PDA

View Full Version : கணினி சம்பந்தமான உதவிகளுக்கு இங்கே

Pages : [1] 2

நிரன்
13-12-2008, 06:42 PM
அன்பான மன்ற நண்பர்களே!

இத்திரி மன்றத்தில் அங்கம் வகிக்கும் சக உறுப்பினருக்கு
உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எந்தவொரு
கனணி சம்பந்தமான வன்பொருள் மற்றும் மென்பொருள்
கேள்விகளையும், கனணிப் பிரச்சினைகளையும்
சந்தேகங்கள்என்பவற்றையும் இங்கே முன் வைக்கலாம்.

மன்றத்தில் கனணி வல்லுனா்களுக்கு பஞ்சம் இல்லை
என்பதால் இத்திரியில் எழுப்பப்படும் பிரச்சினைகளுக்கு
நிச்சயம் தீா்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மன்றத்தில் அங்கம் வகிக்கும் சக வல்லுனா்களும் இதற்கு
உதவியளிக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்
கொள்கின்றேன்.

இத்திரியை தொடங்க மன்றத்தின் அனுமதி வேண்டும்..

majindr
14-12-2008, 06:13 AM
நிரஞ்சன் மிக அருமையான யோசனை
என்னை போனறவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

நிரன்
14-12-2008, 07:24 AM
நிரஞ்சன் மிக அருமையான யோசனை
என்னை போனறவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

நன்றி majindt எல்லோருடைய கேள்விகளும் வரவேற்கப்படுகிறது.

majindr
19-12-2008, 03:48 PM
நிரஞ்சன் அவர்களே.
என்னுடைய கணிணி திரை மின்னுகிறது. இதனால் கணிணியை பார்க்கும் போது கண்ணுக்கு கேடு இதனை எப்படி சரி செய்வது

anna
19-12-2008, 04:54 PM
நிரஞ்சன் அவர்களே.
என்னுடைய கணிணி திரை மின்னுகிறது. இதனால் கணிணியை பார்க்கும் போது கண்ணுக்கு கேடு இதனை எப்படி சரி செய்வது

நீங்கள் சொல்வது புரியவில்லை,பொதுவாக ஆன் செய்ததும் மின்னுகிறதா? அல்லது வேறு ஏதாவது அப்ளிகேஷன் உள் செல்லும் போது மின்னுகிறதா? தெளிவாக சொன்னால் என்னால் முடிந்த பதில் தருகிறேன்.

நிரன்
19-12-2008, 05:08 PM
நிரஞ்சன் அவர்களே.
என்னுடைய கணிணி திரை மின்னுகிறது. இதனால் கணிணியை பார்க்கும் போது கண்ணுக்கு கேடு இதனை எப்படி சரி செய்வது

உங்கள் கணிணியில் இருந்து மொனீட்டருக்கு செல்லும் கேபிள்கள் இருக்கமாக பொருத்தப்பட்டிருக்கிறதா என்று கவனித்தீா்களா?
அப்படி இருக்கமாக இல்லையெனின் அதை செய்யுங்கள்
சீ.பி.யு இல் பொருத்தப்பட்டிருக்கும் VGA Cable சரியாக இல்லையெனின் இப்பிரச்சினை வரும் -- 1 வருடத்திற்கு முன்பு என்னுடைய கணினியிலும் VGA Cable இல் பிரச்சினை இருந்தது கணினித்திரை
blink செய்து கொண்டிருக்கும் அதற்கு காரணம் எனது VGA Cable அதனை நான் புதிதாக நிறுவிய பின்னா் இப்பிரச்சினை மீண்டும் வரவில்லை. ஆனால் உங்கள் கணினியில் இப்பிரச்சினை இல்லாவிட்டால் உங்கள் கணினி மொனீட்டருக்கு தேவையான டிரைவா் சரியாக நிருவப்பட்டுள்ளதா? அப்படி நிறுவப்படவில்லையெனின் அதனனை http://www.driverguide.com/ இத்தளத்தில் சென்று உங்கள் கணினித்திரைக்கேற்ற டிரைவரை நிறுவுங்கள் இல்லையெனின் உங்கள் மொனீட்டருடன் கொடுக்கப்பட்ட சீடியிலுள்ள டிரைவரை கணனியில் பொருத்துங்கள் இதன் முலம் உங்கள் கணினி பிரச்சினை தீா்வாகுமென நி்னைக்கிறேன்
இல்லையெனின் உங்கள் Graphic Card இல் பிழையாகவும் இருக்கலாம்.

மற்றும் ஒரு வினா உங்கள் கணினித்திரை எப்பொளுதும் மின்னிக்கொண்டிருக்கிறதா?

மற்றும் ஒரு தாழ்மையான வேண்டுகோள் வினாவெளுப்பும் பொளுது என்னை மட்டும் சுட்டிக்காட்ட வேண்டாம் ஏனெனில் மற்றவா்கள் இதற்கு பதில் தர சங்கடப்படும் நிலைக்குள்ளாவார்கள்..

நன்றி

majindr
20-12-2008, 02:06 PM
மன்னிக்க வேண்டுகிறேன், மன்றத்தில் முன் வைக்கவேண்டிய கேள்வி ஆர்வமிகுதியால் நிரஞ்சன் ஆரம்பித்ததால் அவரிடம் கேட்கும்படியாயிற்று.ஆன் செய்யும் போது மின்னவில்லை அப்ளிகேஷன் உள் செல்லும் போது மின்னுகிறது, இதை சாதாரணமாக பார்க்கமுடியவில்லை கவனித்துபார்த்தால் மின்னுவது போண்று கண்னை உறுத்துகிறது

நிரன்
20-12-2008, 02:13 PM

மேற்கூறிய பிரச்சினைகள் ஏதவது காணாப்படுகிறதா?

sujan1234
20-12-2008, 05:09 PM
கணினியில் போல்டரை மறைக்க முடியுமா

naushad
25-05-2009, 04:35 PM
தொலைபோசி ஆட்டோமேட்டிக்கக வாய்ஸ் ரீகாடர்டிங்! செய்ய எதவது மென்பொருள் கிடைய்குமா?

என் கணினியில் (XP உள்ளது ,56k மோடமும் உள்ளது) என் தொலைபோசிலிருந்து வரும் கால்களை ஆட்டோமேட்டிக்கக வாய்ஸ் ரீகாடர்டிங் செய்ய வேண்டும்(Both End conversations) எதவது மென்பொருள் கிடைக்குமா? (Just like dictating machine for Secretarial purpose) இப்போது ஆடிஒ கேசட் டெலிபோன் ரீக்கார்ட்டர் மூலம் செய்கிரேன்.யாராவது இதற்க்கு தகுந்த மென்பொருள் விவரம் தெரிவித்தால் நல்லது.

பிரம்மத்ராஜா
02-08-2009, 04:10 PM
எனது கணினியில் AVG antivirus version 8 (free) நிறுவியுள்ளேன் ஆனால் அது அப்டேட் ஆகவில்லை AVG website ம் ஓப்பன் ஆகவில்லை என்ன காரணம் என்று விளங்கவில்லை அதற்கு முந்தைய வெர்சனும் போட்டு பார்த்துவிட்டேன் சரியாகவில்லை நண்பர்கள் இதை சரி செய்ய உதவுங்களேன்

ramjee6
29-10-2009, 02:22 AM
words doc.file-ஐ PDF file-ஆக மாற்ற தேவையான link களையோ down load-களையோ தந்து உதவ முடியுமா? என் கணணியில் PDF-convertor இருக்கு.Adobe Reader 9 இருக்கு பல கணணி திறமையாளர்கள் வந்து பார்த்து முடியாமல் என்னிடம் இருந்து காசு மட்டும் வாங்கிக்கொண்டு போய் விட்டார்கள். அவர்களால் மாற்ற முடியவில்லை. நொந்து போய் விட்டேன் நான்..ஆங்கிலம் சரியாக PDF லில் மாறுகிறது.ஆனால் தமிழை PDF convertor மூலமாக மாற்றும்போது ( உ-ம்)வணக்கம் vanakkam என்கிற சொல்லை மாற்றும்போது ஆங்கில வார்த்தையில் உள்ள vanakkkam அதேபோலவும் தமிழில் உள்ள வணக்கம் சிறு சிறு கட்டங்களாகவும் வருகின்றன:fragend005:

praveen
29-10-2009, 05:09 AM
புதிதாக வரும் நண்பர்கள், தங்கள் கேள்வி பதிவுகளை ஒரு இடத்தில் மட்டும் பதியுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பதிக்காதீர்கள். இங்கே ஒரு பதிவு இதே இடத்தில் ஒரு திரி என தொடங்காதீர்கள். இதனால் குழப்பமே ஏற்படும். உங்களுக்கு உதவ என்னிடம் தகவல் இருந்தும் உங்களுக்கு அதனை தர விரும்பவில்லை. நீங்கள் தளத்தை குப்பையாக்காமல் இருந்தால் அனவரின் உதவியும் கிடைக்கப்பெறுவீர்கள்.

aren
29-10-2009, 06:43 AM
பிரவீன் சொல்வது சரியே. ஒரு இடத்தில் மட்டுமே உங்கள் பதிவுகளை செய்யுங்கள்.

மற்றவர்களது நேரத்தையும் கவனித்துகொண்டு செய்யுங்கள்.

சரண்யா
05-11-2009, 04:50 AM
கணினி நன்றாக உள்ளது எந்த பிரச்சனையும் இல்லை என்பதை அறிய முடியுமா....
இதன் உள்ளே பொறுத்த பட்டுள்ள விசிறியின் சத்தம் அதகமாக கேட்கிறதே....

praveen
05-11-2009, 06:28 AM
கணினி நன்றாக உள்ளது எந்த பிரச்சனையும் இல்லை என்பதை அறிய முடியுமா....

பிரச்சினை எதுவும் இல்லை என்றால் விட்டு விடுங்கள். ஏதாவது தொல்லைகள் (தானாக ரீ ஸ்டார்ட் ஆவது, ப்ளு ஸிகிரின் வருவது, இயக்க அதிக நேரம் எடுப்பது, வழக்கத்திற்கு மாறாக பிழைச்செய்திகள்) வந்தால் தான் சோதிக்க வேண்டுவது அவசியம். ஆனால் வரும் முன் காப்பது போல முழுக்கம்ப்யூட்டரையும் சோதிக்க அநேக மென்பொருள் உள்ளன. ஆனால் அவைகளில் அநேக மென்பொருட்கள் பணத்திற்கு விற்கப்படுவனவே. நான் அவற்றை சோதனை முறையில் பதிந்து அவர்கள் கொடுத்த இலவச காலம் வரை சோதித்து பார்த்து ரிசல்ட் தெரிந்து கொள்ளலாம். டியுனப் யுட்டிலிட்டீஸ் (ஆங்கிலத்தில் கூகிளில் இட்டு தேடிப்பாருங்கள்) நன்றாக இருக்கும்.

இதன் உள்ளே பொறுத்த பட்டுள்ள விசிறியின் சத்தம் அதகமாக கேட்கிறதே....
கம்ப்யூட்டரில் ஃபேன் பொதுவாக 3 இடத்தில் வருகிறது

1)ப்ராசஸர் மேலே இருக்கும் ஃபேன் - இது மிகவும் தரமானாதாக இருப்பதால் சாமானியத்தில் பழுதாகாது
2)எஸ்.எம்.பி.எஸ் உள்ளே இருக்கும் ஃபேன் - இதுவும் ஒரளவு தரமானதாக இருக்கும் இங்கும் வர சந்தர்ப்பம் குறைவு
3)கம்ப்யூட்டர் கேபினட்டில் காற்றை வெளியேற்ற ஒரு\இரு ஃபேன் அதன் உட்புற சுவற்றில் அநேகமாக பின்பக்கமோ அல்லது ப்ராச்சருக்கு நேராக பக்கவாட்டிலோ வெகு ஆபூர்வமாக முன்பக்க பேனலின் கீழே அமைந்திருக்கும். - இந்த பேன் தரமான நிறுவன தயாரிப்பாக இருந்தாலும் அதிக அளவில் தூசி சேர்வதால் இந்த பேன் நாளடைவில் சத்தம் கொடுக்கும். பேனலை கழட்டி அந்த ஃபேனை மாற்ற வேண்டும் அல்லது அதற்கு செல்லும் மின் இனைப்பை (ஒரு சாக்கெட் தான்) எளிதில் நாமே கழட்டி விடலாம்.

இது தவிர வேறு ஃபேன் பொதுவாக இருக்காது, சமயத்தில் அபூர்வமாக ப்ராசஸர் மேலே உள்ள பேன் மீது ஏதாவது வயர் உரசி சென்றால் சத்தம் ஏற்படும்.

வெற்றி
05-11-2009, 12:19 PM
கணினியில் போல்டரை மறைக்க முடியுமா

ஓ இருக்கே,,,இங்கேயே இருக்கே... Search சென்று தேடிப்பர்த்தால் கிடைக்கும் .இந்த ஒரு முறை மட்டும் உதவி
கோப்புகளை மறைப்பது எப்படி? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17785&highlight=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)
அடுத்த முறை இங்கே இருக்கும் சுட்டிகளுக்கு மீண்டும் சுட்டி கொடுக்க முடியாது :)

aravinthan21st
05-11-2009, 01:46 PM
எனக்கு அதிகம் கணனியைப் பற்றி தெரியாது.ஒருமுறை எனது தம்பி இவ்வாறு கோப்புக்களை மறக்கும் லொக்கெர் செய்து தந்தான்.பின் அதை மறந்துவிட்டேன்.ஆனால் இப்போ நானே தங்கள் வழிகாட்டலில் செய்து பார்த்ததில் ஒரு பெருமிதம்.
தகவலுக்கு நன்றி.:D:D:D

வியாசன்
05-11-2009, 05:05 PM
நன்றிகள் ஐயா

சரண்யா
06-11-2009, 02:07 AM
நன்றிகள்..praveen அவர்களே.....

சரண்யா
06-11-2009, 11:31 AM
excel லில் நிறைய பேரொட முகவரி தட்டச்சு செய்துள்ளேன்....அதில் ஒரே முகவரி...திரும்ப வந்தவை...ஒரெ பெயர்கள் என வருவதெல்லாம் சரி செய்ய இயலுமா....அதை a4 sheet என்பதில் print செய்ய முடியுமா....
நன்றிகள்...

பாரதி
06-11-2009, 11:57 AM
excel - ல் நிறைய பேரின் முகவரிகளை தட்டச்சு செய்துள்ளேன். அதில் ஒரே முகவரி...திரும்ப வந்தவை...ஒரே பெயர்கள் என வருவதையெல்லாம் சரி செய்ய இயலுமா? அதை a4 sheet என்பதில் print செய்ய முடியுமா?

சரி செய்ய கீழ்க்கண்ட சுட்டி உதவுகிறதா என்று பாருங்கள்.
http://office.microsoft.com/en-us/excel/HA010448621033.aspx

அன்புரசிகன்
06-11-2009, 02:24 PM
excel லில் நிறைய பேரொட முகவரி தட்டச்சு செய்துள்ளேன்....அதில் ஒரே முகவரி...திரும்ப வந்தவை...ஒரெ பெயர்கள் என வருவதெல்லாம் சரி செய்ய இயலுமா....அதை a4 sheet என்பதில் print செய்ய முடியுமா....
நன்றிகள்...

ஒரே விடையம் திரும்ப வந்தால் அவற்றை கண்டறிந்து அழிக்கும் முறை உண்டு. (2003 ல் எப்படி என்று தெரியாது. காரணம் என்னிடம் அது இல்லை) 2007 பதிப்பில் Data tab ல் remove duplicates என்று ஒன்று உண்டு.

அடுத்து sort பண்ணினால் ஒரேவிடையங்கள் ஒன்றாகிவிடும். இல்லையேல் ஒரே நிறங்களுக்கு கொண்டுவர home tab ல் conditional formating ஐ பயன்படுத்தலாம்.

இன்னொன்று... ஒரு விடையம் எத்தனை தடவை வந்துள்ளது என்பதை கண்டறிய pivot table ஐயும் பயன்படுத்தலாம். அது insert tab ல் உள்ளது.

இவை அனைத்தும் இலகுவான படிமுறைகள். நீங்கள் உதவியை பார்த்தே படித்திடலாம்.

உங்களுக்கு தேவையானதை சற்றே விளங்க கூறினால் உதவலாம்...

பாரதி அண்ணாவின் சுட்டியையும் பாருங்கள்

சரண்யா
07-11-2009, 06:41 AM
இல்லை பாரதி அவர்களே..அது ஒரு வரிசை மட்டும் தானே.... நான் சொல்லுவது
excel லில் உள்ள முகவரி முதலில் உள்ளதில் பெயர் அடுத்த வரிசையில் தெருவின் பெயர் அடுத்த வரிசையில் தொலைப்பேசி எண்...என இப்படி உள்ளது.....அந்த ரோ திரும்ப திரும்ப வந்தால் என்ன செய்வது.....

பாரதி
07-11-2009, 11:41 AM
உங்களுடைய வினாவை நான் சரிவர விளங்கிக்கொண்டேனா என எனக்குத்தெரியவில்லை.

உங்களுடைய வினா திரும்ப திரும்ப வருவதை எப்படி சரி செய்வது என்பதாகும் என எண்ணுகிறேன். எக்ஸெலில் எனக்கு அதிகப்பழக்கமில்லை. இருப்பினும் எனக்கு விளங்கிய வரையில் கூறுகிறேன்.

அன்பு கூறியதைப் போல, எக்ஸெலில் data பகுதியில் இருக்கும் sort என்ற தேர்வின் மூலம், அட்டவணையில் நாம் விரும்பியதை வரிசைப்படுத்த முடியும். அப்படி வரிசைப்படுத்திய பின்னர் ஒரு முறை நாம் அகர வரிசைப்படி பெயர்களைப் பார்த்தாலே எவை எவை திரும்ப திரும்ப வந்திருக்கின்றன என்பதை அறிய முடியும். அதன் பின்னர் தேவையற்ற வரிசைகளை எளிதில் நீக்கி விட முடியும்.

அன்புரசிகன்
07-11-2009, 08:58 PM
இல்லை பாரதி அவர்களே..அது ஒரு வரிசை மட்டும் தானே.... நான் சொல்லுவது
excel லில் உள்ள முகவரி முதலில் உள்ளதில் பெயர் அடுத்த வரிசையில் தெருவின் பெயர் அடுத்த வரிசையில் தொலைப்பேசி எண்...என இப்படி உள்ளது.....அந்த ரோ திரும்ப திரும்ப வந்தால் என்ன செய்வது.....

ஒரே விடையம் திரும்ப வந்தால் அவற்றை கண்டறிந்து அழிக்கும் முறை உண்டு. (2003 ல் எப்படி என்று தெரியாது. காரணம் என்னிடம் அது இல்லை) 2007 பதிப்பில் Data tab ல் remove duplicates என்று ஒன்று உண்டு.

அடுத்து sort பண்ணினால் ஒரேவிடையங்கள் ஒன்றாகிவிடும். இல்லையேல் ஒரே நிறங்களுக்கு கொண்டுவர home tab ல் conditional formating ஐ பயன்படுத்தலாம்.

இன்னொன்று... ஒரு விடையம் எத்தனை தடவை வந்துள்ளது என்பதை கண்டறிய pivot table ஐயும் பயன்படுத்தலாம். அது insert tab ல் உள்ளது.

இவை அனைத்தும் இலகுவான படிமுறைகள். நீங்கள் உதவியை பார்த்தே படித்திடலாம்.

உங்களுக்கு தேவையானதை சற்றே விளங்க கூறினால் உதவலாம்...

பாரதி அண்ணாவின் சுட்டியையும் பாருங்கள்
முயன்றீர்களா???

சரண்யா
09-11-2009, 09:19 AM
முயற்சி செய்யுல...கொஞ்சம் வேலை இருந்தது
முயன்று பார்க்கிறேன்...

சரண்யா
09-11-2009, 09:22 AM
என்னோட blog ல நான் online tuitions for maths எடுப்பேன் ...என்று தனியாக side ல display பண்ண முடியுமா...

மேலும் எந்த website லயும் நான் பதிவு செய்யவில்லை...அதற்கு என்ன செய்வது ...
இது சாத்தியமா..
நன்றிகள்...

பிரம்மத்ராஜா
09-11-2009, 10:18 AM
என்னுடைய கணினியை மழைகாலங்களில் ( அதிக மழை பெய்து குளிர் அதிகமாக இருக்கும்போது மட்டும் ) ஆன் செய்தால் உடனே ஆன் ஆவதில்லை UPS ஆன் செய்து வைத்துவிட்டு அரை மணி நேரம் கழித்து CPU வை ஆன் செய்தால் மட்டும் ஆன் ஆகிறது.என்ன காரணம் என்று புரியவில்லை SMPS காரணமாக இருக்குமா?

praveen
09-11-2009, 12:31 PM

நீங்களே கேள்வி கேட்டு பதிலும் சொன்னால் எப்படி? :)

உங்கள் கேள்வியின் மூலம் மாய்ஸர் அதாவது பனி காராணமாக உங்கள் மதர்போர்டு செயல்பட தாமதம் செய்கிறது என்று நினைக்கிறேன்.

உங்கள் கம்ப்யூட்டர் முழுக்க மூடி (அதாவது கேபினெட் ஒரு பக்கம் திறந்தோ அல்லது எக்ஸ்டென்ஸன் ஸ்லாட் மூடப்படாமால் திறந்தோ இருந்தால் அதனை மூடி) வையுங்கள்.

ஏசி அல்லது ஜன்னல் அருகில் இருந்தால் மாற்றி வேறு இடத்தில் வைத்து பாருங்கள்.

பிரம்மத்ராஜா
09-11-2009, 01:40 PM
நன்றி பிரவீன்

காபினெட்,எக்ஸ்டென்சன் ஸ்லாட் திறந்தும் இல்லை மூடி வைத்து நன்றாகத்தான் இருக்கிறது ஜன்னல் அருகிலும் இல்லை மூன்றடி தள்ளிதான் இருக்கிறது இரவு ஆப் செய்துவிட்டு காலையில் ஆன் செய்யும்பொழுது அரைமணி நேரம் கழித்தும் பகலில் பயன்படுத்திவிட்டு ஒரு மணிநேரம் கழித்து மீண்டும் ஆன் செய்தால் உடனே ஆன் ஆகின்றது கடுமையான மழைகாலங்களில் மட்டும் இது தொடர்கின்றது

பாரதி
09-11-2009, 03:37 PM
உங்கள் பகுதியில் இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறதா?
நீங்கள் கூறுவதைப் பார்த்தால் பிரச்சினை ஒருவேளை யு.பி.எஸ்.ஸில் அல்லது அதில் நிறுவப்பட்டு இருக்கும் மின்கலத்தில் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. யு.பி.எஸ்.. இல்லாமல் கணினியை நேரடியாக மின்னிணைப்பில் கொடுத்து இயக்கிப்பாருங்களேன்.

