PDA

View Full Version : எனது நினைவுகள் - 2



arun
12-12-2008, 08:33 PM
எனது நினைவுகள் - 1

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=395886#post395886

எனது நினைவுகள் - 2
இது நான் பாலிடெக்னிக் படித்து கொண்டிருக்கும்போது நடந்த நிகழ்வு உண்மையில் இப்போதும் இதனை நினைத்தால் சிரிப்பாக வரும் எங்கள் குரூப்பில் அப்போது 5 பொண்ணுங்க படிச்சிட்டு இருந்தாங்க

அதுல எல்லாருமே எல்லார் கிட்டையும் சகஜமா பேசுவாங்க அதுல ரெண்டு பொண்ணுங்க அப்பவே லவுசு அதனால அவ்வளவா அந்த பொண்ணுங்க கிட்ட பேச மாட்டாங்க பொதுவா பொண்ணுங்க கிட்ட அதிகமா நான் பேச மாட்டேன் ஆனா பசங்க இருக்காங்களே சும்மானா என் கூட படிக்கிற ஒரு பொண்ண லவ் பண்றதா பத்தி வெச்சுட்டாங்க

அது எதனாலன்னா அந்த பொண்ண பத்தி பேசும்போது மட்டும் நான் சுவாரஸ்யமா கேப்பேன் அதனால வந்த விளைவு தான் இது இது எப்படியோ அந்த பொண்ணுக்கு தெரிஞ்சி போச்சு

ஒரு நாள் வழக்கம் போல அந்த பொண்ண பத்தி பேசி என்னை கிண்டல் பண்ணிட்டு இருந்தாங்க அன்னிக்குன்னு பாத்து அந்த பொண்ணு எங்க பக்கத்துல வந்து உக்காந்துட்டா

கூட இருக்குற ஒரு பையன் சும்மா இல்லாம நீ தான் அவனோட உயிர் அது இதுன்னு பில்ட் அப் கொடுக்க ஆரம்பிச்சுட்டான்

அதுக்கு அந்த பொண்ணு அட பாவிங்களா அவன் என் கூட இது வரைக்கும் ஒரு தடவ கூட பேசுனது இல்ல சொல்ல போனா அவன் என் தம்பி மாதிரி இருக்கான்னு சொல்லிட்டு போய்ட்டா

அதுல இருந்து பசங்க அத பத்தி பேசறதே இல்ல இருந்தாலும் அடிக்கடி நினைவு படுத்தி சிரிப்பார்கள்

இப்போதும் அதை நினைத்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது

நிரன்
12-12-2008, 09:11 PM
தம்பி என்று செல்லி கவித்ததுக்கு கவலை படுறது போல இருக்கு:lachen001:

அக்னி
12-12-2008, 11:05 PM
மனசுக்குள் மத்தாப்பூ...
அதனாலோ
இதழில் இன்னும் சிரிப்பு...

தொடரட்டும் உங்கள் நினைவுப் பதிப்பு...

உங்கள் நினைவுகளை ஒரே திரியிற் பதிவு செய்தால்,
சிந்தாமற் சிதறாமல் இருக்குமன்றோ...

arun
14-12-2008, 05:13 PM
மனசுக்குள் மத்தாப்பூ...
அதனாலோ
இதழில் இன்னும் சிரிப்பு...

தொடரட்டும் உங்கள் நினைவுப் பதிப்பு...

உங்கள் நினைவுகளை ஒரே திரியிற் பதிவு செய்தால்,
சிந்தாமற் சிதறாமல் இருக்குமன்றோ...

கண்டிப்பாக இனிமேல் அப்படியே செய்கிறேன்...:icon_b:

தமிழ்தாசன்
14-12-2008, 08:29 PM
நினைவுகள் தொடர்கதை.....
காத்திருக்கிறோம்....

arun
26-12-2008, 05:12 PM
நினைவுகள் தொடர்கதை.....
காத்திருக்கிறோம்....

கண்டிப்பாக என்னால் எழுத முடிந்தவற்றை பதிக்கிறேன்

ஓவியன்
27-12-2008, 12:45 AM
ம், ம்...!

அந்தப் பெண் சம்மந்தப்பட்ட விடயங்களை ஆர்வமாகக் கேட்கும் அதேவேளை அந்தப் பெண்ணுடன் பேசாமலும் இருந்திருக்கிறீர்கள்.... :D:D:D

சுவராசியமான பகிர்வுக்கு நன்றி அரூண்...!! :)

shibly591
27-12-2008, 10:50 AM
எனது நினைவுகள் - 1

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=395886#post395886

எனது நினைவுகள் - 2

அதுக்கு அந்த பொண்ணு அட பாவிங்களா அவன் என் கூட இது வரைக்கும் ஒரு தடவ கூட பேசுனது இல்ல சொல்ல போனா அவன் என் தம்பி மாதிரி இருக்கான்னு சொல்லிட்டு போய்ட்டா



இப்படி மட்டும் சொல்லாமல் இருந்திருந்தால்............???????????
இப்படி மட்டும் சொல்லாமல் இருந்திருந்தால்............???????????
இப்படி மட்டும் சொல்லாமல் இருந்திருந்தால்............???????????

arun
21-01-2009, 05:51 PM
இப்படி மட்டும் சொல்லாமல் இருந்திருந்தால்............???????????
இப்படி மட்டும் சொல்லாமல் இருந்திருந்தால்............???????????
இப்படி மட்டும் சொல்லாமல் இருந்திருந்தால்............???????????



ஒன்னும் ஆகி இருக்காது :D

அறிஞர்
05-02-2009, 08:34 PM
அந்நேரத்தில் உங்கள் நிலையை எண்ணி...
சிரிக்கிறதா.. அழறதன்னா.. யோசிக்கிறேன்....
அடுத்த கதையை கொஞ்சம் அவுத்துவிடுங்களேன்.