PDA

View Full Version : காவல்துறையினரின் விருந்து...



அன்புரசிகன்
13-12-2008, 05:19 AM
http://img19.picoodle.com/img/img19/3/12/13/f_high2m_178e314.jpg

திருட்டு தொழிலை கைவிட்ட கிராம மக்களுக்கு போலீசார் விருந்து கொடுத்து கவுரம் தந்தனர்.

பீகாரில் பாபுவா மாவட்டத்தில் உள்ளது தும்ரைத் தோலா கிராமம். இந்த கிராமத்தில் 150 குடிசை வீடுகள்தான் உள்ளன.
கிராமத்தில் வசிக்கும் ஆண்களின் ஒரே தொழில் திருட்டு, கடத்தல்தான். மாவட்டத்தில் நடக்கும் பெரும்பாலான கடத்தல், திருட்டு, கொள்ளை, வழிப்பறி வழக்குகளில் தும்ரைத் தோலா கிராமத்தை சேர்ந்தவரின் கைவண்ணம் கண்டிப்பாக இருக்கும்.
இதனால், எங்கு குற்றங்கள் நடந்தாலும் உடனடியாக போலீசார் அந்த கிராமத்தில் அதிரடி சோதனை நடத்துவார்கள். இதில் குற்றவாளிகளும் சிக்குவார்கள்.

இந்த கிராமத்தை சேர்ந்தவர்களை திருத்த அந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் குமார் தீவிர முயற்சி செய்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தும்ரைத் தோலா கிராமத்துக்கு சென்ற ராஜேஷ் குமார். “திருட்டு தொழிலை கைவிடுங்கள் உங்கள் மறுவாழ்வுக்கு நான் வழி செய்கிறேன். திருந்தி வாழ்ந்தால் உங்களுக்கு விருந்து படைக்கிறேன்ÕÕ என்றார்.

இதையடுத்து, படிப்படியாக குற்றங்கள் குறையத் தொடங்கியது. திருந்தியவர்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வாய்ப்பு தர போலீசாரே ஏற்பாடு செய்தனர். விளைவு கடந்த ஓராண்டில் அந்த பகுதியில் குற்றங்கள் கணிசமாக குறைந்துவிட்டன.
கடந்த சில மாதங்களாக தும்ரைத் தோலா கிராமவாசிகள் மீது ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.

இதனால், சொன்ன சொல்லை காப்பாற்ற, கடந்த செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் எல்லோருக்கும் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் குமார் விருந்து கொடுத்தார். பிரியாணி, பருப்பு கூட்டு, அல்வா போன்ற உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
===============

நன்றி - தினகரன் இணையம்...

உண்மையில் காவல்த்துறை அதிகாரி ராஜேஷ்குமாருக்கு கிடைத்த ஒரு மகத்தான வெற்றி தான்.

நாட்டாமை
13-12-2008, 05:24 AM
இதனால், சொன்ன சொல்லை காப்பாற்ற, கடந்த செவ்வாய்க்கிழமை கிராம மக்கள் எல்லோருக்கும் போலீஸ் எஸ்.பி. ராஜேஷ் குமார் விருந்து கொடுத்தார். பிரியாணி, பருப்பு கூட்டு, அல்வா போன்ற உணவு வகைகள் பரிமாறப்பட்டன.
உண்மையில் இனிப்பான செய்தி..

உண்மையில் காவல்த்துறை அதிகாரி ராஜேஷ்குமாருக்கு கிடைத்த ஒரு மகத்தான வெற்றி தான்.திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...
காவல்த்துறை அதிகாரி ராஜேஷ்குமாருக்கு என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துக்கள்...

இளசு
13-12-2008, 05:50 AM
நல்ல செய்தி. பகிர்வுக்கு நன்றி அன்பு..

தோ ஆங்க்கே பாரா ஆத் என்ற சாந்தாராமின் திரைப்படம் ( தமிழில் பல்லாண்டு வாழ்க), சிவாஜி நடித்த நீதி -
இவற்றில் குற்றம் செய்பவர்களைக் கையாள
புதிய நெறிகள் சொல்லப்பட்டிருக்கும்..

இக்காவலர் நேரிடை வாழ்வில் நாயகர். பாராட்டுவோம்!

இம்மாற்றம் மாறாதிருக்கட்டும்!!!!

ராஜா
13-12-2008, 06:06 AM
ராம்ஜி நகர் பக்கமும் வந்துட்டுப் போங்க ராஜேஷ் குமார் அவர்களே..!

ரங்கராஜன்
13-12-2008, 06:54 AM
நாட்டில் நல்ல போலீஸ்கள் இருக்க தான் செய்கிறார்கள்.

அக்னி
13-12-2008, 08:07 AM
இப்படியும் காவற்துறையினர் இருக்கின்றார்களா...
உண்மையிலேயே அவருக்குப் நீண்ட
‘ஓ’‘ஓ’‘ஓ’‘ஓ’‘ஓ’‘ஓ’‘ஓ’

காவற்துறை என்றாலே,
குறைந்து கொண்டிருக்கும் மதிப்பைத், தூக்கிநிறுத்துவதே,
இவர் போன்றோர்தான்.

இப்படித்தான் காவற்துறை இருக்கவேண்டும்,
என்பதற்கு முன்னுதாரணம்.

திரு. ராஜேஷ்குமார் அவர்களின் கடமைக்கு மேலான நல்லுணர்விற்கு,
ஒரு “சல்யூட்”

arun
17-12-2008, 05:33 PM
ராஜேஷுக்கு ஒரு ஜே...