சரண்யா
10-11-2009, 12:16 PM
praveen அவர்களே...என்னோட கேள்விக்கு பதிலே சொல்லவில்லையே,,,ஏன்??

praveen
10-11-2009, 02:16 PM
praveen அவர்களே...என்னோட கேள்விக்கு பதிலே சொல்லவில்லையே,,,ஏன்??

நகைச்சுவைக்காக:
தலை (பாரதி அண்ணா தான் :)) இருக்கையிலே வால் (வேற யாரு நான் தான்) ஆடக்கூடாது என்பதால் சும்மா இருந்துட்டேன்.

உண்மையிலே பதில்:
இது சம்பந்தமாக முன்னரே எக்ஸலில் டூப்ளிகேட் செல்(வேல்யூக்)களை பில்டர் செய்வது சம்பந்தமாக இங்கே படத்துடன் (வீடியோ?) பதிந்திருக்கிறேன். தேடித்தர நேரமில்லை. எனதன்பு நிர்வாக உறுப்பினர் எவரேனும் தேடி விரைவில் பதிக்கலாம்.

பிரம்மத்ராஜா
10-11-2009, 02:55 PM
உங்கள் பகுதியில் இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறதா?
நீங்கள் கூறுவதைப் பார்த்தால் பிரச்சினை ஒருவேளை யு.பி.எஸ்.ஸில் அல்லது அதில் நிறுவப்பட்டு இருக்கும் மின்கலத்தில் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. யு.பி.எஸ்.. இல்லாமல் கணினியை நேரடியாக மின்னிணைப்பில் கொடுத்து இயக்கிப்பாருங்களேன்.

நன்றி பாரதி அவர்களே
இன்று முயற்சி செய்து பார்க்கிறேன்

பாரதி
10-11-2009, 02:59 PM
நகைச்சுவைக்காக:
தலை (பாரதி அண்ணா தான் :)) இருக்கையிலே வால் (வேற யாரு நான் தான்) ஆடக்கூடாது என்பதால் சும்மா இருந்துட்டேன்.

உண்மையிலே பதில்:
இது சம்பந்தமாக முன்னரே எக்ஸலில் டூப்ளிகேட் செல்(வேல்யூக்)களை பில்டர் செய்வது சம்பந்தமாக இங்கே படத்துடன் (வீடியோ?) பதிந்திருக்கிறேன். தேடித்தர நேரமில்லை. எனதன்பு நிர்வாக உறுப்பினர் எவரேனும் தேடி விரைவில் பதிக்கலாம்.

பிரவீண்.... ஹஹஹா.... நகைச்சுவையை இரசித்தேன். ஆனாலும் இதில் உண்மையில்லை என்பதையும் கூற விழைகிறேன். எனக்கேற்பட்ட பல தொந்தரவுகளையும், இனி வரப்போகிற தொந்திரவுகளையும் நீக்கிய, நீக்கப்போகிறவர் நீங்களே.

என்னால் முடிந்தது... பிரவீண் கூறிய திரியின் சுட்டி இதோ:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19814

சரண்யா
12-11-2009, 03:02 AM
நன்றிகள் பாரதி அவர்களே...பார்த்தீர்களா..உங்கள் சிஷ்யரின் சமாளிப்பை....ம்...
வாழ்க...

சரண்யா
12-11-2009, 03:04 AM
என்னோட blog ல நான் online tuitions for maths எடுப்பேன் ...என்று தனியாக side ல display பண்ண முடியுமா...

மேலும் எந்த website லயும் நான் பதிவு செய்யவில்லை...அதற்கு என்ன செய்வது ...
இது சாத்தியமா..
நன்றிகள்...

இதற்கான பதிலை சொல்லுவீர்களா... குரு அல்லது சிஷ்யர்...

praveen
12-11-2009, 11:49 AM
ப்ளாக் பற்றி அறியத்தரும் ப்ளாக்-ன் மேற்பகுதியில் உங்களைப்பற்றிய விவரம் தொ.பேசி எண் இவற்றை தரலாம் பாருங்கள்.

கான்பிகர் ப்ளாக் என்பதில் பிளாக் டெஸ்கிரிப்சன் என்ற இடத்தில் எழுதலாம், அல்லது படம் பதிக்கலாம்.

இந்த சின்ன கேள்விக்கு குரு எதற்குங்க :)

பாரதி
12-11-2009, 12:06 PM
இந்த சின்ன கேள்விக்கு குரு எதற்குங்க :)

அடடா.... அதுதான் குரு வருவதற்கு முன்பாக இதை தட்டச்ச வேண்டும் என்று முயற்சித்துக்கொண்டிருந்தேன். குரு முந்திக்கொண்டார்...ஹும்... பரவாயில்லை. நான் செய்தது வீணாகக்கூடாதே என்று இங்கே போடுகிறேன். பார்ப்பவர்கள் பொறுத்தருள்க.

Layout - Page elements - Add a Gadget... ல் நீங்கள் விரும்பிய எழுத்துக்களையோ படங்களையோ சேர்க்க முடியும். எழுத்துக்கள் என்றால் Text விருப்பத்தேர்வை தேர்வு செய்தும் படம் என்றால் Pictures விருப்பத்தேர்வை தேர்வு செய்தும் பயன்படுத்துங்கள். படங்கள் என்றால் உங்கள் கணினியில் இருந்தே பதிவேற்றம் செய்யலாம் அல்லது ஏதேனும் ஒரு இணையத்தில் வலையேற்றம் செய்யப்பட்ட படத்தின் சுட்டியையோ இணைக்கலாம்.

எழுத்து மற்றும் படத்தை இணைத்து நான் சோதித்த வலைப்பூவின் படம் இங்கே.
http://www.tamilmantram.com/vb/photogal/images/83/large/1_template.JPG

சரண்யா
13-11-2009, 01:50 AM
நன்றிகள் குருவிற்கும் சிஷ்யருக்கும்...

மேலும் இந்த blog பல அன்பர்கள் பார்க்கும் படி செய்ய நிறைய இணைய சுட்டிகளில் இணைக்கிறார்களே...tamilish,vulavu,இப்படி ...இவையால் என்ன பயன்? ஏன் இப்படி இணைக்கிறார்கள்...தங்கள் பதிவை படிக்க செய்யவா...இல்லை வேற காரணங்களுக்காகவா...

உதயா
15-11-2009, 12:24 PM
எனக்கு ஒரு விளக்கம் தேவை.

நான் வைத்திருப்பது dell studio 1535, OP Win 7, இதில் web cam inbuild. இருப்பினும் எனக்கு வேறொரு webcam தனியாக இணைக்கமுடியுமா? ஆம் எனில் நான் சாட் செய்யும் போது எந்த webcam மை எடுக்கும்? இன்பில்டா? இல்லை தனியே இணைத்ததையா? இல்லை நமக்கு அவசியம் உள்ளதை நாமே நிர்னயித்துக்கொள்ளலாமா?

praveen
16-11-2009, 04:25 AM
நன்றிகள் குருவிற்கும் சிஷ்யருக்கும்...

மேலும் இந்த blog பல அன்பர்கள் பார்க்கும் படி செய்ய நிறைய இணைய சுட்டிகளில் இணைக்கிறார்களே...tamilish,vulavu,இப்படி ...இவையால் என்ன பயன்? ஏன் இப்படி இணைக்கிறார்கள்...தங்கள் பதிவை படிக்க செய்யவா...இல்லை வேற காரணங்களுக்காகவா...

கரகாட்டக்காரன் படத்தில் தானே காசு கொடுத்து விளம்பரம் செய்து மாட்டிக்கொண்ட பின் செந்தில் சொன்னமாதிரி "எல்லாமே ஒரு விளம்பரம் தான்"

எனக்கு ஒரு விளக்கம் தேவை.

நான் வைத்திருப்பது dell studio 1535, OP Win 7, இதில் web cam inbuild. இருப்பினும் எனக்கு வேறொரு webcam தனியாக இணைக்கமுடியுமா? ஆம் எனில் நான் சாட் செய்யும் போது எந்த webcam மை எடுக்கும்? இன்பில்டா? இல்லை தனியே இணைத்ததையா? இல்லை நமக்கு அவசியம் உள்ளதை நாமே நிர்னயித்துக்கொள்ளலாமா?

தனியாக எத்தனை கேமரா வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

எந்த கேமராவை எந்த அப்ளிகேசன்(மெசஞ்சர்) தேர்வு செய்கிறதோ அதனையே எடுத்துக்கொள்ளும். இதற்கு அந்தந்த அப்ளிகேசனில் அட்வாண்ஸ்டு செட்டிங்க்ஸ் சென்று தேர்வு செய்து கொள்ளலாம்.

உதயா
16-11-2009, 04:32 AM
மிக்க நன்றி நண்பரே.. எந்த வெம்கேமரா நன்றாக இருக்கும்? சில கேமாராக்கள் வெளிச்சமாக தெரிவதில்லை. ( நம்ம நிறம் என்னவோ அதை தானே காட்டும்! )

praveen
16-11-2009, 04:41 AM
மிக்க நன்றி நண்பரே.. எந்த வெம்கேமரா நன்றாக இருக்கும்? சில கேமாராக்கள் வெளிச்சமாக தெரிவதில்லை. ( நம்ம நிறம் என்னவோ அதை தானே காட்டும்! )

அதிக விரிதிரை(ரெஸல்யூசன்) கொண்ட கேமரா நன்றாக காட்டும். பொதுவாக விலை குறைந்த கேமராக்களில் எல்லாம் சீமாஸ் சென்ஸார் இருக்கும் இது எதிரே ஆள் இருப்பதை :) காட்டும், கொஞ்சம் செட்டிங்க்ஸ் செய்தால் ஒரளவு கண்டுபிடித்து விடுவார்கள் எதிரே இருப்பவர் இன்னார் தான் என்று (விலை 350ரூபாய் 900ரூபாய் வரை). அடுத்து விஜிஏ கேமரா என்றாலும் சுமார் தான்(விலை(800 - 1300 வரை). நல்ல விலை உயர்ந்த கேமராக்களில் ஸ்கிரின் ரெஸல்யூசன் மற்றும் குறைந்த இருட்டிலும் படம் தெளிவாக தெரியும் என்று விளம்பரம் செய்திருப்பார்கள் அவையெல்லாம்(ரூ1,800-3500-5000 இன்னும் மேல்) தனித்தே கேமராவாக இயங்கவல்லதாகவும் இருக்கும். இது போக விலை உயர்ந்த கேமராக்களையும் நாம் கம்ப்யூட்டரில் இனைத்து வெப்கேமரா போன்று செயல்படவைக்கலாம்.

பிராண்ட் பெயர் + விலை சொன்னால் வியபார யுக்தியாகி விடும். (மார்க்கெட்டில் அதிக விற்பனையில் உள்ள லாஜிடெக் மற்றும் மைக்ரோசாப்ட் கேமராவை கூகிளிட்டு பாருங்கள்).

முகத்தை சொல்கிறீர்களா?. அது எதிரே இருந்து உங்களை பார்(ரசி)ப்பவர் தன்மையை பொறுத்து. புற அழகை விரும்புவர் அவரவர் மனநிலைப்படி பார்பார்கள், உறவினர் என்றால் எப்போதும் உவகையுடன் பார்ப்பார்கள் (ரெம்ப பதிந்திட்டேனோ).

உதயா
16-11-2009, 05:57 AM
இது போக விலை உயர்ந்த கேமராக்களையும் நாம் கம்ப்யூட்டரில் இனைத்து வெப்கேமரா போன்று செயல்படவைக்கலாம். (ரெம்ப பதிந்திட்டேனோ).
அப்படியா? என்னிடம் 8.1 megapixel கேமரா உள்ளதே.. அதை கூட வெம்கேமாக உபயோகப்படுத்தலாம் என்றால் நல்லது. தெளிவான விளக்கதை எவ்வளவு வரிகள் வேண்டும் என்றாலும் எழுதலாமே...

மிக்க நன்றி நல்ல விளக்கத்திற்கு.

சரண்யா
17-11-2009, 02:44 AM
வணக்கம்..
wav file உள்ள பாடல்களை அல்லது கதை சொல்லியுள்ளதை எப்படி மாற்றுவது..
audio /mp3 format ...
நன்றிகள்...

சரண்யா
17-11-2009, 02:47 AM
ஒரு கதையோ /ஸ்லோகமோ..சொல்லி காமிக்க நாம் headphone ல் உள்ள mike ல் sound recorder ல் பேசுவதை மன்றத்தில் சமர்பிக்க என்ன செய்ய வேண்டும்...
நன்றிகள்..

வியாசன்
17-11-2009, 03:53 AM
வணக்கம்..
wav file உள்ள பாடல்களை அல்லது கதை சொல்லியுள்ளதை எப்படி மாற்றுவது..
audio /mp3 format ...
நன்றிகள்...

MP3 யாக மாற்றுவதற்கு நிறையமென்பொருட்கள் உள்ளது அதில் ஒன்றை உபயோகித்து கொள்ளுங்கள்.கூகிளில் தேடினால் நிறைய இலவசமென்பொருட்கள் கிடைக்கும். நீங்கள் விரும்பிய பார்மட் செய்ய முடியும்

வியாசன்
17-11-2009, 03:56 AM
Aoustica Premium மென்பொருள் இதற்கு சிறந்தது. இப்போது நேரமில்லை வேண்டுமானால் மாலையில் விளக்கம் தருகின்றேன்

சரண்யா
17-11-2009, 08:08 AM
நன்றிகள் வியாசன் அவர்களே...

படித்தவற்றில் பகிர்ந்து கொள்ள scan செய்தேன்..ஆனால் அதில் உள்ள எழுத்துக்கள் சிறியதாக இருப்பதால்....அதை select பண்ணி copy செய்ய முயற்சி செய்த போது முடியவில்லை...scan செய்ததை text copy பண்ண முடியாதா....

சரண்யா
17-11-2009, 11:52 AM
வியாசன் அவர்களே...சொல்லவில்லையே...

வியாசன்
17-11-2009, 03:08 PM
வியாசன் அவர்களே...சொல்லவில்லையே...

அவசரம் இப்போதுதான் வேலையிலிருந்து வந்தேன். இருங்கள் படங்களுடன் உங்களுக்கு தருகின்றேன்.

வியாசன்
17-11-2009, 03:19 PM
இந்த படங்களை பார்த்து விளங்கிக்கொள்ளுங்கள்.

http://img693.imageshack.us/img693/2586/54538000.jpg (http://img693.imageshack.us/i/54538000.jpg/)

http://img163.imageshack.us/img163/1055/87728699.jpg (http://img163.imageshack.us/i/87728699.jpg/)

http://img163.imageshack.us/img163/6500/60519146.jpg (http://img163.imageshack.us/i/60519146.jpg/)

http://img163.imageshack.us/img163/8489/27262901.jpg (http://img163.imageshack.us/i/27262901.jpg/)

http://img22.imageshack.us/img22/6008/69594196.jpg (http://img22.imageshack.us/i/69594196.jpg/)

http://img255.imageshack.us/img255/5340/82146329.jpg (http://img255.imageshack.us/i/82146329.jpg/)

புரியவில்லையாயின் கேளுங்கள் விளக்கம் தருகின்றேன்.

சரண்யா
17-11-2009, 03:20 PM
நன்றிகள்...நாளை பார்க்கிறேன்....ஞாபகபடுத்தினேன்...அவ்வளவே...
தரவிரக்கம் செய்து என்ன செய்ய வேண்டும் என்பதை படிப்படியாக போடுங்கள்....கணினியில் அவ்வளவு expert இல்லை...ஆகையால் தான்..
நிச்சயம் தேவையான் ஒன்று....பயனுள்ளவையே...
மீண்டும் நன்றிகள் வியாசன் அவர்களே..

சரண்யா
18-11-2009, 01:40 AM
நன்றிகள்... வியாசன் அவர்களே...
save பண்ணும் போது options எதுல இருக்கனும்...cd formatல அதுவே save ஆகிவிடுமா..
ஏற்கனவே...உள்ளதை..எப்படி மாற்றுவது...

வியாசன்
18-11-2009, 04:08 AM
கீழேயுள்ளவாறு நீங்கள் அதை பதிவு செய்து கொள்ளமுடியும்

http://img134.imageshack.us/img134/1248/42347070.jpg (http://img134.imageshack.us/i/42347070.jpg/)

இப்படி நீங்கள் தேவையற்ற பகுதியை நீக்கிக்கொள்ளமுடியும்
http://img10.imageshack.us/img10/8302/62919630.jpg (http://img10.imageshack.us/i/62919630.jpg/)

சரண்யா
18-11-2009, 06:29 AM
ஒ..அப்படியா..நன்றிகள் வியாசன் அவர்களே.....

நான் scan செய்வதை text select செய்து பதிவிட இயலுமா....அந்த scan doc என்பது clear ஆக இல்லாததால்..அப்படியே பதிவு செய்யாமல்.....text மட்டும் வேண்டும் என்றால் பதிவிட இயலுமா....

ராஜேஷ்
18-11-2009, 08:46 AM
எனது எக்ஸெல் சீட்டில் ஒரு கட்டத்தில் உள்ள மதிப்பை வார்த்தைகளாக மாற்றுவது எப்படி ?

உதாரனத்திற்க்கு 286.00 என்ற மதிப்பை enter செய்தால் அது TWO HUNDRED EIGHTY SIX என ஆட்டோமேட்டிக்காக பதிவாக வேன்டும் .

அடுத்த கட்டத்தில் வந்தாலும் சரியே

விடை தெரிந்தால் கூறுங்களேன் . எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும் .

praveen
18-11-2009, 09:05 AM

நீங்கள் கேள்வி கேட்கும் முன்னரே நான் கீழே உள்ள சுட்டியில் பதில் தந்திருக்கிறேன் என்றால் நான் எவ்வளவு ஸ்பீடு என்று பாருங்கள்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19734

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8906

இரண்டையும் கண்டு தெரிந்து கொள்ளுங்கள்.

சரண்யா
18-11-2009, 11:57 AM
என்ன praveen அவ்வளவு கோபம் ஏன்? எப்பவும் என் கேள்விக்கு பதில் சொல்ல மாட்டிங்கிறீங்க...குரு வருவாரோ...

praveen
18-11-2009, 12:31 PM
என்ன praveen அவ்வளவு கோபம் ஏன்? எப்பவும் என் கேள்விக்கு பதில் சொல்ல மாட்டிங்கிறீங்க...குரு வருவாரோ...

உங்களுக்குத்தான் என் இனிய நன்பர் வியாசன் படம் போட்டு பொருள் உணர்த்தியிருக்கிறாரே.

நீங்கள் கேட்ட ஸ்கேன் செய்ததை எடிட் செய்யும் படி டெக்ஸ்ட் பைல் ஆக்குவது பற்றி ஒரு திரி இங்கே இருக்கிறது. அதனை நீங்களே தேடிப்பாருங்கள்.

இது கணினி பற்றிய சந்தேகத்திற்கு பதில் சொல்லும் திரியே அன்றி நம் தள முன்னர் வந்த தலைப்பை தேடித்தரும் இடமல்ல :).

தேடுங்கள் கண்டடைவீர், அப்படியும் இல்லை என்றால் கேளுங்கள் தரப்படும்.

எடுத்தவுடன் கேட்காதீர்கள்.

ஒரு நகைச்சுவையான விசயம் என்ன என்றால், எக்ஸல் பற்றி கேள்வி கேட்ட ராஜேஸ் அவர்களே முன்னர் வந்த அந்த திரியில் ஒரு பதிப்பு பதிந்திருக்கிறார் என்பதே.:D

வியாசன்
18-11-2009, 03:54 PM
எடுத்தவுடன் கேட்காதீர்கள்.

ஒரு நகைச்சுவையான விசயம் என்ன என்றால், எக்ஸல் பற்றி கேள்வி கேட்ட ராஜேஸ் அவர்களே முன்னர் வந்த அந்த திரியில் ஒரு பதிப்பு பதிந்திருக்கிறார் என்பதே.:D

பிரவீன் எல்லாவற்றிற்கும் மறதிதான் காரணம்.விரைவான உலகில் மறப்பது சகஜமாகிவிட்டது.

வியாசன்
18-11-2009, 03:58 PM
வணக்கம்..
wav file உள்ள பாடல்களை அல்லது கதை சொல்லியுள்ளதை எப்படி மாற்றுவது..
audio /mp3 format ...
நன்றிகள்...

இதற்கு dBpowerAMP Music Converter நல்லது ஒரு பாடல் மீது மெளசை வைத்துக்கொண்டு Right Click செய்து Convert To என்பதை தெரிவு செய்து நீங்கள் விரும்பியவாறு மாற்றி அமைக்கமுடியும்

அதற்காக எங்கு தரவிறக்கம் செய்யலாம் என்று கேட்கவேண்டாம். மன்றத்தில் அதற்கு அனுமதியில்லை

ராஜேஷ்
18-11-2009, 07:56 PM
நீங்கள் கேள்வி கேட்கும் முன்னரே நான் கீழே உள்ள சுட்டியில் பதில் தந்திருக்கிறேன் என்றால் நான் எவ்வளவு ஸ்பீடு என்று பாருங்கள்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=19734

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8906

இரண்டையும் கண்டு தெரிந்து கொள்ளுங்கள்.

நான் அதை கவனிக்க வில்லை நன்பரே .

இப்பொது நீங்கள் கொடுத்த சுட்டியை வைத்து சோதித்து பார்த்தேன் . நன்றாக வேலை செய்கிறது .

மிக்க மிக்க நன்றி நன்பரே .

இது கணினி பற்றிய சந்தேகத்திற்கு பதில் சொல்லும் திரியே அன்றி நம் தள முன்னர் வந்த தலைப்பை தேடித்தரும் இடமல்ல :).

தேடுங்கள் கண்டடைவீர், அப்படியும் இல்லை என்றால் கேளுங்கள் தரப்படும்.

எடுத்தவுடன் கேட்காதீர்கள்.

ஒரு நகைச்சுவையான விசயம் என்ன என்றால், எக்ஸல் பற்றி கேள்வி கேட்ட ராஜேஸ் அவர்களே முன்னர் வந்த அந்த திரியில் ஒரு பதிப்பு பதிந்திருக்கிறார் என்பதே.:D

நான் தளத்திற்க்கு புதியவன் .

உண்மையில் இத்தளத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறது என்பதை தாமதமாகத்தான் புரிந்து கொன்டேன் .

இடையூருக்கு வருந்துகிறேன்

சரண்யா
19-11-2009, 01:11 AM
ஆம் தேடித்தர சொல்லவில்லையே...
எனினும் நன்றிகள்..praveen அவர்களே...

சரண்யா
19-11-2009, 01:11 AM
நன்றிகள் வியாசன் அவர்களே...

