் குறிக்க வேண்டும். பச்சை மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ள பார்கள். பழத்திற்கான பாரினைத் தேர்ந்தெடுத்து அப்படியே சென்றால் அனைத்து பழங்களும் வரிசையாகக் காட்டப்படும். ஆரஞ்ச் செலக்ட் செய்தால் எத்தனை வகை ஆரஞ்ச் உள்ளது; அவற்றின் தன்மைகள் காட்டப்படும். இதே போல அனைத்து பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் தகவல்கள் கிடைக்கின்றன.


நீங்கள் சைவமோ! அசைவமோ! ஆனால் அனைவரும் கட்டாயம் அடிக்கடி பார்க்க வேண்டிய தளம் இது.

இதன் முகவரி : இங்கே அழுத்தவும் (http://www.fruitandveggieguru.com)

இச்சுட்டி தாமரை மன்றத்தின் சமையல் திரிக்கும் பொருந்தும்:D

நன்றி: computermalar