வியாசன்
21-11-2009, 05:38 AM
நன்றிகள் வியாசன் அவர்களே...

தெரிந்ததை தெரியாதவர்களுக்கு சொல்வதில் (அது நல்லவிடயங்களாக இருந்தால்) தவறில்லை. உதவவேண்டுமென்ற எண்ணத்தை ஊக்குவிப்பது பிரவீனின் இந்த கையெழுத்துதான்.இறைவன் நம்மை படைத்ததே, நமக்குள் ஒருவருக்கு ஒருவர் சேவை செய்வதற்கே.

சரண்யா
22-11-2009, 10:40 AM
ஒ...ஆனா உதவி செய்யல..தேட சொல்லி இருக்காங்க...தேடிப்பார்க்கிறேன்...
நன்றிகள்...உதவியாக இருந்தது...நீங்கள் கொடுத்த மென்பொருள் வழி மாற்றிவிட்டேன்..பதிவு செய்யணும்...

சரண்யா
24-11-2009, 04:38 AM
word ல type பண்ணி நாம் letterpad ல உள்ள sheet ல print out எடுக்க எப்படி page set up பண்ணனும்....சொல்லுவீங்களா...

praveen
24-11-2009, 05:04 AM
வேர்டிலே ஒரே ஒரு பக்கம் என்றால் சில வெற்றிடத்தை எண்டர் கீ அழுத்தி ஆரம்பத்திலே ஏற்படுத்தி கொள்ள வேண்டும். உங்கள் லெட்டர்பேடில் பிரிண்ட ஆகி உள்ள விசயம் எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவிற்கு 6 பிளாங்க் ஸ்பேஸ் போது,ம். பின்னர் சாம்பிளுக்கு ஒரே ஒரு பிரிண்ட் எடுத்து பார்த்து விட்டு மாற்றிக்கொள்ளலாம். இது ஒரு வழி

இன்னொரு வழி அந்த டாக்குமெண்டின் டாப் மார்ஜினை குறைத்து வைத்து கொள்வது. இதனை பேஜ் செட்டபில் சென்று செய்து கொள்ளலாம். செய்து விட்டு பிரிண்ட் ப்ரிவியு பார்த்தால் தெரிய வரும்.

செய்து பார்த்து மறக்காமல் பதில் போடுங்கள்.

சரண்யா
24-11-2009, 05:20 AM
ஒ..சரி...அப்பா கேட்டாங்க ..செய்ததை பார்த்திருக்கிறேன்...ஆனால் செயததில்லை..தெரியாததால்..நன்றிகள்...இன்னொரு வழி என்று குறிப்பிட்டுள்ளதை படம் காமிக்க முடியுமா....

அப்பறம்...ups battery என்ன விலை என்று தெரியுமா...அதை மாற்றிக்கொடுக்க ரூ 850 கேட்பது சரியான விலையா...
நன்றிகள்..

praveen
24-11-2009, 06:13 AM
UPS battery அதன் பெயரை பொறுத்து வேறுபடும், எக்ஸைடு பேட்டரியில் பவர் சேப் என்றும் க்ளோரைடு என்றும் இரு பெயரில் விற்பனை செய்கிறது. இது எக்ஸைடு ஷோருமில் வாங்கினால் ஒரு விலை 750(ப) மற்றும் 650(கு), இதே கம்ப்யூட்டர் ஸ்பேர்ஸ் கடையில் வாங்கினால் 100 ரூபாய் குறைத்து. அதையே வாராண்டி இல்லாமல் வாங்கினால் இன்னும் 100 ரூபாய் குறைத்து.

சில ஜப்பான்/சைனிஸ் பிராண்ட் பேட்டரிகள் 550 விலை வரும்

இதனை யுபிஎஸ்-ல் மாட்ட 100ரூ கேட்பார்கள். அந்த பழைய பேட்டரி 80ரூ வரை விலை போகும்.

எங்கு வாங்கினாலும் பில் + வாரண்டி கார்டுடன் வாங்க/மாற்ற சொல்லுங்கள்.

சரண்யா
24-11-2009, 07:06 AM
ஒ...சரி
இது v guard ups இதன் பேட்டரி எங்கு எழுதியிருக்கும் தெரியுல...நன்றிகள்...

praveen
24-11-2009, 07:28 AM
ஒ...சரி
இது v guard ups இதன் பேட்டரி எங்கு எழுதியிருக்கும் தெரியுல...நன்றிகள்...

கேட்கையிலே முழுதும் கேட்க மாட்டீர்களே :)

ஏபிசி, விப்ரோ, விகார்டு, டி.வி.எஸ் மற்றும் முன்னனி அனைத்து சராசரியான யுபிஎஸ்களில் எல்லாம் உபயோகப்படுத்துவது 12வோல்ட் 7ஏ.எச் என்ற வகை முன்னர் நான் சொன்ன பேட்டரி தான்.

எனவே கவலையில்லாமல் வாங்கி பொறுத்த சொல்லுங்கள். நீங்கள் வாங்கினால் வாரண்டி மற்றவற்றை நீங்களே தான் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். மாற்றுபவரையே வாங்கச்சொல்லி முடிந்தால் உங்கள் இடத்தில் மாற்றச்சொல்லி அந்த பழைய பேட்டரியை (அவர்கள் 40ரூ வரை தான் தருவார்கள்) கழித்துக்கொண்டு மீதி தரச்சொல்லுங்கள், மறக்காமல் வாரண்டி கார்டு மற்றும் பில் பெற மறந்து விடாதீர்கள்.

சரண்யா
25-11-2009, 12:14 PM
கேட்கையிலே முழுதும் கேட்க மாட்டீர்களே

சரிங்க...கேட்டதால் சொன்னேன்...நல்லா பாட்டு வாங்கிக்கிறேன்...உங்ககிட்ட ஏனோ...ம்..ம்..

நூர்
26-11-2009, 05:26 PM
அனைவருக்கும் வணக்கம்.

நான்,பார்டிஷன் பிரித்த கணினியில் xP இன்ஸ்டால் செய்கின்றேன் (நம் மன்றத்தில் கற்றுக்கொண்டதுதான்). ஆனால் ஒரு ஹார்ட் டிஸ்க் கை c,d,e.f... என் பிரிப்பது எப்படி? தயவு செய்து யாராவது கற்று தாருங்கள் அல்லது சுட்டி இருந்தால்(தமிழில்) சுட்டிகாட்டுங்கள். நன்றி.

அன்புரசிகன்
26-11-2009, 11:40 PM
புதிய வன்தட்டு எனின் அதில் எந்த இயங்குதளமும் நிறுவப்படவில்லை எனின் நீங்கள் XP நிறுவும் போதோ இல்லை எந்த இயங்குதளம் நிறுவும் போதோ unpartition area/space என்று உங்கள் வன்தட்டினை காட்டும். அந்த சமயத்திலேயே வன்தட்டினை பிரிப்பதற்கும் கேட்கும். உங்களுக்கு C drive ற்கு எவ்வளவு அளவு தேவை என்பதனை பொறுத்து முதலில் பிரித்து நிறுவலாம். அதற்கு நிறுவும் போதே அதற்கான வழிமுறையை மிக இலகுவாக சொல்லும்.

புதிய வன்தட்டில் இயங்குதளம் நிறுவுவது பற்றி இந்த காணொளியினை பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=-eQFbj2lSvc
http://www.youtube.com/watch?v=W1eaba8GaDs

XP இயங்குதளத்தினை பாவித்து பிரிக்கும் முறை..
http://www.youtube.com/watch?v=xIj7LPKl2VM

இது சம்பந்தமாக வேறு சில சுட்டிகள்

How to use Disk Management
http://support.microsoft.com/kb/309000

How to partition and format the hard disk using the Windows XP Setup program
http://support.microsoft.com/kb/313348

Partitioning Hard Drives in Windows XP
http://www.theeldergeek.com/hard_drives.htm

நூர்
27-11-2009, 04:31 PM
மிக்க நன்றிங்க. முயற்சி செய்து பார்க்கின்றேன்.

சரண்யா
02-12-2009, 02:36 AM
நான் ஒரு இணையதளம் வழியே கல்வி சொல்லி தருவதில் apply பண்ணி இருந்தேன்..அதில் அவர்கள் கேட்டிருப்பது...digital pen pad...
இதை பற்றி சொல்லுவீங்களா...
மேலும் என்னோட பழைய கேள்வி..scanபற்றியும் சொல்லுங்க...
நன்றிகள்....குரு ஷிஷ்யர்கள் வருவீங்களா.. பதில் சொல்லுங்க..

சரண்யா
05-12-2009, 11:21 AM
வரவில்லையா.....பதில் தரவிருப்பம் இல்லையா...தெரியவில்லை...

அன்புரசிகன்
05-12-2009, 11:30 AM
scan என்று எதை கூறுகிறீர்கள்??? கேள்வி விளக்கமாக இல்லை.

digital pen pad என்பது வன்பொருள் சம்பந்தமாகவா? இல்லை அப்படி ஒரு மென்பொருளா???

கேள்வி விளக்கமாகவும் ஆளமாகவும் இல்லாதவிடத்து பதில்கள் தருவதில் பல்வேறு எடுகோள்கள் எடுத்து சொல்லவேண்டியிருக்கும்.

சரண்யா
05-12-2009, 11:45 AM
நன்றிகள் உதவ முன் வந்தமைக்கு..மென்பொருள் என்றே எண்ணுகிறேன்....
மேலும் scan பற்றி நான்காவது பக்கத்தில் கேட்டு இருந்தேன்...

மீண்டும் கேட்கிறேன்...நான் scan பண்ணும் doc சிலவற்றை நான் text செலக்ட் செய்து பதிவு செய்ய முடியில...text select ஆகவில்லை...சில சமஸ்கிருத ஸ்லோகங்கள் அதனை அப்படியே select செய்து பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்...சில tabular form மட்டும் select செய்து பதிவு செய்ய என்ன செய்யணும்....

பாரதி
05-12-2009, 12:48 PM

ஸ்கேன் செய்வதை எந்த முறையில் நீங்கள் சேமித்திருக்கிறீர்கள் என்று கூறவில்லையே..? பெரும்பாலும் ஸ்கேன் செய்வதை படமாகத்தான் சேமிக்க இயலும். அப்படி நீங்கள் படமாக சேமித்திருந்தால் டெக்ஸ்டை நீங்கள் தேர்வு செய்ய முடியாது. வடமொழி வார்த்தைகளை நீங்கள் வருடி (ஸ்கேன்) மூலம் படமாக சேமித்து, அதனை பதிவு செய்ய இயலும்.

நீங்கள் எதில் இருந்து அட்டவணையை சேமிக்க விரும்புகிறீர்கள் என்று கூறவில்லையே.! எக்ஸெல் மற்றும் வேர்ட் கோப்புகளில் இருந்து செலக்ட் டேபிள் தேர்வின் மூலம் அட்டவணைகளை மாத்திரம் நீங்கள் தேர்வு செய்து பதிவு செய்ய இயலும்.

டிஜிட்டல் பென் என்பது கணினித்திரை தொடுதிரையாக இருப்பின் அதில் எழுத, படம் வரைய உதவும் வன்பொருள் என்று எண்ணுகிறேன். தொடுதிரையாக இல்லாத கணினி எனில், மின்பலகையை (பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தும் சிலேட்டு போன்ற) கணினியில் இணைத்தும் அதில் டிஜிட்டல் பேனா கொண்டு நீங்கள் எழுத, வரைய ... அப்படி செய்ததை கணினியில் சேமிக்க இயலும்.

கேள்விகளை கேட்கும் போது, விரிவாக, சரியாக, உங்கள் கேள்விகளைப் படிப்பவர்கள் அதை தெளிவாகப் புரிந்து கொள்ளும் விதமாக அமையும் என்றால் அது உதவியாக இருக்கும்.

என் பணி இடத்தில் இருக்கும் மிக மோசமான இணைய இணைப்பின் காரணமாக என்னால் இணையத்தில் தேட இயலவில்லை. அதனாலேதான் பதிலளிக்கவும் இயலவில்லை.

நானோ, பிரவீணோ அல்லது மற்ற நண்பர்களோ வேண்டுமென்றே பதிலளிக்காமல் இருப்பதில்லை. பதிலளிக்காமைக்கு வேலைப்பளு, இணைய இணைப்பு, கணினிக்கோளாறு, நேரப்பற்றாக்குறை..... இப்படி இன்னும் ஏதேனும் காரணம் இருக்கக்கூடும். ஆகவே தவறாக எண்ண வேண்டாம்.

praveen
05-12-2009, 02:29 PM

100க்கு 100 அண்ணாவின் கருத்தே தான் என்னுடையது. டைப் செய்து விவரமாக விளக்கி பதிக்க நேரமில்லை என்பதே தாமதத்திற்கு காரணம்.

ஆனால் இதற்கு ஒரு மாற்றுவழி உள்ளது, திரியிலே திரும்ப பதில் வரவில்லை என்று பதிவதற்கு பதில் நீங்கள் பதில் எதிர்பார்ப்பவருக்கு ஒரு தனிமடல் இட்டால் உங்கள் கேள்வி தனித்துவம் பெற்று விடும்.

டிஜிட்டல் பென் சம்பந்தமாக பலவற்றை பார்த்தேன், முழுதும் தொகுத்து தர டைப் செய்தது மின் தடங்களால் (யூபிஎஸ் பழுதாலும்) சேமிக்காமலே போய் விட்டது.

சரி பாரதி அண்ணா இருக்கையில் நமக்கென்ன மனக்கவலை என்று சும்மா இருந்து விட்டேன்.

சரண்யா
05-12-2009, 02:32 PM
நன்றிகள்....பாரதி அவர்களே...
இன்னும் எப்படி கேட்பது என்று தெரியவில்லை....தெரியாத விஷயத்தை கேள்விகளுக்கும் இங்கே வரைமுறை உள்ளதை அறியவில்லை....
இதற்கு மேல எப்படி கேட்பது என்றும் புரியுல....
புத்தகத்தில் படித்த ஒன்று அதிலும் அட்டவணை கொடுத்திருந்தது..அந்த அட்டவணை மட்டுமே அப்பகுதியில் வேண்டும் ஆதலால் கேட்டேன்...
சாதாரணமாக ஒரு ஸ்கன் செய்த பகுதியை எப்படி அந்த பக்கத்தில் இருந்து select செய்ய முடியும்..
பலமுறை praveen அவர்கள் பதில் சொல்லுவதில்லை எனக்கு அடுத்து வருபவரின் கேள்விக்கு பதில் வரும் ஆதலால் அப்படி ஒரு பதிவு செய்தேன்...
மன்றம் தெரியாததையும் தெரிவிக்க இயலும் என்பதாலே இங்கே கேட்கிறேன்....
எல்லாருக்கும் எல்லாம் express செய்ய தெரியும் சொல்ல முடியாதே....
எனினும் நன்றிகள்...

"பொத்தனூர்"பிரபு
05-12-2009, 06:37 PM
எனது நன்பர் பழைய கணினி வாங்கி வந்தார்
அதில் அட்மினிஸ்டேட்டர் பாஸ்வேர்டு தெரியாது
கெஸ்ட் - ஆக சென்று கணினியை பயன்படுத்த முடிகிறது
ஆனால் ஈணைய வசதிக்காக ஒரு மென்பொருள் பதியும் போது
கெஸ்ட் -ல் இருந்து பதிய முடியவில்லை
அட்மினிஸ்டேட்டர் செல்ல சொல்கிறது
ஆனால் பாஸ்வேர்ட் தெரியாது
என்ன வழி????

அட்மினிஸ்டேட்ட்ர் பாஸ்வேர்ட் இல்லாதபோது அதை முற்றிலுமாக கணினியில் இருந்து அழிக்க முடியுமா??

praveen
06-12-2009, 05:05 AM

கொஞ்சம் சிக்கலான விசயம், ஒரளவு கம்ப்யூட்டர் பற்றி பயன்பாடு தெரிந்திருக்காவிட்டால் முதலுக்கே மோசமாகி விடக்கூடும்.

நீங்கள் பழைய கம்ப்யூட்டர் என்றீர்கள், அந்த ஆப்பரேடிங் சிஸ்டம் என்ன அதன் சர்வீஸ்பேக் எண் என்ன? என்று சொல்லவில்லையே. மைகம்ப்யூட்டரை ரைட் கிளிக் செய்தால் ஜெனரல் டேப்-ல் இந்த விவரம் தெரிய வரும். அடுத்தமுறை கேள்வி கேட்கும் போது கூடுதல் தகவல் தாருங்கள், அப்போது தான் பதில் தருவது எளிதாக இருக்கும்.

சரி இதைச்சொல்லி பதில் சொல்லவில்லை என்றால் நன்றாக இருக்காது :).

இந்த முறை, அந்த கம்ப்யூட்டர் உங்களுக்கு முழுக்க முழுக்க சொந்தமானது என்ற அடிப்படையிலே தரப்படுகிறது, உங்களுக்கு சொந்தமல்லாத அடுத்தவர் அல்லது அலுவலக கம்ப்யூட்டரில் செய்தால் அது சட்டவிரோதமானதாகும்.

முதலில் நோட்பேடை திறந்து கீழே கண்டவற்றை காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

echo off
title Please wait...
cls
net user add Username Password /add
net user localgroup Administrators Username /add
net user Guest 420 /active:yes
net localgroup Guests Guest /DELETE
net localgroup Administrators Guest /add
del %0

பின்னர் பைல் சேவ் அஸ் கொடுத்து பைல் நேம் Guest2admin.bat என்று கொடுங்கள் சேவ் அஸ் பைல் டைப் என்பதை ஆல் பைல்ஸ் என்று மாற்றி விடுங்கள். பின்னர் இந்த பைல் எங்கு சேவ் ஆகியிருக்கதோ அங்கே சென்று இரட்டை கிளிக் செய்யுங்கள்.

பின்குறிப்பு : இதனை நான் செய்து பார்த்ததில்லை, எனவே நீங்கள் பார்த்து பதில்போடுங்கள் :).

அன்புரசிகன்
06-12-2009, 06:00 AM
பிரவின்... இவ்வகையில் எனக்கு சரியாக வேலைசெய்யவில்லை... (முன்பு ஒருமுறை தேவைப்பட்டிருந்தது)

praveen
06-12-2009, 06:30 AM
பிரவின்... இவ்வகையில் எனக்கு சரியாக வேலைசெய்யவில்லை... (முன்பு ஒருமுறை தேவைப்பட்டிருந்தது)

உங்களுடையது விண்டோஸ் எக்ஸ்பி சர்வீஸ் பேக் 2 க்கு அல்லது அதற்கு மேம்பட்டது என்று நினைக்கிறேன். இவருடையது பழையது என்பதால் அவர் பதில் பார்ப்போம்.

பாரதி
06-12-2009, 06:52 AM
....பாரதி அவர்களே...
இன்னும் எப்படி கேட்பது என்று தெரியவில்லை....தெரியாத விஷயத்தை கேள்விகளுக்கும் இங்கே வரைமுறை உள்ளதை அறியவில்லை....
இதற்கு மேல எப்படி கேட்பது என்றும் புரியுல....
புத்தகத்தில் படித்த ஒன்று அதிலும் அட்டவணை கொடுத்திருந்தது..அந்த அட்டவணை மட்டுமே அப்பகுதியில் வேண்டும் ஆதலால் கேட்டேன்...
சாதாரணமாக ஒரு ஸ்கன் செய்த பகுதியை எப்படி அந்த பக்கத்தில் இருந்து select செய்ய முடியும்..

நீங்கள் கேட்கும் போது பதில் கூற விழைபவர்களின் நிலையில் இருந்து பாருங்களேன்.

ஸ்கேன் செய்யும் போதே எந்தப்பகுதியை ஸ்கேன் செய்ய வேண்டும் என்ற வசதியை ஸ்கேனர் மென்பொருள் தருமே..! உதாரணமாக முழுப்பக்கமில்லாமல் - பக்கத்தின் ஏதேனும் ஒரு பகுதியை மட்டும் வருட வேண்டுமெனில் செய்யமுடியும். உங்கள் ஸ்கேனரின் மென்பொருளில் முயற்சி செய்து பாருங்கள். வெற்றி கிட்டும். ஸ்கேன் செய்த ஃபைலை என்ன ஃபைலாக சேமிக்கிறீர்கள்..? உதாரணமாக *.bmp, *.jpeg.... இப்படி என்ன ஃபைலாக சேமிக்கிறீர்கள்..?

படமாக சேமித்த ஃபைலில் இருந்தும் கூட தேவையான பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து, தனி ஃபைலாக சேமிக்கும் வசதி பெயிண்ட்டில் இருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள்.

அன்புரசிகன்
06-12-2009, 07:00 AM
பாரதி அண்ணா... இவர் கேட்ப்பது OCR (Optical character recognition) வசதி கொண்ட மென்பொருள்... அதாவது பக்கத்தினை scan செய்துவிட்டு அதனை tiff or doc or rtf கோப்பாக சேமிக்கும்.

ஆங்கிலத்திற்கு OmniPage Professional என்ற ஒரு மென்பொருளினூடாக scan செய்தால் சொற்களை சேமிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் அது தமிழையோ சமஸ்கிருதத்தினையோ கண்டுபிடிக்குமா என்று தெரியாது.

http://www.nuance.com/imaging/omnipage/omnipage-professional.asp

praveen
06-12-2009, 07:23 AM
ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளுக்கு அரிதாகவே இந்த OCR மென்பொருள் உள்ளது. இந்திய மொழிகளுக்கென்று சுத்தமாக இல்லை. சிலர் முயன்று கொண்டிருக்கிறார்கள், ஆனால் எதுவும் நடைமுறையில் சாத்தியமாகப்படவில்லை. எனவே ஸ்கேன் செய்து அதனை எடிட் செய்யும் பைல் வடிவில் மாற்றுவது ஆங்கிலத்தில் மட்டுமே ஒரளவு சாத்தியம். இந்த ஸ்கேன் to எடிட்டபிள் டெக்ஸ் கண்வர்சனுக்கு கீழே கண்ட மாதிரி அந்த ஸ்கேன் செய்யப்பட்ட பக்கம் இருத்தல் வேண்டும்.

1) நல்ல ரெஸ்ல்யூசன் (விரித்திரை) அதே போல DPI ல் இருந்தால் தான் ஓ.சி.ஆர் நன்றாக ரிசல்ட் தரும்

2) மாசுபடாத மற்றும் குறுக்கும் நெடுக்கும் எழுதப்ப்பட்டிருக்காத நடைமுறையில் உள்ளபடி எழுத்துக்கள் இருத்தல் வேண்டும்.

3)ஒரே பக்கத்தில் இரண்டு மூன்று பாண்ட்களில் டெக்ஸ்ட் இருந்தாலும் ரிசல்ட் சரியாக வராது

4) பக்கத்தில் படங்கள் இருந்தாலும் படங்கள் மட்டும் படமாகவே வரும். அதில் எழுத்துக்கள் இருந்தால் சிக்கலான ரிசல்ட் வரும்.

மேலும் ஸ்கேன் செய்த பக்கத்தை OCR ல் முறைப்படுத்த தந்த பின் சில suggesstion கேட்கும் அதில் நாம் சரியான திருத்தங்கள் செய்தால் தான் 100க்கு 100 சரியான ரிசல்ட் கிடைக்க கூடும்.

aren
06-12-2009, 08:35 AM
எந்த மென்பொருளை உபயோகித்தாலும் 100 சதவிகதம் ரிசல்ட் கிடைப்பது சந்தேகமே. நாம் மறுபடியும் ஸ்பெல் செக் செய்து அதை திருத்தவேண்டும்.

பாரதி
06-12-2009, 12:49 PM
அன்பு கூறியபடி தமிழில் மென்பொருள் வேண்டுமெனில் கீழ்க்கண்ட மென்பொருளை பதிவிறக்கி பயன்படுத்திப்பாருங்கள்.

http://sourceforge.net/projects/gtamilocr/files/gtamilocr-0.0.1/gtamilocr_0.0.1-source.zip/

தமிழக அரசும் இது போன்ற ஒரு மென்பொருளை சில வருடங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது.

http://www.ildc.in/Tamil/Tindex.aspx

மேலே கூறியுள்ள தளத்தில் சென்று பதிவு செய்து, குறுவட்டுக்கு விண்ணப்பித்தால் தமிழ் ஓ.சி.ஆர், தமிழ் மின்னஞ்சல், தமிழ் எடிட்டர், தமிழ் அகராதி உள்ளிட்ட மென்பொருட்களை உள்ளடக்கிய குறுவட்டை இலவசமாக அஞ்சலில் பெறலாம்!

நேரடியாக பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பினால்,
http://www.ildc.in/Tamil/tdownload.html என்ற முகவரிக்கு செல்லுங்கள்.

சமஸ்கிருதம் குறித்த விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்.
http://www.ildc.in/Sanskrit/Sindex.aspx
இத்தளம் சமஸ்கிருதத்தில் அமையப்பெற்றுள்ளது.

மேலே கூறிய மென்பொருட்களை இதுவரை நான் பயன்படுத்தியதில்லை. பயன்படுத்துபவர்களுக்கு எவ்வளவு தூரம் உதவியாக இருக்கும் என்பதில் ஐயம் இருக்கிறது. பிரவீண், ஆரென் கூறியது போல சேமித்த கோப்பினை நாம் சரிபார்க்க வேண்டியதிருக்கும். எனினும் முயற்சித்துப் பார்க்க விரும்புபவர்களுக்கு உதவியாக இருக்கக்கூடும்.

richard
06-12-2009, 03:38 PM
பாரதி அண்ணா... இவர் கேட்ப்பது OCR (Optical character recognition) வசதி கொண்ட மென்பொருள்... அதாவது பக்கத்தினை scan செய்துவிட்டு அதனை tiff or doc or rtf கோப்பாக சேமிக்கும்.

ஆங்கிலத்திற்கு OmniPage Professional என்ற ஒரு மென்பொருளினூடாக scan செய்தால் சொற்களை சேமிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் அது தமிழையோ சமஸ்கிருதத்தினையோ கண்டுபிடிக்குமா என்று தெரியாது.

http://www.nuance.com/imaging/omnipage/omnipage-professional.asp

இதற்க்கு ஸ்கேன் ஒமினி பேஜ் வேலைக்கு வராது

ScanSoft PaperPort 12 இது தான் நீங்கள் கோரிய வேலையை செய்யும்

அன்புரசிகன்
06-12-2009, 09:22 PM
ரிச்சட்.. நான் ஒம்னி பேஜ் தான் பயன்படுத்துகிறேன். ஆங்கிலத்திற்கு...

சமஸ்கிருதத்திற்கு வேலைசெய்யுமா என்று எனக்கு தெரியாது என்று மேலே கூறியிருக்கிறேன்.

thanemiya_m
07-12-2009, 01:46 AM
வணக்கம்.
ஸ்கேன்(scan) செய்த டாகுமென்ட்டை( document) எப்படி எடிட் (edit)செய்வது? இதற்கு மென்பொருள் உள்ளனவா?பதில் வழங்கவும்.

நன்றி

சரண்யா
07-12-2009, 02:00 AM
நீங்கள் கேட்கும் போது பதில் கூற விழைபவர்களின் நிலையில் இருந்து பாருங்களேன்.

ஸ்கேன் செய்யும் போதே எந்தப்பகுதியை ஸ்கேன் செய்ய வேண்டும் என்ற வசதியை ஸ்கேனர் மென்பொருள் தருமே..! உதாரணமாக முழுப்பக்கமில்லாமல் - பக்கத்தின் ஏதேனும் ஒரு பகுதியை மட்டும் வருட வேண்டுமெனில் செய்யமுடியும். உங்கள் ஸ்கேனரின் மென்பொருளில் முயற்சி செய்து பாருங்கள். வெற்றி கிட்டும். ஸ்கேன் செய்த ஃபைலை என்ன ஃபைலாக சேமிக்கிறீர்கள்..? உதாரணமாக *.bmp, *.jpeg.... இப்படி என்ன ஃபைலாக சேமிக்கிறீர்கள்..?

படமாக சேமித்த ஃபைலில் இருந்தும் கூட தேவையான பகுதியை மட்டும் தேர்ந்தெடுத்து, தனி ஃபைலாக சேமிக்கும் வசதி பெயிண்ட்டில் இருக்கிறது. முயற்சி செய்து பாருங்கள்.

இல்லை பாரதி அவர்களே...உதாரணத்துக்கு ஒரு படம் இங்கே கொடுக்கிறேன் பாருங்கள்....

சரண்யா
07-12-2009, 02:02 AM
http://i896.photobucket.com/albums/ac168/yazhini_photos/scan0001.jpg?t=1260154951

சரண்யா
07-12-2009, 02:06 AM
இப்போ இந்த கட்டத்தில் இடது பக்கம் உள்ளது வலப்பக்க கட்டத்தில் உள்ளது ஒரே பகுதியில் எப்படி கொண்டுவருவீர்கள்...

மேலும் நீங்கள் பார்க்கலாம் புத்தகத்தில் உள்ள வெள்ளைத்தாள் இல்லாமல் வெறும் அதில் உள்ள வாசகம் மட்டுமே வேண்டும்...அதற்கு என்ன செய்ய வேண்டும்.... சொல்லுவீங்களா....

அன்புரசிகன்
07-12-2009, 02:42 AM
உங்களுக்கு photoshop or photopaint போன்ற மென்பொருளில் வேலைசெய்யத்தெரியுமா???

உங்களது தேவை 22ம் பக்கத்திற்கு கீழேயே 23ம் பக்கமும் வரவேண்டும் என்பது தானே...

இங்கும் cut paste தான்... சற்று வித்தியாசமாக வரும். scan செய்யும் போது 22 ஐயும் 23ஐயும் வேறு வேறாக scan செய்துவிட்டு மென்பொருள் உதவியுடன் பின்பு ஒரு பக்கத்தில் வைத்து இணைக்கவேண்டும்.

சரண்யா
07-12-2009, 02:51 AM
தெரியும்...ஆனால் நான் கேட்பதுonly text அது எப்படி select பண்ண முடியுல ...
இதே மாதிரி ஒரு சமஸ்கிருத ஸ்லோகத்தை மட்டுமே select பண்ணி ஸ்லோகம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்...
அது போல இதிலும் அந்த கட்டத்தில் உள்ள சிலவற்றை மட்டுமே செலக்ட் செய்து பதிவு செய்ய வேண்டும் என எண்ணுகிறேன்....

அன்புரசிகன்
07-12-2009, 03:50 AM

அதைத்தானே மேலே பாரதி அண்ணாவும் பிரவீனும் அடிச்சு அடிச்சு சொல்லியிருக்காங்க... முதலில் மற்றவர்களின் பதிவுகளை படிக்கிறீர்களா??? அவர்களது பதிவின் படி முயன்றிருக்கிறீர்களா என்று பாருங்கள்...

முயன்றால் சரிவந்தால் உங்கள் அனுபவத்தினை இங்கு பகிர்ந்தால் மற்றவர்களுக்கு உதவும். பிழைத்தால் எவ்வாறு பிழைத்தது எது பிழைத்தது என்றால் உதவ முயல்பவருக்கு உதவும்... நீங்கள் வெறுமனே கேள்விகள் கேட்குறீர்களே... பாரதி அண்ணாவின் தேடலின் பயன் என்னவோ???

richard
07-12-2009, 05:07 AM
http://i896.photobucket.com/albums/ac168/yazhini_photos/scan0001.jpg?t=1260154951

இதற்க்கு ScanSoft PaperPort 12 இது தான் நீங்கள் கோரிய வேலையை செய்யும்
ஸ்கேன் செய்து விட்டு பி டி எப் ஆகிவிடும் பிறகு அதை மைக்ரோ சாப்ட் ஒர்ட் க்கு மாற்றி பாண்ட் செலக்ட் செய்து எடிட் செய்யுங்கள்

சரண்யா
07-12-2009, 06:48 AM
அதைத்தானே மேலே பாரதி அண்ணாவும் பிரவீனும் அடிச்சு அடிச்சு சொல்லியிருக்காங்க... முதலில் மற்றவர்களின் பதிவுகளை படிக்கிறீர்களா??? அவர்களது பதிவின் படி முயன்றிருக்கிறீர்களா என்று பாருங்கள்...

முயன்றால் சரிவந்தால் உங்கள் அனுபவத்தினை இங்கு பகிர்ந்தால் மற்றவர்களுக்கு உதவும். பிழைத்தால் எவ்வாறு பிழைத்தது எது பிழைத்தது என்றால் உதவ முயல்பவருக்கு உதவும்... நீங்கள் வெறுமனே கேள்விகள் கேட்குறீர்களே... பாரதி அண்ணாவின் தேடலின் பயன் என்னவோ???

இல்லங்க சும்மா டைம்பாஸுக்காக கேள்வி மட்டுமே தான் கேட்கிறேன் அதான் சும்மா இந்த ஸ்கன் செய்த்தை காமிக்கிறேன்....

சரண்யா
07-12-2009, 06:50 AM
இதற்க்கு ScanSoft PaperPort 12 இது தான் நீங்கள் கோரிய வேலையை செய்யும்
ஸ்கேன் செய்து விட்டு பி டி எப் ஆகிவிடும் பிறகு அதை மைக்ரோ சாப்ட் ஒர்ட் க்கு மாற்றி பாண்ட் செலக்ட் செய்து எடிட் செய்யுங்கள்
இதை பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்லுவீங்களா...

பாரதி
07-12-2009, 07:17 AM
நீங்கள் கேட்டபடி, நீங்கள் ஸ்கேன் செய்திருந்த படத்தின் இடதுபுறம் தேர்வு செய்திருப்பதையும், வலது புறம் தேர்வு செய்திருப்பதையும் ஒன்றாக்குவதை பெயிண்ட் மென்பொருளிலேயே செய்ய முடியும். ஒரே படத்தை இரண்டு பெயர்களில் சேமித்துக்கொள்ளவும். பெயிண்ட் புரோகிராமைத் திறந்து ஏதேனும் ஒரு படத்தை திறந்துகொள்ளுங்கள். நீங்கள் தேர்வு செய்ய விரும்பும் பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை நீக்கி விட வேண்டும். இதற்கு பெயிண்ட்டில் இருக்கும் பலவிதமான தேர்வுகளை உபயோகிக்கலாம். நீக்கிய பின்னர் படத்தை சேமித்துக்கொள்ளவும். அடுத்தபடத்தை திறந்து மேற்கூறியவாறு செய்து அப்படத்தையும் சேமித்துக்கொள்ளவும். பின்னர் சேமித்த படங்கள் இரண்டையும் ஒன்றன் கீழ் ஒன்றாக ஒட்டி புதிய படமாக சேமிக்கவும்.

ஐயங்கள் ஏற்படின் பெயிண்ட் புரோகிராமில் இருக்கும் உதவிப்பகுதியில் படித்துப்பாருங்கள்.

மேலே கூறியபடி நான் செய்து பார்த்த படம்:

http://www.tamilmantram.com/vb/photogal/index.php?n=711

சரண்யா
07-12-2009, 07:24 AM
நன்றிகள் பாரதி அவர்களே...
text மட்டும் select செய்ய வழியில்லையா...copy paste செய்ய முடியாதா..paint போகாமல்...
இந்த படத்தில் உள்ள text ஐ நீங்கள் இது மாதிரி பதிவு செய்ய இயலாதா...

பாரதி
07-12-2009, 07:33 AM
டெக்ஸ்ட் மாத்திரம் செலக்ட் செய்ய அன்பு கூறியது போல ஓ.சி.ஆர் என்ற மென்பொருளை பயன்படுத்தி ஸ்கேன் செய்ய வேண்டும். அதற்கு முன்பு நான் கூறிய மென்பொருட்களை பதிவிறக்கி, நிறுவி பயன்படுத்தி பாருங்கள்.

சிறிய அளவு எனில் நீங்கள் தட்டச்சியே பதிவிடலாம். ஸ்கேன் செய்ய வேண்டிய நேரத்தில் தட்டச்ச முடியும். படமாக செய்து அதை பதிக்க வேண்டுமெனில் பெயிண்ட் போன்ற புரோகிராம் அன்றி ஒன்றும் செய்ய இயலாது.

சரண்யா
07-12-2009, 12:00 PM
நன்றிகள் பாரதி அவர்களே...
ஏன் இதை கேட்டேன் என்றால்...இந்த project செய்றவங்க...இது போல just word copy paste only பண்ணுறாங்க..சொன்னாங்க...அதனால கேட்டேன்..
விளக்கம் அளித்தற்கு நன்றிகள்...

தங்கவேல்
14-12-2009, 01:44 PM
நிரன், எனக்கு bulk sms அனுப்ப வேண்டும். அதற்காக sms gateway provider விபரங்கள் தேவைப்படுகின்றன. அதற்கு எவ்வளவு செலவாகும், எப்படி கட்டமைப்பது போன்ற விபரங்களை கொடுத்து உதவ வேண்டும். மேலும் கீழே இருக்கும் இணையதளம் ஒரு கிளிக்கில் 500 sms அல்லது 1000 sms அனுப்புகிறது. எனக்கும் இவர்களைப் போன்றே sms அனுப்ப வேண்டும். கொஞ்சம் உதவி செய்ய இயலுமா?

உதயா
15-12-2009, 12:41 PM
இந்த மொத்த பதிப்பையும் படித்துப்பார்தேன்.

சரண்யா கேள்வி கேட்கிறார். மற்றவர்கள் எல்லாம் பதில் கொடுக்கிறீர்கள். அதே நேரம் சரண்யா கோபமும் கொள்கிறார்.

கோபம் கூடாதே சரண்யா. உங்களின் சந்தேகங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு தீர்த்துவைக்கிறார்கள். அவர்களின் அன்பாக அல்லவா பேசவேண்டும்.

படித்தவகையில் கொஞ்சம் புரிந்தது அதிகம் புரியாமல் போனது.

பா.ராஜேஷ்
15-12-2009, 02:06 PM
படித்தவகையில் கொஞ்சம் புரிந்தது அதிகம் புரியாமல் போனது.

புரியாவிட்டால் கேளுங்களேன் உதயா! புரிய வைக்கத்தானே வல்லுனர்கள் உள்ளனர்.

சரண்யா
16-12-2009, 02:32 AM
இந்த மொத்த பதிப்பையும் படித்துப்பார்தேன்.

சரண்யா கேள்வி கேட்கிறார். மற்றவர்கள் எல்லாம் பதில் கொடுக்கிறீர்கள். அதே நேரம் சரண்யா கோபமும் கொள்கிறார்.

கோபம் கூடாதே சரண்யா. உங்களின் சந்தேகங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு தீர்த்துவைக்கிறார்கள். அவர்களின் அன்பாக அல்லவா பேசவேண்டும்.

படித்தவகையில் கொஞ்சம் புரிந்தது அதிகம் புரியாமல் போனது.

நண்பர்களிடம் ஒளிவு மறைவு கூடாதல்லவா...
நான் எப்போதுமே மனதில் ஒன்று நினைத்து மறைத்து வைத்து கொள்ளும் பழக்கம் இல்லங்க...அதனால் தான் உரிமையோட பேசுவது...என நினைத்து தட்டச்சுலே தெரிவித்து விடுகிறேன்...
நிச்சயம் புரிந்து வைத்திருப்பார்கள் என்னை என்று தான் எண்ணுகிறேன்...
ஆமாம் கஷ்டப்பட்டு தான் தீர்த்து வைக்கிறார்கள்...
நன்றிகள் தங்களின் அறிவுரைக்கு...

உதயா
16-12-2009, 10:35 AM
ராஜேஷ், சரண்யா பதிலுக்கு நன்றி.

எனக்கு தெரியாத சந்தேகங்களை கேட்பேன். நானும் சரண்யா போலத்தான், எனக்கு புரியும் வரை கேட்டுக்கொண்டே இருப்பேன். நான் கொஞ்சம் (!?) டியூப்லைட்.

சரண்யா
16-12-2009, 11:03 AM
மொத்தல என்னை ஒரு டியூப்லைட் சொல்லிட்டீங்க...ம்..நடக்கட்டும்..

ஸ்ரீதர்
17-12-2009, 10:19 AM
நிரன், எனக்கு bulk sms அனுப்ப வேண்டும். அதற்காக sms gateway provider விபரங்கள் தேவைப்படுகின்றன. அதற்கு எவ்வளவு செலவாகும், எப்படி கட்டமைப்பது போன்ற விபரங்களை கொடுத்து உதவ வேண்டும். மேலும் கீழே இருக்கும் இணையதளம் ஒரு கிளிக்கில் 500 sms அல்லது 1000 sms அனுப்புகிறது. எனக்கும் இவர்களைப் போன்றே sms அனுப்ப வேண்டும். கொஞ்சம் உதவி செய்ய இயலுமா?

www.160by2.com
www.smscountry.com

இணையதளங்களை சென்று பாருங்கள். உங்களுக்கு உபயோகப்படலாம்.

சரண்யா
21-12-2009, 02:29 AM
www.photobucket.com என்பதில்
tscu paranar என்ற font இல்லாததால் அதில் edit செய்து தமிழில் எப்படி எழுதுவது...
மேலும் இந்த சுட்டியில் கொடுத்தது போல இந்த படங்களோட உள்ள விளக்கத்தை எப்படி செயவது...
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20772
நன்றிகள்..

அன்புரசிகன்
21-12-2009, 03:47 AM
அங்கு எழுத்துருக்களை மட்டுப்படுத்தியுள்ளனர். அது ஒரு flash இனால் ஆன ஒரு editing tool. நீங்கள் உங்கள் கணினியில் வைத்து திருத்தலாமே...

அடுத்தது நீங்கள் மன்றத்தில் படங்களை பகிர்தல் பற்றி கேட்குறீர்களா??? அப்படியாயின் இந்த சுட்டியை (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=269982&postcount=11) பாருங்கள். அநேக மன்றம் குறித்த சந்தேகங்கள் தமிழ்மன்ற வழிகாட்டி (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=269982)யில் பகிரப்பட்டுள்ளன.

சரண்யா
21-12-2009, 07:01 AM
அது நான் ஏற்கனவே பார்த்திருக்கேன்....எப்ப்டி அதை நம் கணினியில் அந்த பதிவு பெய்ட் சென்று வட்டமிட்டு அந்த பகிதி சேவ் செய்வது பிரிண்ட் ஸ்கிர்னுடன் அழுத்தினால் அது எங்கு பதிவு ஆகி இருக்கும்..என்பதை பற்றி சொல்லி தாருங்கள்..

அன்புரசிகன்
21-12-2009, 07:21 AM

நீங்கள் print screen ஐ அழுத்தும் போது கணினித்திரை முழுவதும் உங்கள் கணினியின் clip board (என்று நினைக்கிறேன்) போய் சேரும். அதை நீங்கள் விரும்பிய இடங்களில் பேஸ்ட் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். உ+ம் word or paint or Adobe photoshot இப்படி எதிலாவது பேஸ்ட் செய்துகொள்ளலாம். பிறகு அங்கு வைத்தே நீங்கள் எடிட் செய்யலாம். உங்களுக்கு மீதி புரியும் என்று நினைக்கிறேன்.

Alt உடன் பிரின்ட் ஸ்கிரீன் அழுத்தினால் active window மட்டும் கொப்பிபண்ணும். வெறுமனே பிரின்ட் ஸ்கிரீன் அழுத்தினால் உங்கள் கணினி திரை கொப்பியாகும்.

சரண்யா
21-12-2009, 10:33 AM
நன்றிகள் நான் பதிவு செய்ய விரும்பிய படம் சிறியதாக இருப்பதை எப்படி பார்க்கும் அளவிற்கு photobucket என்பதில் மாற்றுவது..இந்த படம் பதிந்தால் வார்த்தைகள் தெரியவில்லையே...தோ பாருங்க..
http://i896.photobucket.com/albums/ac168/yazhini_photos/th_Fullscreencapture.jpg
என்ன செய்யனும் சொல்லுவீங்களா...

அன்புரசிகன்
21-12-2009, 11:12 AM
நீங்கள் உங்கள் படத்தின் தம்பினல் சுட்டியால் பதிந்ததன் விளைவு தான் இப்படி சிறிதாக தோன்றியுள்ளது. உங்களுடைய பக்கத்திற்கு சென்று பார்த்தேன்.
இதோ உங்களது படம் பெரிய அளவில்...
http://i896.photobucket.com/albums/ac168/yazhini_photos/Fullscreencapture1221200913450PM.jpg

அதாவது உங்களுடைய படங்கள் உள்ள பகுதிக்கு சென்று பின் உங்களுக்கு தேவையான படத்திற்கு மேல் எலியை கொண்டு சென்றால் ஒரு சிறியஅளவு பகுதி தோன்றும். அதில் Direct link என்ற பகுதியில் இருக்கும் சுட்டியை கொப்பி செய்து நமது மன்றில் உள்ள படம் ஏற்றும் ஐக்கனை அழுத்தி அங்கு அந்த சுட்டியை இட்டு மன்றில் பகிரலாம். இல்லை IMG code என்ற பகுதியில் உள்ளதை கொப்பி செய்தால் நேரடியகவே அப்படியே பேஸ்ட் செய்து post ஐ அழுத்தில் படம் தோன்றும்.
http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/misel/picphbu.jpg

சரண்யா
21-12-2009, 11:28 AM
ஒ... அப்படியா..நன்றிகள் அன்புரசிகன் அவர்களுக்கு...

சரண்யா
21-12-2009, 11:34 AM
இதில இந்த பாதி வராதத்ற்கு என்ன செய்ய வேண்டும்...
http://i896.photobucket.com/albums/ac168/yazhini_photos/Fullscreencapture.jpg
அதாவது கவிதா அவர்களின் படக்கவிதை போல இதை அந்த அளவிற்கு மாற்ற என்ன செய்ய வேண்டும்...

அன்புரசிகன்
21-12-2009, 12:38 PM
உங்கள் கேள்வி புரியவில்லை. பாதி வரவில்லையா??? எதை சொல்கிறீர்கள்??? கவிதா அவர்களின் அந்த பதிவின் சுட்டியையும் தாருங்கள்... உங்கள் கேள்வியை சற்று விளக்கமாக தரமுடியுமா...?

சரண்யா
21-12-2009, 02:25 PM
இந்த பிரௌசர் பேஜ்ஜுக்குள்ள சிறயதாக...வரவில்லையே..இழுத்து கொஞ்சம் தெரியாததை சொன்னேன்....
அவங்களோட சுட்டி
இதோ
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21053
முதல் பட அள்விற்கு இருந்தால் போதும்...
நன்றிகள்..

அன்புரசிகன்
21-12-2009, 11:35 PM
மன்னிக்க சரண்யா... உங்களுடைய கேள்வி தெளிவில்லை. கவிதா அவர்கள் தனது படங்களை நடுவில் இட்டுள்ளார். உங்களாலும் அது இயலும். மற்றது எழுத்துக்களை அவர் பெரிதாக இட்டுள்ளார். இதற்கும் படத்திற்கும் சம்பந்தம் ஏது??? நீங்கள் எழுதும் போது பெரிதாக எழுதுங்கள்.

இங்கே பிரச்சனை என்ன??? எனக்கு உங்களது படம் முழுமையாக தெரிகிறதே... உங்களது பிரச்சனையை ஒரு ஸ்கிரீன் ஷொட் போட்டு விளக்கினால் உதவ முயல்கிறேன். இல்லை என்றால் உங்களின் கேள்வி புரிந்தவர்கள் உதவுவார்கள்.

சரண்யா
22-12-2009, 02:58 AM
மன்னிப்பு எல்லாம் வேண்டாம்...உதவுவதே பெரியது...சகோதரத்துவமே போதுமானது..அப்பறம் உரிமையாக கேட்க மனம் வராது..சரியா...
நீங்கள் செய்யும் செயத உதவிக்கு கைமாறு என்பது நன்றிகள் மட்டுமே தர இயலும் என்பதால் தயங்கும்..குடும்பமாக மன்றத்தை நினைப்பதால் பல கேள்விகள் காஷ்வலாக கேட்கிறேன்...

தோ கீழே படம் பதிக்கிறேன்...
மேலே பதித்த அளவில் பிகாஸா ஸ்கீரின் ஷாட்..கீழே வெறும் கவிதை படம் மட்டுமே..
இந்த போட்டோஷாப் ல இருக்கும் ல 1000*750 போல பானர் செய்யும் அளவுக்கோல் போட்டோவிற்கு ஒரு அளவுகோல்.. அப்பறம் A4 இப்படி அது போல அந்த சுட்டியில் தெரிவது போல இந்த மாதிரி படங்களை எப்படி ஒரே அளவிற்கு மாற்றுவது என்று கேட்கிறேன்...தோ வெறும் படக்கவிதை பாருங்கள்...
தொந்தரவு செய்கிறேனா..
http://i896.photobucket.com/albums/ac168/yazhini_photos/VistaBliss16.jpg
நன்றிகள்..

சரண்யா
22-12-2009, 03:00 AM
இப்போ புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்...இந்த அளவு இவ்வளவு பெரிய படமாக இருக்கிறதுல அதை எப்படி சிறயதாக ஒரு பார்டர் frame கொடுத்து மாற்றுவது சொல்லுவீங்களா...

அன்புரசிகன்
22-12-2009, 03:43 AM
நீங்கள் படங்களை ஒரே அளவுக்கு வைத்திருப்பது பற்றி கேட்கிறீர்கள் என்றால்...
மற்ற மென்பொருட்க்கள் பற்றி தெரியாது. போட்டோ ஷொப் இல் Image> Image Size என்று சென்றால் அங்கு Pixel Dimension ல் உங்களுக்கு தேவையான அளவை கொடுக்கலாம். நீங்கள் கொடுக்கும் போது கீழே இருக்கும் Constrain Propotion என்பதை தெரிவுசெய்திடுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் படங்களை resize செய்யும் போது படம் சமவிகிதத்தில் resize ஆகாது...
இது தான் நீங்கள் கேட்டதா...?

சரண்யா
23-12-2009, 01:24 AM
ஆமாம்..அந்த அளவில் நிறைய இருக்கிறது அல்லவா...photo size அந்த சுட்டியில் இருப்பது போல முதல் பட அளவு வைக்க என்ன செய்ய வேண்டும்..size எண் சொல்லுவீங்களா....அங்கு வைத்தால் ரொம்ப சிறயதாக இருக்கிறது...அதை சமர்ப்பிக்கும் போது மேலும் சிறியதாக மாறிடுமோ என்பதால் அளவைக்கூறினால் நான் அந்த அளவில் முயற்சி செய்வேன்...
நன்றிகள்...தொடர்ந்து பதில் சொல்றீங்க...

அன்புரசிகன்
23-12-2009, 04:53 AM
அந்த படத்தின் அளவினை நீங்கள் அந்தப்படத்தினை திறந்து வைத்துக்கொண்டு சோதித்துப்பார்க்கலாமே.... உங்களுக்கு தேவையான அளவு கோலையும் அங்கே நீங்கள் தெரிவுசெய்திடலாமே... நீங்கள் பாவிப்பது என்ன மென்பொருள்.?

உங்களுடைய கேள்வி குறிப்பிடத்தக்க தெளிவில்லை.

சரண்யா
30-12-2009, 12:09 PM
பிகாஸா3 என்ற மென்பொருளில் தான் எழுதியது....
நூர் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல தமிழ் font alt +3 click பண்ணி எழுதியது...

அனைத்து படக் கவிதைகளும் ஒரே வடிவில் வர அந்த photobucket .com மாற்றி இங்கு பதிவு செய்யனுமா...என்றி கேட்டேன் வேற வழி உள்ளதா...
நன்றிகள்...

கணினியில் பல maths க்கு http://www.amathsdictionaryforkids.com/ இது போல நிறைய உள்ளது..எனினும் இந்த website ல பாருங்க...இது எந்த software ல செய்யுறாங்க.....

maths syllabus ல உள்ள முக்கிய பரிமாணங்களாகிய addition subtraction multiplication division இவைகளை செய்ய முடியுமா....
அப்படி செய்ய சொல்லி தருவீர்களா...
உதாரணத்திற்கு addition 2 + 3 = 5 என்பதை...2 என்று எண் வரும் போது கூடவே இரண்டு ஆப்பிள்களை அழைத்து வரணும்...
பின் 3 என்ற எண் வரும்போதும் அப்படியே 3 ஆப்பிள்களும் வரவேண்டும்...
பின் அதனை கூட்டும் போது...2 in the mind... 3 on the fingers 2 after 345...so 5 is the answer....
என்ற மாதிரி தனியே ஒரு சட்டத்தினுள் இது வரவேண்டும்...
பின் அந்த ஆப்பிள்களை ஒவ்வொன்றாக எண்ணினாலும் வருவது 5 இந்த சட்டத்தில் உள்ளது போல் எண்ணினாலும் வருவது 5...

இதனை எப்படி கணினியில் வர செய்வது....
நன்றிகள்..

அன்புரசிகன்
30-12-2009, 11:02 PM
உங்களுடைய படங்களின் அளவினை நீங்கள் photo shop ல் Image size என்ற தெரிவில் மாற்றியமைக்கலாம். அதன் அளவினையும் கண்டுகொள்ளலாம். அதைக்கொண்டு மற்றப்படங்களையும் மாற்றியமைக்கலாம்..
--------

மற்றது flash என்ற மென்பொருள் மூலம் செய்கிறார்கள். அனேகமான அனிமெஷன்களை அதன்மூலம் செய்வார்கள்...

சரண்யா
31-12-2009, 05:16 AM

நன்றிகள்...அன்புரசிகன் அவர்களே...

flash என்ற மென்பொருள் பற்றி சொல்லுங்கள்...எங்கு தரவிற்க்கம் செய்ய வேண்டும் நான் முயற்சி செய்து பார்க்கிறேன்..

praveen
31-12-2009, 06:43 AM
நன்றிகள்...அன்புரசிகன் அவர்களே...

flash என்ற மென்பொருள் பற்றி சொல்லுங்கள்...எங்கு தரவிற்க்கம் செய்ய வேண்டும் நான் முயற்சி செய்து பார்க்கிறேன்..

அது அவ்வளவு எளிதான செயல் இல்லை.

இது இலவச மென்பொருளும் இல்லை. மேக்ரோமீடியா என்பவர்கள் தயாரித்து விற்பனை செய்து பிரபலமான ப்ளாஸ் மென்பொருளை அடோப் விலை கொடுத்து வாங்கி விட்டனர். தற்போது நீங்கள் அடோப் தளமே செல்ல வேண்டும். சோதனைப்பதிப்பு பதிவிறக்கி முயன்று பாருங்கள். ஆனால் இது சாமனியர்கள் செய்யும்/எளிதில் கற்றுக்கொள்ளும் மென்பொருள் இல்லை. போட்டோஷாப் கூட சில நாள் முயன்றால் சில வேலைகள் செய்து விடலாம் ஆனால் ப்ளாஸில் அது சாத்தியமே இல்லை. ஏனென்றால் மற்ற மென்பொருள் மாதிரி ஒரு பைலை இதில் வைத்து மாற்றம் செய்வதில்லை, மாறாக பலதரப்பட்ட சிறு சிறு படங்கள் இவைகளை வைத்து ஒரு தொடர் கட்டளைகள் மூலம் இயக்க வைப்பதற்கு அசாத்திய பொறுமை வேண்டும்.
https://www.adobe.com/cfusion/tdrc/index.cfm?promoid=EBYEX&loc=en&product=flash

அன்புரசிகன்
31-12-2009, 08:44 AM
பிரவீன் சொன்னது போல் அவ்வளவு சுலபமாக படிக்கக்கூடியதல்ல ஃபிளாஷ். ஆனால் முயற்சி எப்போதும் திருவினையாக்கும். இணையங்களில் உள்ள இலவச படிமுறைகள் மற்றும் யூடப் போன்றவற்றின் உதவியுடன் நீங்கள் முயலலாம். ஓரளவு கணினி மொழிகளின் திறமை இருந்தால் நீங்கள் சொன்னது போன்று நீங்கள் நடைமுறைப்படுத்தலாம். வாழ்த்துக்கள்.

எனக்கு ஓரளவு தெரியும். மற்றப்படி வித்தகன் நானல்ல...

சரண்யா
01-01-2010, 06:36 AM
நன்றிகள் பிரவீன் அவர்களே..அதனை பற்றி இவ்வளவு சொன்னதற்கு....இங்குள்ள கணினி மையத்தில் கேட்டு பார்க்கிறேன்...
அன்புரசிகன் அவர்களுக்கும் நன்றிகள்...
முயற்சி வெற்றி பெற்றால் தங்களுக்கு தெரிவிக்கிறேன்...
நன்றிகள்..

சரண்யா
01-01-2010, 06:40 AM
நான் குட்டீஸ் என்ற கதை எழுதி வருகிறேன்..அதனை நான் pdf தொகுப்பாக சேமிக்க எண்ணுகிறேன்...இது வரை உள்ள பதிவுகளை எப்படி சேமிப்பது....
படங்கள நடுவே உள்ளது...ஓரத்தில் பார்டர் அமைக்க வேண்டும் என்றும் எண்ணுகிறேன்...சொல்லுவீங்களா...
நன்றிகள்...

அன்புரசிகன்
01-01-2010, 07:01 AM
நீங்கள் pdf கோப்பில் எவ்வாறு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ அவ்வாறு word இலோ adobe pagemaker இலோ தயாரித்து பின் pdf கோப்பாக மாற்றிடலாமே...

word இல் format>boarder and shading என்ற பகுதிக்கு போனால் போடர்கள் போடலாம். page maker ற்கு என்னிடம் அது இல்லை. ஆனால் முன்பு அது செய்திருக்கிறேன். அழகாக வரும். publisher இலும் முயலுங்கள். அதிலேயே உதவிகள் உண்டு. தேடி தேடி பாருங்கள்.

சரண்யா
01-01-2010, 07:31 AM
ஓ..அப்படியா...சரி..சரி...
நன்றிகள்....அன்புரசிகன் அவர்களே...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

வியாசன்
01-01-2010, 08:31 AM
தமிழ்மன்றம் வழியாக ஒருமேதை உருவாகின்றார் வாழ்த்துக்கள் சரண்யா உங்கள் ஆர்வம் உங்களை உயர்த்தும் .

பல கேள்விகளுக்கு பொறுமையா பதிலளிக்கும் தம்பி பிரவீனின் சேவை இந்த ஆண்டிலும் எமக்கெல்லாம் உதவும்என்று நம்புகின்றேன்.

அன்புரசிகன்
01-01-2010, 09:09 AM
flash இனை ஆரம்பத்திலிருந்து கற்பவர்களுக்கு...

http://www.techiwarehouse.com/cms/engine.php?page_id=65eeb3b5
http://bestwebdesignz.com/tips/flash-cs4-tutorial/flash-cs4-tutorial/

இது தவிர youtube இலும் முயலுங்கள். பல விளக்க படங்கள் உள்ளன...

சரண்யா
01-01-2010, 11:10 AM
நன்றிகள் அன்பு ரசிகன் அவர்களே....

நன்றிகள் வியாசன் அவர்களே...உயர்த்தினால் மிக்க சந்தோஷம்....ஏற்றம் கிடைக்க செய்தவருகளுக்கு தான் அது சென்றடையும்....

நான் இந்த கதைகள் தமிழில் இருப்பதால் wordpad ல் தான் எழுதி பின் இங்கே சமர்பிக்கிறேன்...word ல் tamil font இல்லாததால் என்பதை சொல்ல மறந்துவிட்டேன்...

கோசிக்ககாதிங்க...கணினி நிபுனர்களே...

அன்புரசிகன்
01-01-2010, 11:17 AM
ஏற்கனவே எங்கோ கூறிய ஞாபகம். word ல் தமிழில் ஒருங்குக்குறிமூலம் பதிய ஒருங்குக்குறிக்கான எழுத்துருக்களை உங்கள் கணினியில் நிறுவினாலே போதும். அவ்வாறு தான் நம் மன்ற இதழ்கள் வெளியாகுகின்றன. அழகான எழுத்துருக்கள் பல ஒருங்குக்குறிக்கு இசைவானவை உண்டு... அவற்றை பயன்படுத்தி நீங்கள் word ல் பதியலாம். தவிர NHM converter கூட உதவும்.

சரண்யா
01-01-2010, 11:28 AM
மன்னித்து கொள்ளுங்கள் இந்த தூய தமிழில நான் கொஞ்ச வீக்...அது என்னது அந்த
ஒருங்குக்குறிக்கான எழுத்துருக்களை -ekalappai மென்பொருளா.... ஆ...NHM converter பற்றி எங்கோ பார்த்துள்ளேன்..
நன்றிகள்..

நூர்
01-01-2010, 12:31 PM
நான் இந்த கதைகள் தமிழில் இருப்பதால் wordpad ல் தான் எழுதி பின் இங்கே சமர்பிக்கிறேன்...word ல் tamil font இல்லாததால் என்பதை சொல்ல மறந்துவிட்டேன்...[/COLOR][/B]
கோசிக்ககாதிங்க...கணினி நிபுனர்களே...

நன்றி சகோதரி. முன் சொன்னது போல் m.s.word முயற்சி செய்து பாருங்கள்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/untitled-7.jpg

1.tscu paranar
2.Alt+3 கிளிக் செய்து டைப் செய்யுங்க.

சரியா வராவிட்டால் சொல்லுங்கள்,
இ.கலப்பை பற்றி படத்துடன் ஒரு பதிவு போட்டுவிடலாம்.

சரண்யா
01-01-2010, 12:55 PM

இந்த tscu paranar font இல்லையே..இதனை எப்படி சேர்ப்பது font ல் அதனை படத்துடன் பதிவு செய்யுங்கள்..நன்றிகள் தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்...

அன்புரசிகன்
01-01-2010, 12:57 PM
மன்னித்து கொள்ளுங்கள் இந்த தூய தமிழில நான் கொஞ்ச வீக்...அது என்னது அந்த
ஒருங்குக்குறிக்கான எழுத்துருக்களை -ekalappai மென்பொருளா.... ஆ...NHM converter பற்றி எங்கோ பார்த்துள்ளேன்..
நன்றிகள்..
UNICODE FONTS

சரண்யா
01-01-2010, 01:09 PM
UNICODE FONTS

தெரியவில்லையே..இதுவும்....

நூர்
01-01-2010, 02:35 PM
நன்றி சகோதரி. உங்கள் கணினியில் எ கலப்பை யை எளிதாக நிறுவிக்கொள்ளுங்கள்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=447337#post447337

சரண்யா
02-01-2010, 01:07 AM
நன்றி சகோதரி. உங்கள் கணினியில் எ கலப்பை யை எளிதாக நிறுவிக்கொள்ளுங்கள்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=447337#post447337

e kalappai இருக்கிறது...அதன் மூலமாகவே தங்களிடம் தமிழில் தட்டச்சு செய்து கொண்டு வருகிறேன்...
நனறிகள்....

மதுரகன்
02-01-2010, 09:15 AM
வலைப்பூக்கள் தொடர்பாக நிறைய சந்தேகங்கள் இருக்கிறது, வெளியிலிருந்து ஒரு அமைப்பை(Template) எப்படிப் பயன்படுத்துவது மற்றும் பலர் பயனுள்ள நிறைய செயலிகளை(Applications) பயன்படுத்துவதை கண்டுள்ளேன் கூகிள் தருவதை விட ஏனையவற்றை எங்கு பெறலாம் அதற்கென இணையத்தளங்கள் இருப்பின் அவற்றின் முகவரி போன்றன தேவை..

அன்புரசிகன்
02-01-2010, 10:51 AM
தெரியவில்லையே..இதுவும்....
http://www.suratha.com/tamilunicode.html

சரண்யா
02-01-2010, 11:57 AM
ஒ..நன்றிகள் அன்புரசிகன் அவர்களே..

நூர்
02-01-2010, 02:08 PM
வலைப்பூக்கள் தொடர்பாக நிறைய சந்தேகங்கள் இருக்கிறது, வெளியிலிருந்து ஒரு அமைப்பை(Template) எப்படிப் பயன்படுத்துவது மற்றும் பலர் பயனுள்ள நிறைய செயலிகளை(Applications) பயன்படுத்துவதை கண்டுள்ளேன் கூகிள் தருவதை விட ஏனையவற்றை எங்கு பெறலாம் அதற்கென இணையத்தளங்கள் இருப்பின் அவற்றின் முகவரி போன்றன தேவை..

நன்றி. http://www.tamilmantram.com/vb/showthread.php?p=447449#post447449 இங்கு சென்று பாருங்கள்.

மதுரகன்
03-01-2010, 05:38 AM
நன்றி நூர், ஆனால் செயலிகள் பெறவும் இப்படி இணையத்தளங்கள் உண்டா??

நூர்
03-01-2010, 03:43 PM
நன்றி நூர், ஆனால் செயலிகள் பெறவும் இப்படி இணையத்தளங்கள் உண்டா??

நன்றி. செயலின்னா...

இன்னும் கொஞ்சம் விரிவாக உங்கள் கேள்வியை கேளுங்கள்.

சரண்யா
04-01-2010, 12:06 PM
usb பாட்டரி மாற்றிட்டு ஒரு 20 நாட்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்...
அதில் ஒரு கருகிய வாடை வருவது போல உள்ளதே..இப்படியும் இருக்குமா....
அதாவது usb யினுள் தீஞ்சு போகிறவாடை வர வாய்ப்புள்ளதா...

பாரதி
04-01-2010, 12:40 PM
நிச்சயம் வாய்ப்பிருக்கிறது. நாம் இணைத்திருக்கும் மின்வடக்கம்பி சரியாக பொருத்தப்படாமல் இருந்தால், நாம் புதிதாக இணைத்திருக்கும் மின்கலத்தில் பழுது இருந்தால், புதிதாக இணைத்த மின்கலத்தின் மின் அழுத்தம் (வோல்டேஜ்) பொருத்தமானதாக இல்லாமல் இருந்தால்.... இப்படி பல காரணங்கள் இருக்க வாய்ப்பு இருக்கின்றன. உடனடியாக உங்கள் கணினியின் இயக்கத்தை நிறுத்துங்கள். அது மிகவும் அவசியம். யுபிஎஸ்ஸை தனியாக நீக்கி, பழுது நீக்குபவரிடம் ஒப்படையுங்கள். அதுவரைக்கும் யுபிஎஸ் இன்றி கணினியை இயக்குங்கள்.

வியாசன்
04-01-2010, 05:34 PM
வலையில் (Website) இணைப்புக்கள் நேராக எப்படி இணைப்பது என்று யாராவது கூறமுடியுமா? உதாரணம்

தமிழ்மன்றம் தமிழ்மன்றம்
விவாதங்கள் நடை பெறுமிடம்

தொடங்குமிடம் நேராக வரவேண்டும் இதற்கு ஏதாவது html Code இருக்கின்றதா?

அன்புரசிகன்
04-01-2010, 11:30 PM
<a href="http://www.tamilmantram.com/vb/">
தமிழ்மன்றம்</a>
a என்ற ஆரம்பத்திற்கு பல attributes உண்டு. comments உம் கொடுக்கலாம். உங்கள் மவுஸை சுட்டி மீது கொண்டு சென்றால் அது அந்த கொமன்ட் ஐ காட்டும்.

நீங்கள் Dreamweaver பாவித்தால் சிறப்பாக காட்டித்தருமே... தமிழ்மன்றம் என்று பதிந்துவிட்டு அவற்றை தெரிவுசெய்தால் கீழே properties ல் அனைத்தும் தெரியும்.

சரண்யா
05-01-2010, 01:01 AM
நிச்சயம் வாய்ப்பிருக்கிறது. நாம் இணைத்திருக்கும் மின்வடக்கம்பி சரியாக பொருத்தப்படாமல் இருந்தால், நாம் புதிதாக இணைத்திருக்கும் மின்கலத்தில் பழுது இருந்தால், புதிதாக இணைத்த மின்கலத்தின் மின் அழுத்தம் (வோல்டேஜ்) பொருத்தமானதாக இல்லாமல் இருந்தால்.... இப்படி பல காரணங்கள் இருக்க வாய்ப்பு இருக்கின்றன. உடனடியாக உங்கள் கணினியின் இயக்கத்தை நிறுத்துங்கள். அது மிகவும் அவசியம். யுபிஎஸ்ஸை தனியாக நீக்கி, பழுது நீக்குபவரிடம் ஒப்படையுங்கள். அதுவரைக்கும் யுபிஎஸ் இன்றி கணினியை இயக்குங்கள்.
நன்றிகள் பாரதி அவர்களே...நேற்று சரி பார்க்கப்பட்டது....ஆம் எல்லா பிளஃக் எடுத்து விட்டேன்....இது வரை கணினி வாங்கிய நாள் முதல் இப்படி
இருந்ததில்லை ஆதலால் கேட்டு தெளிவு பெற்றேன்..நன்றிகள்..

சரண்யா
07-01-2010, 10:59 AM
நான் தான் கேட்டு கேட்டு தொந்தரவு செய்கிறேனா....
எனக்கு சந்தேகம் வந்திட்டா நான் முதல் இங்க தான் பதிவு செய்கிறேன்...
இப்போ இரண்டு கேள்விகள்...
http://www.hi2web.com/forum/showthread.php?t=15549
இங்கே சென்று பார்த்தீர்களானால் நிறைய பூக்களோ இல்லை என்றால் எந்த ஒரு இமேஜையோ நீங்கள் copy image location செய்ய முடியாது அப்படி எப்படி பூட்டி வைப்பது எனத் தெரியுமா...
அடுத்தது...
http://www.tamilkudumbam.com/-mainmenu-183/-mainmenu-203/607----2.html
இந்த பகுதியை கணினியில் சேமித்து வைத்து பின்பு பார்க்க prtscreen என்பதை தான் சேமித்து வைக்குமா..இல்லை என்றால் வேறு வழி உள்ளதா...
நன்றிகள்...தொடர்ந்து பதில் கூறும் அனைவருக்கும்...

அன்புரசிகன்
07-01-2010, 11:58 AM

அது ஜாவா ஸ்கிரிப்ட் இனால் பூட்டப்பட்டுள்ளது...
இது தான் அந்த கோட்...

<script language="JavaScript1.2">
/*
Disable right click script II (on images)- By Dynamicdrive.com
For full source, Terms of service, and 100s DTHML scripts
Visit http://www.dynamicdrive.com
*/

var clickmessage="Right click disabled on images! If you need an image please contact the Site Owner."

function disableclick(e) {
if (document.all) {
if (event.button==2||event.button==3) {
if (event.srcElement.tagName=="IMG"){
alert(clickmessage);
return false;
}
}
}
else if (document.layers) {
if (e.which == 3) {
alert(clickmessage);
return false;
}
}
else if (document.getElementById){
if (e.which==3&&e.target.tagName=="IMG"){
alert(clickmessage)
return false
}
}
}
function associateimages(){
for(i=0;i<document.images.length;i++)
document.images[i].onmousedown=disableclick;
}
if (document.all)
document.onmousedown=disableclick
else if (document.getElementById)
document.onmouseup=disableclick
else if (document.layers)
associateimages()
</script>

இது தான் அந்த படம்
http://sl.glitter-graphics.net/pub/2587/2587086oqd3izwz78.gif
http://sl.glitter-graphics.net/pub/2587/2587086oqd3izwz78.gif
இந்த சுட்டியை எடுக்க நீங்கள் javascript security ஐ நீக்கினால் பார்வையிடலாம். அனேக வங்கி அல்லது வங்கி சார்ந்த இணையங்கள் அவ்வாறு தான்...

இன்னொரு வழி இணைய உலாவியில் View>source ல் இதற்கான சுட்டியை நீங்கள் தேடிப்பிடிக்கலாம். இல்லை என்றால் உங்கள் temp internet files ஐ முற்றாக நீக்கிவிட்டு பின் இந்த பகுதிக்கு நீங்கள் விசிட் ஒன்று செய்துவிட்டு பின் அந்த மீண்டும் temp int files பகுதிக்கு சென்றால் இந்த படம் தென்படும்.
====

அடுத்தது நீங்கள் அந்த பகுதியை சேமித்து வைக்கலாம். (html or mht கோப்பாக) அல்லது pdf கோப்பாக கூட மாற்றி வைத்துவிட்டு பின் படிக்கலாம். word கோப்பில் சேமித்து வைத்துவிட்டும் படிக்கலாம். இவ்வாறு பல வழிகள்...

ஸ்ரீதர்
07-01-2010, 12:05 PM
முதல் கேள்விக்கு பதில் :-

இதை எப்படி செய்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. அந்த இமேஜ் யை பிரதி எடுக்க குறுக்கு வழி உள்ளது. இப்படி முயற்சித்து பாருங்களேன், :-

அந்த இமேஜ் மீது கிளிக் செய்து , க்ளிக்கினை அழுத்தியபடியே உங்கள் பிரவுசரின் அட்ரஸ் பாருக்கு Drag செய்து கொள்ளுங்கள். இப்போது திரையில் நீங்கள் செலக்ட் செய்த இமேஜ் மட்டும் தெரியும். இப்போது அதை வலது கிளிக் செய்து save image as என்று கொடுத்து உங்கள் கணினியில் சேமித்துக் கொள்ளுங்கள்.

இரண்டாவது கேள்விக்கு பதில் :-

நீங்கள் காட்டியுள்ள தலைப்பிற்கு பக்கத்திலேயே Print & E mail ஐகான்கள் உள்ளனவே. பிரின்ட் செலக்ட் செய்து அதை pdf கோப்பாக சேமித்துக் கொள்ளலாம் அல்லது முழு கோப்பினை உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிக்கொள்ளலாம்.

முயற்சித்துப் பாருங்கள் சகோதரி.

சரண்யா
08-01-2010, 01:20 AM
ஒ..அப்படியா..நன்றிகள் அன்புரசிகன் அவர்களே....
நிறைய படங்கள் நடுவே உள்ளது அல்லவா..இரண்டாம் உள்ளதில் ஒவ்வொரு முறையும் இணைய இணைப்பு இல்லாமல் அதனை பார்க்க என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்....
ஸ்ரீதர் அவர்களுக்கும் நன்றிகள்....
நீங்க click பண்ணிங்களா...பூட்டப்பட்ட செய்தி மட்டுமே வந்தது...

இந்த மாதிரி நாம் நம் பிளாகில் பூட்டி கொள்ள முடியுமா..அப்படி முடியுமென்றால் அது எப்படி என ஒவ்வொரு step ஆக சொல்லுங்கள்....

நன்றிகள்...

ஸ்ரீதர்
08-01-2010, 02:38 AM
நீங்க click பண்ணிங்களா...பூட்டப்பட்ட செய்தி மட்டுமே வந்தது...

நான் முயற்சித்தபோது சரியாக வந்தது.

உங்களுக்கு தேவையான இமேஜ் இன் மீது கிளிக் (ரைட் கிளிக் அல்ல) செய்து அதை அப்படியே address bar இக்கு drag செய்து கொள்ளுங்கள். இப்போது உங்கள் இமேஜ் மட்டும் தெரியும். இப்போது அதை ரைட் கிளிக் செய்து உங்கள் கணினியில் சேமித்துக்கொள்ளுங்கள்.

சரண்யா
08-01-2010, 02:53 AM
ஒ..செய்து பார்த்தேன்...நன்றிகள்..ஸ்ரீதர் அவர்களே...
ஆம் right click செய்ததால் தான் எனக்கு வரவில்லை...
நன்றிகள்...

சரண்யா
10-01-2010, 02:22 AM
இந்த மாதிரி நாம் நம் பிளாகில் பூட்டி கொள்ள முடியுமா..அப்படி முடியுமென்றால் அது எப்படி என ஒவ்வொரு step ஆக சொல்லுங்கள்....

நூர்
10-01-2010, 05:27 AM
இந்த மாதிரி நாம் நம் பிளாகில் பூட்டி கொள்ள முடியுமா..அப்படி முடியுமென்றால் அது எப்படி என ஒவ்வொரு step ஆக சொல்லுங்கள்....

நன்றி சகோதரி.

நீங்கள் கேட்பது இதுவா! http://www.tamilmantram.com/vb/showthread.php?p=448496#post448496

மதுரகன்
10-01-2010, 05:54 AM
அவசர உதவி - எனது வலைப்பூவில் புதிய டெம்ளேற்றுக்களை பரிசீலித்துக்கொண்டிருந்தேன். திடீரென வலைப்பதிவுகளை காணவில்லை. மீண்டும் பழைய டெம்ளேற்றிலும் விட்டுப்பார்த்தேன் முடியவில்லை. ஆனால் டாஸ் போட்டில் பதிவுகள் காணப்படுகின்றன. வலைப்பூ முகப்பில் தான் காணவில்லை. உதவி செய்யுங்கள். முகவரி saaralhal.blogspot.com

சரண்யா
10-01-2010, 06:13 AM
நன்றி சகோதரி.

நீங்கள் கேட்பது இதுவா! http://www.tamilmantram.com/vb/showthread.php?p=448496#post448496

ஆம் நன்றிகள்...
இதுவே powerpoint presentation save பண்ணாம இருக்க வாய்ப்பு இருக்கிறதா...

பாரதி
10-01-2010, 08:12 AM
அவசர உதவி - எனது வலைப்பூவில் புதிய டெம்ளேற்றுக்களை பரிசீலித்துக்கொண்டிருந்தேன். திடீரென வலைப்பதிவுகளை காணவில்லை. மீண்டும் பழைய டெம்ளேற்றிலும் விட்டுப்பார்த்தேன் முடியவில்லை. ஆனால் டாஸ் போட்டில் பதிவுகள் காணப்படுகின்றன. வலைப்பூ முகப்பில் தான் காணவில்லை. உதவி செய்யுங்கள். முகவரி saaralhal.blogspot.com

உங்கள் வலைப்பூ முழுமையாக இணையத்தில் ஏற்றப்படவில்லை. புதிய டெம்பிளேட்டை சோதிக்கும் முன்பாக பழைய டெம்பிளேட்டை சேமித்து வைத்திருப்பீர்கள் அல்லவா..? புதிய டெம்பிளேட்டை நீக்கி விட்டு பழைய டெம்பிளேட்டை இணைத்துப்பாருங்கள்.

சரண்யா
11-01-2010, 06:27 AM
என்னுடைய word file ஒபென் ஆகாமல் வரும் message இது தாங்க...
என்னனே புரியல....
இதனை சொல்லுங்க....

This error message can appear if the document you are attempting to open is corrupt. It is possible to recover a corrupt file or its content by using either the Recover Text converter (may require installation) or the Open and Repair feature.
The Open and Repair feature is available from the Open dialog. To open and attempt a repair, click the Microsoft Office Button, click Open, and then navigate to the damaged file and click it once. Instead of clicking the Open button at the bottom right of the dialog to open the file, click the down arrow to the right of the button and select Open and Repair from the menu. If the file can be recovered, it will open and display in the document work area.
The Recover Text converter, if installed, is available from the Open dialog and appears in the Files of type drop down list. It appears in the drop down list as Recover Text from Any File (*.*).
For more information, see the Microsoft Knowledge Base article 916145.
நன்றிகள்...

பாரதி
11-01-2010, 07:38 AM
நீங்கள் கொடுத்திருப்பதிலேயே எல்லாம் இருக்கிறதே!!
அதை சற்றே தமிழ்படுத்துகிறேன். முயற்சித்துப்பாருங்கள்.
நீங்கள் திறக்க முயற்சிக்கும் கோப்பு பழுதடைந்திருக்கிறது. ஆனாலும் அதிலிருப்பவற்றை பழுது நீக்கி சேமிக்க வழி இருக்கிறது. மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் பொத்தானில் இருக்கும் “ஓபன்” என்பதை சொடுக்குங்கள். பின்னர் எந்த கோப்பு பழுதடைந்திருக்கிறதோ அதை ஒரு முறை மாத்திரம் சொடுக்குங்கள். கீழே இருக்கும் ”ஓபன்” பொத்தானை அழுத்த வேண்டாம். அதற்கு பதிலாக அதன் வலது புறத்தில் இருக்கும் “கீழ் நோக்கிய அம்புக்குறி” படம் இருக்கிறதல்லவா... அதை அழுத்துங்கள். பின்னர் ஓபன் அண்ட் ரிப்பேர் என்பதை தேர்வு செய்யுங்கள். நீங்கள் திறக்க முயற்சிக்கும் கோப்பில் உள்ள பழுது நீக்கப்பட்டால் அது திரையில் தெரியும்.

உதயா
11-01-2010, 09:21 AM
நான் வைத்திருக்கும் லேப்டாப்பில், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஈமெயில் எழுதும் போது கர்ஸர் கீ எழுதிக்கொண்டிருக்கும் இடத்தில் இருந்து எங்கேயாவது ஜம்ப் ஆகிவிடுகிறது. முகவரி இருக்கும் இடத்திற்கோ அல்லது எழுதிய வார்த்தைகள் இருக்கும் இடத்தில் ஏதாவது ஒரு வார்த்தையில் உள்ளேயோ.... அது ஏன்? அதை நிவர்த்தி செய்வது எப்படி?

சரண்யா
11-01-2010, 10:02 AM

ஆமாம்..நான் இதனை செய்து பார்த்தேன் ஆனால் திருமப திரும்ப இந்த செய்தி தானே வருகிறது..அதில் நான் தட்டச்சு செய்து வைத்திருந்தேன்..... அவ்வளவு தானா அது,,,மாற்று வழியில்லையா....அடடா...

பாரதி
11-01-2010, 10:48 AM
If the file can be recovered, it will open and display in the document work area.

பழுது நீக்கப்படமுடியாத அளவிற்கு அந்தக்கோப்பு உள்ளதையே உங்களின் பதில் உணர்த்துகிறது.

பாரதி
11-01-2010, 10:57 AM
நான் வைத்திருக்கும் லேப்டாப்பில், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஈமெயில் எழுதும் போது கர்ஸர் கீ எழுதிக்கொண்டிருக்கும் இடத்தில் இருந்து எங்கேயாவது ஜம்ப் ஆகிவிடுகிறது. முகவரி இருக்கும் இடத்திற்கோ அல்லது எழுதிய வார்த்தைகள் இருக்கும் இடத்தில் ஏதாவது ஒரு வார்த்தையில் உள்ளேயோ.... அது ஏன்? அதை நிவர்த்தி செய்வது எப்படி?

உங்கள் மடிக்கணினியில் ஏதேனும் குறுக்குவழி விசைகளுக்கான (Short cut keys) ஏற்பாட்டை செய்திருக்கிறீர்களா..?

நீங்கள் தட்டச்சும் சமயங்களில் உங்களை அறியாமல் டச்பேடைத் தொடுகிறீர்களா? மெளஸ், டச்பேட் ஆகியவற்றிற்கான மென்பொருட்கள் முறையாக நிறுவப்பட்டிருக்கின்றனவா அல்லது பழுதடைந்திருக்கின்றவா என்று சோதித்துப் பாருங்கள்.

http://code.google.com/p/touchfreeze/ இந்த மென்பொருளை நிறுவி உங்கள் டச்பேடின் இயக்கத்தை நிறுத்தி பின்னர் தட்டச்சிப்பாருங்கள்.

அன்புரசிகன்
11-01-2010, 11:13 AM
நான் வைத்திருக்கும் லேப்டாப்பில், தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஈமெயில் எழுதும் போது கர்ஸர் கீ எழுதிக்கொண்டிருக்கும் இடத்தில் இருந்து எங்கேயாவது ஜம்ப் ஆகிவிடுகிறது. முகவரி இருக்கும் இடத்திற்கோ அல்லது எழுதிய வார்த்தைகள் இருக்கும் இடத்தில் ஏதாவது ஒரு வார்த்தையில் உள்ளேயோ.... அது ஏன்? அதை நிவர்த்தி செய்வது எப்படி?

Speech Recognition Options or voice Recognition Options தெரிவுசெய்யப்பட்டு இல்லை அமுல்படுத்தப்பட்டிருக்கலாம். அது control pannel இல் இருக்கும். ஒருமுறை அதை பாருங்கள். அது தெரியப்பட்டிருந்தால் உங்கள் microphone ஊடாக ஒலிகள் செல்லும் போது அதற்கேற்றாற்போல் உங்கள் மவுஸ் அசையலாம்.

உதயா
11-01-2010, 11:36 AM
நன்றி திரு.பாரதி/அன்பு. சோதித்து பார்த்துவிட்டு சொல்கிறேன்.

பாரதி, தாங்கள் கொடுத்தது Win7 க்கு சரியாக வருமா??

பாரதி
11-01-2010, 02:32 PM
என்னிடம் விண்டோஸ்-7 இருந்தால் சோதித்துப்பார்த்து கூற இயலும். சில வலைத்தளங்களில் அது விண்டோஸ்-7-லிலும் நன்கு வேலை செய்வதாக கூறி இருக்கிறார்கள். நிறுவி சோதித்துப்பாருங்கள்.

சரண்யா
11-01-2010, 03:06 PM
பழுது நீக்கப்படமுடியாத அளவிற்கு அந்தக்கோப்பு உள்ளதையே உங்களின் பதில் உணர்த்துகிறது.

அடடா...வைரஸினால் இப்படி ஆகிறதா...திடீரென வருவதற்கான காரணம் என்ன...தெரியுமா...

பாரதி
11-01-2010, 04:00 PM
அடடா...வைரஸினால் இப்படி ஆகிறதா...திடீரென வருவதற்கான காரணம் என்ன...தெரியுமா...

ஆஹா... என்ன காரணம்னு நீங்கதான் சொல்லணும்!

ஒரு வேளை நீங்கள் தட்டச்சிக்கொண்டிருக்கும் சமயத்தில் மின் தடங்கலால் கணினியின் இயக்கம் நின்றதா..? அல்லது கணினி செயலிழந்த நிலைக்கு சென்றதா..? நீங்கள் தட்டச்சிய கோப்பை முறையாக சேமித்தீர்களா..? கணினியின் வன் தகட்டில் பிரச்சினை ஏதும் இருக்கிறதா..? .... இப்படி என்னால் கேள்விகளை மட்டுமே கேட்க இயலும். அந்த கோப்பில் நீங்கள் தட்டச்சும் போது என்ன நிகழ்ந்தது என்பதை உங்களால் மட்டுமே கூற இயலும்.

அன்புரசிகன்
11-01-2010, 09:24 PM
சரண்யா...
உங்களுடைய அந்த பழுதடைந்த கோப்பினை இங்கு பகிரமுடியுமா??? ஆம் என்றால் http://upload.megashare.com/ இல் பதிவேற்றி சுட்டி தாருங்கள்...

சரண்யா
12-01-2010, 01:02 AM
எனக்கு தெரிந்த rapid share ல் செய்துகொடுத்துள்ளேன்....பார்த்துவிட்டு சொல்லுங்கள்...
இதில் delete லின்க் கொடுத்துள்ளார்கள்....
இது நான் உபயோக படுத்தும் wordpad...
http://rapidshare.de/files/48982716/kumbabishegam.rtf.html
ஒரு முறை இதனை வேறு இடத்தில் சேமித்து வைத்திருந்தேன்...அதில் இதனை தாண்டி இருக்கிறது பாருங்கள்...
http://rapidshare.de/files/48982737/kumbabishegam.rtf.html
கஷ்டப்பட்டு தட்டச்சு செய்தேன்....
பாரதி அவர்களே..தெரியவில்லை ஆம் தட்டச்சு செய்து சில நேரத்தில் வேற பார்த்துவிட்டு இதனை பார்த்தேன் திறக்கவில்லை...
நன்றிகள்....

சரண்யா
12-01-2010, 01:18 AM
என்னுடைய அடுத்த சந்தேகம் இதனையும் பதிவு செய்கிறேன்....
நேரம் இருக்கும் போது சொல்லுங்க....

http://i896.photobucket.com/albums/ac168/yazhini_photos/balavikas1.jpg?t=1263262753

http://i896.photobucket.com/albums/ac168/yazhini_photos/balavikas1a.jpg?t=1263262796

இது நான் ஸ்கான் பண்ணி போட்டு இருக்கிறேன்....
நான் அந்த ஸ்துதி மட்டும் வேண்டும்....அப்பறம் அந்த பொருளை ஒவ்வொரு வார்த்தைகளாக ஒன்றன் கீழ் ஒன்றாக வரிசை படுத்த வேண்டும்....
பின் நடுவே நான் சிலவற்றை எழுத வேண்டும்....
பின் அந்த கதையை ஒரு சேராக பதிவு செய்யனும் ங்க...அது எப்படி...
நான் பெயிண்ட் cut செய்தால் புதுசா ஒரு page ல இதனை செய்து விட்டு அதனை இப்படி பகிர வேண்டுமா....
வேற வழி இருக்கிறதா...
வெட்டி எத்தனை முறை இப்படி செய்தால் நேரம் தானே ஆகும்...
photobucket எடிட் செய்வது எப்படி அது தான் சிறந்த வழியா....
சொல்லுங்க....
நன்றிகள்...
இது மாதிரி நிறை பாடம் இருப்பதால் தான் கேட்கிறேன்...
ஈஸியாக ஒரு வழி சொல்லுங்க....
நன்றிகள்...

அன்புரசிகன்
12-01-2010, 02:22 AM
எனக்கு தெரிந்த rapid share ல் செய்துகொடுத்துள்ளேன்....பார்த்துவிட்டு சொல்லுங்கள்...
இதில் delete லின்க் கொடுத்துள்ளார்கள்....
இது நான் உபயோக படுத்தும் wordpad...
http://rapidshare.de/files/48982716/kumbabishegam.rtf.html
ஒரு முறை இதனை வேறு இடத்தில் சேமித்து வைத்திருந்தேன்...அதில் இதனை தாண்டி இருக்கிறது பாருங்கள்...
http://rapidshare.de/files/48982737/kumbabishegam.rtf.html
கஷ்டப்பட்டு தட்டச்சு செய்தேன்....
பாரதி அவர்களே..தெரியவில்லை ஆம் தட்டச்சு செய்து சில நேரத்தில் வேற பார்த்துவிட்டு இதனை பார்த்தேன் திறக்கவில்லை...
நன்றிகள்....

நீங்கள் நன்றாக குழப்புகிறீர்கள்...

பிரச்சனையான கோப்பினை தான் தாருங்கள் என்றேன்...

நீங்கள் தந்த சுட்டியில் முதலாவது சுட்டி word pad ல் திறக்கக்கூடியதாக உள்ளது... 2வது சுட்டி ms word ல் சாதாரணமாகவே திறக்கிறது...

இதில் எங்கே பிரச்சனை உள்ளது??? உங்கள் பிரச்சனை சரியாக எனக்கு தெரியவில்லை...
திறக்க மறுக்கும் சுட்டியை மட்டும் தாருங்கள்...

உங்களுடைய பிரச்சனையை சரிவர கூறாதுவிட்டால் பதிலளிப்பவர்கள் பல எடுகோள் எடுத்து பதில் கூறவேண்டும். இதனாலேயே சிலர் பதில் போட மறுக்கிறார்கள்...

மற்றது rapidshare.com ல் பகிருங்கள். அல்லது நான் தந்த megashare ல் பகிர்வது மிக மிக உத்தமம். அதில் பதிவேற்றுவதும் மிக மிக சுலபம். அவர்களும் அழிப்பதற்கான சுட்டி தருவார்கள்.

உங்களது கோப்பை பதிவிறக்க நான் 10 15 நிமிடங்கள் என்று காத்திருக்க வேண்டியுள்ளது. முடிந்தால் megashare ல் பதியுங்கள். உங்களது பிரச்சனையை சரியாக கூறுங்கள்.

காது
கேட்பது தான் உன் வேலை
ஏனோ சண்டையிடவும்
காரணமாய் உள்ளாயே
எனினும் உன் வேலையை
செய்து கொண்டுதான்
இருக்கிறாய்......
பொறுமையாக கேட்டும் கொள்கிறாய்
யார் எதை சொன்னாலும்
எவரை பற்றி பேசினாலும்
எங்கே எது நடந்த
என்பது வரை முதலாவது சுட்டியில் உள்ளது.
இரண்டாவதில்

5]கல்விக்கடனால் பிரச்சனை வங்கிக்கா...வரவங்க எல்லாரும் கடன் வாங்கிட்டு போகிடுவாங்க...மனேஜர்க்கு பதில் சொல்ல இயலாது...என்பாங்க...கல்விக்கான கடன் எந்த விகித மதிப்பெண் இருக்கனும்..அதை பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்...

வரை உள்ளது.

உதயா
12-01-2010, 05:06 AM
நீங்கள் தட்டச்சும் சமயங்களில் உங்களை அறியாமல் டச்பேடைத் தொடுகிறீர்களா?
தாங்கள் கூறிய இந்த வார்த்தைகளை மனதில் கொண்டு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். எந்த விதமான ஜம்பிங்கும் நடக்கவில்லை. என் கை தான் டச்பேடில் பட்டு அங்கே இங்கே நகர்ந்திருக்கிறது.

மிக்க நன்றி

சரண்யா
12-01-2010, 06:36 AM
ஆமாம் எங்க காணும் பாருங்க முதல் பகுதியில் உள்ளது இரண்டாம் பகுதியிலும் அதிகமாகவே உள்ளது ஆனால காணுமே..எங்கே தட்டச்சு செய்தது எல்லாம்...
முதலில் பதிவு செய்தது தான் திறக்க முடியவில்லை....அதில் இன்னும் நிறைய இந்த 5 ஆம் கேள்விக்கு அடுத்தும் பல தட்டச்சு செய்தது காணுமே...அது தான் ஏன் என்று புரியவில்லை...திடீர் என்று நிகழ்ந்தது தான்
ஒன்றாவது msword ல் திறக்க முடியாதற்கான காரணம் என்ன....

இதனாலேயே சிலர் பதில் போட மறுக்கிறார்கள்...
ஒ...அப்ப்படியா.....
சரி....
நன்றிகள்....

பாரதி
12-01-2010, 07:58 AM
எனக்கு தெரிந்த rapid share ல் செய்துகொடுத்துள்ளேன்....பார்த்துவிட்டு சொல்லுங்கள்...
இதில் delete லின்க் கொடுத்துள்ளார்கள்....
இது நான் உபயோக படுத்தும் wordpad...
http://rapidshare.de/files/48982716/kumbabishegam.rtf.html
ஒரு முறை இதனை வேறு இடத்தில் சேமித்து வைத்திருந்தேன்...அதில் இதனை தாண்டி இருக்கிறது பாருங்கள்...
http://rapidshare.de/files/48982737/kumbabishegam.rtf.html
கஷ்டப்பட்டு தட்டச்சு செய்தேன்....
பாரதி அவர்களே..தெரியவில்லை ஆம் தட்டச்சு செய்து சில நேரத்தில் வேற பார்த்துவிட்டு இதனை பார்த்தேன் திறக்கவில்லை...
நன்றிகள்....

நீங்கள் கொடுத்த இரண்டு சுட்டிகளிலும் இருந்த கோப்பு உங்களாலேயே அழிக்கப்பட்டிருப்பதாக இரேபிட்ஷேர் கூறுகிறது! அதனால் என்னால் பார்க்க இயலவில்லை.

உங்கள் கோப்பு ஏன் kumbabishegam.rtf.html என்று சேமிக்கப்பட்டிருக்கிறது? *.rtf அல்லது *.html என்றுதானே சேமிக்கப்பட்டிருக்க வேண்டும்?

தட்டச்சு செய்த கோப்புகளை பல வழிகளில் சேமிக்க வழி இருந்தாலும், பொதுவாக வேர்ட்பேடில், நோட்பேடில் தட்டச்சு செய்பவர்கள் *. txt என்றுதான் சேமிப்பார்கள். வேர்ட்டில் தட்டச்சு செய்பவர்கள் *.doc அல்லது *.docx என்று சேமிப்பார்கள். நீங்கள் எதில் சேமிக்கிறீர்கள்..?

ஒரு கோப்பில் தட்டச்சு செய்தால் மாத்திரம் போதாது... அந்த கோப்பினை முறையாக சேமிக்கவும் (save) வேண்டுமே? நீங்கள் தட்டச்சிய பிறகு அதை முறையாக சேமித்தீர்களா என்று யோசித்து பாருங்கள். தட்டச்சிய பிறகு சேமிக்காமல் கோப்பை மூடினால் தட்டச்சியது இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறது.

//தெரியவில்லை ஆம் தட்டச்சு செய்து சில நேரத்தில் வேற பார்த்துவிட்டு இதனை பார்த்தேன் திறக்கவில்லை// - -இந்த சொற்றொடருக்கு விளக்கம் தேவை.

ஆங்கிலத்தில் கூறும் “தேங்க்ஸ்” என்பதை அப்படியே தமிழில் கையாள நினைப்பதும், ஒருவருக்கு கூறும் போது நன்றிகள் என்று கூறுவதும் பிழையானது.

பாரதி
12-01-2010, 08:11 AM
இது நான் ஸ்கான் பண்ணி போட்டு இருக்கிறேன்....
நான் அந்த ஸ்துதி மட்டும் வேண்டும்....அப்பறம் அந்த பொருளை ஒவ்வொரு வார்த்தைகளாக ஒன்றன் கீழ் ஒன்றாக வரிசை படுத்த வேண்டும்....
பின் நடுவே நான் சிலவற்றை எழுத வேண்டும்....
பின் அந்த கதையை ஒரு சேராக பதிவு செய்யனும் ங்க...அது எப்படி...
நான் பெயிண்ட் cut செய்தால் புதுசா ஒரு page ல இதனை செய்து விட்டு அதனை இப்படி பகிர வேண்டுமா....
வேற வழி இருக்கிறதா...
வெட்டி எத்தனை முறை இப்படி செய்தால் நேரம் தானே ஆகும்...
photobucket எடிட் செய்வது எப்படி அது தான் சிறந்த வழியா....
சொல்லுங்க....
நன்றிகள்...
இது மாதிரி நிறை பாடம் இருப்பதால் தான் கேட்கிறேன்...
ஈஸியாக ஒரு வழி சொல்லுங்க....
நன்றிகள்...

முதலாவது -
மனதில் நினைக்கும் கேள்விகளை நீங்கள் சரியாக தட்டச்சுவதில்லை; அல்லது உங்கள் மனவேகத்திற்கு உங்கள் தட்டச்சு ஈடு கொடுக்கவில்லை.

இரண்டாவது -
ஒரு மென்பொருளை பயன்படுத்த நினைக்கிறோமென்றால், அதைக்குறித்து ஓரளவுக்கு படித்து, பின்னர் பயன்படுத்துவது எளிதாக இருக்கும். பாடத்தையே படிக்காமல் தேர்வு எழுத முயற்சிக்கலாமா?

மூன்றாவது -
சில மென்பொருட்களை பயன்படுத்த, அதற்கான வழிமுறையின் படி செய்யும் போது எவ்வளவு நேரம் ஆகுமோ அவ்வளவு நேரம் ஆகத்தான் செய்யும். எந்த மென்பொருளைக்கொண்டு என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்து காலம் மாறுபடும்.

உங்களின் மேற்கண்ட கேள்விக்கு என்னால் கூறக்கூடிய பதில்: - வேலை மெனக்கெட்டு வருடி, பெயிண்டில் பணி செய்து, பின்னர் இடையே நீங்கள் தட்டச்சி... இப்படியெல்லாம் செய்வதை விட...

தட்டச்சின் மூலமே நீங்கள் விரும்பியதை செய்து சேமிக்கலாம். நேரமும் மிகவும் குறையும்.

சரண்யா
12-01-2010, 08:55 AM
நீங்கள் கொடுத்த இரண்டு சுட்டிகளிலும் இருந்த கோப்பு உங்களாலேயே அழிக்கப்பட்டிருப்பதாக இரேபிட்ஷேர் கூறுகிறது! அதனால் என்னால் பார்க்க இயலவில்லை.
ஆம் நான் delete லின்கில் அழித்தேன் அன்பு அவர்கள் பதில் கொடுத்ததால்..
உங்கள் கோப்பு ஏன் kumbabishegam.rtf.html என்று சேமிக்கப்பட்டிருக்கிறது? *.rtf அல்லது *.html என்றுதானே சேமிக்கப்பட்டிருக்க வேண்டும்?
rtf என்பது rich text document
தட்டச்சு செய்த கோப்புகளை பல வழிகளில் சேமிக்க வழி இருந்தாலும், பொதுவாக வேர்ட்பேடில், நோட்பேடில் தட்டச்சு செய்பவர்கள் *. txt என்றுதான் சேமிப்பார்கள். வேர்ட்டில் தட்டச்சு செய்பவர்கள் *.doc அல்லது *.docx என்று சேமிப்பார்கள். நீங்கள் எதில் சேமிக்கிறீர்கள்..?
rtf ல் சேமிக்கிறேன்
ஒரு கோப்பில் தட்டச்சு செய்தால் மாத்திரம் போதாது... அந்த கோப்பினை முறையாக சேமிக்கவும் (save) வேண்டுமே? நீங்கள் தட்டச்சிய பிறகு அதை முறையாக சேமித்தீர்களா என்று யோசித்து பாருங்கள். தட்டச்சிய பிறகு சேமிக்காமல் கோப்பை மூடினால் தட்டச்சியது இல்லாமல் போக வாய்ப்பிருக்கிறது.
save செய்ததால் தான் எங்கே காணும் அதனுடம் இருந்த பழையதையும் என்பதாலே கேட்டேன்...
//தெரியவில்லை ஆம் தட்டச்சு செய்து சில நேரத்தில் வேற பார்த்துவிட்டு இதனை பார்த்தேன் திறக்கவில்லை// - -இந்த சொற்றொடருக்கு விளக்கம் தேவை.
நான் வேற ஸ்கான் செய்து கொண்டும் இதனை தட்டச்சு செய்து கொண்டும் ctrl s அழுத்தி கொள்வேன் ,அப்பொழுது மினிமைஸ் பண்ணி மீண்டும் அடுத்து வரி தொடங்கும் போது காணும்....
ஆங்கிலத்தில் கூறும் “தேங்க்ஸ்” என்பதை அப்படியே தமிழில் கையாள நினைப்பதும், ஒருவருக்கு கூறும் போது நன்றிகள் என்று கூறுவதும் பிழையானது.
Thanks என்பது சிறியவர்களுக்காகவும்..Thank you என்பதை பெரியவர்களுக்கு ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென அறிந்திருந்த நான் தமிழில் நன்றிகள் என மட்டுமே அறிந்தேன்...
வேற எப்ப்டி சொல்லனும்....சொல்லுங்க...
நன்றிகள் பாரதி அவர்களே...

சரண்யா
12-01-2010, 09:02 AM
முதலாவது -
மனதில் நினைக்கும் கேள்விகளை நீங்கள் சரியாக தட்டச்சுவதில்லை; அல்லது உங்கள் மனவேகத்திற்கு உங்கள் தட்டச்சு ஈடு கொடுக்கவில்லை.
ஒ... அப்படியா..
இரண்டாவது -
ஒரு மென்பொருளை பயன்படுத்த நினைக்கிறோமென்றால், அதைக்குறித்து ஓரளவுக்கு படித்து, பின்னர் பயன்படுத்துவது எளிதாக இருக்கும். பாடத்தையே படிக்காமல் தேர்வு எழுத முயற்சிக்கலாமா?
நான் இது வரை பயன் படுத்திய மென்பொருள் தான்...
மூன்றாவது -
சில மென்பொருட்களை பயன்படுத்த, அதற்கான வழிமுறையின் படி செய்யும் போது எவ்வளவு நேரம் ஆகுமோ அவ்வளவு நேரம் ஆகத்தான் செய்யும். எந்த மென்பொருளைக்கொண்டு என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்து காலம் மாறுபடும்.
ஆம்....
உங்களின் மேற்கண்ட கேள்விக்கு என்னால் கூறக்கூடிய பதில்: - வேலை மெனக்கெட்டு வருடி, பெயிண்டில் பணி செய்து, பின்னர் இடையே நீங்கள் தட்டச்சி... இப்படியெல்லாம் செய்வதை விட...

தட்டச்சின் மூலமே நீங்கள் விரும்பியதை செய்து சேமிக்கலாம். நேரமும் மிகவும் குறையும்.

இல்ல சில ஸ்லோகத்தில் வருவதை தட்டச்சு செய்வது கஷ்டமாக தெரிகிறது...மேலும் தட்டச்சு செய்ய சோம்பேறித்தனம் தான்.....
போர் அடிக்குமே...எல்லாமே தட்டச்சு செய்ய வேண்டும் என்றால்.....
நன்றிகள்...

பாரதி
12-01-2010, 02:30 PM
இல்ல சில ஸ்லோகத்தில் வருவதை தட்டச்சு செய்வது கஷ்டமாக தெரிகிறது...மேலும் தட்டச்சு செய்ய சோம்பேறித்தனம் தான்.....
போர் அடிக்குமே...எல்லாமே தட்டச்சு செய்ய வேண்டும் என்றால்.....

உங்கள் பதிலிலேயே பாருங்கள் - கஷ்டமாகத்தெரிகிறது, சோம்பேறித்தனம், போர் அடிக்கும்.... இப்படி யோசித்தீர்கள் என்றால்... ஒன்றும் சொல்வதற்கில்லை.

சித்திரமும் கைப்பழக்கம் என்று சொல்வார்கள். பழகினால் எளிதாக தட்டச்சு செய்ய இயலும்.

நன்றி என்று மட்டும் கூறினால் போதும். நன்றிகள் என்பது பிழையானது என ஒரு மன்ற உறவு எனக்கு தமிழ்ப்பாடம் எடுத்திருக்கிறார் என்பதால் அதை உங்களுக்கும் அறியத்தந்தேன்.

மதுரகன்
12-01-2010, 02:42 PM
எனக்கு உதவ யாருமே இல்லையா ??

பாரதி
12-01-2010, 02:46 PM
அவசர உதவி - எனது வலைப்பூவில் புதிய டெம்ளேற்றுக்களை பரிசீலித்துக்கொண்டிருந்தேன். திடீரென வலைப்பதிவுகளை காணவில்லை. மீண்டும் பழைய டெம்ளேற்றிலும் விட்டுப்பார்த்தேன் முடியவில்லை. ஆனால் டாஸ் போட்டில் பதிவுகள் காணப்படுகின்றன. வலைப்பூ முகப்பில் தான் காணவில்லை. உதவி செய்யுங்கள். முகவரி saaralhal.blogspot.com

உங்கள் வலைப்பூ முழுமையாக இணையத்தில் ஏற்றப்படவில்லை. புதிய டெம்பிளேட்டை சோதிக்கும் முன்பாக பழைய டெம்பிளேட்டை சேமித்து வைத்திருப்பீர்கள் அல்லவா..? புதிய டெம்பிளேட்டை நீக்கி விட்டு பழைய டெம்பிளேட்டை இணைத்துப்பாருங்கள்.

எனக்கு உதவ யாருமே இல்லையா ??

..........................................!!!!!!!!!!!!!!!!!!!!!!

நூர்
12-01-2010, 03:00 PM
அவசர உதவி - எனது வலைப்பூவில் புதிய டெம்ளேற்றுக்களை பரிசீலித்துக்கொண்டிருந்தேன். திடீரென வலைப்பதிவுகளை காணவில்லை. மீண்டும் பழைய டெம்ளேற்றிலும் விட்டுப்பார்த்தேன் முடியவில்லை. ஆனால் டாஸ் போட்டில் பதிவுகள் காணப்படுகின்றன. வலைப்பூ முகப்பில் தான் காணவில்லை. உதவி செய்யுங்கள். முகவரி saaralhal.blogspot.com

இன்னும் அதை சரி செய்ய்வில்லையா!

இருக்கின்ற பதிவுகளை எல்லாம் நேட்பேடில் பேஸ்ட் செய்துவிட்டு, புது டெம்ளேட்யை இனைத்து, மறுபடியும் பதியலாமே!

மதுரகன்
12-01-2010, 03:02 PM
புதிய பதிவுகளை கூட இட்டு பார்த்தேன் சரி வரவில்லை

நூர்
12-01-2010, 03:54 PM
புதிய பதிவு கூட பதிய முடியவில்லயா.

எடிட் சென்று பார்த்தீர்களா!

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/a1-24.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/a2-25.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/a3-21.jpg

எடிட் அருகில் உள்ள கட்டத்தில் கிளிக் செய்து publish கிளிக் செய்யுங்க.

இன்னும் சரிவராவிட்டால்

மறுபடியும் அவர்கள் தரும் ஒரு டெம்ளேட்டை இனைத்து பாருங்கள்.

அதுவும் முடியாவிட்டால்

ஹெல்ப்தான்.
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/a5-4.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/a4-19.jpg

சரண்யா
13-01-2010, 12:47 AM
உங்கள் பதிலிலேயே பாருங்கள் - கஷ்டமாகத்தெரிகிறது, சோம்பேறித்தனம், போர் அடிக்கும்.... இப்படி யோசித்தீர்கள் என்றால்... ஒன்றும் சொல்வதற்கில்லை.

சித்திரமும் கைப்பழக்கம் என்று சொல்வார்கள். பழகினால் எளிதாக தட்டச்சு செய்ய இயலும்.

நன்றி என்று மட்டும் கூறினால் போதும். நன்றிகள் என்பது பிழையானது என ஒரு மன்ற உறவு எனக்கு தமிழ்ப்பாடம் எடுத்திருக்கிறார் என்பதால் அதை உங்களுக்கும் அறியத்தந்தேன்.

நன்றி பாரதி அவர்களே...
நேரடியாக சொன்னேன் ..அவ்வளவு..உண்மையும் அது தான்..
நன்றி...நிறைய நன்றி சொல்ல என்ன சொல்லுவீங்க...

மதுரகன்
13-01-2010, 05:27 PM
எடிட் செய்து பார்த்தேன் புதிய பதிவுகளை இட்டு பார்த்தேன் எல்லாம் டாஷ் போர்டில் தெரிகிறது அங்கிருந்து லிங்க் மூலம் சென்று பார்க்கவும் முடிகிறது ஆனால் வலைப்பூவின் முகப்பு பக்கத்தில் காணவில்லை

AARUL
14-01-2010, 01:24 AM
எப்படி தமிழ் மன்றத்தின் முகப்பில் வரும் பொங்கல் வாழ்த்து போல் நாமும் உருவாக்குவது தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்

நூர்
14-01-2010, 03:41 AM
எப்படி தமிழ் மன்றத்தின் முகப்பில் வரும் பொங்கல் வாழ்த்து போல் நாமும் உருவாக்குவது தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்

நன்றி.

அதற்கு ரொம்ப ஜாவா கிரிப்ட் எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும்.அது வரைக்கும் இதை முயற்ச்சி செய்து பாருங்கள். http://www.tamilmantram.com/vb/showthread.php?p=449131#post449131

AARUL
14-01-2010, 07:46 AM
நன்றி ஜாவா scriped எப்படி கற்றுகொள்வது

நூர்
16-01-2010, 10:39 AM
நன்றி ஜாவா scriped எப்படி கற்றுகொள்வது

நன்றி. அது பற்றி நம் மன்ற நண்பர்கள் உதவுவார்கள் என எண்ணுகிறேன்.

பாரதி
16-01-2010, 11:42 AM
நமது மன்றத்தில் கவிதா அவர்களால் தொடங்கப்பட்ட ஜாவா குறித்த திரிகள் இவை:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7403
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7580
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7767
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8189
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8486
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8692
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8926
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9213

ஜாவா ஸ்கிரிப்ட் மொழி பற்றி அறிந்து கொள்ள நூற்றுக்கணக்கான வலைத்தளங்கள் இணையத்தில் இருக்கின்றன.
http://www.learn-javascript-tutorial.com/ (http://www.learn-javascript-tutorial.com/)

சரண்யா
17-01-2010, 01:44 AM
ஒரு சின்ன உதவி....
இந்த பிளாக் பார்க்க முடியுதா சொல்லுங்கள்....
நான் பதிவு செய்த பாலவிகாஸ் என்பதை தனி பிளாகில் சேமித்தேன்..
ஆனால் அதில் முழுமையாக பார்க்க முடியவில்லை என்பதால் டெம்பிளேட் மாற்றிவிட்டேன்....
அந்த url தருகிறேன் பார்த்து சொல்லுங்கள்....பார்க்க முடிகிறதா...என..
http://balavikasclass.blogspot.com/2...g-post_09.html

நூர்
17-01-2010, 04:53 AM
ஒரு சின்ன உதவி....
இந்த பிளாக் பார்க்க முடியுதா சொல்லுங்கள்....
நான் பதிவு செய்த பாலவிகாஸ் என்பதை தனி பிளாகில் சேமித்தேன்..
ஆனால் அதில் முழுமையாக பார்க்க முடியவில்லை என்பதால் டெம்பிளேட் மாற்றிவிட்டேன்....
அந்த url தருகிறேன் பார்த்து சொல்லுங்கள்....பார்க்க முடிகிறதா...என..
http://balavikasclass.blogspot.com/2010/01/blog-post_09.html

நன்றி சகோதரி, நல்லவே பார்க்க முடிகிறது...

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture1-2.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture3-3.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture6-1.jpg

உ.ம். 3படம் போட்டு இருக்கிறேன்.முழுவதும் தெரிகிறது,என்றே நினைகின்றேன்.(முழுவதும் நீங்க என்ன பதிவு இட்டு இருக்கிறீங்க என எனக்கு தெரியாது இல்ல.)

சரண்யா
17-01-2010, 09:57 AM
நன்றி நூர் அவர்களே....
இன்று தான் தொடங்கினேன்....http://www.radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx
பதிவை போடலாம் என்று நினைத்து போட்டு பார்த்தேன் இரண்டு மூன்று தடவை this url not found என்றே வந்தது....அதனால தான் இங்கு உதவி கேட்டேன்...எனக்கு மட்டும் தான் தெரியுதா என்று சந்தேகம் வந்திடுச்சு....
எனினும் உதவியமைக்கு நன்றி....

சரண்யா
18-01-2010, 12:28 AM
உங்களுக்கு இந்த திரியில் http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20849
சூரியன் படத்திற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள tamil mandram media systems என்பது பார்க்க முடிகிறதா...
எனக்கு இன்ஸ்டால் plugin software வருகிறதே..manual install quick time player install ஆனாலும் ஒபன் ஆகல...
நீங்க பாருங்க...தெரியுதா...
என்ன செய்யணும் சொல்லுங்க...

நூர்
18-01-2010, 05:18 PM
நன்றி சகோதரி.

நீங்க எந்த சுட்டியை சொல்கிறீங்கன்னு தெரிய வில்லையே. அந்த இடத்தில் உள்ள நான்கு வரியை காபி செய்து இங்கு பேஸ்ட் செய்ங்க.

AARUL
19-01-2010, 01:11 AM
twitter என்றால் என்ன அதை பற்றி சொல்லவும் எப்படி நம்ம தள த்தை எப்படி twitterஅதில் இணைப்பது

சரண்யா
19-01-2010, 02:00 AM
ஒ..அப்படியா...
இதோ..சூரியன் ஒரு நட்சத்திரம். அது பூமிக்கு அருகில் இருப்பதால் பகலில் சூரியன் இருக்கும் பொழுது சூரியன் மட்டுமே தெரிகிறது. சில சமயங்களில் மாத்திரமே பகலில் சந்திரனும் தெரியும்.

பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தூரம் சராசரியாக 14.960 கோடி மைல்களாகும். சூரிய ஒளி பூமியை அடைய எட்டு நிமிடங்கள் ஆகின்றது,

சூரியனின் குறுக்களவு 13,90,000 கிலோமீட்டர்கள் ஆகும்.

சுரியன் மேற்பரப்பின் வெப்ப நிலை 5800 கெல்வின் ஆகும். அதாவது 5527 செல்சியஸ்.

சரண்யா
19-01-2010, 02:05 AM
அன்பு ரசிகன் அவர்களே....
முன்பு போலவே நான் நேற்று wordpad எழுதுற கதை பாதி தான் இருந்தது.save செய்தேன் காலையில் பார்த்தால் பாதி தான் இருக்கிறது.....நான் இப்போ இங்கு வந்து கதையை தட்டச்சு செய்தேன்,,,
ஏன் அப்படி ஆகுது சொல்ல முடியுமா....
நன்றி....

நூர்
19-01-2010, 04:49 AM
twitter என்றால் என்ன அதை பற்றி சொல்லவும் எப்படி நம்ம தள த்தை எப்படி twitterஅதில் இணைப்பது

நன்றி.இங்கு சென்று பாருங்கள்.http://www.tamilmantram.com/vb/showthread.php?p=449810#post449810

நூர்
19-01-2010, 12:34 PM
உங்களுக்கு இந்த திரியில் http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20849
சூரியன் படத்திற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள tamil mandram media systems என்பது பார்க்க முடிகிறதா...
எனக்கு இன்ஸ்டால் plugin software வருகிறதே..manual install quick time player install ஆனாலும் ஒபன் ஆகல...
நீங்க பாருங்க...தெரியுதா...
என்ன செய்யணும் சொல்லுங்க...

நன்றி சகோதரி. இதைதானே கேட்கிறீங்க.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture3-4.jpg

manual install quick time player install

எனக்கு இது மாதிரி எதுவும் கேட்க வில்லை. ஆனால் கீழ் உள்ள படம் மாதிரி வெய்ட்டிங் பார் விடியோ என வருகிறது.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/capture2-3.jpg

என்கணினியில் quick time player இந்த சாப்ட்வேர் இல்லை. ஆனால் அடாப் பிளாஸ் பிளெயர்-10 இருக்கிறது.

http://get.adobe.com/flashplayer/

http://www.adobe.com/products/flashplayer/

சரண்யா
19-01-2010, 02:05 PM
ஒ..அப்படியா...உங்களால பார்க்க முடிகிறதா....

AARUL
19-01-2010, 04:43 PM
நன்றி சகோதரி.

AARUL
19-01-2010, 04:44 PM
:icon_rollout: rss ஓடை இல் நம்முடைய தளத்தை எப்படி இணைப்பது

மயூ
25-01-2010, 06:14 AM
:icon_rollout: rss ஓடை இல் நம்முடைய தளத்தை எப்படி இணைப்பது

உங்கள் தளம் ஒரு வலைப்பதிவு என்றால் அதற்கு உள்ளமைவாக ஒரு RSS செய்தியோடையிருக்குமே! உங்கள் கேள்வியை கொஞ்சம் தெளவிகாத் தாருங்கள்

உதயா
25-01-2010, 07:02 AM
நான் vista வில் இருந்து win 7 மாற்றியுள்ளேன். win update செய்யும் போது எனக்கு error செய்தி வருகிறது. அந்த செய்தியை படத்துடன் தந்திருக்கிறேன். உதவ வேண்டும்.

antivirus சை நிறுத்திவிட்டு update செய்த்தாலும் அதே பிழை செய்தி தான் வருகிறது.

http://i1008.photobucket.com/albums/af206/udayamantram/update_error.jpg

சரண்யா
05-02-2010, 01:14 PM
மவூஸ் இல்லாம கணினியை உபயோகிக்க சிலவற்றை சொல்லித்தாங்க...
இன்று மவுஸ் வேலை செய்யாம மன்றம் வந்தும் சரியா இயக்க தெரியாமல் தட்டச்சும் செய்யவில்லை...
நன்றி...

பாரதி
05-02-2010, 01:39 PM
மவூஸ் இல்லாம கணினியை உபயோகிக்க ....

Start --> control panel - -> accessibility options --> Mouse --> Enable Mouse keys -- > Apply -- > ok

பின்னர் எண்களில் இருக்கும் அம்புக்குறிகளை பயன்படுத்தி ( 2,4,6,8) நீங்கள் கர்சரை நகர்த்த இயலும். ஐயம் இருப்பின் மவுஸ் பகுதியில் இருக்கும் செட்டிங்க்ஸ் பொத்தானை சொடுக்கி பார்த்துக்கொள்ளுங்கள்.

சரண்யா
05-02-2010, 02:00 PM
ஒ..அப்படியா..நன்றி..பின்னர் முயற்சி செய்து பார்க்கிறேன்...
பாரதி அவர்களுக்கு மீண்டும் நன்றி...

பாலகன்
05-02-2010, 03:29 PM
அடடா முயற்சி செய்தேன் தாமரை அண்ணா!
சூப்பரா இருக்கு.... தகவலுக்கு நன்றி

சரண்யா
10-02-2010, 12:46 AM
http://i896.photobucket.com/albums/ac168/yazhini_photos/WhiteyellowLotas.gif
இந்த படத்தை பெயர் பக்கத்தில் வைக்க முடியுமா....

அன்புரசிகன்
10-02-2010, 03:43 AM
http://i896.photobucket.com/albums/ac168/yazhini_photos/WhiteyellowLotas.gifஇந்த படத்தை பெயர் பக்கத்தில் வைக்க முடியுமா....
நீங்கள் அவதாராக வைக்கத்தானே கேட்குறீர்கள்... உங்களது புரபைலில் சென்று அங்கு browse என்று போகாது இந்த நேரடிச்சுட்டியினை அங்கு போட்டால் இந்த பூக்கள் உங்கள் பெயர் அருகிலும் துள்ளிவிளையாடும்.:)

AARUL
13-02-2010, 04:23 PM
scanerஇல் ஒரு page scanசைக்கிறோம் அந்த பேஜ் இல் உள்ளword மட்டும் வேண்டும் என்ன செய்ய வேண்டும் .அந்த page அய் copyபண்ணிmail அனுப்ப வேண்டும் யாராவது சொல்லவும்

வியாசன்
14-02-2010, 08:06 AM
அருள் நீங்கள் ஸ்கான் செய்துவிட்டு தேவையற்றதை அழித்துவிட்டு அனுப்புங்கள்

பாரதி
14-02-2010, 12:16 PM
scanerஇல் ஒரு page scan செய்கிறோம். அந்த பேஜ் இல் உள்ள word மட்டும் வேண்டும். என்ன செய்ய வேண்டும்? அந்த page ஐ copy பண்ணி mail அனுப்ப வேண்டும் யாராவது சொல்லவும்

இதே திரியின் பக்கங்கள் 7, 8 ஐ படித்துப்பாருங்கள். ஒருவேளை உங்களுக்கு உதவக்கூடும்.

Mano.G.
16-02-2010, 01:36 AM
கணணியின் வன் தகடு
இரண்டு பகுதிகளாக பிரிக்கபட்டு
C: என்றும் D: என்றும் உள்ளது.
C: இயங்கு தளமாக உபயோகிக்க பட்டுவருகிரது,
D: சேமிப்பு பகுதியாக உபயோக படுகிரது,
இங்கு எனக்கு தேவைபடுவது
D: யை கடவு சொல் உபயோகித்து
திறந்து மூட வசதிகள் உள்ளனவா?
அப்படி இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும்,
யாராவது உதவுங்களேன்

நன்றி

அன்புரசிகன்
16-02-2010, 03:11 AM

அண்ணா...

கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க முடியுமா தெரியாது அதற்கு folder gurd என்ற மென்பொருள் உதவலாம். ஆனால் அது இலவசம் அல்ல...

தவிர Admin ஆல் மட்டும் பார்க்கக்கூடியவாறு செய்யலாம். அதற்கு உங்கள் வன்தட்டின் file system NTFS. FAT32 ஆக இருந்தால் செய்யமுடியாது என்று நினைக்கிறேன். அதாவது D drive ஐ right click செய்து பின்னர் அங்கு security என்று இருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் எந்த இயங்குதளம் பாவிக்கிறீர்கள் என்று சொன்னால் உதவ இலகுவாக இருக்கும். நான் பார்த்து பார்த்து தான் சொல்லுவேன். ஆனால் பிரவீன் கண்ணை மூடிக்கொண்டு எப்படி செய்வதென்று சொல்வார். ஆனால் அதற்கு உங்கள் கணினியின் இயங்குதள விபரம் அவசியம்.

Guest ஆக கணினிக்கு வந்தால் அல்லது user கணக்கினூடு வந்தால் அந்த ட்ரைவை பார்க்க முடியாது பண்ணலாம். மற்றப்படி இருக்கிறதோ தெரியவில்லை. நண்பர்கள் உதவுவார்கள்.

எதற்கும் இந்த சுட்டியையும் (http://www.computerhope.com/issues/ch000705.htm)படியுங்கள்.

praveen
16-02-2010, 04:07 AM
http://i25.tinypic.com/vhyvzp.jpg

http://www.softstack.com/diskadmin.html

மேலே கண்ட தளத்தில் சென்று பதிவிறக்கி கொள்ளுங்கள்.

கீழே உள்ள நம்பரை வைத்து ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள். இது தான் என் கம்ப்யூட்டரில் நான் உபயோகிப்பது. உங்களுக்கு இந்த நம்பர் வேலை செய்யவில்லை என்றால் தனிமடலில் அனுகவும்..

41612196637374

இந்த புரோகிராம் ஒன்றும் பெரிய புரோகிராமெல்லாம் இல்லை, கொஞ்சம் கம்ப்யூட்டர் வித்தை தெரிந்தவர்கள், பார்ட் என்ற ப்ரிவேர் மூலம் கம்ப்யூட்டரில் எந்த டிரைவை மறைக்க வேண்டுமோ அதனை ஹிட்டன் பார்டீசன் என்று செய்து விட்டால் முடிந்தது வேலை. இதனை கூடுதல் மென்பொருள் இல்லாமல் நம் கம்ப்யூட்டரிலே கண்ட்ரோல் பேனல் சென்று அட்வாண்ஸ்டு அட்மினிஸ்டிரேட்டர் செட்டிங்க்ஸ் சென்று டிஸ்க் அட்மினிஸ்டிரேசன் சென்று அதில் லோக்கல் டிஸ்க் -ல் தெரிவதில் எந்த பார்டீசன் மறைக்க வேண்டுமோ அதனை தொட்டு ரீமூவ் டிரைவ் லெட்டர் என்றால் முடிந்தது.

தப்பித்தவறி எந்த புரோகிராமிலும் C: ட்ரைவை மறைத்து பூட்டி விடாதீர்கள். பின்னர் கம்ப்யூட்டர் பூட் ஆகாமல் போய் விடும்.

முழுக்க முழுக்க உங்கள் ரிஸ்கிலே தான் செய்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள், பிழை ஏதாவது நேர்ந்தால் பின்னர் என்னை குறை சொல்லாதீர்கள் :icon_b:

Mano.G.
16-02-2010, 02:34 PM
நன்றி நன்றி நன்றி.
அசத போவது யாரு பாணியில்
அசத்தியது எங்கள் பிரவீனும் அன்புரசிகனும்,
அசத்தல் மன்னர்களுக்கு வாழ்த்துக்கள்
உடனே பதில் உடனே விளக்கம்

நன்றி உறவுகளே

நான் உபயோகிப்பது
விண்டோஸ் எக்ஸ் பி

மனோ.ஜி

சிவா.ஜி
16-02-2010, 03:04 PM
ஆஹா....மிகப் பயனுள்ள தகவல். பெற்றுத்தந்த மனோ.ஜி அவர்களுக்கும், கொடுத்த பிரவீண் அவர்களுக்கு நன்றி.

பாரதி
18-02-2010, 03:54 PM
கணணியின் வன் தகடு
இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு
C: என்றும் D: என்றும் உள்ளது.
C: இயங்கு தளமாக உபயோகிக்கப் பட்டுவருகிறது,
D: சேமிப்பு பகுதியாக உபயோகப்படுகிறது,
இங்கு எனக்கு தேவைப்படுவது
D: யை கடவுச் சொல் உபயோகித்து
திறந்து மூட வசதிகள் உள்ளனவா?
அப்படி இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும்,
நன்றி

அண்ணா...
சில நேரங்களில் கீழ்க்கண்ட திரியில் இருக்கும் தகவல் உங்களுக்கு உதவக்கூடும்.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6802

hariharans
19-02-2010, 01:05 AM
தகவலுக்கு நன்றி அன்பர்களே.

hariharans
19-02-2010, 01:22 AM
கணணியின் வன் தகடு
இரண்டு பகுதிகளாக பிரிக்கபட்டு
C: என்றும் D: என்றும் உள்ளது.
C: இயங்கு தளமாக உபயோகிக்க பட்டுவருகிரது,
D: சேமிப்பு பகுதியாக உபயோக படுகிரது,
இங்கு எனக்கு தேவைபடுவது
D: யை கடவு சொல் உபயோகித்து
திறந்து மூட வசதிகள் உள்ளனவா?
அப்படி இருந்தால் எனக்கு உதவியாக இருக்கும்,
யாராவது உதவுங்களேன்

நன்றி

நீங்கள் drive or folder யை மற்ற பயனரிடம் இருந்து பாதுகாக்க இப்படியும் செய்யலாம்.

drive or folder யை தேர்வு செய்து அதன் properties யில் சென்று security யில் தேவையில்லாதவரை remove செய்து விடுங்கள்.

அவர்களால் உள்ளே செல்ல முடியாது.

சரண்யா
04-04-2010, 02:52 PM
வணக்கம்...
http://www.nilacharal.com/help.html
இந்த பக்கத்தில் உங்களுக்கு தமிழ் வருதா..
எனக்கு வரவில்லையே..என்ன செய்யணும் சொல்லுவிங்களா..
நன்றி..

பாரதி
04-04-2010, 03:42 PM
நீங்கள் கொடுத்திருக்கும் தொடுப்பே, அந்த இணையதளம் தமிழில் தெரிய என்ன செய்ய வேண்டும் என்பதற்கான குறிப்புகளை உள்ளடக்கியதாகத்தானே இருக்கிறது!! அதைப் படியுங்கள்; பயன்படுத்துங்கள் - உறுதியாக தமிழில் தெரியும். அந்தக்குறிப்புகளின் படி செய்தும் உங்கள் பிரச்சினை தீரவில்லை என்றால், அவர்களுடைய இணையம் தமிழில் தெரியவில்லை என்றால் கீழ்க்கண்ட சுட்டியைத்தட்டி அவர்களிடம் உங்கள் பிரச்சினைகளை கூறுங்கள்.
http://www.nilacharal.com/includes/feedback_unicode.asp

சரண்யா
05-04-2010, 06:56 AM

ஆம் தெரியாதவரிடம் கேட்பதை விட மன்றத்தில் தெரிந்து கொள்ளவே பதிவு செய்தேன்...
மொசில்லாவில் வியூவில் சேஞ்ச் பண்ணி பார்த்தேன்...சரியா தெரியல..
எனினும் தங்களின் பகிர்வுக்கு நன்றி...

அன்புரசிகன்
05-04-2010, 07:04 AM
எனக்கு சரியாக தமிழில் வருகிறதே சரண்யா... உங்களது XP ஆ??? உங்களுக்கு முன்னரே யுனிக்கோட் நிறுவுவது பற்றி எங்கோ கூறிய ஞாபகம். அதை செய்து பாருங்கள்... Control panel இல் regional Language settings ல் செய்யலாம்.

சரண்யா
05-04-2010, 07:29 AM
ஆம் xp தானே...கொஞ்சம் விளக்கமாக சொல்லுறீங்களா...
நன்றி...

அன்புரசிகன்
05-04-2010, 11:20 AM
ஆம் xp தானே...கொஞ்சம் விளக்கமாக சொல்லுறீங்களா...
நன்றி...

உங்கள் கணிணியில் Control panel> Reginal and Language option சென்றால் Language tab இல் உள்ள 2 check box ஐயும் தெரிவுசெய்துவிட்டு
பின் language tab ல் details ஐ அழுத்தி அங்கு advance tab ல் உள்ள முதலாவது check box (Extend support of advance text service to all programs) ஐ தெரிவுசெய்து apply>OK செய்யுங்கள்.... பின் மீண்டும் apply>OK செய்யுங்கள்....

அநேகமாக windows CD தேவைப்படும் என எண்ணுகிறேன்... தயார்நிலையில் வைத்து செய்யுங்கள். பின்னும் பிரச்சனைவந்தால் கூறுங்கள்...

ஏற்கனவே வேறு சிலருக்கு பதிந்தது...

இங்கே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=253230&postcount=8) நான் கொடுத்த முறையை பின்பற்றிப்பாருங்கள்... அத்துடன் நீங்கள் copy செய்து paste (உ+ம்: MS WORD) செய்யமுன் உங்கள் எழுத்துருவை Arial Unicode MS என தெரிவுசெய்துவிட்டு paste செய்யுங்கள்... அத்துடன் இங்கே (http://archive.ubuntu.com/ubuntu/pool/main/t/ttf-indic-fonts/ttf-indic-fonts_0.4.7.tar.gz) கிடைக்கும் கோப்பை பதிவிறக்கி அதிலுள்ள எழுத்துருக்களை உங்கள் கணிணியில் நிறுவிக்கொள்ளுங்கள். (ஏற்க்கனவே இருந்தால் தவிர்க்க) இந்த கோப்பை winzip or winrar போன்வற்றால் திறக்கலாம்.

இந்த கோப்பில் பல மொழிக்கான (தமிழ் பெங்காலி தெலுங்கு இன்னும் பல) எழுத்துரு உள்ளது. உங்களுக்குத்தேவையான வற்றை உங்கள் கணிணியில் நிறுவலாம்... நீங்கள் Note pad or wordpad ல் சேமிக்கிறீர்கள் என்றால் மறக்காது உங்கள் எழுத்துருவை TSCu_Paranar தெரிவுசெய்யுங்ள்.

Notepad இல் சேமிக்கும் போது Encoding என்பதில் மறக்காது UTF-8 என்பதை தெரிவுசெய்து சேமிக்கவும்...

நீங்கள் பயன்படுத்தும் சுவடி எனப்படுவதில் எனக்கு பரீட்சயம் இல்லை.

இங்கு நான் குறிப்பிட்டவை உங்களுக்கு ஏற்கனவே பரீட்சயம் ஆகியிருந்தால் மன்னிக்க...
இங்கு (http://archive.ubuntu.com/ubuntu/pool/main/t/ttf-indic-fonts/) பல எழுத்துருக்கள் உண்டு. தேவையானவற்றை பார்த்து பதிவிறக்கவும்...

rafeek37
19-06-2010, 05:02 AM
என் நண்பரே! என் ISM Software open (typing software) பண்ணும்போது windows encountered problem வருகிறது. இந்த error message வராமல் ISM Software (typing software) open பண்ண எனக்கு உதவுவீர்களா?

பாரதி
19-06-2010, 09:11 AM
என் நண்பரே! என் ISM Software open (typing software) பண்ணும்போது windows encountered problem வருகிறது. இந்த error message வராமல் ISM Software (typing software) open பண்ண எனக்கு உதவுவீர்களா?

அன்பு நண்பரே,
உங்களது பிழைச்செய்தி எப்போது வருகிறது? பிழைச்செய்தியின் முழுவிபரம் ஆகியவற்றைத்தந்தீர்கள் எனில் பதில் தேடுவது எளிதாக இருக்கும்.

நீங்கள் மைக்ரோசாஃப்ட் வேர்ட்-டில் பணி புரியும் போது இவ்விதம் பிழைச்செய்திகள் வருகிறது என்று எண்ணி இதைப்பதிக்கிறேன். அவை உங்களுக்கு உதவினால் நல்லது.

மைக்ரோசாஃப்ட் வேர்ட்டைத் திறந்தால் --- tools menu --- auto correct options --- இவற்றில் Capitalize first, letter of the sentence, correct two initial capitals, capitalize names of days போன்ற விருப்பத்தேர்வுகள் இருக்கும். அந்த விருப்பத் தேர்வுகள் எல்லாவற்றையும் அணைத்து [ஆஃப்] விடுங்கள். இந்த தேர்வுகள் ஆங்கில தட்டச்சிற்காக உருவாக்கப்பட்டவை. அவை இந்திய தட்டச்சில் பிரச்சினைகளைத் தரும். எனவே ஆட்டோ ஃபார்மேட், மேற்கோள் குறி, குறியீடுகள் ஆகியவற்றை அணைத்து விட்டு பணி செய்து பாருங்கள்.